Page 1 of 1

3.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Posted: Sat May 16, 2020 1:18 pm
by Sabareeshwari
வாழ்க்கை தான் எவ்வளவு விசித்தரங்களை கொண்டுள்ளது... என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை வெண்ணிலாவால்...
படுக்கையில் படுத்து இருந்தவள் அவளுக்கு விவரம் தெரிந்ததில் இருந்து அவள் கடந்து வந்த பாதையை வரிசையாக நினைத்து பார்த்தாள் ... இன்று காலை முதல் நடந்ததை நினைத்து பார்த்தவளின் மனதில் தோன்றியது ஒன்று தான்.. மற்றவர்கள் கூறியதை போல் பெண்களை மதிக்க தெரியாதவனல்ல ஜெகன்.. அவள் கற்று இருந்த வாழ்க்கை பாடம் அவளுக்கு இதை தெளிவாக உணர்த்தியது..

இருந்தும் ஏன் அவனை எல்லாரும் அப்படி கூறுகிறார்கள் என்று அவளுக்கு புரியவில்லை.. ஒரு வேளை அதிகமாக கோபப்படுவானோ?? இருக்கலாம்.. யார் கண்டார்?? ஒரே நாளில் ஒரு மனிதனின் குணத்தை நாம் புரிந்துகொள்ள முடியாதல்லவா.. அப்பொழுதுதான் அவள் மனசாட்சி அவளிடம் " அவனை புரிந்துகொண்டு நீ என்ன செய்ய போகிறாய்?? " என்ற அதிமுக்கிய கேள்வியை அவளிடம் எழுப்ப...

ஆம் அவரை பற்றி எதற்கு நான் வீண் ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறேன்?? என்னுடைய வேலையை சரியாக நான் செய்யும் வரை எனக்கு என்ன பிரச்சனை வரபோகிறது? அப்படி இருக்க யார் எப்படி இருந்தால் எனக்கு என்ன?? என்று எண்ணிக்கொண்டு தன் தந்தையை அழைத்தால்..

ஹலோ.. அப்பா .. என்ன பண்றீங்க??

வெளில வேலையா வந்து இருந்தேன் மா.. இப்போ வீட்டுக்கு போய்டு இருக்கேன்... உனக்கு முதல் நாள் வேலை எப்படி போச்சு?? ஒன்னும் பிரச்சனையில்லையே??

இல்ல பா.. நல்ல போனது.. ஒரு பிரச்சனையும் இல்ல.. எங்க டீம் ஹெட் கூட தமிழ் தான் பா..

அப்போ அவ்ளோவா உனக்கு கஷ்டம் இருக்காதுல??

இல்ல பா..

சரிமா சாப்டியா??

ஆச்சு பா...

சரி தூங்கு டா.. காலைல பேசறேன்..

"ம்ம் சரி பா... " என்று கூறி போனை வைத்துவிட்டு கண் அயர்ந்தால்.

அடுத்த நாள் காலை வெண்ணிலா சற்று சீக்கிரமாக தயாராகி ஆபீஸ் கிளம்பினால்... ஆபீஸ் வந்து அடைந்தவள் நேற்று விட்டு சென்று இருந்த வேலையை தொடர்ந்தாள்..

"என்னம்மா இவ்ளோ சீக்கிரமா ஆபீஸ் வந்து இருக்க?? " திடீரென ஒரு குரல் வரவும் வெண்ணிலாவிற்கு தூக்கி வாரி போட்டது.. இவள் பதறிப்போய் திரும்பி பார்க்க அங்கே ஹரிஷ் அழகாக சிரித்துக்கொண்டு நின்றான்..

"இப்படியா அண்ணா என்ன பயமுறுத்துவீங்க ?? சத்தம் கேட்ட உடனே ரொம்ப பயந்துட்டேன்.. " என்று கூறிவிட்டு மெலிதாக சிரித்தவள் சிறிது தண்ணீர் அருந்தி விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.. "நேத்து வேலை கொஞ்சம் மீதி இருந்தது ப்ரோ.. அது தான் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்து பார்த்துட்டு இருக்கேன்.."

