4.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Moderator: Sabareeshwari

Post Reply
Sabareeshwari
Moderators
Posts: 27
Joined: Thu May 14, 2020 10:23 pm
Has thanked: 3 times
Been thanked: 8 times

4.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Post by Sabareeshwari »

photojoiner_photo.jpeg
"ஹாய்... " என்ற குரல் வெண்ணிலாவின் பின்னால் கேட்க.. யார் தன்னை அழைப்பது என்று திரும்பி பார்த்தாள்...

அவர்களுடன் வேலை செய்யும் ஒருவன் தான் அவளை அழைத்து இருந்தான்.. அவள் வேலைக்கு சேர்ந்த அன்று பார்மாலிடிக்காக ஹாய் சொல்லியதோடு சரி.. மீண்டும் இன்று தான் அவளிடம் பேசினான்..

இவள் மெலிதான புன்னகையுடன் " ஹாய் சார்" .. என்று கூற..

சார் எல்லாம் வேணாம்.. ஜஸ்ட் கால் மீ வெங்கு..

இவள் தலையசைக்க.. " ஆபீஸ் எல்லாம் பிடிச்சு இருக்கா?? "

"ஓகே தான் .. " என்று பதில் கூறியவள் "நீங்க என்ன ப்ரொஜெக்ட் பண்றீங்க ??" என்று அவனிடம் கேட்க..

நானும் சாம்பாவும் யு.ஐ மட்டும் பண்றோம்..

ஒஹ் ஓகே சார்... சாம்பா சாரையும் இன்னும் காணோம்..

அவன் அவளை முறைக்க.. அவன் எதற்காக

தன்னை முறைகிறான் என்று புரியாமல் பார்த்தவளுக்கு அவனை சார் என்று அழைத்தது புரிய " எனக்கு பேர் சொல்ல கொஞ்சம் டைம் எடுக்கும்.. " என்று கூறினாள்..

சாம்பா வர இன்னும் கொஞ்சம் லேட் ஆகும்.. அப்புறம் உங்க ஹரிஷ் ப்ரோ எப்போ திரும்பி வருவாரு??

அவரு வர இன்னும் 3 நாள் ஆகும்..

அப்போ இன்னைக்கு லஞ்ச் எங்க கூட வந்திருங்க..

அவள் பதில் கூறுவதற்குள் அவர்கள் அறைக்குள் ஒரு யுவதி நுழைந்தாள்..

ஹாய் வெங்கி...

ஹாய் நேத்ரா...

"எங்கே உங்க டீம் லீடர் ?? எப்போவும் போல இன்னைக்கும் லேட்டா ?? " அவள் ஏளனமாக கேட்க..

"இன்னும் வரல நேத்ரா.. ஏன் ஏதாவது பிரச்சனையா ?? "

பிரச்சனை இல்லாம உங்க ரூம்கு நான் ஏன் வரேன்??

என்ன ஆச்சு ??

நாளைக்கு ப்ரொஜெக்ட் ரிலீஸ் இருக்கு.. ஆனா ஒரு பக் வருது.. அதான் இப்போ சொல்லி சரி பண்ண சொல்லலாம்னு வந்தேன்.. இன்னும் ஹரிஷ் வரலையா??

ஹரிஷ் 3 நாள் லீவ்..

"யாரை கேட்டு லீவ் எடுத்தாங்க?? " என்று நேத்ராவின் குரல் கடுப்பாக ஒலிக்க..

"யாரை கேட்டு லீவ் எடுக்கணும் ?? " என்று இன்னொரு குரல் அவள் பின்னால் ஒலித்தது.. அந்த குரலில் வெங்கட் மற்றும் நேத்ரா கலவரம் அடைந்தார்கள்..

அவர்களை கலவர படுத்தியவனோ நேரே சென்று தன் இருக்கையில் அமர்ந்தான்..

"குட்மார்னிங் ஜெகன் சார்.."

