21.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Moderator: Sabareeshwari

Post Reply
Sabareeshwari
Moderators
Posts: 27
Joined: Thu May 14, 2020 10:23 pm
Has thanked: 3 times
Been thanked: 8 times

21.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Post by Sabareeshwari »

நிலா லட்டு வேணும்னா கேட்டு வாங்கி சாப்பிடு...  எதுக்கு மாமாக்கிட்ட இருந்து பிடுங்குற??

நிலா வெண்மதியை முறைக்க... ஹயோ ஆத்தா மலை ஏரிட்டா, இனி இங்க நின்னா நம்மகிட்ட சாமி ஆடிருவா... என்று நினைத்தவள் அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓடினாள்..

அவர்கள் இருவரையும் பார்த்து ஜெகன் சிரித்துக்கொண்டே சாப்பிட்டு முடிக்க, நிலாவும் சாப்பிட்டு விட்டு எழுந்தாள்... இருவரும் சாப்பிட்டு முடித்து செல்ல.. அங்கே அனைவரும் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.. மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து செல்வதா , இல்லை பெண்ணின் வீட்டிற்கு அழைத்து செல்வதா என்று...

அங்கே சென்ற ஜெகன் , மெதுவாக தன் அம்மாவிடம் மட்டும் , நிலாவை அழைத்து கொண்டு ஹைதராபாத் செல்லபோவதாக கூற... அவர் அதெல்லாம் சம்பிரதாயம் இல்லை என அவனிடம் மறுத்துக்கொண்டு இருக்கும் பொழுது, ஜெகனின் அப்பா இவர்களை கண்டு இவர்களிடம் வந்தவர் விஷயம் என்னவென்று கேட்க...

அப்பா நானும் நிலாவும் ஹைதராபாத் போனும்... எனக்கு முக்கியமான ப்ரொஜெக்ட் இருக்கு... இப்போ கிளம்புன தான் சரியா இருக்கும்...

பிளைட்ல போலாம் தம்பி நாளைக்கு... இப்படியே போனா ஏதாவது நினைச்சுப்பாங்க... அந்த பொண்ணும் பாவம், காலையில இருந்து எவ்ளோ பாத்துருச்சு... இதுல இப்போ இந்த அலைச்சல் வேற.. என்று அவரும் அவனிடம் எடுத்து கூற..

இவர்களிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த ஜெகன்.. அவர்களிடம் எதுவும் பேசாமல் நகர்ந்து ஹரிஷிடம் சென்றவன், அர்ஜுனை அழைத்துவருமாறு கூறினான்...

என்னடா??

நான் நிலா கூட இப்போவே ஹைதராபாத் கிளம்பனும்..

இதைக்கேட்டு ஹரிஷ் அதியிற்சியாகி ஜெகனை பார்க்க.. அர்ஜூனோ அவனை பார்த்து சலித்துக்கொண்டு, "யாருக்கு நீ இவ்ளோ.. "  என்று ஏதோ கூற வந்தவன் ஹரிஷ் நிற்பதால் அமைதியானான்..

நிலாக்கு ஓகேன்னா சம்மதம் வாங்கி தறேன் .. என்று அர்ஜுன் கூற..

நேராக நிலாவிடம் வந்த ஜெகன் ,  அவளை தனியே அழைத்து வந்தான்...

எனக்கு ஹைதராபாத்ல கொஞ்சம் வேலை இருக்கு... சோ நம்ம இப்போவே கிளம்பலாம்..

இப்பவேவா ??

ஏன் ??

இன்னும் நிறைய சம்பிரதாயம் எல்லாம் இருக்கே.. அப்புறம் எப்படி நம்ம இப்பவே கிளம்ப முடியும்??

இந்த ப்ராஜெக்ட் எவ்வளவு முக்கியம்னு உனக்கும் தெரியும்ல, நம்ம சுச்சுவேஷன் சொல்லி கேட்டா கம்பெனியில ஓகே சொல்ல தான் செய்வாங்க .. ஆனா கண்டிப்பா ப்ராஜெக்ட் கைவிட்டு போயிடும் நம்மளால கம்பெனிக்கு தான் நஷ்டம்.. இந்த ப்ராஜக்ட் கிடைச்சா நம்ம கம்பெனி அடுத்த லெவலுக்கு போயிடும்.. சோ நம்ம கிளம்பி தான் ஆகணும் நம்மளால கம்பெனிக்கு நஷ்டம் வர கூடாது,  அது தான் இப்பவே கிளம்பலாம் சொல்றேன்..

