Page 1 of 1

18.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Posted: Sun Sep 26, 2021 10:28 pm
by Sabareeshwari
அர்ஜுனிடமிருந்து உயிர் தப்பித்த ராஜா மண்டபத்தில் இருந்து வெளியியே நடக்க முடியாமல் நடந்து வர, அவனை அப்படியே அலேக்காக தூக்கியது நால்வர் அடங்கிய குழு...

அந்த நாலு பேரும் ராஜாவை அர்ஜுனின் ஆணைப்படி அவன் கூறிய இடத்தில் அடைத்து வைத்தனர்...

மண்டபத்தின் உள்ளே அர்ஜுன் அங்கே இருந்த அனைவருக்கும் ராஜாவுக்கு நிலாவை எப்படி தெரியும் என  விளக்க ஆரம்பித்தான் .. நிலா ஒரு இன்டர்ன்ஷிப்காக அவள் காலேஜில் இருந்து அர்ஜுனின் கீழ் வேலை செய்யும் பொழுது ராஜா அர்ஜுனின் கம்பெனியில் தான் வேலை செய்து கொண்டு இருந்தான் .. ராஜாவை அந்த இன்டர்ன் ப்ரொஜெக்ட்கு  அர்ஜுன் பொறுப்பு எடுத்து கொள்ள கூறி இருந்தான்..

அவளை பார்த்த நாள் முதலே ராஜாவின் கண் நிலாவின் மேல் விழுந்தது...  ஒரு வாரம் சென்று இருக்க, நிலாவிடம் அவனுக்கு அவள் மேல் உள்ள ஆசையை உரைத்தவன் , அவளிடம் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி கொண்டு இருக்க...  ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத நிலா அர்ஜுனிடம் சென்ற புகார் செய்தாள்..

நிலாவின் புகாரை உறுதிசெய்த அர்ஜுன் ராஜாவை கூப்பிட்டு வார்ன் செய்து அனுப்ப அந்த கோபத்தில் ராஜா நிலாவை கொஞ்சம் மோசமாக மிரட்ட ஆரம்பிக்க...  ராஜாவின் மேல் தன் கவனத்தை வைத்து இருந்த அர்ஜூனின் கண்களில் இது தப்பாமல் சிக்கியது..  அன்றே அவனை போட்டு போலந்து கட்டியவன் அவனை வேலையை விட்டு தூக்கி இருந்தான்..  இனி நிலாவின் பக்கம் அவன் தலை வைத்து படுக்க கூடாது என்ற உத்தரவுடன்...

அனைத்தையும் கேட்டவர்களுக்கு நிலாவின் மேல் சிறிதும் தவறு இருப்பதாக தோன்றவில்லை ஆகையால் கிருஷ்ணாவின் பெற்றோர் இருவரையும் மணமேடையில் மீண்டும் அமர சொல்ல.. நிலா அவரை மறுத்து பேச ஆரம்பித்தாள் ..

அவள் தந்தையிடம் சென்றவள் "எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லப்பா .. " என்று கூற அவரோ "என்னமா சொல்ற?? அதான் எல்லாம் குழப்பமும் தீர்ந்ததே ?? " என்று அவளை சிறு பதட்டத்துடன் பார்க்க..

அவளோ " என்னால கிருஷ்ணாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது பா...  ராஜா வந்து போட்டோவ காட்டுன உடனே,  என் கிட்ட ஒரு கேள்வி கூட கேட்காமல் அவரா முடிவெடுத்து நான் தப்பு செஞ்சு இருக்கேன்ற மாதிரி பேச ஆரம்பிச்சாரு ..  என் கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்னு கூட அவருக்கு தோணல..  அப்புறம் எப்படி நான் அவரை நம்பி கல்யாணம் பண்ணிக்க முடியும்??  என் மேல நம்பிக்கை இல்லாத ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் வாழ்க்கை எப்படி நல்லா இருக்கும் அப்பா ?? அதனால இந்த கல்யாணத்தை தயவு செஞ்சு இதோட நிறுத்திடுங்க.."  என்று உணர்வுகளற்று  கூற. கிருஷ்ணாவின் அப்பா பேச ஆரம்பித்தார் "அந்த நேரத்துல ஏதோ சின்ன அவசரத்துல அப்படி செஞ்சுட்டான் மா.. அதுக்காக கல்யாணத்தையே நிறுத்தறது ரொம்ப பெரிய விஷயம் .." என்று கூற நிலாவின் அப்பாவும் அதையே ஆமோதித்தார் ..