ஏன்மா ஏதாவது புரியலையா ??

ஆமா ப்ரோ.. ஒரு டௌப்ட் இருக்கு.. நீங்க அதை எனக்கு கிளியர் பண்ணுனா நீங்க கொடுத்த வர்க் முடிஞ்சது..

"சரிமா.. நம்ம பார்த்துடலாம்.. " என்று கூறி அவளது சந்தேகதிற்கு விடை அளித்தான்..

அதை புரிந்து கொண்டவளுக்கு இன்றைய நாளுக்கான வேலையை தந்தான்.. அதன் பின் அவனது வேலையை பார்க்க.. மணி 11.30 ஆகியதால் அனைவரும் எழுந்து பிரேக் செல்ல.. இவள் அப்பொழுது தான் ஜெகன் வராதததை கவனித்தால்.. ஹரிஷிடம் கேட்கலாமா என்று ஒரு நொடி யோசித்தவள் .. அடுத்த நொடியே அது தேவையில்லை என்ற முடிவுக்கும் வந்தால்..

ஹரிஷ் இவளையும் கேண்டீனுக்கு அழைக்க அவள் மறுத்து விட்டு அவளது வேலையை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தாள்..

அப்பொழுது உள்ளே நுழைந்த ஜெகன் இவள் மட்டும் தனியாக அமர்ந்து இருப்பதை கண்டு எதுவும் கூறாமல் அவன் இடத்திற்கு சென்று அமர்ந்து தனது சிஸ்டமை உயிர்ப்பித்தான்...

அவனை கண்டவள் அவனுக்கு குட் மார்னிங் சொல்ல.. அவனும் பதிலுக்கு குட் மார்னிங் என்று கூறிவிட்டு தனது சிஸ்டமில் பார்வையை செலுத்தினான்...

கேன்டீன் சென்று இருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக அங்கே வந்து சேர கடைசியாக ஹரிஷ் வந்து சேர்ந்தான்..

ஜெகன் வந்ததை கண்டவன் அவனிடம் சென்றான் .. " நேத்து எப்போ கிளம்புனீங்க ஜி?? " என்று கேட்க.. " நான் கிளம்பும் போது மணி 11.30 ஆகிவிட்டது ஹரிஷ்... " என்று ஜெகனிடம் இருந்து ஹரிஷ்க்கு பதில் வந்தது..

ஜெகன் கூறிய மணியை கேட்ட வெண்ணிலாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.. அவள் இருவர் முகத்தையும் பார்க்க.. அவர்களோ சாதாரணமாக இருந்தார்கள்..

வெண்ணிலாவிற்கு ஜெகன் ஏன் அவ்வளவு நேரம் இங்கே இருந்தான்?? வேலை அதிகமோ?? என்ற எண்ணம்... அவ்வளவு வேலை இருக்க ஜெகன் அனைவருக்கும் பிரித்து கொடுக்காமல் அவன் மட்டும் ஏன் தனியாக செய்கிறான் .. என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது..

இவள் இதை எல்லாம் யோசித்து கொண்டு இருக்க.. ஹரிஷ் இவளை கூப்பிட்டது இவள் காதுகளில் விழவில்லை.. அவன் இரு முறை கூப்பிட்ட பிறகும் வெண்ணிலா திரும்பாததால் ஜெகன் அவளை பார்க்க.. அவள் உடல் மட்டுமே இங்கே இருக்க அவளது எண்ணங்கள் இங்கு இல்லை என்பதை பார்த்த நொடியில் உணர்ந்து கொண்டான்..

"வெண்ணிலா ....." முதன் முறையாக ஜெகன் அவளை பெயர் சொல்லி சற்று சத்தமாக அழைக்க.. அதில் பூலோகம் வந்து சேர்ந்தால்..

