11.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Moderator: Sabareeshwari

Post Reply
Sabareeshwari
Moderators
Posts: 27
Joined: Thu May 14, 2020 10:23 pm
Has thanked: 3 times
Been thanked: 8 times

11.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Post by Sabareeshwari »

என்னமா நிலா .. மூஞ்சிலே 1000 வாட்ஸ் பல்ப் எரியுது...

3 மாசம் கழிச்சு வீட்டுக்கு போறேன்ல  அதான் அண்ணா...

ஒஹ்ஹ் அதான் விஷயமா ??

ஆமா அண்ணா... இந்த ப்ரொஜெக்ட் ஸ்டார்ட் ஆன புதுசுல வீட்டுக்கு போனது.. 3 மாசம் ஆச்சு.. ப்ரொஜெக்ட்டும் முடிய போகுதுல.. 

எப்போமா கிளம்புற ??

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அண்ணா..

லீவ் வாங்கிட்டியா ஜீ கிட்ட ??

இன்னும் இல்ல அண்ணா..

"அதெல்லாம் நம்ம நிலா கேட்டு கொடுக்க மாட்டேன்னா சொல்ல போறாரு .. " என்று அங்கே இருந்த நேஹா கூற..

கண்டிப்பா ஜெகன் சார் லீவ் கொடுப்பாரு மேம்..  என்று நிலாவும் சலிக்காமல் பதில் கூறினாள்...

"நல்ல முன்னேற்றம் தான் ... "என்று கூறி ஹரிஷ் சிரிக்க..

என்ன அண்ணா பண்றது? சிலருக்கு அவங்க பாஷையில பதில் சொன்னா தான் உடனே விளங்குது...

என்னது நிலாவுக்கு பேய்ங்க பாஷை கூட புரிய ஆரம்பிச்சுருச்சா ?? (என்று கேட்டுக்கொண்டே வந்தது வேறு யாரும் இல்லை.. நம்ம ஹீரோ ஜெகனே தான் ..)

ஹயோ வந்துட்டாரே... என்று ஹரிஷ் சோக மோடுக்கு செல்ல..

இன்னுமா நீங்க உங்க பயத்தை விடல.. அண்ணா ???

இது பயம் இல்லமா... இப்போலாம் அவரு குடுக்கற கவுண்டர்... மொக்க ஜோக்கை எல்லாம் என்னால ஜீரணிக்க முடியல.. அதுக்கு அவரு பழைய மாதிரி விறைப்பா சிரிக்காம சுத்திட்டு இருந்தாரே.. அதையே சாமளிச்சுடலாம்...

அதைக்கேட்டு நிலா நிறுத்தாமல் சிரிக்க.. அவள் அருகில் வந்து அமர்ந்த ஜெகன் .. "   " பாத்து பாத்து பள்ளு சுளிக்கிக்க போகுது " என்று அவளிடம் கூறிவிட்டு ஹரிஷிடம் திரும்ப..

சார்.. எனக்கு வேலை இருக்கு... நான் கிளம்புறேன்...

எனக்கு தெரியாம அப்படி என்ன என்ன வேலை பாக்கறீங்க ஹரிஷ் ஜீ?? என்று ஜெகன் இரட்டை அர்த்தத்தில் கேட்க..

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஜெகன் ஜீ.. நேத்து பாதியில நிறுத்துன வேலையை தான் இப்போ பாக்க போறேன்... என்று கூறிவிட்டு விட்டால் போதும் என்று அங்கே இருந்து தப்பித்து செல்ல.. அவனது அலைபேசி சரியாக ஒலி எழுப்பியது..

அதில் அர்ஜுன் எண் மிளிர... ஜஸ்ட் மிஸ் கடவுளே...  என்று வாய்விட்டே கூறிவிட..
அவன் அருகில் இருந்தவர்கள் அவனை விசித்திரமாக பார்த்து வைத்தனர்..

அர்ஜுனின் காலை அட்டேன் செய்தவன் "சொல்லுங்க அர்ஜுன்.."

எப்படி இருக்கீங்க ஹரிஷ் ??

