20.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Moderator: Sabareeshwari

Post Reply
Sabareeshwari
Moderators
Posts: 27
Joined: Thu May 14, 2020 10:23 pm
Has thanked: 3 times
Been thanked: 8 times

20.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Post by Sabareeshwari »

நிலா சம்மதம் தெரிவித்ததை நிலாவின் பெற்றோர் வெளியில் வந்து அங்கே இருந்தவர்களிடம் கூறி தங்களுக்கும் இத்திருமணத்தில் சம்மதம் கூறினார்..

அதைக்கேட்ட ஜெகன் "எனக்கும் சம்மதம் மா.. " என்று அவன் அம்மாவிடம் கூற..

அங்கே இருந்த அனைவருக்கும் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொள்ள  ஆளுக்கு ஒரு வேலையை செய்ய ஆரம்பித்தனர்..

ஜெகனை ஹரிஷ் அழைத்து செல்ல, அர்ஜுனும் அறைக்குள் நுழைந்தான்...
உள்ளே வந்த அர்ஜுன் ஜெகன் தயார் ஆவதை பார்த்துக்கொண்டே நிற்க.. "இன்னும் எவ்ளோ நேரம் என்னயே வெச்ச கண்ணு வாங்காம பார்க்க போறாரு உங்களோட பிரென்ட் ?? " என்று ஹரிஷிடம் கேட்டவன்... பின்பு சிறிது யோசித்து "எனக்கு தெரிஞ்சு இவரு பொண்டாட்டி ரொம்ப அழகு இல்லைனாலும் , சுமார் மூஞ்சி குமாரி மாதிரி இருப்பா... இருந்தும் ஏன் இவரு என்ன சைட் அடிக்கிறாருன்னு தெரியலையே ஹரிஷ் ?? L
" என்று இழுக்க, அர்ஜுன் அவன் முதுகில் 2 அடி வைத்து "என் பொண்டாட்டி அழகுக்கு முன்னாடி உலக அழகி கூட கம்மி தான் டா.. அவ எப்படி இருந்தாலும் என்னோட மிது...  அவளை தவிர வேற யாரையும் இந்த ஜென்மம் இல்ல இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த அர்ஜுன்  கல்யாணம் பண்ண மாட்டான் ... "

டயலாக் எல்லாம் நல்லா தான் இருக்கு... அப்புறம் ஏன் என்னை வெச்ச கண்ணு வாங்கம பாக்கறீங்க ??

ஜெகனின் அருகில் வந்த அர்ஜுன் , " எப்படி டா உனக்கு மனசு வந்தது ?? இவ்ளோ நாள் எங்களை விட்டு தள்ளி இருக்க?? "

ஜெகன் பதில் பேசாமல் அமைதியா இருக்க , "இன்னும் ரெடி ஆகாம என்ன பண்ற பப்பு ??" என்று கேட்டுக்கொண்டே ஜெகனின் அம்மா உள்ளே நுழைந்தவர் அர்ஜுனை பார்த்து.. " எப்படி பா இருக்க ?" என்று பாசமாக அவன் தலையை வருடியவாறு கேட்டார்..

நல்லா இருக்கேன் மா.. நீங்களும் அப்பாவும் எப்படி இருக்கீங்க ?

"ஏதோ இருக்கோம்"  .. என்று கூறியவர் ஜெகனை முறைக்க ..

ஏன் மா இப்படி சொல்றீங்க ??என்று அர்ஜுன் சங்கடமாக கேட்க..

ஏன் டா கேட்க மாட்டீங்க ?? இவன் என்னடான்னா எங்கயோ போய் உட்கார்ந்துட்டு ,வருஷத்துக்கு ஒரு முறை வரதுக்கே நானும் அவரும் 1000 முறை போன் பண்ண வேண்டியதா இருக்கு..

அவனுக்கும் உனக்கும் பிரச்சனைன்னா அது உங்களோட ... நீ ஒரு முறையாவது எங்களை பார்க்க வந்தியா ??

