22.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Moderator: Sabareeshwari

Post Reply
Sabareeshwari
Moderators
Posts: 27
Joined: Thu May 14, 2020 10:23 pm
Has thanked: 3 times
Been thanked: 8 times

22.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Post by Sabareeshwari »

ஜெகன் கூறிய வேலைகளை முடித்த நிலா அப்படியே உறங்க ஆரம்பித்தாள்.. அவள் நன்றாக உறங்கி விட்டாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஜெகன் அவன் செய்துகொண்டிருந்த வேலைகளை முடித்து , அவள் அருகில் சென்று படுத்து கொண்டான் .. ஆனால் உறக்கம் தான் அவனிடம் வராமல் அவனுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தது.. பல மணி நேரங்களாக அவனுடைய சிந்தனைக்குள் உழன்று கொண்டு இருந்தவன் நடுநிசி கடந்துதான் உறங்க ஆரம்பித்தான்....

அவர்களுது இரண்டாவது நாளும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சென்றது...  இதேபோல் அனைத்து நாட்களும் நம் வாழ்வில் இருந்துவிட்டால் வாழ்க்கையின் சுவாரசியம் குறைந்துவிடும்...

ஆனால் ஜெகன் நிலாவின் வாழ்க்கையில் சுவாரஸ்யத்திற்கு எந்த வித குறையும் இல்லாமல் கூடுதலாகவே இனி பார்ப்போம்..😈😈😈

ஜெகனையும் நிலாவையும் பெற்றோரிடம் பேசி ஹைதராபாத் அனுப்பி வைத்த அர்ஜுன், அங்கே அவர்களுடன் இருந்து அனைத்து வேலையும் முடித்து கொடுத்தவன் சென்னை கிளம்பி சென்றான்.. அர்ஜூனின் மூலம் ஜெகன் நிலா கல்யாணத்தை அறிந்து இருந்தவர்கள் அர்ஜுன் நேரில் வந்தால் அங்கு நடந்ததை கேட்க ஆர்வமாக காத்துக்கொண்டு இருந்தனர் அர்ஜுனின் வரவிற்காக..

அர்ஜுன் அடுத்த நாள் காலை பத்து மணி போல் அவர்கள் வீட்டை அடைந்தான்.. அர்ஜுன் நுழைந்ததை முதலில் கண்ட மித்ராவின் கண்களில் சிறு அழைப்புருதல் இருந்தது அதை கவனித்த அர்ஜுன், " ஜெகன் ஹைதராபாத் நேத்தே கல்யாணம் முடிஞ்ச கையோட கிளம்பிட்டான்.." என்று பொதுவாக கூறினான் .. பின்பு அங்கு நடந்தவற்றை ஒன்று விடாமல் கூற அனைவரும் இனி ஜெகன் மற்றும் நிலாவின் வாழ்க்கை நல்லபடியாக செல்ல வேண்டும் என கடவுளுக்கு தனித்தனியாக பிரார்த்தனை வைத்தனர்...

இங்கே ஹைதராபாத்தில் காலை ஆறு மணி ஆகி இருக்க நிலாவின் மொபைல் அலாரம் சத்தத்தில் முதலில் விழித்த நிலா அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவள் அருகில் ஜெகன் உறங்குவதை பார்த்து அலாரத்தை உடனே ஆப் செய்தாள்.. பின்பு ஜெகனின் தூக்கம் கலையாதவாறு படுக்கையை விட்டு எழுந்தவள் தனது காலை கடன்களை முடித்துக்கொண்டு கிச்சன் பக்கம் சென்றாள்..

உள்ளே நுழைந்த பார்த்தவளுக்கு சில நிமிடங்கள் தான் சமையல் அறைக்குள் தான் நுழைந்து இருக்கிறோமா என்ற சந்தேகம் பலமாக எழுந்தது , அங்கே ஒரு கரண்ட் அடுப்பு இருக்க அதன் பக்கத்தில் ஒரு தலையணை இருந்தது சற்று தள்ளி பார்த்தால் , டூத்பேஸ்ட் பாத்திரங்களுக்கு நடுவில் இருந்தது.. சில பாத்திரங்கள் மட்டுமே இருக்க பிரிட்ஜில் ஏதாவது சமைக்க இருக்கும் என்று நினைத்து அதை திறந்த அவளுக்கு சில மதுபானங்கள் அவள் பார்வைக்கு விருந்தாக அமைந்தது..

அங்கு சமைத்து பல வருடங்கள் ஆனது போல் அவளுக்கு அந்த அறையை பார்த்த சில நிமிடங்களில் தோன்ற ஆரம்பித்து இருந்தது.. இங்கே இருந்து தனக்கு சமைக்க எதுவும் கிடைக்காது என்று அறிந்தவர் வெளியில் சென்று பால் பாக்கெட் வாங்கி வர முடிவு செய்து சமையல் அறையில் இருந்து வெளியில் வர , அப்பொழுதுதான் தூங்கி எழுந்த ஜெகன் இவளை தேடி வர , அவனை அங்கு திடீரென பார்த்தவள் பயந்து இரு அடி பின்னோக்கி வைத்தாள்...