நிலா மீண்டும் பேச வர "அவன் செஞ்ச சின்ன தப்புக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் நிலா.."  என்று கிருஷ்ணாவின் தந்தை அவளிடம் மன்னிப்பு வேண்டி இருகைகளையும் குவிக்க..  ஐயோ அங்கிள் நா சின்ன பொண்ணு .. என் முன்னாடி ஏன் இப்படி எல்லாம் செய்யறீங்க ?? என்று அவர் கைகளை இறக்கி விட்டு அவர்களிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் சிறிது நிதானித்து கிருஷ்ணாவை பார்க்க அவன் முகம் மிகவும் குழப்பமாக இருந்தது..  அவன் ஏன் வந்ததில் இருந்து ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் என்று நிலா மீண்டும் யோசிக்க ஆரம்பிக்கும் பொழுது நிலாவின் அப்பா நிலாவின் கையை பிடித்து " இந்த சின்ன தப்புக்காக இவ்ளோ பெரிய முடிவு தேவை இல்லமா கொஞ்சம் நிதானமா யோசி இத தவிர கிருஷ்ணா கிட்ட உனக்கு வேற எதுவும் தப்பா படலையே?? " என்று கூற அவளும் சற்று யோசித்தவள் இல்லை என்று தலையாட்டினாள் .. அவளை மீண்டும் அங்கே இருந்த பெரியவர்கள் மேடையில் அமர சொல்ல அவளால் அவர்களை மீறி மேலும் மேலும் பேச முடியாமல் என்ன செய்வது என்று யோசிக்க கூட அவகாசம் இல்லாமல் என்ன முடிவு எடுப்பது என்று குழப்பமாக நின்று இருந்தாள்..

அதற்குள் ஐயரோ முகூர்த்தம் போய்க்கொண்டு இருக்கிறது என்று கூற கிருஷ்ணாவையும் நிலாவையும் அங்கே இருந்தவர்கள் பேசி அமர சொல்ல கிருஷ்ணா மீண்டும் மன மேடையில் அமர போனான்..  அப்பொழுது மீண்டும் ஒரு குரல் "இந்த கல்யாணம் நடக்காது .. " என்று கூறியது..

அனைவருக்கும் மீண்டும் குழப்பமா என்று குரல் வந்த திசையை நோக்கி பார்க்க நிலாவின் கண்களோ அந்த குரலின் சொந்தக்காரனை வெறித்து நோக்கியது .. நிலாவின் தந்தையோ சிறிது படபடப்பாக "ஏன் தம்பி இப்படி ஆளாளுக்கு என்னோட பொண்ணு கல்யாணத்துல பிரச்சனை பண்றீங்க??"  என்று சிறிது கோபத்துடன் ஜெகனிடம் கேள்வி எழுப்ப அவனும் " என்ன மன்னிச்சிடுங்க அப்பா..  நானும் இந்த கல்யாணம் தானாவே நின்னுடுமும்னு இவ்வளவு நேரம் பார்த்தேன்.. " என்று கூறியவன் கிருஷ்ணாவை துளைத்து எடுக்கும் பார்வையால் பார்த்தவன்.. யாரையோ போனில் அழைத்து உள்ளே வர சொன்னான்...

அவன் அழைத்தது வேறு யாரையும் அல்ல கிருஷ்ணாவின் முன்னாள் காதலியை தான் .. அவளை அங்கே சற்றும் எதிர்பார்க்காத கிருஷ்ணா மேடையில் இருந்த தானே இறங்கி அவளிடம் சென்றான் .. இவை எதையும் எதிர் பார்க்காத அங்கு இருந்தவர்கள் மீண்டும் தங்களுக்குள் பேச ஆரம்பிக்க கிருஷ்ணாவின் காதலி கிருஷ்ணா அவளை நெருங்கிய உடன் அவன் கண்ணத்தில் பலார் என்று அறைந்து இருந்தாள்...

