14.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Moderator: Sabareeshwari

Post Reply
Sabareeshwari
Moderators
Posts: 27
Joined: Thu May 14, 2020 10:23 pm
Has thanked: 3 times
Been thanked: 8 times

14.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Post by Sabareeshwari »

அனைவரும் கிளம்புவதற்காக காத்துக் கொண்டிருந்த ஜெகன் மணி 7 ஆகிய பின் ஒவ்வொருவராக கிளம்ப இவனும் நிலாவிடம் பேச முயன்றான் .. ஆனால் அவளோ அவனுக்கு பிடி கொடுக்காமல் தனது வேலையை எப்படியாவது விரைவாக முடித்து அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று விடாமல் கணினியின் உள் அவளது தலையை விட்டுக்கொண்டு இருந்தாள்..

ஜெகனின் குழுவில் இருந்த அனைவரும் கிளம்ப எஞ்சி இருந்தது ஜெகனும் நிலாவும் மட்டுமே அவள் அருகில் தனது நாற்காலியில் நகர்த்தி போட்டு அமர்ந்தவன் , அவளிடம் பேச ஆரம்பித்தான்..

" நிலா ..... நிலா.... "  என்று அவன் அவளை அழைக்க, அவன் யாரையோ அழைப்பது போல் அவள் வேலையை பார்த்துக்கொண்டே இருக்க அதில் கடுப்பான ஜெகன் அவள் சிஸ்டத்தின் பிளக்கை உருவி கையில் எடுக்க சிஸ்டம் தானாக ஷட் டவுன் ஆகியது..

அதில் எரிச்சலடைந்த நிலா அவனை திரும்பி முறைக்க " நான் எவ்ளோ நேரமா கூப்பிட்டுட்டு இருந்தேன்.. நீ அப்பவே ஒழுங்கா நான் பேசறது கேட்டு இருந்தேன்னா இப்படி பண்ணி இருக்க மாட்டேன்..  சோ இது உன்னோட தப்புதான் .. " என்று ஜெகன் கூற..

அவனிடம் வாயாடாமல், அவள் அவளது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்க அவளை பிடித்து மீண்டும் இருக்கையிலேயே அமர்த்தினான்..

"ஒரு அஞ்சு நிமிஷம் நான் சொல்றதை அமைதியா கேளு நிலா ப்ளீஸ்..  "என்ற ஜெகன் அவளை பார்த்து கெஞ்சலாக கேட்க அவள் அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் அமர்ந்தவாறு அமைதியாக இருந்தாள்..  அதுவே அவள் சம்மதமாக எடுத்துக் கொண்டவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்..

"அன்னைக்கு நான் அப்படி நடந்துகிட்டதுக்கு என்ன காரணம் சொன்னாலும் அது சரியா இருக்காது... நான் செஞ்சது தப்புதான் அது எனக்கே தெரியும் தப்பு செஞ்சா தண்டனை உண்டுன்னும் தெரியும்..  ஆனா அதுக்காக நீ இப்படி பேசாம இருக்கிறது கொஞ்சம் கூட சரி இல்ல இதுக்கு நீ என்ன அப்பவே 2 அடி கூட அடிச்சு இருந்திருக்கலாம்...  நான் அன்னைக்கு கொஞ்சம் கூட நிதானத்துல இல்ல நிலா.. புரிஞ்சுக்கோ .. அன்னைக்கு சில தேவையில்லாத கசப்பான நினைவுகள் எல்லாம் என்ன ரொம்ப போட்டு அழுத்திட்டு இருந்தது.. அதனால தான் நான் எவ்ளோ குடிச்சேன்னு கூட எனக்கு தெரியல..  என்னோட எல்லையை மீறி போனதுனால தான் அந்த தப்பு நடந்தது..  அதுக்காக நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஓகே தான் ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ அப்பவே சொன்ன மாதிரி .. ஆனா இப்படி வேண்டாதவங்க மாதிரி பக்கத்திலேயே இருந்த பேசாம மூஞ்ச திருப்புறது கொஞ்சம் கூட நல்லா இல்லை நிலா..