ஏய் நிலா சாரி என்று ஜெகன் கூறப் அவனை ஒரு நொடி பார்த்தவள் எதுவும் பேசாமல் அவர்கள் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து அவளது பர்சில் இருந்து சில நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்தவள் வெளியில் செல்ல ஆயத்தமாகி ஹாலுக்கு வர ஜெகன் அங்கே அமர்ந்து அவள் செயல்களை எதுவும் கூறாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்..

அவன் கவனிப்பதை உணர்ந்தவள், அவனிடம் எதுவும் கூறாமல் அவனை தாண்டி சென்று அவளது செருப்புகளை அணிந்தவள் அவனாக ஏதாவது கேட்பானா என்று அவனை பார்க்க அவனும் எதுவும் கேட்பதுபோல் தெரியவில்லை ஆகையால் இவளே வீட்டில் சமைக்க எதுவும் இல்ல போய் பால் அப்புறம் சில பொருள் மட்டும் சமைக்க தேவையானது வாங்கிட்டு வரேன் என்று கூறிவிட்டு வேகமாக வெளியேறினாள்..

வெளியே வந்தவளுக்கு எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் இருபக்கமும் பார்த்துக்கொண்டே இருக்க " மல்லிகை கடை இங்கிருந்த அஞ்சு நிமிஷம் நடந்தால்தான் வரும்" என்று ஜெகன் கூற , நிலா அப்பொழுதுதான் ஜெகனும் தன் பின்னால் வந்து இருந்ததை கவனித்தாள்...

எந்த பக்கம் சொல்லுங்க நானே போய் வாங்கிட்டு வந்துருவேன்..

அவள் அப்படி கூறியவுடன் ஜெகன் சில நொடிகள் யோசித்தவன் பின்பு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்.. " நான் என்ன சொன்னேன்னு இப்போ இப்படி சிரிச்சிட்டு இருக்கீங்க??" என்று நிலா சற்றுக் கோபமாக வினவ "இல்ல நான் உன் கூட கடைக்கு வரதுக்காக வரல நான் தினமும் ஜாகிங் போவேன் அதனால்தான் வெளியில வந்தேன்" என்று கூறி மேலும் சிரிக்க அவனை நன்றாக முறைத்தவள் அவன் கூறிய பக்கம் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.. அவனும் அவள் பின்னே வர நிலா சிறு கண்டன பார்வையுடன் அவனை திரும்பி பார்க்க "அட நான் ஜாக்கிங் போறதும் இந்த பக்கம் தான் நிலா." என்று கூறி அவளை தாண்டி சென்றான்...

சிறிது தூரம் நடந்தவள் அங்கே ஒரு மல்லிகை கடை இருக்க அவளுக்கு தேவையானது அனைத்தையும் வாங்கியவள் , வீடுவந்து முதலில் பாலை காய்ச்சி காபி கலந்து குடித்துவிட்டு உப்புமா செய்தால் வேலை சுலபமாக முடியும் என்று நினைத்தவள் வாங்கி வந்த ரவையை வைத்து உப்மா செய்துவிட்டு குளிக்க சென்றாள் .. அவள் குளித்து முடித்து தயாராகி வரும்பொழுது தான் ஜெகன் உள்ளே நுழைந்தான்..

வாவ் .....
அதுக்குள்ள ரெடி ஆகிட்டியா ??
சூப்பர் ... நான் குளிச்சிட்டு வரத்துக்குள்ள என்னோட வர்க் கொஞ்சம் மிச்சம் இருக்கு, அதை பார்த்து முடிச்சு வை நிலா... என்று கூறிவிட்டு அவன் அறைக்குள் நுழைந்து விட்டான்.. அவளுடைய பதிலை கூட கேட்காமல்..

வாய்குள்ளேயே முனகியவள் , அவன் கூறிய வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்... அனைத்தையும் அவள் முடித்து கூட ஜெகன் தயாராகி வரவில்லை... இன்னும் ரூமிற்குள் என்ன செய்கிறான் என்று நினைக்க.. அவள் வயிறு பசியால் கத்த ஆரம்பித்தது.. முதலில் வயிற்றை கவனிப்போம் என்று நினைத்தவள் , உப்மாவை ஒரு தட்டில் போட்டு வந்து ஹாலில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்...

2 வாய் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாள், வேகமாக வெளியே வந்த ஜெகன், ஹேய் டைம் ஆச்சு இன்னும் சாப்பிடாம என்ன பண்ற ?? என்று கேட்டவன் , அவள் தட்டில் இருந்து உப்மாவை எடுத்து வாயில் போட்டவன்.. நாட் பேட்... என்று கூறி சாப்பிட ஆரம்பித்தான்..

இருங்க உங்களுக்கும் போட்டுட்டு வரேன் என்று எழுந்தவளை , அதுக்கு எல்லாம் நேரம் இல்லை நிலா... சீக்கிரம் கிளம்பு, என்று கூறி டை, ஷூ , என்று போட்டுக்கொண்டே அவள் தட்டில் இருந்த அனைத்து உப்மாவையும் அவனே சாப்பிட்டு முடித்து இருந்தான்...

