15.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Moderator: Sabareeshwari

Post Reply
Sabareeshwari
Moderators
Posts: 27
Joined: Thu May 14, 2020 10:23 pm
Has thanked: 3 times
Been thanked: 8 times

15.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Post by Sabareeshwari »

ஜெகனின் மாற்றங்கள் மற்றும் நிலாவின் கல்யாணம் அனைத்தையும் நினைத்து ஹரிஷ் அமர்ந்து இருக்க, அவனது எண்ணங்களை கலைப்பது போல் ஹரிஷின் மொபைல் ரிங் ஆகியது..

அதை எடுத்து பார்த்தவன், அர்ஜுன் அழைத்து இருக்க, அவனது காலை உடனே அட்டேன் செய்து பேச ஆரம்பித்தான்..

ஹலோ.... அர்ஜுன் ....

ஹரிஷ் , ஜெகன் இப்போ என்ன பன்றான்??

அவரு ராமன் ஆண்டாளும்ல ஆரம்பிச்சு இப்போ , ஆளுமா டோலுமாலுக்கு ஆடிட்டு இருக்காரு...

ஹரிஷ்... என்ன சொல்றீங்க ??

உண்மையா தான் சொல்றேன் அர்ஜுன் ஜீ... அவரு செம்ம ஜாலியா டான்ஸ் ஆடிட்டு இருக்காரு...

ஒஹ்ஹ்.. ஓகே ஹரிஷ்... அந்த நேஹாவும் உங்க கூட வந்து இருக்காங்களா ??

ஆமா ஜீ...

ஜெகன் அதுக்கு அப்புறம் எதுவும் ரியாக்ட் பண்ணலையா ??

இல்ல ஜீ... அவரு நிலா விஷயத்துலயும் சரி, நேஹா விஷயத்துலயும் சரி.. நோ ரியாக்ஷன்... ஆனா முதல்ல இருந்த ஜெகனுக்கும் இப்போ இருக்கும் குறைஞ்சது ஒரு பத்து வித்தியாசம் சொல்லலாம்...

முதல்ல இருந்த ஜெகன் நம்ம 10 வார்த்தை பேசுனா ஒரு வார்த்தை பேசறதே கஷ்டம்.. இப்போ அவரும் திரும்பி 5 வார்த்தை பேசறாரு...
எப்போவும் சுருங்கியே இருக்கிற அவரோட புருவம் கூட இப்போ நார்மல்லா இருக்கு...
சிரிக்கரத்துக்கு கூலி கேட்குற ஆளு, இப்போ அவரோட உதட்டுல லைட்டான சிரிப்பு ஒட்டிட்டே இருக்கு..
உங்களோட பழைய ஜெகன் திரும்ப வந்துட்டாரு போல அர்ஜுன் ஜீ...

அதை கேட்ட அர்ஜுன், சத்தமாக சிரிக்க... "என்ன ஆச்சு அர்ஜுன் ??"

"ஹரிஷ்... எங்க பழைய ஜெகன் திரும்ப வந்து இருந்தா நீங்க பத்து வார்த்தை பேசவும் முடியாது.. அப்படியே பேசுனா அதுக்கு அவன் அடிக்கிற கிண்டல் , நக்களுக்கு நீங்க ஒரு வாரம் அவன் கிட்ட பேச உங்களை நீங்களே தயார் படுத்திக்கனும்... அவன் இருக்குற இடம் எப்போவும் கலகலப்பா இருக்கும்.... இப்போ சொன்ணீங்களே டான்ஸ் ஆடறான்னு... இதே எங்கே பழைய ஜெகன்னா இப்போ ஆளுமா டோலுமா ஆடி இருக்க மாட்டான்... அங்கே இருக்க பொண்ணுங்க கூட கில்மா சாங்கு ஆடிட்டு இருந்து இருப்பான்... " என்று கூறி அர்ஜுன் சிரிக்க..

எங்க ஜீ... நீங்களும் புலி வருது புலி வருதுன்னு சொல்றீங்க.. ஆனா புலிய கண்ணுல காட்ட மாட்டேங்கரீங்களே..

"சீக்கிரம் பாத்துடலாம் ஹரிஷ்.. ஏன் நாளைக்கு கல்யாணத்துல கூட பார்ப்பீங்க... " என்று கூறியவன் மீண்டும் "நேஹா விஷயத்துல ஜெகனோட ரியாக்ஷன் ஒன்னும் இல்ல தானே ஹரிஷ்??" என்று உறுதி படுத்திக்கொள்ள கேட்க..

