Page 1 of 1

12.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Posted: Sat Jun 26, 2021 9:55 pm
by Sabareeshwari
ஜெகன் அழைப்பை வெண்மதி ஏற்காமல் விட.. "என்ன நிலா வெண்ஸ் எடுக்கல.. நீ ஏதாவது அவளை சொன்னியா ??"

ஆமா எனக்கு இது தான் வேலை பாருங்க.. அதுவும் நான் சொன்ன உடனே அப்படியே அவ கேட்டுடுவா... என்று உதட்டை பிலிக்கி கொள்ள..

ஹா ஹா ஹா... என்று ஜெகன் சிரிக்க..

சிரிக்காதீங்க ஜெகன் ஜீ... எனக்கு கடுப்பா இருக்கு... அவ எப்போவும் என் பேச்சை கேட்பா தெரியுமா ?? உங்க விஷயத்துல மட்டும் தான் நான் சொல்ற எதையும் கேட்கறது இல்ல.. எல்லாம் அவளுக்கு நீங்க கொடுக்குற செல்லம் தான்.. இதுலாம் கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்ல சார்.. அவ உங்க கிட்ட பழகற மாதிரியே மத்தவங்க கிட்டையும் பழகுனா என்ன பண்றது சார்??  நானும் இவ்ளோ தூரம் இருக்கேன்.. அவ கூட இருந்தா கூட நான் பாத்துப்பேன்... என்று அவள் வெண்மதியின் மீது வைத்து இருக்கும் பயங்கள்  மற்றும் கவலைகளை ஜெகனிடம் புலம்ப..

நிலாவின் கவலைகளை கேட்டவன் அவள் நிஜமாகவே அவளுடைய தங்கையை எண்ணி பயப்படுவதை கண்டு , " நம்மள வெச்சு மற்றவங்களை எடை போட கூடாது நிலா.. " என்று கூற..

நிலா அவனை புரியாமல் பார்க்க.. "என்ன பார்க்கற?? உனக்கும் வெண்மதிக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்கு தெரியுமா ?? "

ஆமா அவ ரொம்ப அப்பாவி ...

யாரு அவ அப்பாவி ??  ம்ம்ம் அப்புறம்...

பின்ன என்ன சார்.. உங்களை ஒரு தடவை தான் நேரில் பார்த்து பேசுனா...  அடுத்த தடவை பார்க்கும் பொழுது உங்களை நம்பி அவளோட போன் நம்பர் கொடுத்துட்டா... இதுலையே தெரியலையா அவ எவ்ளோ அப்பாவின்னு...

நீ நிஜமா லூஸா ?? இல்ல லூசு மாதிரி நடிக்கரியா ???

ஜெகன் இவ்வாறு கேட்டவுடன் .. நிலா பே என விழிக்க...

பின்ன என்ன நிலா??  அவ எனக்கு என்ன அடிப்படையில அவளோட நம்பர் தந்தான்னு உனக்கு தெரியாதா ??

தெரியும் தான்.. நான் யாரையும் அவளோ சீக்கிறம் அவளுக்கு அறிமுக படுத்துனது இல்ல.. சொல்ல போனா நான் வேலை செய்யற இடத்துல நான் அறிமுக படுத்துன ஒரே ஆள் நீங்க தான்.. இருந்தாலும்...

என்ன இருந்தாலும்... அது உன் மேல அவ வெச்சு இருக்க நம்பிக்கை.. தன்னோட அக்கா ரொம்ப நம்பிக்கையான நல்லவங்க கூட தான் பலகுவாங்கன்னு... அவளுக்கு உன் மேலே இருக்க நம்பிக்கை உனக்கு உன் மேலையே இல்லையா ??

அவள் எதுவும் பேசாமல் அமர்ந்து இருக்க.. ஜெகனின் எண்ணிற்கு வெண்மதியிடம் இருந்து அழைப்பு வந்தது.. அழைப்பை ஏற்றவன் " ஹாய் வெண்ஸ் .. என்ன பண்ற ??"

ஹாய் ஜீ .. நான் இப்போ ரொம்ப ரொம்ப பிசி ... யூ னோவ் ??