"குட்மார்னிங் வெண்ணிலா.. நீங்க இப்போ என்ன பாத்துட்டு இருக்கீங்க??" அவள் செய்யும் வேலையை அவள் சொல்ல.. " ஓகே பா.. நீங்க பாத்துட்டு இருக்கிறதை அப்படியே ஹோல்ட் பண்ணுங்க.. ஹரிஷ் வர வரைக்கும்.. நான் சொல்ற வர்க் மட்டும் கொஞ்சம் சீக்கிரம் முடிச்சு தாங்க.. "

ஓகே சார்..

"ஹாய் ஜெகன்.. " என்று நேத்ரா பவ்யமாக அவனை அழைக்க.. வெண்ணிலாவிற்கோ ஆச்சிரியம்.. இவ்வளவு நேரம் ஜெகனை அவள் ஏளனமாக பேசியது என்ன.. இப்பொழுது அவள் பேச்சில் காட்டும் பவயமென்ன என்று..

"சொல்லுங்க ... " என்ற ஒற்றை சொல்லே ஜெகனிடமிருந்து வந்தது..

நேத்து ஹரிஷ் கொடுத்த ரிலீஸ்ல ஒரு பக்.. அதான் சீக்கிரம் முடிச்சு தர சொல்லலாம்ன்னு வந்தேன் ஜெகன்..

பக் லிஸ்ட்ல அப்டேட் பண்ணிட்டீங்களா ??

வசமா மாட்டுனேன் என்று நினைத்தவள் . " இன்னும் இல்ல ஜெகன்.. ஹரிஷ் கிட்ட சொல்லிட்டு போடலாம்ன்னு வந்தேன்" என்று இழுக்க..

"பக் லிஸ்ட்ல அப்டேட் பண்ணுனா , நாங்க வந்த உடனே பாத்துட்டு ஸ்டார்ட் பண்ண போறோம்.. அதை செய்யாம ஏன் அங்கேயும் இங்கேயும் நடந்து டைம் வேஸ்ட் பண்றீங்க ?? போய் அதை பண்ணுங்க.. " என்று கூறிவிட்டு அவன் வேலையை தொடங்க.. அவனை முறைத்துக்கொண்டே நேத்ரா அங்கு இருந்து சென்றால்..

வெண்ணிலா....

சொல்லுங்க சார்..

இப்போ அவங்க பக் போட்ட உடனே மெயில் வரும்.. அதுல போய் என்ன பக்னு பாத்துட்டு அதை கிலயர் பண்ணி கொடுத்துடுங்க..

"ஓகே சார்.. " என்றவளது குரல் மெதுவாக ஒலிக்க... " ஏதாச்சும் டௌப்ட்னா கேளுங்க. " என்று கூற.. அவள் முகம் சிறிது தெளிவு அடைந்தது...

நேத்ரா கொடுத்த வேலையை முடித்த வெண்ணிலா ஜெகனிடம் கூற..

அதை முழுவதுமாக ஆராய்ந்தவன் எல்லாம் சரியாக இருப்பதை கண்டு "ஓகே வெண்ணிலா இதை நீங்க கம்மிட் பண்ணிட்டு டெஸ்டிங் டீம்கு மெயில் போட்டுருங்க செக் பண்ண சொல்லி ."

"ஓகே சார்... " அவன் கூறியதைப் போல் மெயில் செய்து விட்டு அவள் வேலையை தொடர்ந்தாள்... மாலை 6 மணி வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது வெண்ணிலாவுக்கு ஆனால் அதன் பின் தான் அவளுடைய சோதனை காலம் ஆரம்பமாகியது..

ஜெகனிடம் தான் காலையிலிருந்து செய்த வேலையை கூறிவிட்டு அவள் செல்ல தயாராக இருக்கும் பொழுது உள்ளே டெஸ்டிங் டீமின் தேவி நுழைந்தாள்..

நேராக ஜெகன் இடம் வந்தவள் "காலையில எங்க டீம் ஹெட் சொன்ன பிராப்ளம் முடிச்சிட்டீங்களா ?? " என்று கேட்க..

இந்த கேள்வியில் வெண்ணிலா ஜெகனின் முகத்தை பார்க்க..