ஜெகன் வேறு ஏதாவது காரணம் சொல்லி இருந்தால் நிலா நிச்சயம் ஒத்துக்கொண்டே இருக்கமாட்டாள் ஆனால் நம்மால் கம்பெனிக்கு நஷ்டம் ஏற்படும் என்றது ஜெகன் கூறியவுடன் அவளுக்கும் ஜெகனின் முடிவு சரி என்றே பட்டது இருந்தும் இரு வீட்டிலும் பெற்றோர்கள் என்ன கூறுவார்கள் என்ற யோசனை இருந்தாலும் ஜெகனிடம் தனது சம்மதத்தை தெரிவித்தாள்...

இங்கே நிலா சம்மதம் தெரிவித்து இருக்க , அர்ஜூனோ அங்கே இரு வீட்டு பெற்றோருடனும் அவர்களுக்கு ஏற்றார்போல் பேசிக்கொண்டு இருந்தான்...

தம்பி அது எப்படி இப்போவே அவங்களை அனுப்ப முடியும் ?? இன்னும் எவ்ளோ சம்பிரதாயம் எல்லாம் பாக்கி இருக்கு.. என்று நிலாவின் அப்பா கேட்க..

எனக்கும் புரியுது அப்பா.. ஆனா உங்களுக்கே  நல்லா தெரியும் இந்த கல்யாணம் எப்படி நடந்ததுன்னு... சாதாரணமா நடந்து இருந்தா நீங்க சொல்றது எல்லாமே சரிதான்..
ஆனா இது திடீர்னு நடந்தது அதனால இப்பவே நம்ம அவங்கள ரொம்ப பயமுறுத்த வேணாம்னு பார்க்கிறேன்.. (பயபட்ற மூஞ்சியா டா அவங்க ??) சம்பிரதாயம் என்ற பேர்ல..

இதுவே அவங்க இப்போ கிளம்பினா அவங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும்.. நமக்கு அவங்க சந்தோஷமா வாழ்றது தானே முக்கியம்?? என்று அர்ஜுன் விடாமல் பேச..  முதலில் அர்ஜுனுக்கு சம்மதம் தெரிவித்தது ஜெகனின் அப்பா தான்.. அவர் ஓகே கூறியவுடன் அங்கே இருந்த அனைவரும் ஒவ்வொருவராக சம்மதம் தெரிவித்தனர் ... ஆனால் நிலாவின் அம்மாவும் ஜெகனின் அம்மாவும் அவர்களுடன் ஹைதராபாத் செல்வதாக கூற.. அர்ஜுனால் அவர்களை சமாளிக்க முடியவில்லை அதன் பொறுப்பை இரு கணவன்மார்களும் ஏற்றுக்கொள்ள ஒருவழியாக ஜெகனையும் நிலாவையும் அனைவரும் சந்தோஷமாக ஹைதராபாத்திற்கு வழியனுப்பி வைத்தனர்...

இவை அனைத்தையும் நினைத்து பார்த்த ஜெகன்.. தனக்குள் சிரித்துக்கொண்டே கண் மூடி உறங்க ஆரம்பித்தான்..

அடுத்த நாள் விடியல் மிகவும் ரம்மியமாக அமைந்தது நிலாவிற்கு.. அவள் கண் விழித்து பார்க்கும் பொழுது சிறு மழை தூறல்கள் விழ, சுற்றிலும் பச்சை பசேலென மரங்கள் .. காலையில் தன் இரையை தேட பல விதமான பறவைகள் வானத்தில் பறக்க, நிலாவிற்கு இவை அனைத்தையும் பார்க்க பார்க்க கண் தேவிட்டவில்லை... அதே சமயம் மனதிற்கும் இதமாக அமைந்தது...

பொதுவாக மனம் குழப்பத்தில் இருக்கும் பொழுது தூங்கி எழுந்தாலோ , வெகு தூரம் நடந்தாலோ, ஏதாவது இயற்கை சூழலில் நாம் கவனம் செலுத்தினாலோ நம் மனதிற்கு அமைதி கிடைக்கும்..

நிலாவிற்கு அப்படியான ஒரு அமைதி தான் இப்பொழுது... ஆகையால் அவள் இயற்கையை ரசித்து கொண்டு இருந்தாள்.. அனைத்தையும் மறந்து...

அடுத்ததாக கண் விழித்தது என்னவோ நம் கதாநாயகன் தான்...

