ஜெகனிடம் பேசி முடித்த ஹரிஷ் அவன் அலைபேசியை அணைத்து விட்டு அங்கே இருந்தவர்களை பார்க்க அனைவரது முகமும் ஒவ்வொரு உணர்ச்சிகளை பிரதிபலித்துக் கொண்டிருந்தது..
அனைவரது மௌனத்தையும் முதலில் கலைத்தது அங்கே நின்றுகொண்டு இருந்த சக்திதான். " பாத்தீங்களா இன்னமும் அவன் மாறவே இல்ல .. இன்னும் அதே கோபத்தோடு தான் இருக்கான் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம.. என்னோட பிறந்த நாள் அன்னைக்கு எதுக்கு அந்த வீணாப்போனவன் கிட்ட பேச சொன்னீங்க??"
சக்தி எதுக்கு இப்போ இப்படி கத்துற?? அவன சொல்றியே நீ மட்டும் அவன் இடத்தில இருந்து யோசிச்சு பார்த்தியா??
என்னை என்ன யோசிக்க சொல்ற அர்ஜுன்? அவன் மேல தான் தப்பு இது எல்லாருக்கும் தெரியும் .. நான் தப்பு பண்ண மாதிரி யோசிக்க சொல்றே..
தப்பு பண்ணுனா தான் யோசிக்கணும் இல்ல சக்தி .. நமக்கு முக்கியமானவங்க தப்பு பண்ணும் போதும் நம்ம அவங்க பக்கம் இருக்கிற சூழ்நிலையை யோசிச்சு பார்த்து புரிஞ்சுக்கணும்.. அதுதான் எந்த உறவுக்கும் அழகு . அவன் நம்மளோட பிரென்ட்டுடா எப்படி உனக்கு அவனை தப்பா நினைக்க தோணுது??
ஓ அப்போ மித்ரா யாரு?? அவன் மட்டும் மித்ராவை தப்பா புரிஞ்சுகிட்ட இன்னும் பைத்தியம் மாதிரி பேசிட்டு சுத்திட்டு இருக்கான்.. ஏதோ அந்த சூழ்நிலையில புரியல விடு.. ஆனா அது நடந்து எத்தனை வருஷம் ஆச்சு.. ஒரு நாள் ஒரு மணி நேரம் பொறுமையா உட்கார்ந்து யோசிச்சு பார்த்து இருந்தா இந்நேரம் அவனுக்கே தெரிஞ்சு இருக்கும்.. மித்ரா மேல மட்டும் அத்தனை தப்பும் இல்லன்னு..
அவன் அதை கூட செய்யல...
"அண்ணா... ப்ளீஸ்.. நடந்ததை மறந்துடுங்க.. " என்று அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மித்ரா பேச..
"உன்னால அத்தனையும் மறந்துட்டு நார்மல்லா வாழ முடியுமா மித்ரா?? " என்று சக்தி அவளை எதிர் கேள்வி கேட்க..
அவளிடம் கசந்த முறுவல் மட்டுமே பதிலாய்..
ஹரிஷ் அண்ணா.. அந்த பொண்ணு பேரு என்ன ??
எந்த பொண்ணு மித்ரா ??
அதான் ஜெகன் இப்போ உங்களை திட்டுனான்ல ஒரு பெண்ணுக்கு நீங்க பாஸ்வர்ட் கொடுத்தீங்கன்னு..
ஒஹ்ஹ்.. அது வெண்ணிலா மா..
வெண்ணிலா.. அழகான பேர்ல அர்ஜுன் ??
மித்ரா நீ ரொம்ப அதிகமா யோசிக்கிற..
இல்ல அர்ஜுன்.. நான் சரியா தான் யோசிக்கிறேன்.. ஜெகனுக்கு அவளை பிடிச்சு இருக்கு..
மித்ரா நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை.. இப்போ கூட நீங்க பார்த்தீங்கள்ள அந்த பெண்ணை சாப்பிட கூட விடாம திட்டி அனுப்பிட்டாரு..
ஹரிஷை பார்த்து மெதுவாக சிரித்தவள்.. "கண்டிப்பா சாப்பிட வைப்பான்.. "
"மித்ரா எனக்கு என்னமோ நீ யோசிக்கிற மாதிரி நடக்கும்னு தோணால.. " என்று அர்ஜுன் கூற..
ஜெகனுக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது வெண்ணிலா கூட தான் அர்ஜுன் நான் முடிவு பண்ணிட்டேன்..
அவள் வார்த்தைகளில் சக்தி சட்டென கோபமாக " என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீயும் உன்னோட பிரென்ட்டும்.. கல்யாணம்னா உங்களுக்கு விளையாட்டா போச்சா ?? அவன் மட்டும் சரின்னு முடிவு பண்ணி உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சது பத்தலையா?? இப்போ நீயும் அதே மாதிரி கிளம்பற?? "
ஏன் அண்ணா நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு பாத்தீங்கள்ள?? அர்ஜுனை தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணி இருப்பேன்னா?? ஜெகன் அர்ஜுனையும் என்னையும் யோசிச்சு தான் எங்க கல்யாணத்தை நடத்தினான்..