அதே அந்த மித்ரா பொண்ணு, வாரத்துல 3-4 தடவை போன் பண்ணிடும்... இந்த 2 வருஷத்துல என்னை 4-5 தடவை வந்து பாத்துச்சு.. என்ன இருந்தாலும் பொம்பள பிள்ளைங்க மாதிரி வராது..
இதுக்கு தான் பொம்பள பிள்ளையை பெத்து இருக்கணும் , கடைசி காலத்துல அதுங்க தான் நம்மளை பாத்துக்கும்..
அதான் எனக்குன்னு இப்போ என்னோட மருமகளும் வந்துட்டால.. இனி நீங்க யாரும் தேவையில்லை... போங்கடா... என்று அவர் கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே அறைக்குள் வந்த வெண்மதி " அத்தை நானும் உங்க கட்சி தான்... உங்க மருமகளோட என்னையும் சேர்த்திக்கோங்க.. "

"பாருடா புள்ள பூச்சி எல்லாம் வாய் பேசுது... " என்று ஜெகன் அவளை கலாய்க்க, "ஹலோ வருங்கால மாம்ஸ் ஆச்சேன்னு பாக்கறேன்... இல்ல நடக்கிறதே வேற.. "

அக்கா ரெடி ஆகிட்டாங்களா மா ??

"ம்ம்ம் ஆச்சு அத்தை... " என்று கூறியவள் ஜெகனிடம் திரும்பி "நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் " என்று சொல்ல..

அவனோ தன் அம்மாவிடம் திரும்பி , " அம்மா எதுக்கும் கல்யாணத்தை கொஞ்சம் நேரம் தள்ளி வைங்க..

ஏன்டா

வென்ஸ் வேற என்கிட்ட தனியா பேசணும்னு சொல்றா,  அதனால நிலாவ கழட்டி விட்டுட்டு வென்ஸ்சை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.. இல்ல 2 பேரையும் நாளும் எனக்கு ஓகே தான்..

அடி செருப்பாள ... இங்கே ஒருத்தனுக்கு எந்திருசிச்சு நிக்கவே வக்கு இல்லையாம்.. இதுல இருவது பொண்டாட்டி கேட்குது...

இருவது எல்லாம் இல்ல மா... வெறும் ரெண்டு தான்... என்று ஜெகன் சலித்து கொள்ள..

அவன் சொல்லிய விதத்தில் அங்கே இருந்த அனைவரும் சிரிக்க... "உன் அக்காவை கடிச்சு வெச்சற மாட்டேன்... " என்று ஜெகன் வெண்மதியிடம் அமைதியாக கூற..

உங்களுக்கு அவளுக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது.. ஆனா ஏதோ இருக்குன்னு மட்டும் தெரியும். அதையும் நீங்க கண்டிப்பா சரி பண்ணிடுவீங்கன்னு நம்பறேன் மாமா.. எங்களுக்காக இவ்ளோ நாள் ரொம்பவே அவ வயசுக்கும் மீறியும் கஷ்டத்தை அனுபவச்சிட்டா மாமா..

அவள் தலையை செல்லமாக கலைத்து , " நிலா எப்போவும் அப்படி நினைச்சது இல்ல.. அவ எப்போவும் தன்னை ஸ்ட்ரோங்கா மாத்திக்க தான் ட்ரை பண்ணுவா.. எவ்வளவு கஷ்டமான சூழ்நிலைனாலும் அவளோட பெஸ்ட் குடுப்பா.. ஏன்னா எல்லா பிரச்சனையையும் அவ சவாலா தான் பார்ப்பா... இனி நானும் அவ கூட அவளுக்கு துணையா இருப்பேன்.. "

ரொம்ப சந்தோஷம் மாம்ஸ்.. சீக்கிரம் கிளம்பி வாங்க... என்று கூறிவிட்டு அணைவரையும் பார்த்து ஒரு சிரிப்பை கொடுத்து வெளியேறினாள்..

