9.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Moderator: Sabareeshwari

Post Reply
Sabareeshwari
Moderators
Posts: 27
Joined: Thu May 14, 2020 10:23 pm
Has thanked: 3 times
Been thanked: 8 times

9.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Post by Sabareeshwari »

ஜெகனை நாய் கடித்த கனவில் இருந்து மீண்டவள்.. விரைவாக கிளம்பி ஆபீஸ் சென்றால்..

அங்கே இவள் செல்லும் பொழுது வழக்கத்திற்கு மாறாக ஜெகன் விரைவில் வந்து இருந்தான்.. இவள் ஹரிஷின் அருகில் சென்று அவனுக்கு காலை வணக்கம் கூறி அவள் இடத்தில் உட்கார..

ஹாய் வெண்ணிலா.. எப்படி இருக்க??

நான் நல்லா இருக்கேன் சார்.. நீங்க ?? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க??

எல்லாரும் நல்லா இருக்காங்க மா.. நீ இந்த சாரை விட மாட்டியா??

இனி நோ அண்ணா ஆர் ப்ரோ.. ஒல்லி சார் தான் .. என்று ஜெகனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே இவள் கூற.. அவன் மும்மரமாக எதையோ கணினியில் பார்த்துக்கொண்டு இருந்தான் ..

அதை கவனித்த ஹரிஷ் " சார் வந்ததுல இருந்து ரொம்ப பிஸி மா.. " என்று நிலாவிடம் கூற.. அதை கேட்டவள் உதட்டை பிதுக்கிக்கொண்டு வேலையை செய்ய ஆரம்பித்தாள்..

மதியஉணவு வேலை வரும் வரை ஒருவருக்கு ஒருவர் பேசாமல் வேலையை தொடர்ந்து கொண்டு இருந்தனர்..  ஜெகனோ தன் பார்வையை கூட அலைய விடாமல் கணினியுடன் உர்வாடிக்கொண்டு இருந்தான்..

சார்... சார்... எனக்கு ஒரு டௌப்ட் .. என்று மித்ரா ஹரிஷின் உதவியை நாட.. அவனோ அவள் சந்தேகத்தை கேட்டு .. "இது ஜெகன் ஜீ செஞ்சதுமா.. நீ அவரு கிட்ட கேளு.. உனக்கு எப்போ இதை கொடுத்தாரு அவரு?? "

2 நாள் ஆச்சு அண்ணா..
ஒஹ்ஹ் சரிமா.. எனக்கு இது அவ்வளவா தெரியாது.. நீ ஜீ கிட்ட கேளு... என்று ஹரிஷ் கூற.. இவள் முகம் அஷ்ட கோணல் ஆக மாற.. அதைக்கண்ட ஹரிஷுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை..

இவளோ ஜெகனை பார்க்க .. அவன் இவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.. 
ஹயயோ எப்போ இருந்து நம்மளை பார்க்கிறாருன்னு தெரியலையே..
சார்... எனக்கு ஒரு சந்தேகம்..
சரி..
சார்.. எனக்கு ஒரு டௌப்ட்...
சரி ..
சார்... எனக்கு...
அடுத்து என்ன ஹிந்தியா ??

இல்ல எனக்கு ஹிந்தி எல்லாம் தெரியாது..
சரி..
சார்..
அவன் பதில் பேசாமல் அவளை பார்த்துக்கொண்டு இருக்க.. இவள் திரும்பி ஹரிஷ்ஷை பார்த்து கண்களால் உதவிக்கு அழைத்தாள்...

நிலாவிற்கு பாவம் பார்த்து ஹரிஷ் ஜெகனிடம் பேச வர.. ஹரிஷிடம் ஜெகன் கண்களால் ஏதோ ஜாடை காட்ட.. ஹரிஷ் சாப்பிட்டு வருவதாக கூறி வெளியே சென்று விட்டான்..

சிறிது நேரம் அமைதி காத்த ஜெகன் நிலாவிடம் " எப்போ வீட்டுக்கு போற நிலா ??" என்ற கேள்வியை சம்மந்தம் இல்லாமல் எடுத்து வைக்க..

பதில் கூற சற்று தடுமாறியவள் .. தன்னை சுதாரித்துக்கொண்டு " இப்போ போகலை சார்.. இன்னும் 1 மாசம் முடிஞ்சு தான் போகணும்.. "

ஏன் ?? என்ற ஒற்றை கேள்வியை அவன் கேட்க..

என்ன ஏன்?? என்று இவள் சற்று கடுப்பாக வினவ.. அவளை மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தவன்.. நாளைல இருந்து வேலை உங்களுக்கு அதிகமா இருக்கும்... நம்ம டீம்கு புது ப்ராஜெக்ட் வந்து இருக்கு.. சோ பழைய ப்ராஜெக்ட் எல்லாம் நீங்க தான் ஹேண்டல் பண்ற மாதிரி இருக்கும் பார்த்துக்கோங்க... இவளும் சரி என்று தலையை ஆட்ட.. அவளுடைய சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டு சாப்பிட கிளம்பிவிட்டான்...

மாலை 5 மணியலவில் மீட்டிங் நடைபெற அதில் ஜெகன் அவனுடைய புது ப்ராஜெக்ட்காக போட்ட பிளான்னையும் தேர்வு செய்த ஆட்களை கூறினான்..