கண்களை திறந்தவன் , சோம்பல் முறித்து , நிலாவை பார்க்க திரும்பியவனின் கண்களில் பட்டது என்னவோ அவள் வெற்றிடை தான்.. தூக்கத்தில் இருந்து எழுந்தவள் ஆடையை சரி செய்யாமல் இயற்கையை ரசித்துக்கொண்டு இருக்க.. இங்கே அவள் கணவனோ அவள் இடையை பார்த்துக்கொண்டு இருந்தான்... (ரசித்துக்கொண்டு இருந்தானோ யார் அறிவார் ?? )

அவன் தன்னை மறந்து பார்த்தது சில நொடிகள் மட்டுமே.. உடனே தன்னை ஒருநிலை படுத்திக் கொண்டான் பின்பு நிலாவை பார்க்க அவள் ஜன்னலில் கவனம் பதித்து இருப்பதை பார்த்து, அவனும் சற்று நகர்ந்து அவளிடம் நெருங்கி ஜன்னலை பார்க்க, நிலாவிற்கு சிறு குறுகுறுப்பு தோன்றியது...

அதில் அவள் கவனம் திசை திரும்ப , ஜெகன் அவளுக்கு மிகவும் நெருக்கத்தில் அமர்ந்து இருப்பது தெரிந்தது..

அவனை நேராக அமர்ந்து நிலா பார்க்க, அவளின் பார்வையை சில நொடிகள் தாங்கியவன் ,
"இயற்கைனா ரொம்ப பிடிக்குமோ ?? " என்று கேள்வி எழுப்பினான்...

ம்ம்ம்... என்று அவள் சந்தோஷமாக தலையாட்ட , மெலிதாக தலையசைத்தவன் , "இன்னும் கொஞ்சம் நேரத்துல எல்லாரும் எழுந்துடுவாங்க ... அப்புறம் வண்டியை நிறுத்தி ப்ரெஷ்அப் பண்ணிட்டு , அப்படியே மார்னிங் சாப்பிட்டுட்டு கிளம்புன , மதியமும் ஹோட்டல்ல சாப்பிட்டு வீட்டுக்கு போலாம்.. " என்று கூற..

ஓகே.. என்று கூறிவிட்டு அவள் மீண்டும் ஜன்னலில் கவனம் பதிக்க.. ஜெகனின் கவனம் அவள் இடைக்கு தான் சென்றது.. ஒரு நொடிக்கும் மேல் பார்வையை பதித்தவன் , போனை எடுத்து நோண்ட... அனைவரும் ஒவ்வொருத்தராக  எழ ஆரம்பிக்க .. வண்டி ஒரு ஹோட்டலின் முன் நின்றது...

ஹரீஷ் ஜெகனை கீழே செல்ல அழைக்க , தான் வருவதாக கூறியவன் ,நிலாவின் அருகில் நெருங்கி அவள் இடையை மறைக்குமாறு ஆடையை சரி செய்தவன் , அவள் அதிர்ந்து திரும்பி பார்க்கும் பொழுது எழுந்து சென்று இருந்தான்..

அவளுக்கு தான் சற்று நேரம் பெரும் அவசத்தை ஆகியது.. அவன் கை பட்டவுடன் சிறு அதிர்வு உடேலங்கும் பரவி அவளை இம்சித்தது...

கீழே இறங்கிய ஜெகனோ மீண்டும் நிலாவின் கண்களில் பட்டது அவர்கள் ஹைதராபாத்தில் இறங்குவதற்கு 10 நிமிடம் முன்னாள் தான்.. அதுவரைக்கும் பின்னால் சென்று அமர்ந்தவன் , அனைவருடனும் அரட்டை அடித்துக்கொண்டு வந்தான்.. பஸ்ஸில் இருந்த அனைவரும் அவர்களை மேலும் சங்கடம் படுத்தாமல் நடந்துக்கொள்ள... நேஹா மட்டுமே மனதில் சோகத்தை சுமந்துகொண்டு பயணித்தாள்...

ஒருவழியாக பஸ் தன் இருப்பிடம் வந்து நிற்க , அனைவரும் மீண்டும் ஜெகனுக்கு நிலாவிற்கும் வாழ்த்தை தெரிவித்து , அவரவர் இருப்பிடம் நோக்கி சென்றனர்..

ஜெகனும் நிலாவும் ஒரு கால் டாக்ஸி பிடித்து ஜெகனின் வீட்டிற்கு சென்றனர்.. அவன் வரும்பொழுது பைக்கில் வந்து இருந்தாலும் இப்பொழுது நிலாவின் லக்கேஜ் அதிகமாக இருப்பதால், டாக்ஸி பிடித்து அவளை அழைத்து சென்றான்.. போகும் வழியிலேயே அவளை ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட வைத்தவன், அவளை அவனது வீட்டிற்கு அழைத்து வந்தான்..

யாருமற்று இருவர் மட்டும் செல்லுவது ஒரு மாதிரியாக இருக்க , இருந்தும் இவர்கள் தானே அனைவரையும் தவிர்த்து வந்து இருந்தனர்...