ஜெகனோ "மெயில் பண்ணிட்ட தானமா??" என்று வெண்ணிலாவிடம் கேட்டான்..

யெஸ் சார்... மார்னிங் முடிச்ச உடனே மெயில் பண்ணிட்டேன்...

இதை கேட்டவன் அவனது சிஸ்டம்மில் வெண்ணிலா அனுப்பிய மெயிலை தேவியிடம் ஓபன் செய்து காட்டினான்.. அதை கண்ட தேவி "இது ஓகே சார்.. ஆனா மறுபடியும் இன்னொரு பக் ஹரிஷ் சார்கு போட்டு இருக்கோம்... மதியம் 3.30 மணிக்கு.. "

யாரு நேம் ல பக் போட்டு இருக்கீங்க??

ஹரிஷ் நேம் ல போட்டு இருக்கோம்..

"அப்போ நீங்க ஹரிஷ் வந்த உடனே அந்த பக்கை கிலியர் பண்ண சொல்லி கேட்டு வாங்கிக்கோங்க..." ஜெகன் இவ்வாறு கூறியவுடன் தேவி திருதிருவென விழித்தவள்.. " அது நாளைக்கு கிலையண்ட்கு டெலிவரி பண்ணணும்.. "

ஒஹ்ஹ்.. இப்போ வர்கிங் ஹௌர்ஸ் முடிஞ்சுருச்சே... என்ன பண்ணலாம்?? நீங்க மதியமே என்கிட்ட சொல்லி இருந்தா நான் அல்டர்நேட் பண்ணி இருப்பேன்.. இப்போ ஒன்னும் பண்ண முடியாதே.. நாளைக்கு மார்னிங் சொல்லுங்க முடிச்சு தறோம்..

அவன் அலட்சியமாக பதில் அளித்ததால் கடுப்பான தேவி.. " நான் எங்க டீம் ஹெட் கிட்ட சொல்றேன்.. " என்று கூற..

"யார் கிட்ட வேணாலும் சொல்லிக்கோ.. " என்று கூறிவிட்டு அவன் வேலையை தொடற ஆரம்பித்தான்..

வெண்ணிலா மீண்டும் அவள் இடத்தில் அமர.. அவளை புரியாமல் பார்த்தவன் " கிளம்புல??"

"இல்ல சார்.. அது என்ன பக்னு பாக்கலாம்னு.. " என்று இவள் என்ன கூறுவது என்று தெரியாமல் இழுக்க..

அதற்குள் நேத்ராவும் , தேவியும் அங்கே வந்து சேர்ந்தனர்..

ஜெகன் நீ தானே காலைல சொன்ன?? பக் லிஸ்ட்ல போட்டா போதும் .. நேரில் வந்து சொல்ல தேவையில்லைன்னு..

நேத்ரா கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் மேலே சொல் என்ற பார்வை மட்டுமே அவனிடமிருந்து...

அதான் நான் மெயில் மட்டும் பண்ணுனேன்.. இப்போ வந்து ஹரிஷ் வந்த உடனே கேட்டு வாங்கிக்கோங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்??

சற்று யோசித்தவன்.. " வெண்ணிலா.. " என்று அவளை அழைக்க..

சொல்லுங்க சார்..

நான் சொன்னது உங்களுக்கு எப்படி புரியுது??

அவன் அழைத்தவுடன் தன்னை அந்த பக்கை கிளியர் பண்ண சொல்ல போகிறான் என்று அவள் நினைத்திருக்க.. இவனோ வேறு கேள்வி கேட்க. வெண்ணிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை..

"சார்... " என்று அவள் இழுக்க..

அவள் முகத்தை பார்த்தவனுக்கு அவளுக்கு தான் என்ன கேட்கிறோம் என்று புரியவில்லை என்பதை அறிந்தவன்..

"ஹரிஷ் வந்த உடனே பக் சால்வ் பண்ணி வாங்கிக்கோங்கன்னு சொன்னேன்ல உங்களுக்கு என்ன மாதிரி புரியுது நான் சொன்னது??" என்று மெலிதான புன்னகையுடன் இவன் கேட்க..