இல்ல ஜீ... நேஹா லவ் சொன்னாங்க.. ஆனா நம்ம ஜெகன் ஜீ அதை பெருசா எடுத்துகிட்ட மாதிரியே தெரியல ஜீ...

அப்போ சரி... ஹரீஷ்... அப்போ அப்போ அங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு சொல்லுங்க...

ஏன் ஜீ?? நீங்க இவ்ளோ பயப்படறீங்க??
நான் தான் சொன்னனே , நேஹா விஷயத்துலயும் சரி நிலா விஷயத்துலயும் சரி , ஜெகன் ரொம்ப கூலா தான் இருக்காரு.. நீங்க தான் ரொம்ப பயப்படறீங்க..

எல்லாம் நல்லதாவே நடந்தா சரி தான் ஹரிஷ்.. கல்யாண மண்டபத்துக்கு போய்ட்டு கூப்பிடுங்க ஹரிஷ்..

ஓகே அர்ஜுன் ஜீ.. நீங்க ரொம்ப வோரி பண்ணாதீங்க.. ஜெகன் ஜீ க்கு நம்ம யோசிச்ச மாதிரி நிலா மேல எந்த வித ஆர்வமும் இருக்கிற மாதிரி தெரியல.. நான் ரீச் ஆன உடனே சொல்றேன்.. என்று கூறியன் அழைப்பை அனைத்து வைத்தவன்... நேஹாவை திரும்பி பார்க்க அவளோ ஆர்வமாக ஜெகனை ரசித்துக்கொண்டு இருந்தாள்...

ஜெகனிடம் முட்டிட்டே இருந்த பொண்ணுக்கு அவன் மேல திடீர்னு இவ்ளோ ஆர்வம் எப்படி வந்தது என யோசித்தவனுக்கு... ஜெகன் கூறிய பதில் நியாபகம் வந்தது..

நிலாவிடம் ஜெகனை பற்றி விசாரித்த நேஹா, நிறைய நாள் எடுத்து கொள்ளவில்லை.. நிலா கல்யாண டென்ஷனில் இருக்க, அவளிடம் வந்த நேஹா ஜெகனிடம் தான் பேச வேண்டும் என்றும், ஜெகனிடம் கூறி அவனை காபி ஷாப்க்கு அழைத்து வருமாறு உதவி கேட்டாள்..

நிலா நாசுக்காக மறுக்க பார்க்க... நேஹா சட்டென்று " உனக்கு ஜெகனை பிடிக்குமோ ?? "என்று ஒரு மாதிரி கேள்வி எழுப்ப.. அதெல்லாம் ஒன்னும் இல்ல... நான் சொல்லி பார்க்கிறேன் என்று கூறி வந்தவள் நேராக சென்றது என்னவோ ஹரிஷிடம் தான்..

அண்ணா.... அண்ணா...

சொல்லுமா...

ஜெகன் சாரை இப்போ காபி ஷாப்க்கு கூட்டிட்டு போறீங்களா??

ஹரிஷ் அவளை புரியாமல் பார்க்க..

நேஹா ஏதோ சார் கிட்ட பேசனுமாம்..

ஒஹ்ஹ்.. அதுக்கு அவங்க இங்கே வர வேண்டியது தானே..

இல்ல அண்ணா.. ஏதோ பெர்சனல்ன்னு சொன்னாங்க...

நேஹாக்கு ஜீ க்கும் தான் ஆகாதே.. அவங்களுக்கு உள்ளே என்னமா பெர்சனல் ??

அதெல்லாம் அப்போ அண்ணா.. இப்போ நேஹா வேற தாட்ல இருக்க மாதிரி எனக்கு தோணுது.. மே பீ என்னோட யூகம் சரின்னா, இன்னைக்கு நேஹா ஜெகன் சார்கு ப்ரொபோஸ் பண்ணுவாங்க...

என்னமா சொல்ற ??

ஆமா அண்ணா.. நீங்க ஏன் அதுக்கு இவ்ளோ ஷாக் ஆகறீங்க??

பின்ன , ஷாக் ஆகாம??
யார்கூட ...
என்ன வேலைக்கு...
நீ என்ன கோர்த்து விடற??
ஜீ கிட்ட என்ன செம்மையா கோர்த்து விடற.. நீயாச்சும் , நேஹாவாச்சும் என்னவோ பண்ணுங்க.. என்ன ஆளா விடுங்க சாமி.. என்று ஹரிஷ் வேகமாக பேசி கொண்டு இருக்கும் பொழுதே அவர்கள் அருகில் வந்த ஜெகன்...

