Page 1 of 1

17.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Posted: Sun Sep 19, 2021 9:45 pm
by Sabareeshwari
அனைவரும் ஆட்டமும் , பாட்டமும் சந்தோஷமாக திருமண மண்டபம் வந்து சேர்ந்தனர்...

இவர்கள் பேருந்து ஈரோடிற்குள் நுழைந்த உடனே ஹரிஷ் போன் செய்து நிலாவிடம் கூறிவிட... அவர்களுக்கு தாங்கள் தங்கி இருக்கும் மண்டபத்தின் இடத்தை ஷார் செய்தாள்..

இவர்கள் பேருந்து மண்டபத்தில் முன் வந்து நிற்கும் பொழுது மணி மாலை 6 ஆகி இருந்தது.. அனைவரும் இறங்கி உள்ளே செல்ல.. வெண்மதி தான் அனைவருக்கும் பன்னீர் தெளித்து வரவேற்று கொண்டு இருந்தாள்..

இவர்கள் நுழைவதை கண்டவுடன் , பக்கத்தில் இருந்த பெண்ணிடம் ஏதோ காதில் கூறியவள் , விஷமமாக சிரித்துக்கொண்டு இருந்தாள்..

முதலில் ஹரிஷும் , ஜெகனும் நுழைய ஹரிஷை விடுத்து ஜெகனின் மேல் பண்ணீர் மழை பொழிந்தது.. அவன் சுதாரிப்பதற்குள் அவன் கண்ணத்தில் சந்தனத்தை தன் இரு கைகள் கொண்டும் அப்பி இருந்தாள் வெண்மதி...

அவனுடன் வந்தவர்களும் , அங்கே இருந்தவர்களும் சற்று அதிர்ச்சியாக ஜெகனோ , " கொஞ்சம் மொக்க பிளான் தான் இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன் .. உன் மனசு சங்கட பட கூடாதுன்னு தான் வென்ஸ்.. அடுத்த பிளாணாவது கொஞ்சம் இன்ட்ரெஸ்ட்டா யோசி டா தத்தி.. " என்று கூறியவன் .. அவர்கள் குடிக்க வைத்து இருந்த தண்ணீரை எடுத்து முகம் கழுவி இருந்தான்...

அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு அங்கே வந்த நிலாவின் அப்பா வெண்மதி செய்ததற்காக தான் மன்னிப்பு வேண்டினார்..

என்ன அப்பா நீங்க?? அவ சின்ன பொண்ணு.. சும்மா செஞ்சா.. அதுக்காக என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்கணுமா ?? நீங்க போய் கல்யாண வேலையை பாருங்க என்று கூறி அவரை சமாதானம் படுத்தி அனுப்பி வைத்தான்.. அப்பொழுது தான் அங்கே இருந்தவர்களுக்கு இவள் வெண்ணிலாவின் தங்கை என தெரிந்தது..

அதன் பின் உள்ளே நுழைந்தவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு தனி தனி குழுவாக அமர்ந்து இருந்தனர்..

மணி மாலை 7.30 ஆகி இருக்க , நிச்சியதார்தத்திற்காக மாப்பிள்ளையை அழைத்து வந்தனர்...
அடுத்து பொன்னையும் சிறிது நேரத்தில் அழைத்து வர.. அங்கே வந்த நிலாவின் கண்கள் முதலில் தேடியது தனது அலுவலக ஆட்கள் எங்கே அமர்ந்து இருக்கின்றார்கள் என்று தான்.. அவர்களை பார்த்து சிறு புன்னைகையுடன் தலை அசைத்தவள் அங்கே அவளுக்கு உரிய இடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்...

இவளை பார்த்த ஜெகனிடம் எதுவும் மாற்றம் தெரிகிறதா என்று ஹரிஷ் பார்க்க. .. அப்படி எதுவும் தெரியவில்லை.. அவன் எப்பொழுதும் போல தான் தன் முகத்தை வைத்து இருந்தான்..

கிருஷ்ணாவின் அருகில் அமர்ந்த நிலா , சில நிமிடங்கள் கடந்தும் கிருஷ்ணா தன்னிடம் பேசாமல் , ஏன் தன்னை திரும்பி கூட பார்க்காமல் அமர்ந்து இருக்கிறான் .. என்று யோசித்தவள் அவன் முகத்தை பார்க்க.. அவன் முகம் பதற்றமாக காணப்பட்டது..

அவள் என்ன ஆனது இவனுக்கு ?? ஏன் இவ்வாறு அமர்ந்து இருக்கிறான் என்று நினைத்து இருக்க.. நிச்சிய பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்தனர்..

நிச்சிய பத்திரிக்கை வாசிக்க அரம்பித்த சில நொடிகளில் அங்கே சிறு சலசலப்பு ஏற்பட்டது...

ஹரிஷும் ஜெகனும் எழுந்து அங்கே செல்வதற்குள் கிருஷ்ணா மாலையை கழட்டிவிட்டு எழுந்து நின்று இருந்தான்..