ஹ்ம்ம் ஐ னோவ்... ஐ கனோவ்... வெண்ஸ் பிரீயா இருந்தா தான் ஆச்சிரியம்... ஆனா மேடம் அப்படி என்ன அதி முக்கியமான வேலை செஞ்சுட்டு இருக்கீங்க ??

நான் நைல் பாலிஷ் போட்டுட்டு இருக்கேன் .. என்று கூறி வெண்மதி சிரிக்க..

ஜெகனின் முகத்திலும் புன்முறுவல்.. ஜெகன் மேலும் அவளுடன் ஏதோ பேச்சு வளர்க்க.. ஹரிஷ் நிலாவை அழைத்தான்..

சொல்லுங்க ஹரிஷ் சார்.. என்று கூறி நிலா நக்கலாக சிரிக்க..

நீ இன்னும் இதை விடலையா ??

சும்மா அண்ணா.. அப்போ அப்போ அப்படி உங்களை கூப்பிடும் போது உங்க மூஞ்சி போறதை பாக்கறத்துக்கு ரொம்ப அழகா இருக்கு..

ஜீ கிட்ட லீவ் வாங்கிட்டியா ??

வாங்கிட்டேன் அண்ணா..

ஒஹ்ஹ் சூப்பர் மா.. நானும் ஊருக்கு போறதா இருக்கேன்..

செம அண்ணா..

ஜீ தான் என்ன பண்ண போறாருன்னு தெரியல.. அவரு இந்த தடவையாவது ஊருக்கு போறாருன்னு தெரியல..

ஏன் அண்ணா?? அவருக்கும் லீவ் தானே ??

ம்ம் லீவ் தான்.. ஆனா ஜீ எப்போ லீவ் விட்டாலும் ஊருக்கு போக மாட்டாரு.. அவரோட அம்மா அப்பா தான் இந்த 2 வருஷத்துல 3 தடவை வந்து அவரை பாத்துட்டு போய் இருக்காங்க.. என்று அவளிடம் விஷயத்தை சிறிதாக கூறினான்.. எப்படியும் ஜெகனிடம் இனி நிலா இதைப்பற்றி பேசுவாள் என்று அறிந்தவன் மீண்டும் தனது வேலையில் மூழ்கினான்..

************************************************

வியாழக்கிழமை அனைவரும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சிறிது நேரம் வேலை செய்தவர்கள் , ஒவ்வொருவராக அவர்கள் வீட்டிற்கு கிளம்ப.. நேஹா நிலாவிடம் " நீ வீட்டுக்கு போகலையா நிலா ??"
எதுக்கு நேஹா ??
என்ன எதுக்கா?? நீ பார்ட்டிக்கு வரலையோ??
ம்ம்ம் வர மாதிரி ஐடியா இல்ல...
ஏன் ??
எனக்கு இந்த பார்ட்டி எல்லாம் செட் ஆகாது நேஹா..
என்னமா இப்படி சொல்ற ?? இந்த ப்ரொஜெக்ட்கு நீ எவ்ளோ எப்போர்ட் போட்டன்னு எனக்கு தெரியும்.. அப்புறம் நீயே வரலைன்னா எப்படி நிலா ??

நேஹா நிலாவை உயர்த்தி பேசியதை நம்பாமல் நிலா நேஹாவை ஆராய்ச்சியாக பார்க்க...

என்ன நிலா அப்படி பாக்கிற ??

உண்ண பாராட்டற மாதிரி பேசுரேன்னா ??

நிலா ஆம் என தலையையாட்ட...

எனக்கு நீ வந்த புதுசுல .. ஜெகனோட டீம்னு சொன்ன உடனே ரொம்ப கடுப்பு.. அப்புறம் நீ பழக பழக.. நீ செய்யற வேலை.. அதை முடிஞ்ச அளவு தப்பு இல்லாம செய்யணும் நீ போடுற அதீத உழைப்பு இது எல்லாம் தான் எனக்கு உன்கிட்ட ரொம்ப பிடிச்சது நிலா..
ஆனா அந்த ஜெகன் டீம்ல தானா நீ இன்னும் இருக்க.. அதான் உன்னை அப்போ அப்போ வம்புக்கு இழுப்பேன்.. ஆனா இப்போ எல்லாம் ஜெகன் உன்கிட்ட பேசுறத பார்க்கும் பொழுது .. நாங்க எல்லாம் தான் அவரை தப்பா புரிஞ்சுகிட்டோமோன்னு தோணுது...