முடிஞ்சா அதை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு..  இதுக்காக எல்லாம் யாராவது வேலையை விட்டு போவங்களா சொல்லு ... அன்னைக்கு நடந்தது ஒரு விபத்து மாதிரி நினச்சு கடக்கப்பாரு நிலா.. " என்று ஜெகன் நீளமாக பேசி முடித்தவன்.. கடைசியாக "இனி உன்னோட முடிவு தான்.."  என்று கூறி அவன் சிஸ்டமை ஆஃப் பண்ணிவிட்டு கிளம்ப நிலாவும் அவனிடம் எதுவும் பேசாமல் அவள் கைப்பையை எடுத்துக்கொண்டு அவளது ஹாஸ்டல் நோக்கி விரைந்தாள்...

அவளிடம் பேசி விட்டு வீட்டுக்கு வந்த ஜெகனுக்கு அவள் பழைய நிலா போல் மாறுவதற்கு சிறிது நாட்கள் பிடிக்கும் என எதிர்பார்த்து இருக்க ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் அவன் மீது அவள் கோபம் இனி அதிகம் மட்டுமே ஆகும் என்று அறியாமல் போனதுதான் ஜெகனின் துரதிஷ்டம்...

ஹாஸ்டலுக்கு வந்த நிலாவிற்கு ஜெகன் அவளிடம் பேசியது ஞாபகத்தில் இருக்க அவளது போனிற்கு அழைப்பு வந்தது.. அதை எடுத்து பார்த்தவள் அழைப்பது தனது தந்தை என அறிந்தவுடன் சிறிது பதட்டம் ஆகி உடனே அழைப்பை ஏற்றாள்..

"சொல்லுங்க அப்பா "

ஹாஸ்டல் வந்துட்டியா மா ??

வந்துட்டேன் அப்பா..

சாப்பிட்டாச்சா மா??

இன்னும் இல்லப்பா இனிமேல்தான்...  நீங்க சொல்லுங்க காலையில போய் உங்க ஃப்ரெண்ட் பார்த்து பேசிட்டு வரேன் சொன்னீங்களே.. என்ன ஆச்சு ?? அவர் நமக்கு உதவி செய்யறேன்னு சொன்னாரா??

என்னோட ஃப்ரெண்டு போய் பார்த்தேன் மா .. அவன்கிட்ட நம்மளோட சூழ்நிலையை எடுத்து சொன்னேன்... அதை எல்லாம் கேட்டுட்டு அவன் கண்டிப்பாக நமக்கு உதவி செய்யறேன்னு சொல்லி இருக்கான்.. அவனோட பையன் வெளியூர் போய் இருக்கிறதால அவனும் வந்த உடனே கலந்து பேசிட்டு கண்டிப்பா உதவி செய்யறேன்னு சொல்லி இருக்கான்..

அது மட்டும் இல்ல இந்த வாரம் அவங்க நம்ம வீட்டுக்கு வரேன்னும் சொல்லி இருக்காங்க.. அதனால நீயும் வெள்ளிக்கிழமை கிளம்பி சனிக்கிழமை இங்க வர மாதிரி பார்த்துக்கோ.. ஞாயிற்றுக்கிழமை தான் அவங்க வரேன்னு சொல்லி இருக்காங்க... நீ இருந்துட்டு நீ ஞாயிற்றுக்கிழமை நைட்டு கிளம்பிடுமா..

நான் எதுக்கு பா??  இப்போ  தான் லீவு முடிஞ்சு வந்து பத்து நாள் ஆகுது, மறுபடியும் லீவ் கேட்டா என்ன சொல்லுவாங்கன்னு தெரியல..

கேட்டு பாருமா .. கண்டிப்பா வர பாரு..

"சரிப்பா நான் கேட்டுட்டு உங்களுக்கு சொல்றேன்" என்று கூறி போனை வைத்தவளுக்கு ஜெகனிடம் மறுபடியும் எப்படி விடுப்பு கேட்பது என்று யோசித்துக்கொண்டு அமர்ந்தாள்...