ஜெகன் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கி இருக்க, அவளிடம் இருந்த லக்கேஜை வாங்கிக்கொண்டு லிப்டில் அவளை அழைத்து சென்று , வீட்டை திறந்து அவளை உள்ளே அழைத்தவன் , அவள் எந்த காலை முதலில் வைக்கிறாள் என்று பார்த்துக்கொண்டான்..

நல்ல வேலையாக நிலா , வலது காலை எடுத்து வைக்க அவனும் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தான்..

வீடு சுத்தி காட்டுற அளவு ஒன்னும் பெருசு இல்ல... ரூம்ல உன்னோட லக்கேஜ் எல்லாம் வெச்சுக்கோ. போய் ப்ரெஷ்அப் ஆகிட்டு தூங்கி எழு... எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு , அப்படியே பைக்கையும் எடுத்துட்டு வரணும்... என்று கூறியவன் , வேகமாக குளித்து முடித்து வெளியில் சென்றான்..

அவளுக்கு வீட்டில் தேவையான சிலதை காட்டி இருந்ததால், குளித்து ஒரு தூக்கம் போட்டு எழுந்து பார்க்க மணி 5.30 ஆகி இருந்தது...

ஜெகன் இன்னும் வீடு வந்து இருக்கவில்லை.. ஆகையால் அவளுக்கு மட்டும் பால் இல்லாததால் பிளாக் டீ போட்டு குடித்துவிட்டு , முதலில் தன் வீட்ற்கு அழைத்து பேசி முடித்தவள், ஜெகனின் அம்மாவிற்கு அழைத்து பேசி முடிக்கும் பொழுது மணி 7 க்கு மேல் ஆகி இருந்தது..

ஜெகன் இன்னும் வராததால் , துணிகளை பிரித்து அடுக்க ஆரம்பித்தாள்..

மணி 8.30 மேல் ஆகி இருக்க , ஜெகனுக்கு அழைக்கலாம என்று நிலா யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே , காலிங் பெல் சத்தம் கேட்டது..

நிலா கதவை திறக்க, ஜெகன் தான் வந்து இருந்தான் ..


"நான் வெளில சாப்பிட்டேன் நிலா.. நீ இதை சாப்பிடு... " என்று அவள் முன் ஒரு பிரியாணி பக்கெட்டை வைத்துவிட்டு... "சாப்பிட்டு முடிச்சிட்டு இந்த பாலை காய்ச்சி ரூம்கு எடுத்துட்டு வா.. " என்று கூறிவிட்டு ஜெகன் ரூமிற்குள் செல்ல.. நிலா தான் சற்று திணறி போனாள்.. பசி வேறு அவளை இம்சை படுத்தியது...

மதியம் ஹோட்டலில் சாப்பிட்டது , மணி இப்பொழுது 9 க்கு மேல் ஆகிவிட , முதலில் வயிற்றை கவனிக்கலாம் என்று முடிவு எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்..

உள்ளே ஜெகன் யாரிடமோ போனில் பேசுவது கேட்க, அதற்குள் சாப்பிட்டு விட்டு அவன் கேட்டது போல் பாலை காய்ச்சி எடுத்து சென்றாள்..

சிறு பதட்டத்துடன் அவள் உள்ளே நுழைய, ஜெகன் லேப்டாப்பில் ஏதோ செய்துக்கொண்டு இருந்தான்..

அவள் வருவதை கவனித்தவன் , எழுந்து சென்று அவளிடம் இருந்த பால் தம்பளரை வாங்கிக்கொண்டு, " நான் பாதி ப்ரொஜெக்ட் ப்ரெசென்டேஷன் பண்ணிட்டேன்.. நீ பண்ணுணதை மட்டும் இப்போ நீ முடிச்சு கொடு.. மத்தது எல்லாம் நான் பாத்துக்கறேன்.. "

நிலா அவன் கூறியதை கேட்டு திருதிருவென முழிக்க, "என்னடி முழிச்சிட்டு இருக்க ?? அதுக்குள்ள நீ பண்ணுன வேலை எல்லாம் மறந்துருச்சா ?? ஒரு வேளை பர்ஸ்ட் நைட் மூட் ல மறந்துட்டியா ?? "

நிலா அவனை முறைக்க.. "என்ன முறைப்பு ?? சீக்கிரம் வந்து செய்... நாளைக்கு காலைல இதை சப்மிட் பண்னனும்.. செகண்ட் நைட் , தேர்ட் நைட் கொண்டாடுன ஒன்னும் தப்பு இல்ல.. இல்ல பர்ஸ்ட் நைட் தான் வேணும்னா... " அவனை முடிக்க விடாமல் அவள் லேப்டாப் முன்பு சென்று அமர்ந்து இருந்தாள்..




Post Reply

Return to “நெயிர்ச்சியின் முழுவல் நீ”