நம்ம நம்மளோட வேலையை ஒழுங்கா பார்த்தா ஜெகன் ஜீ மாதிரி ஒரு நல்ல டீம் லீட் நம்ம பார்க்கவே முடியாது... என்று நிலா கூற..

நேஹா மெலிதாக சிரித்துக்கொண்டாள்..

ஜெகன் கிட்ட நீ ரொம்ப கிலோஸ்ல நிலா?? அவரு ஏன் இப்படின்னு உனக்கு சொல்லி இருக்காறா ?? அவருக்கு காதல் தோல்வியா ?? என்று நேஹா நிறுத்தாமல் அடிக்கிக்கொண்டே போக..

அவறோட பர்சனல் ஸ்பெஸ் குள்ள நான் எப்போவுமே போறது இல்ல நேஹா.. என்று கூறிய நிலா அவளிடம் விடை பெற்றுக்கொண்டு அவள் அறைக்கு வந்தாள்..

நேஹா அவளிடம் கேட்ட கேள்வியே அவள் மனதினுள் ஓடியது.. இக்கேள்விகளை கேட்கும் பொழுது நேஹாவின் குரல் சிறிது ஏக்கம் கலந்து ஒளித்ததை நிலா நன்றாக கவனித்து இருந்தாள்.. சில நாட்களாகவே நேஹாவின் நடவடிக்கைகள் நிலாவிற்கு சந்தேகம் இருந்தாலும்.. இதை எல்லாம் வைத்து நேஹாவிற்கு ஜெகனின் மேல் விருப்பம் இருப்பதாக எடுத்து கொள்ள கூடாது .. என்று தனக்கு தானே அறிவுறித்து கொண்டவள் வேலையை தொடர..

ஹரிஷ் , "நீ எப்போ கிளம்பற மா ?? "

அண்ணா நான் வரலை நீங்க எல்லாம் போயிட்டு வாங்க..

ஏன் என்ற கேள்வி ஜெகனிடம் இருந்து வந்தது..

எனக்கு இதுல எல்லாம் இஷ்டம் இல்ல சார்..

ஏன் ??

இஷ்டம் இல்ல... அவ்ளோ தான்..

அதான் ஏன் ??

ஜெகனின் ஒற்றை "ஏன்" னில் கடுப்பாணவள்.. " பிடிக்கல.. " என்று அவளும் ஒற்றை வார்த்தையில் பதில் கூற.. அவனோ மீண்டும் விடாமல் "ஏன் ??"
என்ற கேள்வியையே தொடர..

இப்போ நான் வரலைன்னா உங்களுக்கு என்ன பிரச்சனை ??

என்ன பிரச்சனை ?? என்று வாயில் விறல் வைத்து யோசித்தவன்.. "அப்புறம் எனக்கு யாரு கம்பனி கொடுப்பா ??" என்று அவளிடமே கேட்க..

ஏன் ?? ஹரிஷ் அண்ணா.. கௌதம் சார்.. அப்புறம் நம்ம டீம்.. அப்புறம் நேஹா.. எல்லாரும் இருப்பாங்க தானே??

அவங்க எல்லாரும் இருப்பாங்க தான் ..அவங்க அவங்க பார்ட்டியை என்ஜாய் பண்ணுவாங்க.. ஆனா நீ தானா என்னோட என்டர்டெயின்மெண்ட்.. என்று கூறி சிரிக்க..

அவனை முறைத்தவள்.. அவளிடம் இருந்த பெணாவால் அவனை குத்த..
" ஹே.. லூசு.. ராட்சசி... " என்று கத்த.. அனைவரும் அவனை திரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள்.. ஒழுங்கா வந்து சேறு..

இல்ல சார்.. நான் வரல..

அமைதியா இப்போ கிளம்பி போய், ரெடி ஆகி வா நிலா..

சார்..எனக்கு....என்று அவள் இழுக்க..