என்ன ஹரிஷ் ?? உங்கள எங்க விடனும் சொல்லுங்க உடனே விடலாம்.. என்று கேட்க ஹரிஷ் ஜெகனை திருதிருவென பார்த்து முளிக்க.. நிலாவே தைரியத்தை வரவழைத்து கொண்டு ஜெகன்னிடம் "சார் உங்ககிட்ட ஏதோ பர்சனலா பேசணும்னு நேஹா மேம் காப்பி ஷாப்புக்கு வர சொன்னாங்க.." என்று வேகமாக கூறி முடிக்க ஜெகனின் புருவம் சற்று உயர்ந்து இறங்கியதை தவிர வேறு எந்த உணர்ச்சியையும் அவன் முகம் காட்டவில்லை.. அதே போல் அவளிடம் எதுவும் கூறாமல் அவன் சென்று வேலையை தொடர சிறிது நேரம் பொறுத்து பார்த்த நிலா மீண்டும் ஜெகனை அழைத்தாள் " சார் அவங்க கால் மணி நேரத்துக்கு மேல அங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.." என்று கூற .. அவளிடம் திரும்பியவன் "நான் வெயிட் பண்ண சொல்லலையே .." என்று கூற நிலா வேறு என்ன கூறுவது என்று தெரியாமல் அவனை பார்க்க கண்ணை மூடி தன்னை சமன் செய்து கொண்டவன் நிலாவிடம் "இதுவே கடைசியாக இருக்கட்டும் நிலா.. இனிமேல் அவங்க கூப்பிடுறாங்க இவங்க கூப்பிடுறாங்க வந்து என்கிட்ட சொல்லிட்டு இருக்காதீங்க .." என்று கூற..

ஜெகன் அவ்வாறு ஒரு விலகு தன்மையுடன் அவளிடம் பேச நிலாவிற்கு தான் என்னவோ போல் ஆனது.. அன்று இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜெகன் நிலாவிடம் முற்றிலும் பேசுவதை தவிர்த்து, பொறுமையாக அவளே பேசுவாள் என்று எதிர்பார்த்து இருக்க.. அவள் இருந்த கல்யாண டென்ஷனில் எல்லோரிடமும் பேசுவதை குறைத்து இருக்க .. ஜெகனனிடம் முற்றிலுமாக குறைந்து தொலைந்து போனது.. இன்றுதான் ஆபீஸ் விஷயத்தை தவிர ஜெகனிடம் பேசி இருந்தாள்..

ஜெகன் அவளிடம் இப்பொழுது இப்படி யாரோ போல் பேச அவளுக்கு லேசாக வலி எழுந்தது.. இருப்பினும் அதை மறைத்து "சாரி சார் இனிமே இந்த மாதிரி நடக்காது என்று கூறியவள் தனது வேலையில் ஆழ்ந்துவிட்டாள்...

அவன் இடத்தைவிட்டு எழுந்தவன் ஹரிஷையும் அழைக்க "நான் எதுக்கு?? நீங்க மட்டும் போயிட்டு வாங்க..." என்று ஹரிஷ் மழுப்பலாக பதில் சொல்ல ..

"அட வாங்க ஹரிஷ் " என்று அவன் தோளில் கை போட்டு காப்பி ஷாப்பிற்கு அழைத்து சென்றான்... அங்கே ஜெகன் வருகிறானா என்று பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தவள் இவன் வருவதைக் கண்டதும் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிய.. அதை கவனித்துக் கொண்டே வந்த ஜெகன் அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து ஹரிஷையும் தன் பக்கத்தில் அமரச் செய்தான்..

"சொல்லுங்க நேஹா என்கிட்ட என்ன பேசனும் உங்களுக்கு??" அவள் சிறிது தயக்கத்துடன் ஹரிஷை பார்க்க..

"நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க நான் போய் காபி வாங்கிட்டு வரேன் .." என்று கூறி நாசுக்காக அவ்விடத்தை விட்டு ஹரிஷ் எழுந்து சென்றான்..

இப்போ சொல்லுங்க என்ன விஷயம்?? சுற்றி வளைக்காமல் "ஜெகன் எனக்கும் எப்படி என்னனு தெரியல.. இப்போ எல்லாம் உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.. ஐ தின்க் ஐ அம் இன் லவ் வித் யூ.. என்று கூற.. ஜெகனின் முகத்தில் எந்தவித வேறுபாடும் இல்லை .. அதைக் கேட்டு சில நொடிகள் அமைதியாக இருந்தவன், " எனக்கு லவ் மேல சுத்தமா நம்பிக்கை இல்ல நேஹா.. அதுவும் உங்களுக்கு என் மேல இருக்கிறது ஒரு அட்ராக்ஷன் தான் சொல்லப்போனால் சின்ன கியூரியாசிட்டி அவ்வளவுதான் .. நீங்க லவ்வையும் அட்ராக்ஷனையும் கன்ப்யூஸ் பண்ணிக்கிறீங்க... இவ்வளவு நாள் பேசாம ரொம்ப ரூடா பிகேவ் பண்ணிட்டு இருந்த நான், இப்போ கொஞ்சம் எல்லாரோடையும் மிங்கள் ஆகிறத பார்த்து உங்களுக்கு என் மேல ஒரு அட்ராக்ஷன் அவ்ளோதான் .. இது லவ்ன்னு போட்டு கன்ப்யூஸ் பண்ணிக்காதீங்க.. " என்று கூறியவன் தன் பேச்சு முடிந்தது என்பதை போல அவளிடம் தலையசைத்து விட்டு ஹரிஷை நோக்கி சென்றான்..