நான் நல்லா இருக்கேன் அர்ஜுன்.. அங்கே உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா ??

எல்லாரும் நல்லா இருக்காங்க... நான் உங்களுக்கு இப்போ எதுக்கு கூப்பிட்டேன்னா , நீங்க பண்ணிட்டு இருக்க ப்ராஜெக்ட் நாளையோட முடியுதுல ?

ஆமா அர்ஜுன்..

ஜெகன்  வீட்டுக்கு போறதைப்பற்றி ஏதாவது சொன்னனான ??

இல்லையே சார்... என்கிட்ட எதுவும் சொல்லல ...

எதுக்கும் நிலா கிட்ட கேட்டு பாருங்க ஹரிஷ்...

ஓகே அர்ஜுன்.. நான் நிலா கிட்ட கேட்டுட்டு உங்களுக்கு சொல்றேன்...

ஓகே ஹரிஷ் ரொம்ப நன்றி... பை...

அர்ஜுனிடம் பேசி முடித்த ஹரிஷ், நிலாவிடம் ஜெகன் இல்லாதப்பொழுது இதை கேட்க வேண்டும் என்று குறித்துக்கொண்டான்...

********************************************

நிலா ....

சொல்லுங்க சார்..

நீ இன்னும் இந்த சாரை விடல ??

பழகிருச்சு சார்..

நாளைக்கு தேவையான ரிலீஸ்கு எல்லாம் தயார் செஞ்சூட்டிங்களா ??

ம்ம் ஆச்சு சார்...

சார்... எனக்கு 5 நாள் லீவ் வேணும் சார்... இந்த வாரம் வெள்ளிக்கிழமையில் இருந்து...

ஓகே கிரண்டெட்.... என்ஜாய் பண்ணு...

அவள் அவனை ஆச்சிரியமாக பார்க்க..

என்ன ?? என்று அவன் பார்வையாளையே கேட்க... அதற்கு அவள் " உடனே கொடுத்துடீங்க ??"

நீயா கேட்கலைனாலும் நானா உனக்கு இந்த லீவை  கொடுத்து வீட்டுக்கு அனுப்பி இருப்பேன்.. நீ வீட்டுக்கு போய் 3 மாசம் ஆக போகுது... உனக்கு நியாபகம் இருக்கோ இல்லையோ எனக்கு நியாபகம் இருக்கு...

"ஆமா சார்... வீட்ல அம்மா , அப்பா எல்லாரும் போன மாசத்துல இருந்து வர சொல்லிட்டே இருக்காங்க... போயிட்டு 5 நாள் இருந்துட்டு வரணும்... " என்று அவள் சொல்ல.

"சரி சரி போய் என்னோட டார்லிங்கை நான் கேட்டதா சொல்லு...  " என்று ஜெகன் கூற ..

அவள் அவனை முறைக்க ஆரம்பித்தாள்...

அவன் டார்லிங் என்று கூறியது வேறு யாரையும் அல்ல நிலாவின் ஒரே தங்கையான வெண்மதியை தான்..

நிலா தன்னை பார்ப்பதை பார்த்து மெலிதாக சிரித்து கொண்டவன் "யாருக்கோ ரொம்ப வயிறு எரியுது போல?? என்று கேட்க. அதற்கு அவளோ "எனக்கு என் வயிறு எரிய போகுது??"  என்று கூறி அவள் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் ..

நிலாவை மேலும் வம்புக்கு இழுக்க நினைத்த ஜெகன் அவளிடம் "அப்படியே வீட்டுக்கு போறப்போ வெறும் கைய வீசிட்டு போகாம என்னோட டார்லிங்ககு பிடிச்சது எல்லாம் வாங்கிட்டு போ " என்று கூற,  அவனின் சீண்டல்கள் புரிந்து கொண்டவள் அவனிடம் திரும்பி "உங்களோட டார்லிங்கு நான் ஏன் வாங்கிட்டு போய் கொடுக்கணும்?? வேணும்னா நீங்க வாங்கி கொடுங்க." என்று கூறிவிட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தாள்..