ப்ச்... எவ்ளோ நாள் இப்படியே இருப்ப நீ??.. நீ தானா சொன்ன.. உன்னோட பயத்தை பெஸ் பண்ணனும் னு.. அப்புறம் மறுபடியும் பயந்து ஓடுனா என்ன அர்த்தம் ?? போய் கிளம்பி வா ...

அவனிடம் மேலும் வாதிடாமல் .. அவள் கிளம்பினாள்...

மாலை 6 ஆறு மணிக்கு அனைவரும் பிரபலமான ஹோட்டலில் பார்ட்டி நடக்கும் இடத்தில் குழுமி இருக்க.. நிலாவும் வந்து சேர்ந்தால்..

அழகான சில்வர் கலரில் இருந்த சாரீயில் ரோஸ் கலர் பாடர் போட்ட புடவையை உடுத்தி இருந்தவள்.. என்றும் போல் இல்லாமல் சிறிது ஒப்பனையுடன் பார்ட்டிக்கு வந்து இருந்தாள்...

அவளது மாநிறத்துக்கு அந்த சீலை மிகவும் எடுப்பாக இருந்தது.. உள்ளே நுழைந்தவள் ஹரிஷை தேட.. அவனோ பார்ட்டியில் முழுதாக தன்னை அர்ப்பணித்து இருந்தான்.. அதனால் அங்கே செல்லாமல் இவள் ஒரு ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள்...

பார்ட்டியில் பாதி கவனத்தை வைத்தவள் , மீதி கவனத்தை தன்னுடைய மொபைலில் வைத்து இருந்தாள்..

அவள் அருகே அமர்ந்து இருந்த சில பெண்கள் திடீரென அவர்களுக்குள் சலசலக்க ... அதில் கவனம் சிதரியவளின் காதில் அவர்களுது உரையாடல் விழுந்தது..

செம்ம.. டீ... சூப்பர் ல.. ஆளு முசுடா இருந்தாலும்.. செம ஹேண்ட்சம்....
நீ வேற முசுடு எல்லாம் நம்ம கிட்ட தான்.. ஆனா அவனோட டீம் ல ஒரு மொக்க பொண்ணு இருக்கும் ல.. அவகிட்ட எல்லாம் நல்லா தான் பேசுறதா நேஹா சொன்னா..

ஒஹ்ஹ்.. நமக்கு எதுக்கு டீ அது எல்லாம் ??

வந்தோமா நல்லா சைட் அடிச்சோமான்னு போக வேண்டியது தான்..

அவர்கள் பேச்சை கேட்டு நிலாவிற்கு அடக்க முடியாமல் சிரிப்பு வர, சிறிது தள்ளி அமர்ந்து கொண்டாள்..

சரியாக பார்ட்டியும் ஆரம்பம் ஆனது.. ப்ரொஜெக்ட் நல்ல படியாக முடிந்ததால் அனைவரையும் பாராட்டி பேசியவர்கள் , பிறகு பார்ட்டியை என்ஜாய் செய்ய கூறினார்கள்...

அனைவரும் கைத்தட்டி பார்ட்டியை ஆரம்பிக்க.. பல வகையான மது, ஜூஸ் வகைகள் கொடுக்க ஆரம்பித்தனர்.. சிறிது நேரத்தில் டீ.ஜே வும் ஆரம்பிக்க, சிலர் நடனம் ஆட ஆரம்பித்தனர்..

சிலர் தனியாக ஆட.. சிலர் ஜோடியாக ஆட ஆரம்பித்தனர்.. இப்படியே ஒரு மணி நேரத்திற்கு மேல கடக்க...

திடீர் என புயல் போல் நிலாவை நெருங்கி இருந்தான் ஜெகன் ..

அவளை அவன் ஆட அழைக்க.. நிலாவோ புரியாமல் பார்க்க..

அவள் முன் கையை நீட்டியவன்.. அவளது சம்மததிற்காக காத்து இருந்தான்..

சிலறது கவனம் இவர்கள் மேல் திரும்ப.. நிலா ஜெகனிடம் தனக்கு ஆட தெரியாது என்று கூறி நிராகரிக்க..

அவனோ அசையாமல் நின்று இருந்தான்.. சார்.. எனக்கு நிஜமாவே ஆட தெரியாது.. என்று நிலா கூறி முடிக்கையில்.. அவளுடைய கையை வலுக்கட்டாயமாக பற்றி இருந்தான்..