ஜெகன் பக்கத்தில் வந்து நிற்கவும் ஹரிஷ் அவனை கேள்வியாக பார்த்தான் .. "அது சின்ன அட்ராக்ஷன் ஹரிஷ் அவங்களுக்கு அதுக்கும் லவ்வுக்கு வித்தியாசம் தெரியாமல் லவ்வ்னு நினைச்சிட்டு பேசுறாங்க.. " என்று சாதாரணமாக கூறிவிட்டு காப்பியை எடுத்துப் பருகினான்..

இதையெல்லாம் நினைத்துப் பார்த்த ஹரிஷ் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்க ஆவலாகவும் அதே சமயம் சிறிது கவனமாகவும் இருந்தான் அர்ஜுன் கேட்டுக்கொண்டதால்.. இப்படியே அவர்கள் நிலாவின் கல்யாணத்திற்கு செல்ல..

இங்கே அர்ஜுனும் சிறிது யோசனையுடனே சுற்றிக் கொண்டு இருந்தான்.. அதை கவனித்த சக்தி அவனிடம் பார்த்து கொள்ளலாம் என்று கூற ஒரு பெருமூச்சை விட்டவன், " மித்ரா அப்படி பண்ணாம இருந்து இருக்கலாம் சக்தி.. இப்போ எவ்ளோ பிரச்சனை அவ ஏன் அப்படி பண்ணினான்னு எனக்கு தெரியல.. ஆனால் காரணத்தோடுதான் இருக்கும்னு புரியுது.. இருந்தாலும் ஜெகன் இப்படி யாரோ போல எல்லாத்தையும் விட்டுட்டு எங்கேயோ சந்தோசத்துக்காக எங்கிட்டு இப்படி இருக்கிறதே கேட்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா.. அட்லீஸ்ட் மித்ரா சொன்ன மாதிரி அவனுக்கு வெண்ணிலாவையாவது பிடிக்கும்னு பார்த்தேன்.. ஆனா அவன் வெண்ணிலா கல்யாணத்துக்கு சந்தோஷமா ஆடிட்டு போயிட்டு இருக்கான்னு ஹரிஷ் சொல்றாரு.. அட்லீஸ்ட் நேஹா சொன்னதுக்காவது ஏதாச்சும் அவன்கிட்ட ரியாக்சன் இருக்கான்னு பார்த்தா , அதுவும் இல்ல.ம் என்ன நடக்கும்னு ரொம்ப கவலையா இருக்கு டா..

அர்ஜுன் அமைதியா இரு.. இது நீயா?? எதுவா இருந்தாலும் எங்க அர்ஜுன் அசால்டா சமாளிப்பான்... ஏன் அவனோட கல்யாணத்தையே அவன் எப்படி பண்ணிக்கிட்டான் என்று கூறி சக்தி சிரிக்க .. அர்ஜுனும் அதை நினைத்து சிரித்தவன்.. " இல்லாட்டி மட்டும் இந்த ஜெகன் விட்டு இருப்பானா ?? எப்படியும் கல்யாணம் பண்ணி வெச்சி இருப்பான்ல .. " என்று கூறி சிரிக்க..

அதே தான்டா நடக்கணும்னு இருந்தா எப்படியும் நடக்கும்.. நீ கவலைப்படாத சீக்கிரமே அவன் பழைய மாதிரி மாறிடுவான்.. என்று கூறிக் கொண்டு இருக்கும் பொழுது மித்ரா இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.. அர்ஜுனனை பார்த்து "ரொம்ப யோசிக்காதீங்க அர்ஜுன் எல்லாம் நல்லதாகவே நடக்கும் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு.." என்று கூற அவள் நம்பிக்கையில் இவன் நம்பிக்கையும் சேர்ந்தது....






Post Reply

Return to “நெயிர்ச்சியின் முழுவல் நீ”