ஜெகன் இன்று நிலாவை முழுதாக வெறுப்பேற்ற வேண்டும் என்ற மன நிலையில் இருந்ததால் உடனே அவனது மொபைலை எடுத்து நிலாவின் தங்கை வெண்மதிக்கு அழைத்தான்...

அவ்வழைப்பை விடுக்கும் பொழுது அவனும் வெண்மதியும் முதன் முதலில் பேசிய தருணங்கள் நினைவுக்கு வர நிலாவை திரும்பி பார்த்தவன் மெலிதாக தனக்குள் சிரித்துக்கொண்டான்..

நிலா இந்த ப்ரொஜெக்ட் ஆரம்பித்த பொழுது வீட்டுக்கு செல்வதற்காக ஜெகனிடம் விடுப்பு வாங்கி கிளம்பியவள்.. அவள் தங்கைக்காக சிலது வாங்க ஷாப்பிங் மால் சென்று இருந்தாள்..

தேவையானது சிலது வாங்கிவிட்டு அவளுக்கு பிடித்த ட்ரெஸ்சை தேர்வு செய்ய அவளுக்கு போட்டோ அனுப்பி கேட்க.. அவளோ கலர் மற்றும் டிசைன்னை மாற்றி மாற்றி கூறியதில் நிலாவுக்கு கடுப்பாக ஆரம்பித்தது.. ஒரு வழியாக 10 -12 வித விதமான துணிகளை போட்டோ எடுத்து வாட்ஸப்பில் அனுப்பி கடைசியாக அனுப்பியதை தேர்வு செய்தவள் வீடியோ காலில் அழைத்தாள்..

ஹலோ வெண்ஸ்...

எப்போ கிளம்பற டீ??

இன்னைக்கு நைட்...

இன்னும் ட்ரெயின்கு டைம் இருக்குல்ல ??

ம்ம் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு .. என்ன விஷயம் சொல்லு..

நீ என் செல்ல அக்கா ல??

இல்ல..

சரி விடு.. உண்மையும் அது தான்.. எனக்கு மேக்கப் ஐட்டம்ஸ் கொஞ்சம் வேணும் வாங்கிட்டு வா..  நான் உனக்கு வாட்ஸப் ல லிஸ்ட் அனுப்பறேன்.. என்று கூறிவிட்டு வைத்து விட..

நிலாவோ " சரியான திமிரு.. எருமை மாடு.. எதுக்கு இப்போ மேக்கப் ஐட்டம் வேணுமாம் .. என்று வாய் ஓயாமல் திட்டினாலும் அவள் அனுப்பியதை பார்த்து வாங்க ஆரம்பித்தாள்..

ஆனால் கொடுமை என்னவென்றால் நிலாவிற்கு வெண்மதி அனுப்பியதில் சில ஷேட் செலக்ட் செய்ய தெரியாமல் .. அவளுக்கு மீண்டும் வீடியோ அழைப்பு விடுத்து கேட்க..  அவளோ நிலாவை அழைய விட.. நிலாவின் பொறுமை சிறிது சிறிதாக பறக்க ஆரம்பித்தது..

அப்பொழுது ஷாப்பிங் மாலில் அவ்வழியாக சென்ற ஜெகன் கண்ணில் எதர்ச்சையாக நிலா விழ.. அவள் மேக்கப் பொருட்கள் இருக்கும் கடைக்குள் இருப்பது ஆச்சிரியாமாக இருந்தது..

உடனே உள்ளே நுழைந்தவன் அவள் அருகில் செல்ல .. அப்பொழுது தான் அவள் யாருடனோ வீடியோ காலில் இருப்பதை பார்த்தான்..

ஹாய் நிலா.. என்ன இன்னும் ரயில்வே ஸ்டேஷன் போல??

திடீர் என்று ஜெகனின் குரல் அருகில் கேட்கவும் நிலா சிறிது அதிர்ச்சியாக , வெண்மதியோ ஜெகனை நிலாவினுடன் வேலை செய்பவனாக இருக்கும் என்று நினைத்து பேச ஆரம்பித்தாள்..