சார்.. சார்.. என்ன பண்றீங்க ?? ப்ளீஸ் கையை விடுங்க.. என்று நிலா அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவனிடம் கூறிக்கொண்டே செல்ல.. அவனிடம் அதை எல்லாம் கேட்டதற்கு எந்த பலனும் இல்லை..

அவளுடன் சென்று டான்ஸ் ஆடும் இடத்தில் நின்றவன்.. அவள் வலது தோளில் ஒரு கையை வைத்தவன்.. அவளது இடுப்பை மறு கையால் சுற்றி வலைத்தான்...

பாட்டிற்கு ஏற்ற மாதிரி அவன் அவளுடன் அசைய.. நிலா அசையாமல் நிற்க.. அவளை அழுத்தி அவளையும் சேர்த்து ஆட ஆரம்பித்தான்.. அனைவரின் முன் நிலையில் அவனை உதறி சென்றால் நன்றாக இருக்காது என்று அமைதி காத்தவள்.. அவனுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்தாள்.. ஆனால் ஜெகனின் மீது கொலை வெறியில் இருந்தால்... அவனாக விடாமல் அவனிடம் இருந்து விலக முடியாது என்று நினைத்தவள் அவனுடைய காலை பலம் கொண்ட மட்டும் மிதித்தாள்...

அவனிடம் வலிக்கு உண்டான ஒரு அறிகுறியும் தெரியாததால், அவன் அழைத்து வந்ததில் இருந்து அவனை பார்க்காமல் தவிர்த்தவள் அவன் கண்களை முதல் முறையாக நிமிர்ந்து பார்க்க..

அவன் கண்களோ ரத்த சிவப்பில் மிளிர்ந்து.. அப்பொழுது தான் ஜெகன் அளவுக்கு மீறி குடித்து இருப்பானோ அதனால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறானோ என்ற சந்தேகம் நிலாவின் மனதில் எழுந்தது...

தன்னை நிதான படுத்தியவள் .. ஜெகனிடம் பேச ஆரம்பித்தாள்... "சார் குடுச்சு இருக்கீங்களா ??"

அவனிடம் பதில் இல்லாமல் போக.. மீண்டும் அவள் சார்.. என்று அழைக்க.. ஜெகனின் அணைப்பு இறுகியது.. நிலா சட்டென்று அவனிடம் விடுபட எண்ணி அவனை தள்ள எத்தனிக்க.. அவன் விட்டால் தானே..

"ஜெகன் ஜீ ... நீங்க கண்ட்ரோல் ல இல்ல.. ப்ளீஸ் விடுங்க " என்று அவள் அவனிடம் தனிந்து பேச.. அவளது எந்த பேச்சுக்கும் அவன் மதிப்பு அளித்ததை போல் தெரியவில்லை..

பாடலுக்கு ஏற்றவாறு அவளை சுழற்றியவன் , அவளது கழுத்து வளைவில் தனது முதல் முத்திரையை பதித்தான்...

அவன் இதழ்கள் அவளை ஸ்பரசித்ததில் அவளுக்கு இனம் புரியாத படபடப்பு நெஞ்சத்தில் எழ.. உடல் முழுவதும் சிலிர்த்து அடங்க வெகு நேரம் ஆகியது.. அவள் மூளையும் செய்வது அறியாது திகைப்பில் இருக்க... சற்று நேரம் நிலா ஸதம்பித்து நின்றாள்..

அச்சமயம் சரியாக பாடல் நிறைவு பெற... அவளை விட்டு விலகியவன் அவள் காதில் " சாரி " என்று கூறிவிட்டு சட்டென்று அவ்விடத்தில் இருந்து கிளம்பினான்..

நிலாவிற்கு தான் தன்னை சமன் செய்ய சிறிது அவகாசம் தேவைப்பட்டது... யாரேனும் ஏதாவது கேட்டபர்களோ என்று இவள் சிறிது பயம் கொள்ள.. அவளை தவிர மற்ற அனைவருக்கும் அவர்கள் சாதாரணமாக ஆடியதகாவே தெரிந்தது..