அடுத்ததாக நிலாவும் எழ .. அங்கே சத்தம் பெரிதானது.. மண்டபத்தில் இருக்கும் அனைவரும் அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்..

ஜெகன் அவ்விடம் அடைந்தவன் நிலாவின் அப்பா கையில் ஏதோ புகைப்படம் இருக்க , அதை வாங்கி பார்த்தவனின் கண்கள் சிவக்க ஆரம்பித்தது..

"பாத்தீங்களா உங்களோட பொண்ண ... என்னோட அவ்ளோ நெருக்கமா இருந்துட்டு இப்போ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிட்டா... " என்று ஒரு ஆணின் குரல் ஏகத்தாளமாக வந்தது...

அவ்வார்தைகளை கேட்ட நிலாவிற்கு கோபம் ஏறியது.. அப்படி என்ன தான் அந்த போட்டோவில் இருக்கிறது என்று பார்க்க  கிருஷ்ணாவின் கையில் இருந்த போட்டோவை வாங்கி பார்த்தவளுக்கு , உடல் எங்கும் அருவருக்க தக்க கூசியது..

அதில் அவள் ஒரு ஆடவனின் மடியில் அமர்ந்து உதட்டில்  முத்தம் கொடுப்பது போன்று இருந்தது..  அங்கு அனைவரிடமும் ஒவ்வொரு போட்டோ காபியை கொடுத்து பார்க்க சொல்லி.. சற்று முன் நிலா தன்னை காதலித்து ஏமாற்றியதாக கூறியவன் தான் அவளுடன் போட்டோவில் இருந்தான்.. அவன் பெயர் ராஜா...

நிலாவிற்கு அருவருப்பில் உடம்பே கூசியது.. ராஜாவை நோக்கி செல்ல போனவளின் கையை பிடித்து நிறுத்திய கிருஷ்னா அவளிடம் , " நான் கேட்டப்போ யாரையும் காதலிக்கலன்னு சொன்னையை நிலா ?? "  என்று அவளிடம் கேட்க..

அவன் கேள்வியின் அர்த்தம் புரிய நிலாவிற்கு சில நொடிகள் தேவைப்பட்டது..

அவன் கேள்வியே கூறியது , கிருஷ்ணா இந்த போட்டோவை நம்பி விட்டான் என்று... தன்னிடம் விளக்கம்  கேட்கும் அளவிற்கு கூட கிருஷ்ணாவிற்க்கு பொறுமை இல்லை என்பதை புரிந்து கொண்டவளுக்கு,  மெலிதான சிரிப்பு அவள் உதட்டில் தொற்றி கொண்டது..

அந்த நிமிடம் அவளுக்கு தெளிவாக புரிந்தது... இந்த திருமணம் அவள் மனதிற்கு ஓட்டவே இல்லை.. எவ்வளவு யோசித்தும் பாவம் அவளுக்கு அதற்கான விடை தெரியாததால் கடவுளின் கையில் விட்டால்.. இதோ இப்பொழுது புரிந்து விட்டது அவளுக்கு " நம்பிக்கை " எந்த ஒரு உறவிற்கும் நம்பிக்கை அடிப்படை.. அவளுக்கு கிருஷ்ணாவின் மேல் நம்பிக்கை ஏற்படவில்லை... 
அதுவே அவள் மனம் இந்த திருமணத்தில் ஒட்டவில்லை...

தன்னை சமன் படுத்தியவள்... அழகான ஒரு புன்னகையை கிருஷ்ணாவிற்க்கு கொடுத்தாள், அவன் கையை தன் கையில் இருந்து விலக்கியவள்.. ராஜாவை நோக்கி சென்றாள்...

அதற்குள் நிலாவின் அப்பா ராஜாவிடம் , " தம்பி இப்படி அபாண்டமா என் பொண்ணு மேல பழியை போடாதீங்க... அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.. "

நான் என்ன பொய்யா சொல்றேன்.. நீங்களே பாத்தீங்கல்ல ??

தம்பி ...

அப்பா.. இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவன் கிட்ட பேசிட்டு இருக்கீங்க ??
போலீசை கூப்பிடுங்க அப்பா.. அப்போ தெரியும்.. அந்த போட்டோல இருக்கிறது நானா இல்ல அது மார்பிங் செஞ்ச போட்டோ வா ன்னு.. என்று நிலா அசராமல் கூற...

ராஜாவிற்கு  தான் அவள் தைரியம் சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது.. இருந்தும் அவன் சலிக்காமல் நிலாவை அவதூறாக பேச ஆரம்பித்தான்...

இவை அனைத்தையும் ஜெகன் பார்த்துக்கொண்டு இருந்தானே தவிர வேறு எதுவும் செய்யவில்லை.. ஹரிஷ்  நிலாவிற்கு உதவி செய்யலாம் என போக.. அவனையும் தடுத்து வைத்தான்...

நிலா போலீஸிற்கு அழைக்க அவள் தந்தையின் கை பேசியை வாங்க.. அதை பார்த்தவன், " என்னடி ரொம்ப தைரியமா போலீசுக்கு கூப்படற .. கூப்பிடு..  அவங்க வரட்டும்.. வந்தா நானும் என்னோட நியாத்தை சொல்றேன்...

