19.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Moderator: Sabareeshwari

Post Reply
Sabareeshwari
Moderators
Posts: 27
Joined: Thu May 14, 2020 10:23 pm
Has thanked: 3 times
Been thanked: 8 times

19.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Post by Sabareeshwari »

செண்பகம் நிலாவை ஜெகனுக்கு கல்யாணம் செய்து தர சம்மதம் கேட்க.. அங்கே இருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை..

ஆனால் அநியாயத்திற்கு பதறியது என்னவோ நிலா தான்.. நிலாவின் அம்மா அவள் அப்பாவை திரும்பி பார்க்க , அவர் முகத்தில் சிறு தெளிவு தெரிந்தது.. மெதுவாக எழுந்து அவர்கள் அருகில் வந்தவர், "உனக்கு என்னோட பொண்ணை கட்டிக்க சம்மதமா பா ?? " என்று கேட்க..

ஒரு நிமிடம் கண்ணை மூடியவன் , கண்ணை திறந்து பார்த்தது நம் நிலாவை தான்.. அவளை பார்த்துக்கொண்டே நிலாவின் தந்தையிடம் "உங்க பொண்ணு கிட்ட ஒரு 10 நிமிஷம் பேசிட்டு என்னோட முடிவை சொல்றேன் அங்கிள்" என்று கூறியவன் நேரே சென்று நிலாவை மணப்பெண் அறைக்கு அழைத்து சென்றான்...

உள்ளே வந்து 2 நிமிடங்கள் முழுதாக முடிந்தும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை .. ஜெகன் பேச வாய் திறக்க , அவனையே பார்த்து கொண்டு இருந்த நிலா... அவனை பேச விடாமல் கை நீட்டி தடுத்தவள்..

சார்... எனக்கு புரியுது... இது உங்களுக்கு எவ்ளோ அன்கம்போர்ட்டா  இருக்கும்னு... நீங்க எதுவும் சொல்ல தேவையில்லை.. நானே வெளில போய் இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிடறேன் .. என்று கூறி அவள் வெளியில் நடக்க, அவள் கையை எட்டி பிடித்தவன்.. " ஆனா எனக்கு இந்த கல்யாணம் நடக்கணுமே ... "

ஜெகன் அவ்வாறு கூறியவுடன் அவனை புரியாமல் பார்த்தவள் , " ஓஹ் எனக்கு பெரிய மனசு பண்ணி வாழ்க்கை கொடுக்கறீங்க... அதாவது நீங்க செஞ்ச தப்பும் சரி ஆனா மாதிரி.. அதே சமயம் கல்யாணம் நின்ன பொண்ண கட்டிக்கிட்டா கொஞ்சம் ஹீரோயிசம் காட்டுன மாதிரி.. ஒரே கல்லுல 2 மாங்காய்... "

ஹ்ம்மம் அப்படியும் சொல்லலாம்.. என்று அவன் நக்கலாக பதில் சொல்ல..

உங்களுக்கு வெக்கமா இல்லை.. இப்படி சொல்ல..

சற்று சீரியஸ்சாக யோசித்தவன் , " இல்லையே ... " என்று கூற.. நிலாவிற்கு பிபி தானாக எற ஆரம்பித்தது... எதுவும் பேசாமல் சற்று நேரம் அவனை பார்த்தவள்.. திரும்பி நடக்க ஆரம்பித்தாள்..

நீ வெளில போய் கல்யாணத்தை நிறுத்த நினைச்சா நமக்குள்ள நடந்ததை எல்லார் முன்னாடியும் சொல்லி மன்னிப்பு கேட்பேன்... பார்த்துக்கோ..

அவன் கூறியதை கேட்டவள், " சார் உங்களுக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா ?? வெளில அப்பா இவ்ளோ நேரம் இங்கே நடந்த அதிரிச்சியில எவ்ளோ கஷ்டப்பட்டார்ன்னு பாத்துமா இப்படி சொல்றீங்க?? அப்படி என்ன உங்களுக்கு இந்த கல்யாணம் நடக்கணும்னு ?? உங்களோட குற்ற உணர்ச்சிக்காக எல்லாம் கல்யாணம் பண்ணுன அது எத்தனை நாளைக்கு நிலைக்கும் ?? "