வா வா சீக்கிரம்.. கிளம்பு.. என்று அவளை அவசர படுத்த..

நானா ?? எங்கே ??

எங்கயா ?? ஆபீஸ்கு தான் வேற எங்கே ?

நான் எதுக்கு ?? நான் தான் லீவ்ல இருக்கனே...

ஒஹ்ஹ் நீ இன்னும் மெயில் பாக்கலையா??

என்ன மெயில் ??

அஸ் ய டீம் லீடர்ரா உன்னோட லீவை நான் கேன்சல் பண்ணிட்டேன்...

வாட் ?? எதுக்கு ??

ப்ரொஜெக்ட் இருக்கு நிலா... எல்லாம் சீக்கிரம் முடிக்கணும்.. லீவ் போட்டு வீட்ல நீ என்ன பண்ண போற?? வெட்டியா இருப்ப.. உனக்கும் போர் அடிக்கும்.. அதான் லீவை கேன்சல் பண்ணிட்டேன்..

சீக்கிரம் வா .. பாரு உனக்கு விளக்கம் சொல்லியே 5 நிமிஷம் வேஸ்ட் ஆயிடுச்சு...

நான் இன்னும் சாப்பிடல...

பரவாயில்லை.... அந்த உப்மாவை ஏதாவது பாக்ஸ்ல போட்டுட்டு வா.. ஆபிஸ் போய் சாப்டுகலாம்.... என்று கூறிவிட்டி பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட.. இவள் அவன் கூறியதை போல் உப்மாவை பாக்சில் போட்டு எடுத்துக்கொண்டு கிளம்பினாள்...

இருவரும் 10 மணி போல் ஆபிஸை அடைய.. அங்கே இவர்களை கண்ட அனைவருக்கும் ஆச்சிரியமாக இருந்தது...


அதை எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளே நுழைந்தவன்.. நிலாவை அவர்கள் கேபின்கு அனுப்பி விட்டு , இவன் சி.இ.ஓ அறைக்கு சென்று 15 நிமிடங்கள் கழித்தே அவர்கள் கேபிணை அடைந்தான்...


அதற்குள் அங்கே இருந்தவர்கள் நிலாவை கேலி பண்ணியும், கேள்விகேட்டும் ஒரு வழியாக்கி இருந்தனர்...


இவன் உள்ளே நுழைந்தவுடன்.. இன்னைக்கே ஆபிஸ் வரனுமா ஜீ என்று ஹரிஷ் கேட்க.. கண்டிப்பா ஹரிஷ் கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலை இருக்கு... என்று கூறியவன் அவன் வேளைகளில் மூழ்கினான்..

மணி மாலை 5ஐ தொட , அனைவரையும் அவர்களுது சி.இ.ஓ மீட்டிங் ஹால் அழைப்பதாக கூற... ஒவ்வொரு டீமும் அங்கே வந்து சேர்ந்தனர்..


முதலில் ஜெகனுக்கும் நிலாவுக்கும் வாழ்த்தை தெரிவித்தவர், பின்பு அவர்கள் இருவருக்கும் அந்த வார கடைசியில் பார்ட்டி வைப்பதாக கூறினார்... அதை கேட்டு அனைவரும் கை தட்டி உற்சாகமாக இருக்க.. அவங்க மேரேஜ்கு மட்டும் இந்த பார்ட்டி இல்ல.. இது அவங்களுக்கு பேர்வெல் பார்ட்டி.. நிலாவும் ஜெகனும் இந்த வாரம் கடைசியோட நம்ம ஆபிஸில் இருந்து ரீலீவ் ஆகறாங்க..

சிலர் அதிர்ச்சியாகி ஜெகனையும் நிலாவையும் பார்க்க.. அங்கே நிலாவும் அதே அதிர்ச்சியுடன் தான் ஜெகனை பார்த்துக்கொண்டு இருந்தாள்...

மீட்டிங் முடிந்தவுடன் ஹரிஷ் ஜெகனை அழைத்து கேட்க... நாங்க சென்னைக்கு போறோம் ஹரிஷ்.. நீங்க கூட இந்த ப்ரொஜெக்ட்டை ஒரு மாசத்துல முடிச்சிட்டு சென்னை வந்துருங்க.. இனி என்ன பாத்துக்குற வேலை உங்களுக்கு இல்லைன்னு அர்ஜுன் கிட்ட சொல்லிடுங்க...

ஜெகன் சொல்லியதை கேட்டு ஹரிஷ் ஏதோ கூற வர, நீங்க எந்த விளக்கமும் எனக்கு சொல்ல தேவையில்லை ஜீ.. என்று கூறிவிட்டு சிறு தலையசைவுடன் அங்கு இருந்து நகர்ந்தான்...


நிலாவும் ஜெகனும் வீடு வந்து சேரும் பொழுது மணி 7.30 ஆகி இருக்க.. இன்னும் நிலாவிடம் அவன் எந்த விளக்கமும் அளிக்கவில்லை...













Post Reply

Return to “நெயிர்ச்சியின் முழுவல் நீ”