நேத்ராவும் தேவியும் அவனை விழி விரித்து ஆச்சிரியமாக பார்த்தனர்.. ஜெகன் அங்கு சேர்ந்ததில் இருந்து அவன் கோர்வையாக பேசி இவர்கள் பார்த்ததில்லை.. அப்படியே பேசி இருந்தாலும் அது ஹரிஷ் உடன் இருக்கும் பொழுது.. பெண்களிடம் ஒற்றை வார்த்தை.. மீறி தேவைபட்டால் ஒரு வரி அதுவும் ரத்தின சுருக்கமாக.. அப்படி இருப்பவனிடம் இருந்து இன்று மெலிதான புன்னகையுடனான பேச்சு ஆச்சிரியத்தை கொடுத்தது..

வெண்ணிலா பெண்கள் இருவரையும் ஒரு முறை பார்த்தவள் " ஹரிஷ் ப்ரோ வந்த உடனே பக் சால்வ் ஆகும்னு சொல்றீங்க சார்.. " என்று கூற..

ஜெகன் நேத்ராவை பார்த்தான்.. " என்ன ஜெகன் பழிவாங்கிரியா?? நான் சொல்லிடுவேன் ஹரிஷ்கு பக் போட்டேன்.. ஆனா சால்வ் ஆகலைன்னு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.. "

"வெண்ணிலா மார்னிங் நேத்ரா இங்கே வந்து ஹரிஷ் இன்னைக்கு லீவ்ன்னு தெரிஞ்சுகிட்டு தானே போனாங்க??" மீண்டும் வெண்ணிலாவிடமே கேள்வி..

ஆமா சார்..

இவனின் உதாசினத்தில் கோபமான நேத்ரா.. " யாரு அந்த கோட் டேவலப் பண்ணுனாங்களோ அவங்களுக்கு தான் பக் போட முடியும்.."

"அப்போ எனக்கு சிசி வெச்சிங்களா ??" இந்த முறை கேள்வி நேரடியாக நேத்ராவிடம்..

இல்லை.. எப்போவும் வைக்க மாட்டேன். இன்னைக்கு என்ன புதுசா??

அவளது இந்த பதிலில் கடுப்பாணவன் எதுவும் கூறாமல் திரும்பி தன் வேலையை செய்ய ஆரம்பித்தான்..

இனி இவனிடம் பேசி எந்த உபயோகமும் இல்லை என்பதை உணர்ந்த நேத்ரா.. அங்கு இருந்து சென்றுவிட.. வெண்ணிலாவிற்கு தான் என்னவோ போல் ஆனது.. ஜெகனிடம்

ஒரு முறை பேசி பாக்கலாம் என்று நினைத்தவள் அவனிடம் .. " சார் நான் வேணா இப்போ இருந்து அந்த பக்கை சால்வ் பண்ணி தரேன் சார்.. "

"அப்படியா?? " என்று ஜெகன் கேட்க..

இவன் எதற்கு அப்படியா என்று கேட்கிறான் என்று புரியாமல் விழிக்க.. அவளுக்கு கால் வந்தது.. மொபைலை எடுத்து பார்த்தால் அழைப்பது ஹரிஷ் ப்ரோ என்று இருக்க. அதை அட்டென் செய்து பேசியவளிடம் ஏகப்பட்ட முக மாற்றங்கள்.. அதை எல்லாம் ஜெகன் கவனித்து கொண்டு தான் இருந்தான்.. அவனது கண்கள் அவள் முகத்தில் பிரதிபலிக்கும் பாவங்களை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தது..

ஹரிஷிடம் பேசி முடித்தவள்.. " ஜெகன் சார் ஹரிஷ் சார் என்ன சொன்னருன்னா... "

உன்னை இந்த பக் மட்டும் இப்போ சால்வ் பண்ணி கொடுத்துட்டு கிளம்ப சொல்றானா ??

