13.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Moderator: Sabareeshwari

Post Reply
Sabareeshwari
Moderators
Posts: 27
Joined: Thu May 14, 2020 10:23 pm
Has thanked: 3 times
Been thanked: 8 times

13.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Post by Sabareeshwari »

ஜீ.... ஜீ..... ஜீஜீ.....

ஏன் டா இப்படி கத்துறீங்க ??

ஜீ... ஒரு டான்ஸ்.....

ஜெகன் அவர்களை விளையாட்டாக முறைக்க....

ஜீ... நீங்க என்ன முறைச்சாலும் நாங்க பயப்பட மாட்டோம்.. நீங்க கண்டிப்பா இப்போ ஆடி தான் ஆகணும்...

"நீங்க மட்டும் இப்போ ஆடலேனா" என்று ஒருவன் சொல்லி முடிப்பதற்குள்..

ஜெகன் "ஆடலேனா???" என்று எதிர் கேள்வி கேட்க..

நாங்க ஆடுவோம்...

அடேய்... படுத்தாதீங்க டா...

ஜெகன் அருகில் அமர்ந்து இருந்த ஹரிஷ் "தயவு செஞ்சு ஆடிருங்க ஜீ.. இவனுங்க ஆடுறது எல்லாம் கண் கொண்டு பாக்க முடியாது... "

நீங்க வேற ஏன் ஹரீஷ் ?? என்று ஜெகன் மறுத்துக்கொண்டு இருக்கும் பொழுதே.. ஆடுவதாக மிரட்டிய ஒருவன் நிஜமாகவே எழுந்து ஆட ஆரம்பிக்க... அவன் ஆடுவதை கண் கொண்டு பார்க்க முடியாமல் அவனை இழுத்து அமர வைப்பதற்குள் அனைவருக்கும் போதும் போதும் என்று ஆனது...

தான் ஆடாமல் இவர்கள் அடங்க மாட்டார்கள் என்று நினைத்த ஜெகன் எழுந்து நிற்க... அந்த வேன் முழுவதும் விசில் சத்தம் காதை பிளந்தது...

ஜெகன் ஆட தயார் என்று அறிந்தவுடன் அவனுக்கு என ஏற்கனவே தயார் செய்து வைத்து இருந்த பிளே லிஸ்ட்டை ஒலிக்க விட.. முதல் பாடலாக " ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் " பாடல் ஒலிக்க ஜெகன் சிரித்துக்கொண்டே இருபக்கமும் தலையை ஆட்டியவன் மெதுவாக பாடலுடன் ஐக்கியமாகி ஆட ஆரம்பிக்க....

ஹரிஷ் , ஜெகனை சந்தித்த நாள் முதல் நடந்த நிகழ்வுகளை அசை போட்டவன் ஜெகனின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று புரியாமல் யோசித்து கொண்டு இருந்தான்...

அப்பொழுது அவனுக்கு ஒரு அழைப்பு வர அவனது மொபைலை எடுத்து பார்த்தவன் அழைப்பது வெண்ணிலா என்று அறிந்தவுடன் அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான்...

சொல்லுமா..

எங்க அண்ணா வந்துட்டு இருக்கீங்க??

இன்னும் நாலு மணி நேரத்துல அங்க வந்திடுவோம் மா..

ஓகே அண்ணா நீங்க இங்க பக்கத்துல வந்தவுடனே சொல்லுங்க..

சரிமா நான் அங்கே ரீச் ஆகறதுக்கு அரை மணி நேரம் முன்னாடியே உனக்கு சொல்றேன்... என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்..

அழைப்பை துண்டித்தவன் மனதில் இப்பொழுது வெண்ணிலாவின் எண்ணங்கள் ஆக்கிரமித்து கொண்டன.. வெண்ணிலாவின் இந்த திடீர் கல்யாணத்தை பற்றியும் கடந்த இரண்டு மாதங்களாக அவளுடைய நடவடிக்கைகளையும் யோசிக்க ஆரம்பித்தான்....

அவனுடன் சேர்ந்து நாமும் கடந்த இரண்டு மாதங்களாக நடந்த அனைத்தையும் பார்த்து வரலாம் ..

ஜெகன் அந்த பார்ட்டியில் அதிக குடி போதையில் வெண்ணிலாவை முத்தமிட்ட பிறகு அவளிடம் மன்னிப்பு கேட்டு வெளியேறிவிட.. வெண்ணிலாவிற்கு தான் சிறிது நேரம் அந்த நிலையில் இருந்து வெளிவர தேவைப்பட்டது...

ஜெகன் அவ்வாறு நடந்து கொண்டதை அவளால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவளுக்கு அதை ஜீரணிக்கவே முடியாமல் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் ஹாஸ்டல் சென்று சேர்ந்தாள்...

