15.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Moderator: Sabareeshwari

Post Reply
Sabareeshwari
Moderators
Posts: 27
Joined: Thu May 14, 2020 10:23 pm
Has thanked: 3 times
Been thanked: 8 times

15.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Post by Sabareeshwari »

ஹாஸ்டல் வந்தவள் ரெபிரேஷ் ஆகிவிட்டு அவளது இரவு உணவையும் முடித்துவிட்டு கிருஷ்ணாவிற்கு அழைத்தால்..

"ஹலோ சொல்லு வெண்ணிலா..." என்று அவன் அவளை ஒருமையில் அழைக்க அதை கவனித்தவள் அதை அலட்சியப்படுத்தி தான் பேச வந்ததை பேச ஆரம்பித்தாள்..

"நீங்க இப்போ ஃப்ரீ தானே?? ஒரு பத்து நிமிஷம் பேச டைம் இருக்கும்ல??"

ஃப்ரீ தான் வெண்ணிலா என்ன பேசணும்?? இல்ல என்ன கேட்கணும்னு சொல்லுங்க??

"உங்க வீட்ல கல்யாணத்துக்கு கேட்டு இருக்காங்கல்ல அத பத்தி தான்." என்று கூறிவிட்டு அவள் சிறிது தயங்க..

"எதுவாக இருந்தாலும் சொல்லுங்க வெண்ணிலா.." என்று கிருஷ்ணா இவளை மேலும் சொல்லுமாறு ஊக்குவிக்க.. அதில் தன்னை சமன் செய்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.. "எனக்கு இந்த மேரேஜ் செட் ஆகும்னு தோணல.."

ஏன் அப்படி சொல்றீங்க??

"

இல்ல நம்ம ரெண்டு பேர் குடும்பமும் சந்திச்சது நார்மலா இருந்தா பரவால்ல.. ஆனா அப்பா உதவி கேட்டு அதைப் பத்தி பேசி,  அப்புறம் தான் மத்தது எல்லாம் நடந்தது.. சோ ... " என்று அவள் இழுக்க..

வெண்ணிலா பிசினஸ் வேற.. பேமிலி வேற.. நீங்க ஏன் ரெண்டையும் போட்டு கன்பியூஸ் பண்ணிக்கறீங்க ??

அத வெறும் பிசினஸ் டீலா மட்டும் பாருங்க.. இத பேமிலி ப்ரொபோசல்லா பாருங்க...

நான் கூட நீங்க பேசணும்னு சொன்ன உடனே ஏதோ லவ் விஷயமா இருக்கும்னு யோசிச்சேன்...

லவ்வா ?? என்று அவள் வாய் தானாக முனுமுனுக்க அப்பொழுது அவளது நினைவில் ஜெகனின் நெருக்கமும் அவன் தந்த முத்தமுமே நியாபகம் வந்தது.. சிரமப்பட்டு அதை ஒதுக்கியவள் கிருஷ்னாவின் பேச்சை கவனிக்க ஆரம்பிக்க அவன் இவளிடம் தான் ஏதோ கேட்டுவிட்டு அவளது விடைக்காக காத்து கொண்டு இருந்தான்..

"என்ன சொன்னீங்க கிருஷ்ணா? எனக்கு சரியா கேட்கல.." என்று இவள் மீண்டும் கேட்க..

யாரையாவது லவ் பண்றீங்களா ன்னு கேட்டேன்??

"ஏன் யாரையாவது லவ் பண்ணுனா தான் மேரேஜ் வேணாம்னு சொல்லனுமோ ?? எங்களுக்கென்று தனிப்பட்ட பேஷன், ஆசைகள் எதுவும் இருக்கா கூடாதோ?? " என்று நிலாவிடம் இருந்து கேள்விகள் சூடாக வர..

"தாராளமா இருக்கலாமே நான் எப்போ வேணாம்னு சொன்னேன் ??"  என்று கேட்டு சிரித்தவன்.. "அது எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டும் ஃபாலோ பண்ணுனா தப்பு இல்ல நிலா " என்று இலகுவாக பேச ...

நான் யோசிக்கணும் கிருஷ்ணா எனக்கு இன்னும் அமௌன்ட் விஷயத்துல திருப்தி இல்ல.. சோ நான் யோசிச்சுட்டு வீட்லயும் கலந்துகிட்டு சொல்றேன் ..

ஓகே நிலா டேக் யுவர் ஓன் டைம்... சாப்டாச்சா??

ம்ம்.. நான் சாப்பிட்டேன்.. நீங்க??

நான் சாப்பிட இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் நிலா..

ஓகே..

அப்புறம் இன்னைக்கு நிலாவுக்கு ஆபீஸ் எப்படி போனது??

"அது எப்பவும் போல நார்மல் தான் ஒரு ப்ராப்ளமும் இல்ல.. " இப்படியே கிருஷ்ணாவின் கேள்விகள் மாற்றி மாற்றி வர நிலாவும் சலிக்காமல் பதில் சொல்ல அவர்களது பேச்சு வார்த்தை அப்படியே தொடர்ந்தது..