அவள் அடித்ததை கூட பொருட்படுத்தாமல் கிருஷ்ணா அவளை அனைவரின் முன்னும் இழுத்து அணைக்க அவளோ சற்று திமிரியவள், அவனிடம் சிறிது நேரத்திலேயே அடங்கி போனாள்..

ஆனால் அவள் அழுகை மட்டும் சிறிதும் கட்டுப்படவில்லை.. அவளை அணைப்பிலிருந்து விடுவித்தவன் அவளிடம் மன்னிப்பு கேட்டு , அவள் பதிலுக்காக அவளையே பார்த்து நிற்க.. அவளும் அவனை மன்னித்து இருந்தாள்.. அவள் மன்னித்த சந்தோஷத்தில் அவளை மீண்டும் இறுக்கி அணைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டு தங்களது காதலை மீண்டும் புதுப்பித்து கொண்டான்..

மணமேடையை நோக்கி திரும்பிய அவனின் முகத்தில் தான் எத்தனை பரவசம் .. அதை கண்ட நிலாவிற்கு சிறிது நேரத்திற்கு முன் இருந்த அவனின் குழப்பமான முகம் நினைவிற்கு வர..  அவள் இதழ்கள் லேசாக வளைந்தது ..  தனது காதலி இந்துஜாவை அழைத்து மணமேடைக்கு வந்தவன் நேராக சென்றது நிலாவிடம் தான்..

" நிலா என்ன மன்னிச்சிடு நானும் இந்துஜாவும் காலேஜ் படிக்கும் போது லவ் பண்ணுனோம்.. ஆனா ஒரு பிரச்சனையால ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம்..  நானும் கடந்த ரெண்டு வருஷமா அவளோட நினைவில் இருந்து மீண்டு வந்துட்டேன்னு தான் இருந்தேன்.. ஆனா நம்ம கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி தான் அவ இப்போ இருக்க நிலைமை எனக்கு தெரிஞ்சது .. ஒரு பிரெண்டா தான் அவளை பாக்க போனேன்..
ஆனா அங்க போய் அவளை பார்த்த அப்பதான் புரிஞ்சது இப்போ அவளுக்குனு யாரும் இல்ல என்ன தவறன்னு...

அப்போ பேசும் போது தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சதுல அவளோட தப்புனு எதுவும் இல்ல.. அது ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்..  நான்தான் அதை பெரிய தப்பா நெனைச்சு அவளை விட்டு பிரிஞ்சுட்டேன்...

அதுக்கு அப்புறம் இவள விட எனக்கு மனசே இல்ல அவ கிட்ட அப்பவே கல்யாணத்தை நிறுத்தறேன்னு சொன்னேன்.. ஆனா அவ தான் என்ன ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டா.. அவ கிட்ட உன் கழுத்துல தாலி ஏறுற வரைக்கும் நான் அவளுக்காக வெயிட் பண்ணுவேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் நிலா.. உன்கிட்ட இத முன்னாடியே சொல்லலாம்னு இருந்தேன் .. ஆனா எனக்கு எந்த சந்தர்ப்பமும் கிடைக்கல.. என்ன மன்னிச்சிடு நிலா.. " என்று அவளிடம் மன்னிப்பு கேட்க அவளும் சிரித்த முகத்துடன் வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ட் மிஸ்ஸஸ் கிருஷ்ணா என்று இருவருக்கும் கைகுலுக்க அங்கே குழுமி இருந்த அனைவரும் நிலாவை பரிதாபமாக பார்க்க ஆரம்பித்தனர்..

கிருஷ்ணாவின் அப்பாவோ அவனை முறைத்து பார்க்க,  தன் பெற்றோரிடம் சென்றவன் அவர்களிடம் பேசி சம்மதம் வாங்கி இருந்தான்..  இதற்கிடையில் நிலாவின் அப்பாவை தான் அனைவரும் கவனிக்க தவறி இருந்தனர் கிருஷ்ணா நிலாவிடம் வந்து பேச ஆரம்பிக்கும் பொழுதே விஷயத்தை சற்று யூகித்தவர் நெஞ்சில் சிறிது வலி ஏற்பட்டு விட நெஞ்சை பிடித்தவர் அங்கே இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து விட்டார்.. அவரை முதலில் கண்டது என்னவோ வெண்மதி தான்..  அவரிடம் ஓடியவள் "அப்பா என்ன பண்ணுது??" என்று அவரை உழுக்க அனைவரின் கவனமும் அவரிடம் திரும்பியது.. நிலாவோ அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றவள் , அவர் தினமும் உட்கொள்ளும் பிபி மாத்திரையை எடுத்து வந்து அவரிடம் கொடுக்க,  வெண்மதி அதற்குள் தண்ணி எடுத்து வந்து கொடுத்து இருந்தாள்..

