அவள் எங்கே தேடியும் கிடைக்காததால் நேராக அவர்களது சீனியர் மேனேஜர் இருக்கும் அறைக்கு சென்று பார்க்க முடிவெடுத்து அங்கே ஜெகன் விரைந்து செல்ல அலன் யூகித்தது போல் நிலா அங்கே நிலா இருந்தாள் ..
நிலாவின் முகத்தை ஆறாய்ந்தவனுக்கு பெரும் வியப்பே ஏற்பட்டது.. ஏனெனில் நிர்மலமான முகத்துடன் கண்களில் கணலும் உதட்டில் ஏளன புன்னகையும் உடலில் நலினமோ, இருக்கமோ இன்றி சாதாரணமாக நின்று இருந்தாள்..
அவர்களது மேனஜர் முகத்தில் தான் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டு இருந்தது.. ஜெகன் அறை கதவை கூட தட்டாமல் உள்ளே நுழைந்தத்தில் மிகவும் கடுப்பாகி " கொஞ்சம் கூட மேன்னேர்ஸ் இல்ல.. கதவை தட்டிட்டு வர தெரியாதா ??"
கதவுக்கு பதிலா உங்கள தான் ரெண்டு தட்டு தட்ட வந்தேன் ஆனா இங்க சீனி மாறி போச்சு... என்று இவன் சிரிக்காமல் சீரியஸாக தமிழில் சொல்ல பக்கத்தில் நின்றிருந்த நிலா அவன் கூறியதில் ஏளனச் சிரிப்பை விடுத்து உதட்டில் குறுநகை பூக்க.. கண்களில் ஜெகனை பார்த்து சிரித்துவிட்டு திரும்பி மேனேஜரை பார்க்க...
பாவம் தமிழ் தெரியாத அவரும் அவனை என்ன கூறினாய் என்று ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டு இருந்தார்.. அதற்கு ஜெகன் "ஒரு முக்கியமான கால் நிலாவுக்கு வந்தது அதான் கூப்பிட வந்தேன் " என்று கூறிவிட்டு அவளை கையோடு அழைத்து கொண்டு சென்று விட .. மேனேஜருக்கு தான் சிறிது அவமானமாக போனது.
ஜெகன் பேச வாயை திறக்க.. நிலாவோ "உங்க வாட்ச் மென் வேலை முடிஞ்சதுனா கிளம்பலாமா ?? " என்று அவனிடம் நக்கலாக கேட்க..
அவளது நக்கல் கலந்த குரலில் அவள் மீது இருந்த வியப்பு போய் கடுப்பு குடியேறியது ஜெகனுக்கு..
லூஸா நீ.. அப்போ அந்த மேனேஜர் பத்தி கரெக்ட்டா தானா ஜட்ஜ் பண்ணி இருக்க.. அப்புறம் ஏன் இந்த ப்ராஜெக்ட்ல வர்க் பன்னுவேன்னு அடம் பிடிச்ச ??
சார் எனக்கு அவரை பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது இப்போ வரை. நீங்க என்ன ப்ரொஜெக்ட்ல எடுக்கலன்ன உடனே ஏன்னு யோசிச்சேன்.. கண்டிப்பா பெரிய ரீஸன் ஏதாவது இருக்கும்னு தோணுச்சு.. அதான் உங்களையும் ஹரிஷ் அண்ணாவையும் கவணிச்சத்துல கொஞ்சம் புரிஞ்சது.. அப்புறம் அந்த மேனேஜர் எனக்கு வர்க் கொடித்த உடனே நீங்க வேலையே இல்லனாலும் இங்கேயே இருந்தீங்கள்ல அப்போ பாதி கன்பார்ம் ஆச்சு.. இப்போ அந்த லூசு மேனேஜர் கூப்பிட்டு வழிஞ்சதுல முழுசா கன்பார்ம் ஆயிடுச்சு..
ஆமா அந்த ஆளை எப்படி சமாளிச்ச??
ஏன்??
இல்ல அவன்கிட்ட பொண்ணுங்க கொஞ்சம் பாத்து தான் நடந்துக்கனும்.. அவன் ரூம்க்கு கூப்டாவே பொண்ணுங்களுக்கு கடுப்பா இருக்கும்.. முதல் தடவையா அவன் கடுப்பாகி பார்த்தேன்.. அதான் என்ன ஆச்சு??