இதுக்கும் என்னோட குற்ற உணர்ச்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை நிலா.. ஒரு விஷயம் உனக்கு நான் திரும்பவும் சொல்றேன், மனசுல நல்லா பதிய வெச்சுக்கோ.. அன்னைக்கு நடந்தது நான் செஞ்ச பெரிய தப்பு... அதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஆனா ஒரு சின்ன முத்தத்துக்காக எல்லாம் யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க நிலா... நீ கொஞ்சம் லூசுன்னு தெரியும்.. ஆனா இவ்ளோ பெரிய லூசுன்னு தெரியாது... என்று ஜெகன் சிறு கேலியாக கூற.. அப்பொழுது கதவை திறந்த வெண்மதி "இப்போவாது தெரிஞ்சுதுன்னு சந்தோஷம் படுங்க மாம்ஸ்.... அதான் தெரிஞ்சுருச்சுல இப்போவே எஸ்கேப் ஆகிடுங்க..  இன்னும் 3 வருஷம் மட்டும் வெய்ட் பண்ணுங்க.. அதுக்குள்ள நான் படிச்சு முடிச்சுடுவேன்... " என்று வெண்மதி கூற..

அவள் நுழைந்தவுடனே  எங்கே தாங்கள் பேசியதை கேட்டு இருப்பாளோ என்று இருவரும் பதற்றத்தோடு அவளை பார்க்க, அவளோ வந்தவுடன் இருவரையும் சேர்த்து கலாய்த்து இருந்தாள்..

அவள் பேசியதில் ஜெகன் சிறிது ரிலாஸாக , நிலாவிற்கு தான் அவள் தலையில் நான்கு கொட்டு நறுக்கென்று கொட்ட வேண்டும் போல் இருந்தது..

"வென்ஸ் சொல்லவே இல்லை... " , என்று ஜெகன் ஆரம்பிக்க... "உன்னை யாரு இப்போ இங்கே வர சொன்ன மதி ??" என்று நிலா கடுப்பாக கேட்க...
"

உன்கிட்ட பேச தான்..

என்கிட்ட என்ன டீ இப்போ பேச போற??

"என்ன அக்கா முடிவு பண்ணி இருக்க ?? " உடனே நிலா ஜெகனை பார்க்க..

உங்க அக்காக்கு என்ன பிடிகளையாம்.. விடு வென்ஸ்.. நீ சொன்ன மாதிரி நான் 3 வருஷம் வெய்ட் பன்றேன்... நீ உன்னோட படிப்பை முடி... ஆனா அது வரைக்கும் நம்ம ரெண்டு பேரும் ஜாலியா பேசிட்டு.. பீச்... பார்க் .. தியேட்டர்ன்னு சுத்திட்டு.. ஒருத்தர் ஒருத்தர் புரிஞ்சுட்டு லவ் பண்ணலாம் வென்ஸ்.. என்று கூறியவன் அவள் தோளில் கை போட்டு கண் அடிக்க..

சூப்பர் ஐடியா மாம்ஸ் ... எனக்கு டபிள் ஓகே... ஆனா நீங்க தான் அவ்ளோ தூரமா இருக்கீங்களே..

"இதுலாம் ஒரு பிரச்சனையா வென்ஸ்? நான் இந்த மாசம் சென்னைக்கு வந்தடறேன்.. அப்புறம் ஜாலியா நம்ம லவ் பண்ணலாம்.. " என்று ஜெகன் சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுது மீண்டும் கதவை சிறிதாக தட்டி விட்டு உள்ளே அர்ஜுன் வர..

ஜெகனின் பார்வையும் அர்ஜுனின் பார்வையும் ஒரு நிமிடம் மோதி நிற்க..  அர்ஜுன் நிலாவை நோக்கி நடக்க அரம்பிக்கும் பொழுது , " கொஞ்சம் உங்க தங்கச்சிக்கு எடுத்து சொல்லி புரிய வைங்க அண்ணா... "என்று கூறிவிட்டு வெளியில் சென்றான்..