என்ன நியாயத்தை சொல்ல போற டா பொறுக்கி நாயே...  என்று ஆவேசாமாக ஒரு குரல் அவன் பின்னால் வர ராஜாவிற்கு தூக்கி வாரி போட்டது...

அவன் குரல் வந்த திசையை நோக்கி திரும்பவதற்குள் அவன் முன்  வந்தவன் அவனை அறைந்த அறையில் அவன் உதடு சிறிது கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்தது...

பயத்தில் சற்று பின்னால் போனவன்... அடி வாங்கியும் அவன் முன்னாள் நிற்கும் அர்ஜுனை கண்டு பிரமையோ என்று நினைத்து தனது கண்களை கசக்கி பார்த்தான்..

அவன் கண்கள் பொய் கூறவில்லை.. அவன் முன்னாள் நின்றது சாட்சாத் அர்ஜுனே...

அங்கே அர்ஜுனை கண்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை...

ஹரிஷ் , அர்ஜுனை பார்த்து ஆச்சிரியமாக... கிருஷ்ணாவோ இவர் எங்கே இங்கு... என்ற நினைப்பில் இருக்க.. அர்ஜுனை பார்த்த நிலா , தாய் பசுவிடம் செல்லும் கன்றுகுட்டியை போல... " அண்ணா " என்று அழைத்து அவனிடம் ஓடியவள் அவனின் நெஞ்சில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்...

அதை கண்ட ஜெகனுக்கு முகத்தில் சிறு முறுவல்.. அதை மற்றவர்கள் கவனிப்பதற்குள் மாற்றிக்கொண்டான்..

வெண்ணனிலா ...  இங்கே பாரு... அழ கூடாது... நீ ரொம்ப தைரியமான பொண்ணு தானா...

ஆம்.. என்று அவள் தலையாட்டா...
அவள் கண்ணீரை துடைத்தவன், அவளை பக்கத்தில் தள்ளி நிறுத்துவிட்டு... அங்கே பாரு டா மா.. அம்மா , அப்பா , பாப்பா எல்லாரும் எவ்ளோ பயந்து போய் இருக்காங்க.. நீ அவங்களுக்கு என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு... போ போய் அவங்க கூட இரு அப்பாவும்  அம்மாவும் இப்போவே ரொம்ப மனசு ஓடஞ்சு போய் இருக்காங்க.. நீயும் அழ கூடாது.. நீ எவ்ளோ தைரியாமா இருக்கியா.. அப்போ தான் அவங்களும்  தைரியமா இருப்பாங்க.. என்று கூறிவிட்டு ராஜாவிடம் திரும்பினான்.. " உன்கிட்ட அப்பாவே என்ன சொன்னேன்.. வெண்ணிலா பொண்ணு இருக்கிற திசை பக்கம் கூட உன் எண்ணம் போக கூடாதுன்னு சொன்னனா இல்லையா ?? அப்படி மீறி வந்தா அன்னைக்கு தான் உன் வாழ்க்கையோட கடைசி நாள் ன்னு சொன்னேன் ல..  அப்படி இருந்தும் அவ கல்யாணத்துல வந்து இவ்ளோ கலாட்டா பண்ணி இருக்கேனா... உனக்கு பயம் விட்டு  போச்சுன்னு தானே அர்த்தம்...

அய்யோ இல்ல அண்ணா.... நான்.. நான்... தெரியாம தப்பு பண்ணிட்டேன்.. என்ன மணிச்சுடுங்க அண்ணா...

எது??? நீ செஞ்சது தெரியாம செஞ்ச தப்பா ?? என்று கூறி அவன் முகத்தில் மீண்டும் குத்து விட..

அய்யோ... அண்ணா... விட்ருங்க அண்ணா.. நான் உண்மைய எல்லார்கிட்டையும் சொல்லிடறேன்.. 

நீ சொல்லி தான் நாங்க எங்க பொண்ண நம்பனுமா ?? என்று மீண்டும் அர்ஜுன் ஓசிக்கொண்டே அவனை ஒரு உதை விட...

ராஜா நேராக சென்று நிலாவின் காலில் விழுந்தான்..." நிலா  நிறுத்த சொல்லு ப்ளீஸ்.. இல்லாட்டி என்ன இவறு அடிச்சே கொன்னுடுவாறு... " என்று அவளிடம் கெஞ்ச..

அர்ஜுன் அவன் சட்டையை பிடித்து கொத்தாக தூக்க... நிலா எதுவும் பேசாமல் அமைதியாகவே நிற்க.. நிலாவின் தந்தை தான்.. விடுங்க தம்பி... அவனை இங்கே இருந்த அனுப்புனா போதும்.. என்று கூற...

அர்ஜுன் அவனை இழுத்து சென்று வாசலில் விட்டு வந்தான்...

அங்கே மழை அடித்து ஓய்ந்ததை போல் அமைதியாக இருந்தது அந்த கல்யாண மண்டபமே...