அவன் ஒரு டம்மி பீசு சார்.. அவனுக்கு எல்லாம் அவ்ளோ ஸீன் இல்ல..
ஹேய்.. நீ இப்டிலாம் பேசுவியா என்ன??
ஏன் நான் எப்படி பேசுனேன்??
அவளது பதில் கேள்வியில் ஜெகன் சிறிது எரிச்சலாகி " விடு.. வா கிளம்பலாம்.. நாளைல இருந்து நீ பழைய ப்ராஜெக்ட் பண்ணு.. நான் அவரை சமாளிச்சுக்கறேன்.. " என்று கூற..
ஏன் இந்த ப்ராஜெக்ட்க்கு என்ன ஆச்சு??
லூஸா டீ நீ?? அவன் தான் சரியில்லைன்னு தெரியுது இல்ல..
அதுக்கு? நான் ஏன் ப்ரொஜெக்ட் விட்டு போகணும்??
அவரை வேற ப்ரொஜெக்ட் போக சொல்லிரலாமா ?? என்று இவன் படு நக்கலாக கேட்க..
அது உங்க இஷ்டம்.. என்று கூறிவிட்டு இவள் கிளம்ப தயாராக .
ஏன் நிலா?? அப்படி என்ன இந்த ப்ரொஜெக்ட்ல வர்க் பண்ணனும்னு உனக்கு ??
சிம்பிள்.. காசு சார்.. இதுல நான் வேலை செஞ்சா எனக்கு நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும்.. அடுத்த ஸ்டேஜ்கு போனா இன்கிரிமெண்ட் கிடைக்கும்.. அதான்..
அவள் பதிலில் அவளை வினோதமாக பார்த்தவன்.. உனக்கு இன்கிரிமெண்ட் வேணும் அவ்ளோதான?? நான் தான் உனக்கு அப்ரெய்சல் மீட்டிங் வைப்பேன். உனக்கு நான் நல்ல இன்கிரிமெண்ட்கு ரெகமெண்ட் பன்றேன்.. போதுமா??
அப்படி இன்கிரிமெண்ட் வாங்கற அளவுக்கு நான் ஒன்னும் கேவலமா போய்டல ஜெகன் சார்.. அதுவும் இல்லாம என்ன பாத்துக்க எனக்கு தெரியும்.. இவரை மாதிரி எத்தனையோ பேர் இருக்காங்க.. அவங்களுக்கு எல்லாம் பயந்தா வாழ்க்கையில முன்னேற முடியாது.. என்று அவனிடம் தெளிவாக கூறிவிட்டு இவள் வெளியே செல்ல.. அவன் தான் சிறிது நேரம் அவள் பேசி சென்றதை உள்வாங்கி கொண்டு இருந்தான்..
அவள் சொல்வதும் சரியே என்று தோன்றினாலும் அவளது பாதுகாப்பும் முக்கியம் என அவன் மனம் அறிவுறுத்த.. நாம் தான் கூடவே இருப்போமே. பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவை எடுத்து இவனும் இவனது பைக் நிற்கும் நோக்கி சென்றான்..
பஸ்சுக்காக காத்து கொண்டு இருந்தவள் பக்கத்தில் பைக்கை நிறுத்தியவன் அவளை எற சொல்ல..
எந்த வித பந்தாவும் பண்ணாமல் ஏறி அமர்ந்தாள்.. சிறிது நேரம் அமைதியாக வண்டியை ஓட்டியவன்.. அவள் ரூம் பக்கத்தில் வரும் பொழுது "அப்படி என்ன பணம் தேவை நிலா??" என்று கேட்க.. அவனது திடீர் கேள்வியில் ஏதோ யோசித்து வந்தவள் "என்ன கேட்டீங்க சார்?? " என்று மீண்டும் வினவினாள்..
அப்படி என்ன பணம் தேவைன்னு கேட்டேன்??
ஏன் சார்??
சும்மா கேட்கணும்னு தோணுச்சு.. சொல்ல இஷ்டம் இருந்தா சொல்லு.. இல்லனா வேண்டாம்..
மறைக்கற அளவுக்கு அவ்ளோ ஒன்னும் பெரிய விஷயம் இல்லை சார்.. வீட்ல நிறைய கடன் இருக்கு.. அதான்..
"ஒஹ்ஹ்.. " என்ற ஒற்றை சொல்லொடு நிறுத்தி கொண்டான்.. அவளை மேலும் துருவ விரும்பவில்லை..