அர்ஜுனை யோசிச்சான் சொல்லு.. உன்னை பத்தி யோசிச்சான்னு சொல்லாத..
எனக்கு கல்யாணத்துல 1% இஷ்டம் இல்லன்னு அவன் உணர்ந்து இருந்தாலும் .. எங்களோட கல்யாணம் நடந்து இருக்காது அண்ணா.. முதல் ஆளா அவன் தான் எங்க கலயணத்தை எதிர்த்து இருப்பான்.. அவன் அவ்ளோ பிடிவாதமா எங்க கல்யாணத்தை நடத்தி வெச்சதுக்கு காரணம் நான் அர்ஜுன் கூட மட்டும் தான் சந்தோஷமா இருப்பேன்னு அவன் உணர்ந்ததால தான்.. உங்களுக்கு எல்லாம் வேணா ஜெகன் அர்ஜுனுக்காக இது எல்லாம் செஞ்சதா தெரியலாம்.. ஆனா எனக்கும் அர்ஜுனுக்கும் நல்லா தெரியும் இது ஜெகன் எனக்காக மட்டும் செஞ்சதுன்னு..
"ஓரு பழமொழி சொல்லுவாங்களே.. நெல்லுக்கு இறைச்ச தண்ணி புல்லுக்கும் போகுதுன்னு .. அந்த மாதிரி தான் ஜெகன் எனக்காக செஞ்சது அர்ஜுனுக்கும் பேவர் ஆயிடுச்சு.. என்ன அர்ஜுன் நான் சொல்றது சரியா?? " என்ற அர்ஜுனை கேட்ட மித்ரா அவனை பார்த்து கண் அடிக்க..
அவள் அருகில் வந்து.. அவள் தோள் சுற்றி கையை போட்டுக்கொண்டு அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவன்.. " ம்ம் கரெக்ட் தான் மிதும்மா.. "
அர்ஜுனை பார்த்து அழகாக பல்வரிசை தெரிய சிரித்தவள் ஹரிஷிடம் திரும்பி "நீங்க ஜெகன் கூட இருந்தா இத்தனை நாளா ஜெகன் எந்த பொண்ணு கிட்டையாவது இதுவரைக்கும் தேவையில்லாமல் பேசி பார்த்திருக்கீங்களா ?? அதாவது வர்க் விஷயத்தை தவிர வேற ஏதாவது பேசி பார்த்திருக்கீங்களா?? " என்று கேட்க அதற்கு ஹரிஷ் இல்லை என்று தலையசைத்தான்..
அதை விடுங்க அண்ணா உங்களுக்கு தெரியும்மில்ல அவன் பொண்ணுங்க கிட்ட ரூடா எடுத்து எரிஞ்சு பேசறது .. ஆனா வெண்ணிலாக்கிட்ட அவன் எப்பயாவது அப்படி நடந்து பார்த்து இருக்கீங்களா ??
நீ சொல்ற மாதிரி மத்த பொண்ணுங்ககிட்ட நடக்கிற மாதிரி வெண்ணிலாக் கிட்ட நடந்துக்கொள்ளல.. ஆனா வெண்ணிலா கிட்டையும் அவன் அவ்வளவா பேச மாட்டாரே ஜெகன் ஜீ..
இப்போ ஜெகன் கடைசியா என்ன சொன்னான்னு கவனிச்சீங்களா ??
என்ன சொன்னான் என்று அனைவரும் யோசிக்க.. மித்ராவே தொடர்ந்தாள் " வெண்ணிலா சாப்பிடாம போறா சோ நானும் போறேன்னு சொல்லிட்டு போனான்.. "
"ஆமா அதுல என்ன இருக்கு ??" என்று ஹரிஷ் கேட்க..
அதுல.... என்ன .... இருக்கா ?? என்று கோரசாக சக்தி மித்ரா அர்ஜுன் கேட்க..
அவர்கள் மூவரையும் விசித்திர பிராணி போல் ஹரிஷ் பார்க்க.. அவனை பார்த்து இவர்கள் மூவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
"கடவுளே வந்தாலும் இருங்க நான் இன்னும் சாப்பிடல.. சாப்பாடு தான் முக்கியம்.. சாப்பிட்டுட்டு வறேன்னு சொல்லுவான்.. அப்படிப்பட்டவன் சாப்பிடாம போறது எல்லாம் அதிசயத்திலும் அதிசயம் தான்.. " என்று அர்ஜுன் கூற..
என்ன சொல்றீங்க அர்ஜுன்?? ஜெகன் ஜீ எவ்ளோ நாள் சாப்பிடாம வேலை பார்த்து இருக்காரு.. நீங்க வேற.. நாங்க கூட இந்த மனுஷன் மட்டும் எப்படி சாப்பிடாம கூட 12 மணி நேரம் விடாம வேலை செய்யறாருன்னு..