ஹாய் .. நான் வெண்மதி ... நிலாவோட தங்கச்சி..

ஒஹ்ஹ் .. ஐம் ஜெகன்.. நைஸ் டூ சீ யூ.. யூ ஆர் லூக்கிங் சோ பியூடிப்பிள்...  என்று கூற..

தேங்க் யூ.. யூ டூ சோ ஹண்ட்சம்..  என்று கூற..

"என்ன வேணும் வெண்ஸ் ?? "என்று ஜெகன் உரிமையாக கேட்க.. அதுவரை இவர்கள் பேசியதை அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்த நிலா இடையில் புகுந்தாள்...

சில திங்க்ஸ் வாங்க வந்தேன் சார்.. அவ்ளோ தான் முடிஞ்சது இனி கிளம்பனும்.. என்று கூற..

அடியே நான் கேட்ட லிப் ஷேட் அண்ட் ஐ ஷேட் நீ இன்னும் எடுக்கல.. என்று வெண்மதி கத்த..

அது எல்லாம் இங்க இல்ல..

என்னது இங்க இல்லையா ?? இங்க மொஸ்டலி எல்லா வெரைட்டியும் கிடைக்குமே.. என்று ஜெகன் கூற..

வெண்மதியோ , "இந்த நிலாவுக்கு ஒரு லிப்ஸ்டிக் ஷேட் கூட ஒழுங்கா எடுக்க தெரியல.. அவளுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா??  "

பாட்டிமாக்கு இது எல்லாம் தெரிஞ்சா தான் அதிசயம்.. இரு வெண்ஸ் உனக்கு நான் பாத்து எடுத்து தறேன்.. என்று கூறியவன் அவளிடம் கலர் ஷேட்களை கேட்டு தெரிந்து கொண்டு .. அதை எடுத்து நிலாவிடம் கொடுத்தான்..

அவன் பாட்டிமா என்று அழைத்ததில்  கடுப்பானவள், அவன் கொடுத்ததை முறைத்துக்கொண்டு வாங்கினாள்..

பின்பு வெண்மதியிடம் அதை காட்டி அவள் கேட்டது இதுவா என்று உறுதி படுத்திக்கொண்டு அழைப்பை துண்டிக்க போக..  " நன்றிகள் பல..  ஜீ " என்று ஜெகனிடம் வெண்மதி கூறினாள்.. அதை சிரிப்புடன் ஏற்று கொண்டான்..

காலை கட் செய்தவள்.. தேங்க்ஸ் சார்.. வெண்மதி கொஞ்சம் ஜாலியா எல்லார் கிட்டையும் பேசுவா.. அதான் இப்படி..

இதுல என்ன இருக்கு நிலா ?? என் டார்லிங்காக நான் இது கூட செய்ய மாட்டனா ??

என்னது டார்லிங்கா ?? அது யாரு..

வெண்ஸ் தான் என்னோட டார்லிங்.. என்று கூறி ஜெகன் கண் சிமிட்ட..

அவ என்னோட தங்கச்சி .. என்கிட்டவே இப்படி பேசறீங்க ??

எப்படி பேசுனேன் ?? டார்லிங் சொன்னேன்.. இதுக்கு ஏன் நீ இவ்ளோ கோபப்படுற.. என்னவோ தெரியல எனக்கு வெண்ஸ் பார்த்த உடனே ஏதோ ரொம்ப நாள் பழகுண மாதிரி ஒரு பீல்..

இருக்கும் இருக்கும்.. என்று கூறியவள் மேலும் அவனிடம் வார்த்தை வளர்க்க முடியாமல் அவளுக்கான ரயில் புறப்படும் நேரம் நெருங்க ஆரம்பிக்க .. அப்படியே பில் போட்டு விட்டு சென்றாள்..

ஜெகனிற்கு வெண்மதிக்கும் அறிமுகம் ஏற்பட்ட நாளை  தான் நிலாவும் நினைத்து பார்த்து கொண்டாள்..




Post Reply

Return to “நெயிர்ச்சியின் முழுவல் நீ”