ஜெகன் இவ்வாறு கேட்டவுடன் வெண்ணிலா ஆச்சிரியமாக அவனை பார்க்க..

சோ என்ன முடிவு எடுத்து இருக்கீங்க??

ஜெகன் அவளை பன்மையில் அழைத்ததை கவனித்தவள்.. " சார் ஹரிஷ் ப்ரோ பாவம்.. நேத்ரா மேம் அவருக்கு போன் பண்ணி சொல்லி இருப்பாங்க போல.. "

"ஒஹ்ஹ்... " என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே அவனிடம்..

"சார்... "

எப்பொழுதும் மத்தவங்களை பத்தியே யோசிக்காம .. உன்னை பத்தியும் யோசிக்க கத்துக்கோ வெண்ணிலா.. அதே மாதிரி எல்லா நேரத்திலேயும் உன்னை பத்தி மட்டுமேவும் யோசிக்க கூடாது..

முதல் முறையாக ஜெகனின் சொற்களில் அவளுக்கு பிடித்தம் இல்லை.. அதை அவள் முகம் வெளிப்படுத்தியது.. " அப்படி பார்த்தா எனக்காக ஹரிஷ் ப்ரோ நான் இங்கே வந்து சேர்ந்துல இருந்து எவ்ளோ ஹெல்ப் பண்ணி இருக்காரு.. நீங்க சொன்ன மாதிரி நினைச்சு இருந்தா அவரு எப்படி எனக்கு உதவி செஞ்சு இருப்பாரு ??"

நான் சொன்னதை நீ சரியா புரிஞ்சுக்கல.

ஹரிஷ் உணக்கு உதவி செஞ்சது அவனோட வர்கிங் டைம்ல.. இப்போ மணி 7 ஆகிடுச்சு.. இனி நீ அந்த பக் சால்வ் பண்ணிட்டு கிளம்பும் பொழுது மணி 11 ஆகிடும்.. அப்புறம் எப்படி போவ?? இதை எல்லாம் உன்னோட ஹரிஷ் ப்ரோ யோசிச்சு இருக்கணும்..

இல்ல சார்.. நான் ஒரு மணி நேரத்தில் முடிக்க பாக்கறேன்..

அவளது பதிலில் ஜெகன் திருப்தி அடையாததால் ... அவனது தோள்களை குலுக்கி விட்டு அவன் வேலையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தான்..

மணி 8.30 ஆகி இருக்க.. அவளால் அதை சரி செய்ய முடியவில்லை.. ஹரிஷின் உதவியை நாட.. அவனும் அவனுக்கு தெரிந்த எல்லா விதத்திலும் கூறிவிட்டான்.. ஆனால் அது சரியாகததால்.. ஜெகனால் மட்டுமே அதை சரி செய்ய இயலும் என்று புரிந்து கொண்டான்..

வெண்ணிலாவிடம் ஜெகனின் உதவியை கேட்க சொல்ல..

வெண்ணிலா தயங்கி தயங்கி ஜெகனிடம் பிரச்சனையை சொல்ல..

"ஹரிஷிடம் கேட்டு சரி பண்ணுங்க.. " என்று கூற..

மீண்டும் அவளே அதை பார்க்க ஆரம்பித்தாள்...

வெகு நேரம் ஆகியும் ஜெகனிடம் இருந்தோ.. வெண்ணிலவிடம் இருந்தோ எந்த அழைப்பும் இல்லாமால் போக..

ஹரிஷ் ஜெகனுக்கு அழைக்க.. அதை பார்த்தவன் மொபைலை எடுத்து கொண்டு எழுந்து வெளியில் சென்று பேசி வந்தான்..

வந்தவன் நேராக வெண்ணிலாவிடம் சென்று " எந்திரிங்க" என்று கூறினான்..

இவள் புரியாமல் எழ.. அவளிடத்தில் அமர்ந்து அவள் விட்ட இடத்தில் இருந்து வேலையை தொடர்ந்தான்..
You do not have the required permissions to view the files attached to this post.



Post Reply

Return to “நெயிர்ச்சியின் முழுவல் நீ”