அடுத்த நாள் ஆபீஸிற்கு சென்றவள் முதல் வேலையாக லீவ் அப்ளை செய்தால்... அதை பார்த்துவிட்டு ஜெகன் அவளிடம் ஏதாவது கேட்டால் சமாளித்து கொள்ளலாம் என்று அவனிடம் கூறாமல் நேரடியாக போர்ட்டலில் லீவ் அப்ளை செய்து விட்டு அவள் வேலையை தொடர்ந்தாள் ..

மதியம் வரைக்கும் ஜெகனிடமிருந்து எந்த கேள்வியும் வராததால் அவன் பார்த்தானா இல்லையா என்பது தெரியாமல் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தால்..

மதியம் 3 மணிக்கு மேல் அவளை அழைத்த ஜெகன் இந்த வாரம் அவளுக்கு கொடுத்த டாஸ்க்கை முடித்துவிட்டால் லீவு எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அவளது லீவை அப்ரூவ் செய்து அனுப்பினான்...

அந்த வார இறுதிக்கு வீட்டுக்கு சென்று வந்த நிலாவின் முகத்தில் எப்பொழுதும் ஒரு யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.. அதிகமாக யாரிடமும் பேசாமல் அவள் வேலையை செய்து கொண்டு இருந்தால்.. என்ன பிரச்சனை என்று ஜெகன் ஓரிரு முறை கேட்டதற்கும் அவனிடம் எந்த பதிலும் கூறவில்லை..

இதுவே அவர்கள் வாழ்வில் அந்த நாள் வராமல் இருந்திருந்தால் நிச்சயமாக ஜெகனிடம் அவளது குழப்பங்களை ஆலோசித்து இருப்பாள் என்று புரிந்து கொண்ட ஜெகனும் அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்யவில்லை.. ஆனால் ஹரிஷிடம் என்ன பிரச்சனை என்று கேட்குமாறு கூறியிருந்தான்...

அன்று மிகவும் குழப்பத்தில் இருந்த நிலா கோடிங்கில் சிறு சிறு தவறுகள் செய்ய, அதை கண்ட ஹரிஷ் அவளை அழைத்துக்கொண்டு கேன்டீன் சென்றான்..  இருவருக்கும் சேர்த்து 2 கப் காப்பியை ஆர்டர் செய்தவன்.. " சொல்லு வெண்ணிலா என்ன பிரச்சினை உனக்கு?? ஏன் இவ்வளவு குழப்பமா இருக்க?? நீ இங்க வந்ததுல இருந்து நான் உன்னை இப்படி பாத்ததே இல்ல.. என்கிட்ட சொல்ல முடிஞ்சா சொல்லுமா.. நீயா ஒரு விஷயத்தை மனசுல போட்டு உளடிட்டு இருக்குறதுக்கு யார் கிட்டையாவது மனசு விட்டு பேசினா தீர்வு கிடைக்கலனாளும் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.. அப்போ நீ இன்னும் தெளிவா யோசிக்கலாம்.. "

அவர்கள் ஆர்டர் செய்த காப்பியை அவர்கள் இருவருக்கும் கடையில் வேலை செய்பவர் வைத்துவிட்டு செல்ல , அதை எடுத்து பருகியவள் மெதுவாக பேச ஆரம்பித்தாள்..

"எனக்கு கல்யாணம் பேசி இருக்காங்க அண்ணா..  என்று கூறி ஒரு பெருமூச்சு விட்டாள் .. " அதை கேட்ட ஹரிஷிர்க்கு சிறிது அதிர்ச்சி ஆனாலும் அதை சமாளித்து கொண்டு அவளிடம் "என்ன பொண்ணு மா நீ ?? கல்யாணங்கறத இப்படி  சொல்ற ?? அதுக்கு ஏன் நீ இவ்ளோ குளம்பிட்டு இருக்க ?? கல்யாண பொண்ணு சந்தோஷமா இருக்க வேண்டாமா??