அங்கே இருந்த வெண்மதியும் நிலாவிடம் " நீ ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கறன்னு எனக்கு புரியல அக்கா.. சொல்ல போனா கிருஷ்ணா உனக்கு மேட்ச்சே இல்ல... நான் பார்த்த வரைக்கும் உனக்கும் கிருஷ்ணாவுக்கும் கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரியே இல்ல..  ஆனா அவருக்கு நீ ஓகே சொன்ன.. ஆனா நீ புது ஆபிஸ் போனதுல இருந்து நானும் பாத்துட்டு தான் இருக்கேன்.. நீ எல்லார்கிட்டையும் சின்ன ஒத்துக்கத்தோட பழகுவ, ஜெகன் சார் கிட்ட நீ ரொம்ப கேஷ்வளா பழகின.. அப்புறம் ஏன் நீ இப்போ இவ்ளோ யோசிக்கிறேன்னு எனக்கு புரியல.. நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு நிலா." என்று கூறியவள் அர்ஜுனிடம் ஒரு சிறு புன்னைகையை சிந்திவிட்டு வெளியேறினாள்...

நிலா மா உனக்கு மனசுக்கு சரின்னு பட்டா மட்டும் ஓகே சொல்லு.. ஆனா ஏன் ஜெகன் வேணாம்ன்னு ஒரு சரியான காரனத்தையும் சொல்லு..

எனக்கு முடிவு எடுக்க தெரியல அண்ணா... வெண்மதி சொன்ன மாதிரி கிருஷ்ணாவை விட ஜெகன் சார் என்ன நல்லா புரிஞ்சு வெச்சு இருக்காரு.. எனக்கும் அவரை பிடிக்கும் நல்ல டீம் லீடாறா... ஆனா அவருக்கு நான் சரியான்னு எனக்கு யோசனையாவே இருக்கு...

சரிடா.. நீ டைம் எடுத்து யோசி.. யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு..

அண்ணா, உங்களுக்கு ஜெகன் சாரை முன்னாடியே தெரியுமா ??

ஏன்மா கேக்குற ??

இல்ல அங்கே மேடையில் இருக்கும் போதும் சரி இப்போவும் சரி .. நீங்க அடிக்கடி பாத்துக்கிட்டீங்க.. அது ரொம்ப பழக்கமானவங்க மாதிரி இருந்தது .  அதான்..

ஜெகன் என்னோட பெஸ்ட் பிரென்ட் மா.. ஆனா இப்போ எங்க மேல கொஞ்சம் கோவமா இருக்கான் ..

ஏன் அண்ணா ??

இப்போ இதை பத்தி பேச வேண்டாமே ... நீ நிதானமா யோசிச்சு ஒரு முடிவை எடு நிலா..

அண்ணா அப்பா , அம்மா கிட்ட பேசிட்டு நான் என்னோட முடிவை சொல்றேன்.. அவங்களை வர சொல்லுங்க அண்ணா..

"ம்ம்ம் சரி மா.. " என்று கூறி வெளியே சென்ற அர்ஜுன் நிலாவின் பெற்றோரை உள்ளே அனுப்பி இருந்தான் ..

உள்ளே வந்தவர்கள் அவள் முகத்தை ஆவளாக பார்க்க.." உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சு இருக்கா ??"

உனக்கு பிடிச்சு இருக்கான்னு சொல்லுமா.. அது தான் முக்கியம்.. என்று அவள் தந்தை கூற..

அப்போ உங்க ரெண்டு பேருக்கும் ஓகே.. அப்படிதானே பா ??

எனக்கும் அவங்களை நல்லா தெரியும் மா. செண்பகமும் சரி வினோத்தும் சரி ரொம்ப நல்ல மனுஷங்க.. அந்த தம்பியா பார்த்தாலும் ரொம்ப நல்லவரா தெரியுது... அர்ஜுன் தம்பிக்கு கூட ரொம்ப வருஷமா ப்ரெண்டாம்... நம்ம வெண்மதி கிட்ட கூட ரொம்ப பாசமா பழகறாரு... என்று அவர் விடாமல் சொல்லிக்கொண்டே போக.. நிலாவிற்கு தெளிவாக புரிந்தது அவர்களின் எண்ணம்...

"எனக்கும் சம்மதம் பா... "

"என்னமா சொல்ற?? முழு மனசா தானே சொல்ற?? நாங்க சொன்னோம்னு சொல்லலையே"

அப்படி எல்லாம் இல்லை பா.. நான் சந்தோஷமா தான் சொல்றேன்...

Sorry pa last 2 week ah fever.. so update thara mudiyala..




Post Reply

Return to “நெயிர்ச்சியின் முழுவல் நீ”