சொல்லுங்க சார்..

உங்களை ஹரிஷ் கூப்பிடராறு..

சற்று முழித்தவள் .. அந்த பக்கம் திரும்பி ஹரிஷை பார்க்க.. " எந்த லோகத்துல மா இருந்த ?? "

சாரி ப்ரோ.. ஏதோ நியாபகத்துல இருந்துட்டேன்.. நீங்க கூப்பிட்டது கேட்கலை..

நீங்க முடிச்சதை ஜெகன் கிட்ட சொல்லுங்க.. அதுக்கு தான் கூப்பிட்டேன்..

"ஒஹ் சரி ப்ரோ.. " என்று கூறிவிட்டு இவள் ஜெகனை பார்க்க அவன் பார்வை திரையில் இருந்தது..

சார் என்று இவள் அழைக்க அதில் இவளை அவன் பார்க்க.. "நேத்து நான் என்னென்ன முடிச்சேன்னு உங்ககிட்ட ஹரிஷ் சொல்ல சொன்னாரு.. " என்று கூறி இவள் நேற்று செய்தது அனைத்தையும் கூறினால்.. அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டவன் அவளிடம் சில கேள்விகளையும் கேட்க.. அதற்கு இவளும் பதில் கூறினால்..

ஓகே.. நீங்க இன்னைக்கு வேலையை கண்டிநியூ பண்ணுங்க..

"ஓகே சார்.. " என்று கூறி வேலையை தொடர்ந்தால்.. மனதிற்குள் தான் நேற்று இரவு நினைத்ததை போல் நாம் சரியாக நம் வேலையை செய்தால் எந்த பிரச்சனையும் வராது.. என்பதை உறுதி படுத்தி கொண்டால்...

இப்படியே நாட்களும் நகர்ந்தது.. வெண்ணிலா ஆபீசில் சேர்ந்து இன்றுடன் 20 நாட்கள் கடந்து இருந்தது.. இந்த 20 நாட்களில் வெண்ணிலாவிற்கு அந்த ஆபீஸ் ஒரு அளவிற்கு அத்துப்படி ஆகி இருந்தது..
3 நாட்களிலேயே ப்ரொஜெக்டிற்குள் வந்து இருந்தால்.. அவளுக்கு பக்கபலமாக இருந்தது ஹரிஷ் தான்.. அப்படி இருக்க முதல் சோதனையாக அவள் ஹரிஷ் இல்லாமல் 3 நாட்கள் சமாளிக்க வேண்டும்.. ஏனென்றால் அவன் 3 நாட்கள் ஊருக்கு செல்ல விடுப்பு எடுத்து இருந்தான்..

இந்த மூன்று நாட்களும் இவள் ஜெகனிடம் தான் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.. இவ்வளவு நாட்கள் இவள் ஹரிஷ் கொடுக்கும் வேலையை முடித்து அவனிடம் அனைத்தையும் கூறுபவள்.. ஜெகனிடம் இன்று இந்த வேலையை முடித்தேன் என்று மட்டுமே கூறுவாள்..

ஆனால் இந்த 3 நாட்கள் ஜெகனிடம் தான் இவள் அனைத்து சந்தேகங்களும் கேட்டு ஆக வேண்டும்.. மீதி 2 பேர் வேறு ப்ரொஜெக்ட்டில் வேலை செய்வதால் இவளுக்கு ஜெகனிடம் கேட்பதை தவிர வேறு வழியில்லை..

ஆனால் இந்த 3 நாட்களும் அவளுக்கு சோதனைகளை தர காத்து இருப்பது தெரியாமல் எப்படியும் சமாளித்து விடலாம் என்ற தெம்புடன் இவள் ஆபீஸ் வந்தாள்..
FB_IMG_1589620989848.jpg
[/size][/color]