அவர்களுடைய சீனியரில் ஒருவர்.. ஏன் ஜெகன் நீங்க வெண்ணிலாவை இந்த ப்ராஜெக்ட்டில் ஆட் பண்ணல ??

அவங்க பழைய ப்ராஜெக்ட் பார்க்கட்டும் சார்.. இவங்க போதும் எனக்கு.. நான் கொடுத்த டைம்ல ப்ரொஜெக்ட்டை முடிச்சுறுவேன்..

ஆனா நீங்க செலக்ட் பண்ணுனா ரகுவை விட வெண்ணிலா இதை நல்லா ஹேண்டல் பண்ணுவாங்களே??

ஆமா சார்.. ஆனா ரகுன்னா நைட் டைம் கூட அப்போ அப்போ இருந்து வர்க் பண்ணுவாறு..

ஏன் வெண்ணிலா நைட் ஒர்க் பண்ண மாட்டாங்களா??

வெண்ணிலா உங்களுக்கு இந்த ப்ராஜெக்ட்ல ஒர்க் பண்ண ஓகே தானே ??

அதற்கு வெண்ணிலா " ஓகே தான் சார்.. "

அப்புறம் என்ன ஜெகன்?? ரகுவை பிரதாப் டீம்கு மாத்தி விடுங்க.. பிரதாப்கு கொஞ்சம் ஹெல்ப் தேவை படுது...

அவரை எதிர்த்து பேச முடியாமல் பல்லை கடித்துக்கொண்டு சரி என்று கூறி அவர்கள் அறைக்கு விரைந்தான்..

அவன் பின்னாலே வந்த ஹரிஷ் நிலாவிடம் " நீ ஏன் மா ஓகே சொன்ன??"

ஏன்னா??

ஜீ உன்னை அந்த ப்ராஜெக்ட்கு எடுக்கலைன்னா ஒரு காரணம் இருக்கும்மா..

அண்ணா... எனக்கு எது தேவை எது தேவையில்லைன்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஜெகன் சார் இல்லை.. என்று இவள் கூறிக்கொண்டு இருக்கும் பொழுது மொபைலை மறந்து வைத்த ஜெகன் அதை எடுக்க வரும் பொழுது சரியாக நிலா கூறியது அவன் காதில் விழுந்தது.. இருந்தும் எதுவும் கேட்காதவன் போல் மொபைலை எடுத்துக்கொண்டு விரைந்து விட்டான்..

ஜெகன் வந்து சென்றது தெரியாத இவர்களும் அவர்கள் அறைக்கு சென்றனர்..

நிலா வந்து அவள் இருக்கையில் அமர.. அவள் டேபிளின் மீது ஒரு ஃபையில் வந்து விழுந்தது.. அந்த அறையில் இருந்த அனைவரும் அதிர்ந்து பார்க்க.. அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன்.. அவளிடம் " இன்னைக்கு போறதுக்குள்ள இதுல இருக்கிறதை அனாலிசிஸ் பண்ணி சொல்லுங்க " என்று கூறிவிட்டு அவன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.. நிலாவிற்கு தான் கண்களில் கண்ணீர் தேங்கி நின்று இப்பொழுது விழவா என்று அவளை கேட்டுக்கொண்டு இருந்தது.. அதை கண்களிலேயே தேக்கிக்கொண்டு வேலையை தொடர்ந்தாள்..

மாலை அனைவரும் கிளம்பும் முன் அவர்களுது சீனியர் ப்ராஜெக்ட் மேனேஜரை சென்று சந்தித்து விட்டு விடைபெருமாறு அவர்களுக்கு ஈமெயில் வர.. அனைவரும் சென்று பார்த்து வந்து கிளம்ப.. நிலாவும் அவரை பார்த்து வந்தவள் மீண்டும் வேலையை தொடர..

வீட்டிற்கு கிளம்பிக்கொண்டு இருந்த ஹரிஷ் இவளிடம் கிளம்பவில்லையா என்று விசாரிக்க.. அவள் செய்ததில் இருந்த தவறை சரிசெய்து காட்டிவிட்டு கிளம்புமாறு சீனியர் மேனஜர் கூறியதாக இவள் கூற.. ஹரிஷ் ஜெகனை பார்த்தான்..

ஜெகன் கண்களை மூடி தன்னை சமன் படுத்திக்கொண்டு " நீங்க கிளம்புங்க நிலா.. நான் செஞ்சுக்கறேன்.. "

இல்ல பரவாயில்லை .. நானே செஞ்சுட்டு போறேன் சார்.. என்று கூறி அவள் வேலையை தொடர்ந்தாள்..

ஹரிஷ் என்ன கூறுவது என்று புரியாமல் நிற்க.. ஹரிஷிடம் எழுந்து சென்ற ஜெகன் " உங்களோட பாச மலரை வெச்சுகிட்டு நம்ம ஒன்னும் பண்ண முடியாது.. நான் இருக்கேன் அவ கிளம்புறவரை.. " என்று கூறி ஹரிஷை அனுப்பி வைத்தவன் அமர்ந்து அவன் வேலையை செய்ய ஆரம்பித்தான்..

அப்பொழுது அவனுக்கு போன் வர.. அதை பேச ஆரம்பித்தவன் சிறிது நேரம் தன்னை மறந்து பேச்சில் ஆழ்ந்து விட்டான்.. பேசிமுடித்து ஜெகன் பார்கும் பொழுது நிலா அங்கே இல்லை..












Post Reply

Return to “நெயிர்ச்சியின் முழுவல் நீ”