ஏன் அண்ணா நீங்க வேற எனக்கு இந்த கல்யாணத்துல மனசே ஒட்டல..

"ஏன் நிலா இப்படி சொல்ற?? " என்று ஹரிஷ் விடாமல் கேட்க ..

"நான் உங்களுக்கு முழுசா அன்னைக்கு நடந்தது சொன்னால்தான் புரியும்.. " என்று கூறியவள் அன்று அவளது தந்தையின் நண்பர் அவர் குடும்பத்துடன் தனது வீட்டிற்கு வந்த நாளை ஹரிஷிடம் விளக்க ஆரம்பித்தாள்..


அவள் வீட்டுக்கு வந்த அவள் அப்பா சேதுவின் நண்பர் திவாகர் தனது மனைவி மற்றும் மகனுடன் வந்திருந்தார்.. பொதுவாக குடும்பத்தை பற்றி பேசியவர்களின் பேச்சு பின்பு பிள்ளைகளின் பக்கம் சென்றது.. அப்படியே பேச்சு நீல , இரவு நேரம் தொடங்கியது.. அன்று இரவு உணவு அனைவருக்கும் சேதுவின் வீட்டிலேயே முடிந்தது .. மிகவும் மகிழ்ச்சியாக விடைபெற்றனர் திவாகரின் குடும்பம்..

ஆனால் அடுத்த நாள் காலையிலேயே மீண்டும் திவாகரும் அவரது மனைவியும் 11:00 மணி போல் சேதுவின் வீட்டிற்கு வந்தனர்.. சேது அவர்களை வரவேற்று உபசாரம் செய்ய, ஊருக்கு கிளம்பி கொண்டு இருந்த நிலா வெளியில் வந்தவள் இவர்களை பார்த்தவுடன் சம்பிரதாயமாக வரவேற்று விட்டு கிச்சனுக்கு சென்று அம்மாவிற்கு உதவ ஆரம்பித்தாள்..

திவாகர் தான் பேச்சை ஆரம்பித்தார்.. "நான் சுத்தி வளச்சு பேச விரும்பல சேது நேற்று உங்க வீட்டுக்கு வந்துட்டு போனதுல இருந்து, எனக்கும் என் மனைவிக்கும் உன்னோட முதல் பொண்ணு வெண்ணிலாவை ரொம்ப பிடிச்சு போயிடுச்சு.. வீட்டுக்கு போய் அதை பத்தி தான் பேசிட்டு இருந்தோம்.. இன்னைக்கு காலையில கிருஷ்ணா கிட்டையும் எங்கள் விருப்பத்தை சொல்லி கேட்டப்போ அவனுக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை, உங்க எல்லாருக்கும் பிடிச்சு இருந்தா மேற்கொண்டு பேசுங்கன்னு சொல்லிட்டான்... அதான் நல்ல விஷயத்தை ஏன் தள்ளி போடணும்னு இன்னைக்கு உங்ககிட்ட கேட்க வந்தோம்..
வீட்லயும் கலந்து பேசிட்டு சொல்லுங்க உங்க எல்லாருக்கும் பிடிச்சு இருந்தா நம்ம மேற்கொண்டு பேசலாம்.. "

சேதுவிற்கு இதை கேட்டதும் ஆனந்த அதிர்ச்சி அதே போல் சமையல் அறையில் இருந்த அவரது மனைவி சங்கரிக்கும் இதை கேட்டதும் ஆனந்த அதிர்ச்சி தான்.. ஆனால் நிலாவிற்கு தான் என்ன உணர்வு என்று பிரித்து அறிய முடியவில்லை.. அவள் மனதில் கல்யாணம் பற்றிய சில எண்ணங்கள் இருந்தாலும் இவ்வளவு விரைவில் இந்த பேச்சை எதிர்பார்க்கவில்லை.. அதுவும் கல்யாணம் என்ற சொல்லை கேட்டவுடன் ஜெகன் இவளிடம் நடந்துக்கொண்டது தான் இவள் மூலையில் முதலில் தோன்றியது .. அந்த எண்ணத்தை உடனே மாற்ற எண்ணி, தனது யோசனையில் இருந்து கலைந்தவள் அம்மாவின் முகத்தை பார்க்க அதில் தெரிந்த சந்தோஷம் நிலாவை மேலும் எதுவும் யோசிக்க விடாமல் செய்தது..