ஹாஸ்டல் வந்ததும் அவளுக்கு மன அமைதி இல்லாமல் போக குளித்துவிட்டு வந்த அமர்ந்தவளுக்கு அப்பொழுதும் ஜெகன் அவளிடம் அத்து மீறியதை அவளால் சிறிதும் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை....

வெண்ணிலாவின் மனதோ சிறிதும் அமைதி பெறாமல் அதையே நினைத்துக் கொண்டு இருக்க.. அவளின் நிம்மதியை கெடுத்தவனோ இங்கு வெகு வருடங்களுக்கு பிறகு அமைதியாக உறங்கிக் கொண்டு இருந்தான்...

நேரம் கழித்தே உறங்கிய வெண்ணிலா அடுத்த நாள் வெகு தாமதமாகவே உறங்கி எழுந்தாள்..
ஆபீசுக்கு டைம் ஆவதை உணர்ந்தவள் வேகமாக தயாராகாமல் அப்படியே அமர்ந்த வாக்கில் யோசனையில் ஆழ்ந்து இருந்தாள். அவளால் இன்று ஆபீஸ் செல்ல முடியும் என்று தோன்றவில்லை.. ஆகையால் விடுப்பு எடுக்கலாம் என்று நினைத்தாலும் ஜெகனுக்கு எவ்வாறு அழைத்து கூறுவது என்று தயங்கியவள், சிறிது நேர யோசனைக்குப் பின் ஹரிஷிர்க்கு அழைத்து, தனக்கு தலைவலி இருப்பதால் இன்று ஆபிஸ் வரமுடியாது என்றும் தான் அப்படியே ஊருக்கு கிளம்புவதாகவும்.. ஜெகனின் எண்ணிற்கு கால் செல்லவில்லை ஆகையால் ஜெகனிடம் மட்டும் கூறுமாறு கூறி வைத்தவள்.. அவர்கள் வீட்டிற்கு அழைத்து பேசிவிட்டு போனை ஆப் செய்துவிட்டாள்...

அவளின் நல்ல நேரமோ என்னவோ... உண்மையாகவே ஜெகனின் எண் சுவிட்ச் ஆஃப் என்று தான் கூறிக்கொண்டு இருந்தது... ஆகையால் ஹரிஷ் ஆபீஸ் சென்றவுடன் ஜெகனிற்கு இதை கூற .. அவனும் அவள் கூறிய காரணத்தை முழுமையாக நம்ப முடியவில்லை என்றாலும் அதில் ஒரு சதவீதமேனும் உண்மை இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு அவன் வேலைகளை கவனிக்களானான்.. ஆனால் அவளுக்கு கூப்பிட்டு பேச வேண்டும் என்று அவனுக்கு தோன்றாமல் போனது தான் அடுத்து அடுத்த பிரச்சனைகளுக்கு வழி வகுத்தது...

வீட்டிற்கு சென்ற வெண்ணிலாவின் மனநிலையோ சரியில்லாமல் இருந்தது.. ஆனால் அவளின் மனநிலையை கண்டு கொள்வதற்கு தான் அங்கே ஆட்கள் இல்லை.. முதலில் அவளாலேயே அவளுடைய மனநிலையை சரிப்படுத்த நேரம் இன்றி போனதுதான் கொடுமையிலும் கொடுமை..

அவளுடைய தந்தைக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை எப்படி சரி செய்வது என்று புரியாமல் அந்த குடும்பமே சோகத்தில் ஆழ்ந்து இருந்தது... வெண்ணிலாவும் அவ்வளவு பணத்தை எப்படி புரட்டுவது என்று தெரியாமல் அந்த யோசனையில் மூழ்க அவளுக்கு ஜெகனின் எண்ணம் பின்னுக்கு தள்ளப்பட்டது..

அவளுடைய தந்தையும் அவளும் அவர்களுக்கு தெரிந்த பல இடங்களில் பணம் கேட்டு அலைய.. வெண்ணிலா விடுப்பு எடுத்து வந்த அனைத்து நாட்களும் இதிலேயே கலைந்து போனது.. மன நிம்மதி தேடி இங்கே வந்தவளுக்கு இங்கே அது மேலும் குறைய ஒருவாராக அவள் மீண்டும் ஐதராபாத் கிளம்பும் நாளும் வர, இன்னும் சிறிது மன இறுக்கத்துடன் ரயில் ஏறினாள்...

இப்பொழுது ஜெகனின் எண்ணமும் மனதிற்குள் வர.. அவனுடன் எப்படி இனி வேலையை தொடர்வது என்று யோசித்தவளுக்கு.. தனது தாயும் தந்தையும் நேற்று அவர்களுக்குள் பேசியது இப்பொழுது அவளது நினைவில் வந்து மேலும் அவளை இம்சித்தது...