அதை முழங்கியவர் நிலாவை பார்த்து கண்ணீர் சிந்த அவர் கண்ணீரை துடைத்துவள் "எதுக்குப்பா இப்போ இந்த கண்ணீர்??  இந்துஜா வராம இருந்திருந்தாலும் நான் இந்த கல்யாணத்தை எத்துக்கற மன நிலைமையில் இல்ல .. நீங்க என்னை மணமேடையில் உட்கார சொல்லியும் என்னால மணமேடையில் உட்கார முடியல.. கண்டிப்பா இந்த கல்யாணம் நடந்து இருக்காது பா..  அதனால இத நினைச்சு கவலைப் படாதீங்க.. " என்று கூற நிலாவின் அம்மாவோ "புரியாம பேசாத நிலா.. இந்த மாதிரி கல்யாணம் மணமேடைக்கு வரைக்கும் வந்து பாதியிலே நின்னு போச்சுனா அந்த பொண்ணுக்கு கல்யாணம் திரும்பவும் நடக்கிறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா ?? " என்று கேட்க "அம்மா எந்த காலத்துல இருக்கீங்க ?" என்று வெண்மதி அவள் அம்மாவை சாட " உனக்கு ஒன்னும் தெரியாது நீ சின்ன பொண்ணு அமைதியா இரு பாப்பா" என்று கூறியவர் மேலும் புலம்ப..

அவர் தோளில் ஒரு கை விழுந்தது... யார் என்று பார்த்தவருக்கு பெரிதும் ஆச்சிரியம்.. தனது கல்லூரி தோழி செண்பகம் நின்று இருந்தார்..

எதுக்கு இப்போ இவ்ளோ கவலை சங்கரி ?? கண்டிப்பா நிலா கல்யாணம் நடக்கும்.. அதுவும் இப்போவே.. இங்கேயே...  என்று கூறினார்..

என்ன சொல்ற செண்பகம் ?? அது எப்படி நடக்கும் ??

நீயும் உன்னோட குடும்பமும் சம்மதிச்சா இப்போவே கல்யாணம் நடக்கும்..

எனக்கு நீ பேசுறது சுத்தமா புரியல ?? அது எப்படி நாங்க சம்மதிச்சா கல்யாணம் நடக்கும் ?? பையனுக்கு எங்க போக ??

பையனுக்கு நீ எங்கேயும் போக வேணாம்... பையனே இங்க நம்ம கூட தான் இருக்கான்.. என்று கூறியவர் நேராக சென்று நின்றது என்னவோ ஜெகனின் முன்னாள் தான்...

அவர் வந்து பேச ஆரம்பித்ததில் இருந்து புரியாமல் பார்த்து கொண்டு இருந்த நிலா... அவர் ஜெகனிடம் சென்று நிற்கவும் அவளுக்கு அதிர்ச்சியாகி போனது..

சேதுவும், சங்கரியும் செண்பகம் அருகில் வர, ஜெகனின் கையை பிடித்த செண்பகம் " இதோ இவன் தான் என்னோட ஒரே பையன்.. பேரு ஜெகன்.. "கீழே நின்ற ஜெகனின் தந்தை வினோத்தை காட்டியவர் " அவரு தான் ஜெகனோட அப்பா.. உன்னோட பொண்ணுக்கு கல்யாணம்னு நீ பத்திரிகை எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி இருந்தல.. அதை பாரர்த்து தான் நாணும் அவரும் வந்தோம்.. வந்த இடத்துல இப்படி ஆகிடுச்சு... எல்லாம் நல்லதுக்குனு எடுத்துக்குவோம்.. இப்போ சொல்லு உன்னோட பொண்ணை என்னோட பையனுக்கு கொடுக்க சம்மதமா??? "