என்ன சொல்றீங்க அண்ணா ?? ஜெகன் சாப்பிடாம இருக்கவே மாட்டான்.. அதுவும் 12 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யறான ??
"ஆமா மா.. காலைல வருவாரு.. மதியம் அவரு சாப்பிட்டு நான் பார்த்ததில்லை.. நைட்டும் ரொம்ப லேட்டா தான் போவாறு.. " என்று ஹரிஷ் கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே வெண்ணிலாவிடம் இருந்து அழைப்பு வந்தது..
ஹரிஷ் வெண்ணிலா என்று கூற மித்ரா அவள் அழைப்பை லவ்ட் ஸ்பீக்கரில் போட சொல்ல.. ஹரிஷும் லவ்ட் ஸ்பீக்கரில் போட்டு பேச ஆரம்பித்தான்...
ஹரிஷ் சார் பாஸ்வர்ட் மாத்திட்டீங்களா ??
இல்லமா ஏன்??
நீங்க அதை முதலில் மாத்துங்க சார்.. ப்ளீஸ்..
ஏன்மா ஜெகன் கிட்ட தான் நான் உன்னை சொல்லவேணாம் சொன்னேன்ல..
ஆமா சார்..
முதல்ல இந்த சாரை நிறுத்து .. திடீர்னு என்ன சார்ன்னு கூப்பிடற.. அழகா அண்ணா இல்ல ப்ரோ தானா சொல்லுவ ...
இல்ல இனி நான் உங்களையும் சார் னே கூப்படறேன்..
ஏன் என்ன ஆச்சு ? ஜீ ஏதாவது சொன்னாரா??
இல்ல.. ஆனா அவரை பார்த்து தான் இந்த முடிவு..
புரியல மா..
நேத்து நைட் லேட் ஆனா உடனே என்ன ஜெகன் ஜீ தான் ஹாஸ்டல்ல விட்டாரு.. நேரா ஹாஸ்டெல் போகாம நைட் 2 பேரும் ஹோட்டல் போய் சாப்பிட்டு தான் போனோம்.. அப்போ அவ்ளோ நல்லா பேசினாறு... ஆனா இன்னைக்கு என்ன இவ்ளோ கேவலமா பேசிட்டாரு.. அதான் இனி ஆபிஸ் மேம்பேர்ஸ் கிட்ட அந்த ரீலேக்ஷன் மட்டும் வெச்சுகனும்னு முடிவு எடுத்துட்டேன்..
வெண்ணிலா இவ்வாறு கூறியவுடன் அங்கே இருந்தவர்கள் அனைவரது முகங்கள் ஆச்சிரியத்தை வெளிப்படுத்த ஹரிஷ் வெண்ணிலாவிடம் "என்னம்மா சொல்ற ?? நைட் ஜெகன் ஜீ உண்ண கூட்டிட்டு போனாறா?? "
"ஏன் ஹரிஷ் இவ்ளோ ஆச்சிரியம் நான் நிலாவை கூட்டிட்டு போக கூடாதா ?? " என்று ஜெகன் கேட்க..
திடீரென ஜெகன் பேசியதில் ஹரிஷ் பதட்டம் அடைய.. " என்ன ஜெகன் நீ பேசற?? "
ஏன் நான் பேச கூடாதா ??
அப்படியில்லை வெண்ணிலா தானா பேசிட்டு இருந்தாங்க.. நீங்க திடீர்ன்னு பேசுன உடனே கேட்டேன் ஜீ..
7.நெயிர்ச்சியின் முழுவல் நீ
Moderator: Sabareeshwari
-
- Moderators
- Posts: 27
- Joined: Thu May 14, 2020 10:23 pm
- Has thanked: 3 times
- Been thanked: 8 times
7.நெயிர்ச்சியின் முழுவல் நீ
You do not have the required permissions to view the files attached to this post.
-
- Moderators
- Posts: 3
- Joined: Thu May 14, 2020 10:01 pm
- Has thanked: 35 times
- Been thanked: 3 times
Re: 7.நெயிர்ச்சியின் முழுவல் நீ
Superb sis... Yepo Mithra jegan prblm soluvinga? Maithri yena aana? Adhunalatha mithrakum jegankum prblm ah
-
- Moderators
- Posts: 27
- Joined: Thu May 14, 2020 10:23 pm
- Has thanked: 3 times
- Been thanked: 8 times
Re: 7.நெயிர்ச்சியின் முழுவல் நீ
Madhu Krishnan wrote: ↑Tue Jul 14, 2020 7:20 amSuperb sis... Yepo Mithra jegan prblm soluvinga? Maithri yena aana? Adhunalatha mithrakum jegankum prblm ah
Thank u sis.. innum konja epi la theriya aarambichidum sis..