எதர்ச்சையாக கேட்ட விஷயம்... அவர்களுக்குள் பேசியது இவள் பெயர் அடிபட உள்ளே செல்ல நினைத்து கதவு அருகில் நெருங்க .. அவர்கள் பேசியதை கேட்டவள், அப்படியே அறைக்கு திரும்பி வந்தாள்...

அவர்கள் பேசியது அவளது திருமணத்தை பற்றியே திருமணம் என்றால் ஆயிரம் கனவுகளோடும் ஆசைகளும் எதிர்பார்க்க வேண்டிய விஷயம் தனக்கு மட்டும் ஏன் இவ்வாறு எல்லாம் நடக்கிறது என்று இறைவனிடம் எப்பொழுதும் போல் தனக்குள்ளே முறையிட்டு கொண்டு இருந்தாள்...

அவளது தந்தையின் தூரத்து உறவான ஒரு தங்கையின் மகனிற்கு இவளை பெண் கேட்டு இருந்தார்கள்.. அதையே அவளது அம்மாவும் அப்பாவும் விவாதித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் வெண்ணிலா அவர்களின் பேச்சை கேட்டது... பெண் கேட்டவர்கள் இவர்களது இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி கேட்டதுதான் இங்கு வேதனையே....

மாப்பிள்ளை பையன் பல விஷயங்களில் ஒழுக்கம் என்பது என்ன விலை என்று கேட்பவனாக இருக்க.. அவனுக்கு 38 வயதாகியும் பெண் கிடைக்கவில்லை... வெண்ணிலாவின் அப்பா வியாபார நஷ்டத்தை பயன்படுத்தி வெண்ணிலாவை பெண் கேட்டு இருந்தார்கள்... அவர்கள் நஷ்டத்தை இவர்கள் ஈடு கட்டுவதாகவும்.. அதற்கு பதில் வெண்ணிலாவை தனது மகனிற்கு மணம் முடித்து தர வேண்டும் என்றும் ஒரு கேவலமான பண்டமாற்று முறையை கூறி இருந்தார்கள்...

இதை எல்லாம் நினைத்தவள் பெண்களுக்கு மட்டும் ஏன் இவ்வாறெல்லாம் நடக்கிறது என்று வேதனைப் பட்டுக் கொண்டு இருந்தாள்..

ஒருபக்கம் நன்றாக பழகியவன் நல்லவன் என்று நினைத்தவன் தன்னிடம் தீடீரென அத்துமீறி இருக்க ... இங்கே உறவுகள் என்று கூறிக்கொண்டு தன்னை ஒரு பொருள் போல் பேரம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்... என்று நினைத்தவளுக்கு வாழ்க்கையை வெறுமையாக தோன்றியது..

அனைத்தையும் நிணைத்து ஒரு மூச்சு அழுது தீர்த்தவள் சில தீர்மானங்களை எடுத்து கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.. அவள் எடுத்த தீர்மானங்களில் ஒன்று ஜெகனிடம் இனி பேசக்கூடாது என்றும்.. முடிந்த அளவு சீக்கிரமாக ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு மாற்றல் வாங்கி வரவேண்டுமென்றும்...

அவள் எடுத்த தீர்மானத்தை அப்படியே கடைபிடிக்கவும் செய்தாள்.. முதலில் எந்த வித்தியாசமும் ஜெகனிற்கும் ஹரிஷிற்கும்ம் தெரியாமல் போனாலும்.. அவள் இரண்டு மூன்று நாட்களாக ஜெகனை தவிர்ப்பது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது.. கூடவே அவள் சென்னைக்கு மாற்றல் வாங்க அப்ளை செய்ததும் ஜெகனிற்க்கு தெரிய வர அவன் அவளிடம் பேச வேண்டும் என முடிவு எடுத்து கொண்டான்...

ஜெகனால் முடிவு மட்டுமே எடுக்க முடிந்தது அதை செயல்படுத்த வெண்ணிலாவின் ஒத்துழைப்போம் தேவை அல்லவா , அவளோ ஜெகன் என்ற ஒருவன் அங்கே இல்லை என்பதை போல பாவித்து நடந்து கொள்ள .. இரண்டு மூன்று நாட்களாக அவளிடம் பேச முயற்சி செய்து முடியாமல் போனதால் அவளிடம் இன்று எப்படியாவது பேசியே ஆகவேண்டும் என்று நினைத்தவன், அவளுக்கு நிறைய வேலையை கொடுத்து முடித்து விட்டு செல்ல வேண்டும் என்று கூறி அவளை ஆபிஸ் நேரம் முடிந்து இருக்க வைத்து இருந்தான்...




Post Reply

Return to “நெயிர்ச்சியின் முழுவல் நீ”