அவள் கையில் காப்பிகள் அடங்கிய தட்டை கொடுத்து அவர்களுக்கு தருமாறு சங்கரி சொல்ல அதை பெற்றுக் கொண்டு வெளியில் சென்றவள், அவர்களுக்கும் தந்தாள்... காப்பியை குடித்து விட்டு கிருஷ்ணாவின் பெற்றோர்கள் கிளம்ப, சேதுவும் சங்கரியும் நிலாவிடம் அவளது விருப்பத்தை கேட்டனர் நிலாவோ யோசிக்க சிறிது அவகாசம் கேட்க பெற்றோரின் முகம் சிறிது வருத்தத்தை காட்டியது .. அதை கவனித்தவள் மேலும் எதுவும் பேசாமல் அறைக்கு சென்று கிளம்ப ஆரம்பித்தாள்...

அவர்கள் பேசி சென்ற பிறகு ஊருக்கு வந்தவர் இரு நாட்கள் ஆகியும் தன் பெற்றோர்களுக்கு பதில் எதுவும் சொல்லவில்லை..

மூன்றாம் நாள் காலையிலேயே அவளுக்கு அழைத்த சேது அவள் முடிவை கேட்டார் கிருஷ்ணாவிடம் ஒரு முறை பேசிவிட்டு முடிவை சொல்வதாக கூறினாள்.. ஆனால் அன்று மாலை கிருஷ்ணாவே அவளுக்கு அழைத்து பேசினான்..

ஆபீஸ் முடித்து கிளம்பியவள் , ஹாஸ்டல் சென்று அப்பாவிடம் கிருஷ்ணாவின் நம்பர் வாங்கி பேசிக்கொள்ளலாம் என்று இவள் நிணைத்து இருக்க .. அவளுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது ..

" ஹலோ நிலா நான் கிருஷ்ணா பேசுறேன் .."

ஒஹ்ஹ் சொல்லுங்க...

நீங்கதான் என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்களாம்...

நான் இப்போ ட்ராவலிங்ல இருக்கேன் ஹாஸ்டலுக்கு போயிட்டு ரெப்ரெஷ் ஆகிட்டு கூப்பிடுறேனே..

ஓ சாரி நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன் .. நீங்க இந்த நேரத்துக்கு ஹாஸ்டலுக்கு வந்து இருப்பீங்கன்னு நினைச்சேன்..

"இல்ல பரவால்ல.. நான் ஹாஸ்பிடல் போயிட்டு உங்களுக்கு கால் பண்றேன்.. " என்று கூறி கிருஷ்ணாவின் காலை கட் செய்தவளுக்கு அவனிடம் என்னென்ன பேச வேண்டும் என்று ஒவ்வொன்றாக ஞாபகபடுத்தி கொண்டாள்...


ஹாய்... ப்ரெண்ட்ஸ்.. இனி வாரம் வாரம் சண்டே ஒரு எபி போடறேன்...
இவ்வளவு நாள் பொறுமையா இருந்து படிச்சு கருத்துக்களை பகிர்ந்து எனக்கு எழுத உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி.. நீங்க எல்லாம் இல்லைனா கண்டிப்பா நான் கதையை எழுதறதையே நிறுத்தி இருப்பேன்.. எவ்ளோ நாள் ஆனாலும் காத்து இருந்து படிச்சு கருத்தை சொன்ன எல்லாருக்கும் மீண்டும் எனது அன்பு கலந்த நன்றிகள்..



Post Reply

Return to “நெயிர்ச்சியின் முழுவல் நீ”