நிலா அவள் தந்தையிடமும் இது பற்றி பேச அவரும் பணத்தை விடுத்து கிருஷ்ணாவை பற்றி மட்டும் யோசித்து பதில் சொல்லுமாறு கேட்க.. கிருஷ்ணாவை பற்றி நினைத்தவளுக்கு பெரிதாக குறை சொல்லும் அளவுக்கு ஒன்றும் தோணாததால், அவள் அதையே தனது தந்தையிடமும் பகிர்ந்து கொண்டால்.. அவர் அதையே அவளது சம்மதமாக ஏற்று கிருஷ்ணாவின் வீட்டில் தங்களுக்கும் இந்த திருமணத்தில் முழு சம்மதம் என்று கூறியிருந்தார்..

இவை அனைத்தையும் நிலா ஹரிஷிடம் கூறி முடிக்க அனைத்தையும் கேட்டவனும்" இதுல என்னமா குழப்பம்??" என்று அவளிடமே மீண்டும் கேள்வியை கேட்க..

எனக்கு என்னவோ எதுவும் சரியா படல போங்க அண்ணா...

அப்பாவுக்கு தெரியும் இல்ல டா தப்பா தோனி இருந்தா அப்பாவே வேண்டாம்னு சொல்லி இருப்பாங்களே.. அதே மாதிரி கிருஷ்ணாவும் தெளிவாக பேசி இருக்காரு பேமிலி  வேற பிசினஸ் வேறென்னு..  அப்புறம் என்னடா??  நிலா நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டல்ல??

சொல்லுங்க அண்ணா..

"யாராவது உன் மனசுல இருக்காங்களா நிலா??  " என்று கேட்டு அவளது முக மாற்றங்களை மிக கவனமாக கவனிக்க ஆரம்பித்தான் நிலாவின் முகம் அவன் கேள்வியில் சில நொடிகள் யோசனைகளுக்கு சென்ற அவள் முகம் பிறகு அதை உதறி தள்ளி சகஜ நிலைக்கு திரும்பியது..  அதை கவனித்த ஹரிஷ் அவளாகவே எதுவாக இருந்தாலும் கூறட்டும் என்று அமைதி காத்தான்..

நிலா யோசித்தது என்னவோ சில நொடிகள் மட்டுமே.. " இல்ல அண்ணா அப்படி எல்லாம் என் மனசுல யாரும் இல்ல.."

அப்புறம் என்ன ?? உனக்கு இப்படி எல்லாம் திடீர்னு நடக்கவும் ஒரு மாதிரி இருக்கும் போல..  எது நடந்தாலும் நம்ம நல்லதுக்குன்னு  நினைச்சுக்கோ.. கடவுள் பார்த்துப்பார் என்று கடவுள் மேல நம்பிக்கை வை..

கண்டிப்பா அண்ணா கடவுள் மேல நம்பிக்கை இருக்கு எதுவாக இருந்தாலும் அவரு பாத்துப்பாரு...

"அப்போ சரி கல்யாண பொண்ணு மாதிரி சந்தோஷமா இனி வர போற நாள்ல அந்த கனவுகள் ஓட கிருஷ்ணா கூட பேசிட்டே மேரேஜ் வரைக்கும் அந்த நாட்களை என்ஜாய் பண்ணு.."  என்று ஹரிஷ் கூறி முடிக்கும் பொழுது அங்கு வந்து ஹரிஷின் பக்கத்தில் அமர்ந்தான் ஜெகன்..

"யாருக்கு மேரேஜ் ஹரிஷ் ?? " என்று ஜெகன் கேட்க ஹரிஷ் நிலாவின் முகத்தை பார்த்துக்கொண்டு "நம்ம நிலாக்குதான் மேரேஜ் என்று கூற.." ஜெகன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் நிலாவின் கையை பற்றி குலுக்கி தனது வாழ்த்துக்களை கூறி இருந்தான் ..

நிலாவிடம் இருந்த அந்த சில நொடி யோசைனைக்கான முகம் கூட ஜெகனிடம் தென்படாததால் ஹரிஷிற்கு தான் சப்பென்று ஆனது..

ஜெகனிற்கு நிலாவின் மீது சிறு அபிப்பிராயமாவது இருக்கும் என இவன் நினைத்து இருக்க.. அப்படி எதுவும் இல்லை.. உன்னை போல் நிலாவும் எனக்கு என்னுடன் வேலை செய்யும் ஒருத்தியை என்று ஜெகன் தெளிவாக  ஹரிஷிற்கு அவனது செயலில் காட்டி இருந்தான்..

நிலாவுமே ஜெகனிடம் இந்த ரியாக்ஷனை எதிர் பார்க்கவில்லை என்று அவளது முகமே அப்பட்டமாக காட்டி கொடுத்து.. தான் தான் அவன் நடந்து கொண்டதை இன்னுமே மனதில் சுமுந்து கொண்டு இருக்கிறோம்.. அவன் அதை அன்றே தன் மனதில் இருந்து அழித்து இருப்பான் போலும் , என்று நினைத்தவளுக்கு மனதின் ஓரத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டது..