மேலும் பேச்சின்றி விரைவாக கிளம்பியவன், மேடையில் சென்று அமர்ந்தான்.. சிறிது நேரத்தில் நிலாவும் மேடையில் வந்து அமர.. ஜெகன் தீவிரமாக மந்திரங்கள் கூறிக்கொண்டு இருந்தான்.. நிலா தான் ஜெகனை இரு முறை பார்த்தவள், அவன் படு சீராயசாக மந்திரம் சொல்ல , இவளும் மந்திரத்தில் கவனம் செலுத்தினால்.. ஐயர் கேட்டிமேளம் சொல்ல, ஜெகன் நிலாவின் கழுத்தில் அனைவரின் ஆசியுடன், தாலியை கட்டினான்..

தாலியை கட்டியவனும் சரி, அதை ஏற்றுக்கொண்டவலும் சரி அவரவர் மனதில் சில எண்ணங்களுடன் இருந்தாலும் , இந்த வாழ்க்கையை முடிந்த அளவு சிறப்பாக வாழ வேண்டும் என்று நினைத்து கொண்டனர்..

***************************************


ஏன் இப்படி ஜிங்சர் ஏட் மங்கி மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க பாட்டி ??

ஜன்னல் ஓரம் சோகமே உருவாக அமர்ந்து வேடிக்கை பார்த்து வந்த நிலாவை,  ஜெகனின் ஜிஞ்சர் ஏட் மங்கி என்ற வார்த்தை உசிப்பினாலும் திரும்பாமல் அமர்ந்து இருந்தாள்..

அவனும் வேன் கிளம்பிய அரைமணி நேரமாக அவளை பேச வைக்க பல முயர்ச்சிகளை மேற்கொண்டு விட்டான்.. ஆனால் பலன் என்னவோ இன்னும் பூஜ்யத்தில் தான் உள்ளது..

பின்னால் அமர்ந்து இருந்த ஹரிஷிடம் திரும்பியவன், " என்ன ஹரிஷ் ஆபிஸ்ல இருக்க வரைக்கும் நம்ம நிலாக்கு காது நல்லா தானே கேட்டுட்டு இருந்தது .. திடீர்னு எப்படி இப்போ காது கேட்காமல் ஆச்சு?? ஒருவேளை கல்யாணம் நின்ன அதிர்ச்சியில நிலாவுக்கு காது கேட்காமல் போய் இருக்குமோ ?? " என்று நக்கலாக கேட்க ஹரிஷோ          "ஏன் ஜெகன் சார் இப்படி பேசுறீங்க அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்ல??
அவங்களுக்கு கொஞ்சம் கூட டைம் கொடுக்காம மதியம் சாப்பிட்ட கையோட அத்தனை பேர் சொல்லியும் கேட்காம உங்க கூட கூட்டிட்டு வந்துட்டீங்க.. இப்போ அவங்களுக்கு ஆறுதல் சொல்லலேனாலும் அவங்களை கஷ்டப்படுத்தாம இருக்கலாம்ல.."

"என்ன ஹரிஷ் பேசுறீங்க அவங்களுக்கு காது கேட்டா தானே கஷ்டமா இருக்கும் ??" என்று ஹரிஷ் முதலில் கூறியதை பற்றி பேசாமல் தவிர்த்து சிரிக்க , நிலா அப்பொழுதும் திரும்பாமல் ஜன்னலில் கன்னம் பதித்து பார்வையை வெளியிலேயே வைத்து இருந்தாள்..

ஆமா அது என்ன புதுசா நிலாவை அவங்கன்னு எல்லாம் சொல்றீங்க ஹரிஷ் ஜி

என்ன இருந்தாலும் இப்போ அவங்க உங்களோட வைஃப் தானே அதுக்கு உண்டான மரியாதையை நான் கொடுக்கணும்ல ...

சூப்பர் ஹரிஷ்.. நீங்களும் என்னோட நண்பேன்டான்னு நிரூபிச்சிடீங்க...

ஏன் ஜீ??

நான் கூட நீங்க நிலாவை பாசமா தங்கச்சின்னு சொல்றதால என்னோட நட்பை விட உங்களோட தங்கச்சி தான் முக்கியமா இருப்பா நினைச்சேன்.. அப்படி இல்லன்னு ப்ரூப் பண்ணிட்டீங்க...