அவளது இடம் வந்ததும் வண்டியை நிறுத்த.. அதில் இருந்து இறங்கியவள்.. உள்ளே செல்லாமல்...
விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து சுகம் துக்கம் இரண்டும் கலந்து தான் பாத்து இருக்கேன்.. கொஞ்சம் வளர்ந்து உலகமே அழகா தெரியுமே ஸ்வீட் டேஸ் ஆப் அவர் லைப்னு சொல்ற இளமை துளிர் விடுற காலத்துல சோகங்களும் அவமானமும் மட்டுமே பார்த்து வளர்ந்தேன்.. அதுக்கு அப்புறம் என்னோட தன்னம்பிக்கை முழுசும் அழியுற மாதிரி நானே பெரிய தப்பை பண்ணுனேன்.. அதுல இருந்து இன்னும் நான் மீண்டானா எனக்கு தெரியாது.. ஆனா அதுக்கு அப்புறம் எதை பாத்தாலும் ஒரு பயம்.. பயந்து பயந்து வாழறது ரொம்ப கொடுமை சார்..
அந்த பயத்தை மறைக்க நானே என்ன சுத்தி ஒரு வளையத்தை போட்டுட்டு வாழ்ந்துட்டேன்.. அதுக்கு அப்புறம் என்னோட பழகுறவங்களுக்கு நான் திமிரு பிடிச்ச பொண்ணா தான் தெரிஞ்சேன்..
அப்படியே படிப்பு.. வேலை.. வாழ்க்கைல சில பல அடிகள்.. ரொம்ப வருஷம் கழிச்சு தான் ஒரு உண்மை புரிஞ்சது.. நான் வாழ்க்கையை பார்த்து பயந்து ஓடிட்டு இருக்கேன்னு ..
இப்போ தான் லைப்பை பெஸ் பண்ண ஆரம்பிச்சு இருக்கேன். என்னோட பயத்தை விட்டு நான் ஜெய்ப்பேனானு தெரியாது.. ஆனா முயற்சி பண்ண விரும்பேறேன்..
இவள் அவள் மனதில் இருந்த சில விஷயங்களை அவனிடம் கூறி முடித்து திரும்ப...
ஹே... நிலா..
சொல்லுங்க சார்.. என்று அவன் அருகில் இவள் வர..
பைக்கை நிறுத்திவிட்டு இறங்கியவன் அவளை மென்மையாக தோளோடு அனைத்து "கண்டிப்பா ஜெய்ப்ப ராட்சசி.. "
என்று கூறி அவளை விட..
சைட் கேப் ல என்ன ராட்சசி சொல்லிட்டீங்க..
பாட்டிமா கூப்பிடாம விட்டேன்னு சந்தோஷ படு..
ராட்சஷிக்கு பாட்டிமா பரவாயில்லை.. அது மனுஷ இனம்.. இது ராட்சச இனம்..
அரட்டை போய் தூங்கு.. டைம் ஆச்சு.. நாளைக்கு 10 மணிக்கு மீட்டிங் இருக்கு.. 9 மணிக்கு வந்து ப்ரெசென்டேஷன் ரெடி பண்ணு.. என்று ஜெகன் கூற..
இவள் அவனை நம்பாமல்.. "நிஜமா ?? " என்று கேட்க.. அவனோ கண்களால் ஆம் என்று நம்பிக்கை அளித்தான்...
தேங்க் யூ ஜக்கு சார்.. ஸ்வீட் ட்ரீம்ஸ் என்று கத்தி விட்டு உள்ளே ஓடி விட்டாள்.. எங்கே இருந்தாள் இவள் அவன் பெயரை மாற்றி அழைத்ததுக்கு வாங்கிக்கட்டி கொள்வோம் என்று..
அவள் விளையாட்டை ரசித்தவன்.. அவளுக்கு "இன்றோடு உலகம் அழிந்து விடாது.. நாளைக்கு ஆபிஸ் ல என்ன பாத்து தான் ஆகணும் பாட்டிமா..டேவில் ட்ரீம்ஸ்.." என்று குரும்செய்தியை அனுப்பிவிட்டு அவனது வீட்டிற்கு பைக்கை செலுத்தினான்..
ஹாய்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க ?? சாரி பா.. யாருக்கும் ரிப்பிளை போட முடியல.. சீக்கிரம் உங்க பழைய ஜெகன் வரணும்னு வேண்டிக்கோங்க..