அதுவும் அவளுக்கு சிறு ஆச்சத்தையே கொடுத்தது.. நியாயமாக ஜெகன் இப்பொழுது நடந்ததற்கு அவள் மனது நிம்மதி அடைந்து இருக்க வேண்டும்.. அவனால் தனக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை என்று.. ஆனால் மாறாக ஏன் இந்த சிறு சுணக்கம் என்று அவளுக்கு புரியவில்லை..

அவள் அவளது நினைவுகளில் உழன்று கொண்டு இருக்க.. அவள் முன்னால் சோடாகிட்ட ஜெகன்.. என்ன மேடம் இப்போவே கிருஷ்ணா கூட டூயட்டா என்று கேட்க ??

அதில் தெளிவு பெற்றவள், தன்னை சமாளித்து கொண்டு.. அதெல்லாம் இல்ல ப்ரொஜெக்ட்ல ஒரு பிரச்சனை அதை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன் என்று கூசாமல் பொய் கூற..

ஜெகன் மற்றும் ஹரிஷ் இருவரும் சத்தமாக சிரித்து விட.. நிலா இருவரையும் முறைத்து கொண்டு எழுந்து சென்றாள்.. ஹரிஷோ அவளை மேலும் வம்பிலுக்கும் விதமாக "வா டா மா நான் சொல்லி தறேன்.. எங்கே என்ன சந்தேகம் சொல்லு .. " என்று கூறிக்கொண்டே அவளுடன் செல்ல..

ஜெகன் இருவரையும் பார்த்து கொண்டு அங்கயே அமர்ந்து விட்டான்.. ஆனால் ஹரிஷ் மற்றும் நிலா கவனிக்காமல் சென்ற ஒரு விஷயம் ஜெகனிற்கு எப்படி கிருஷ்ணா என்ற பெயர் தெரிந்தது என்று.. இருவரும் வெவ்வேறு சிந்தனைகளில் இருந்ததால் , ஜெகன் நிலாவை கிண்டல் செய்தது மட்டுமே பதிய .. அவர்கள் ஜெகன் கிருஷ்ணா என்ற பெயரை கூறியது எப்படி என்று யோசிக்க தவறி இருந்தனர்..

சில வாரங்கள் ஜெகன் , மற்றும் ஹரிஷின் கேலி கிண்டலுக்கு நடுவில் நிலாவிற்கு வேலையின் பலுவும் அதிகமாக இருந்ததால்.. அவளால் மேலும் எதுவும் யோசிக்க முடியவில்லை.. சொல்ல போனால் அவளை யோசிக்க ஜெகன் விடவில்லை என்று தான் கூற வேண்டும்..

ஹாஸ்டல் சென்றாலும் , பொதுவாக தனது வீட்டிற்கு அழைத்து பேசுவாள்.. இப்பொழுதோ அதில் கிருஷ்ணாவும் இடம் பெற்று இருந்தான்..

அவளுக்கு ஆரம்பத்தில் இருந்த சிறு சிறு குழப்பங்கள் கூட இப்பொழுது அவளுக்கு இல்லை..

கிருஷ்ணா அவளிடம் நல்ல நண்பனாக பழக ஆரம்பித்து இருந்தான்.. நிலாவிற்கோ அதுவே கல்யாண பந்தத்தில் இணைய போதுமானதாக இருந்தது.. பொதுவாக அரேஞ் மேரேஜ்ஜில் நம்பிக்கை கொண்டவள்.. கல்யாணத்திற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணாவின் மீது அவனுடன் வாழும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலரும் என்று நினைத்து வேறு எந்த வித தயக்கமும் இன்றி, எப்பொழுதையும் விட சிறிது மகிழ்ச்சியாகவே சுற்றிக்கொண்டு இருந்தாள்..

அப்படியே நாட்கள் செல்ல அவளது கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்பே விடுப்பு எடுத்து அவளது இல்லம் நோக்கி மிகுந்த கனவுகள் உடனே மகிழ்ச்சியாக சென்று இருந்தாள்..

இவை அனைத்தையும் நினைத்து பார்த்த ஹரிஷ்.. அங்கே அவர்கள் சென்று கொண்டு இருந்த வாகனத்தில் அனைவருடனும் சென்று ஆடி கொண்டு இருந்த ஜெகன் அவர்கள் அனைவருக்கும் புதிதே..

நிலாவின் கல்யாண விஷயம் கேள்வி பட்டதில் இருந்து ஜெகனிடம் நடந்த நிறைய மாற்றங்களை அவனுடன் பணி புரியும் அனைவரும் கண் கூடாக பார்த்து கொண்டு இருந்தனர்..

அவளை கேலி செய்வதாக இருக்கட்டும்.. மற்றவர்களிடம் பேசுவதாக இருக்கட்டும்.. அவனிடம் நிறைய மாற்றங்கள்..








Post Reply

Return to “நெயிர்ச்சியின் முழுவல் நீ”