ஐயோ.. சார்.. நீங்க ஆள விடுங்க... நிலா அவரு சொல்றதை கேட்காத மா.. நீ தான் எனக்கு முதல்ல முக்கியம்..

என்ன ஜீ ? அப்படியே பல்டி அடிச்சிடீங்க ???

பின்ன ?? அடிக்காம ?? நீங்களே இனி அவங்க பல்டி அடிக்க சொன்ன அடிச்சு தான் ஆகணும்.. நான் எம்மாத்திரம்??
ஜீ ஒரு பிரீ அட்வைஸ் கொடுக்கிறேன், பொண்டாட்டி எல்லாம் இப்படி கடுப்பு ஏத்த கூடாது.. பின் விளைவுகள் ஜாஸ்தியா இருக்கும் பார்த்துக்கோங்க..

அப்படிங்கறீங்க??

அனுபவஸ்தன் சொல்றேன்.. கேட்டுக்கோங்க..

அப்போ சரி... என்று கூறி நிலாவின் மேல் பார்வையை பதிக்க, அவளோ இப்பொழுது மெதுவாக தூங்க ஆரம்பித்து இருந்தாள்...

எவ்வளவு கோபம் வருது இந்த பாட்டிமாக்கு என்று நினைத்தவன் சற்று நேரம் முன்பு மண்டபத்தில் அனைவரிடமும் சண்டையிட்டு அவளை அழைத்து வந்ததை நினைத்து பார்த்தான்...

கல்யாணம் முடித்து அனைத்து சடங்குகளையும் செய்தவர்கள் , மதியம் நெருங்க சாப்பிட சென்று அமர்ந்தனர்.. அனைத்து சடங்கின் போதும் ஜெகன் மட்டுமே பேசிக்கொண்டு இருக்க , நிலா எதுவும் பேசாமல் அனைவரும் சொன்னதை முகம் மாறாமல் செய்து வந்தாள்...

சாப்பிட வந்து அமர்ந்தவளிடம், " ஏன் பாட்டிமா மூஞ்சியை எப்படியோ வெச்சு இருக்க?? "

"நான் நல்லா தான் இருக்கேன்" , என்று கூறி சாப்பிட ஆரம்பித்தாள்.

அப்பொழுது அங்கு பரிமாறி கொண்டு இருந்த வெண்மதியை ஜெகன் அழைக்க , " அவளை எதுக்கு இப்போ கூப்படறீங்க ?? "

மாமா இங்கே உட்கார்ந்துட்டு இருக்கும் போது , என்ன கவனிக்காம அங்கே யாருக்கோ பரிமாறுற அதான் கூப்பிட்டேன்.. ஏதோ கருகர ஸ்மெல் வருது...

ஜெகன் நிலாவை கிடைத்த சந்தர்ப்பத்தில் கலாய்க்க , அவள் தலையில் அவளே மானசீகமாக கொட்டிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்..

என்ன மாம்ஸ் கூப்டீங்க??

உன்னோட மாம்ஸ்ச கவனிக்காம என்ன பண்ற ??

மாம்ஸ்ச தானே செமையா கவனிச்சுடலாம் என்று கூறிக்கொண்டே அவள் வைத்து இருந்த லட்டில் 10 ஐ எடுத்து அவன் இலையில் வைத்து சாப்பிட சொன்னாள்...

ஜெகனோ அதற்கும் அசராமல் நிலாவின் இலையில் இரண்டை வைத்தவன்... மீதியை சாப்பிட ஆரம்பித்தான்.. அவன் நான்காவது லட்டை சாப்பிடும் பொழுது பார்த்த நிலா.. இத்தோடு நிறுத்திக்கொள்வான் என்று நினைத்து இருக்க.. அவன் அடுத்த லட்டையும் எடுக்க.. அதை வேகமாக பிடிங்கியவள் , மீதி இருந்த லட்டையும் எடுத்து அவள் இலையில் வைத்து கொண்டாள்...


















Post Reply

Return to “நெயிர்ச்சியின் முழுவல் நீ”