Page 1 of 1

23.நெயிர்ச்சியின் முழுவல் நீ

Posted: Sun Mar 27, 2022 8:58 pm
by Sabareeshwari
ஜெகன் ஏதேனும் விளக்கம் அளிப்பான் என நிலா அவன் பேச காத்திருக்க , ஜெகனோ அவளிடம்  எதுவும் கூறாமல் அறைக்குள் நுழைந்து கொள்ள... இவளோ தானே சென்று கேட்கலாம் என்று முடிவு எடுத்து அவர்கள் அறைக்குள் இவளும் நுழைந்தாள்....

உள்ளே நுழைந்தவள் , "எதுக்கு இப்போ சென்னைக்கு போறோம் ??" என்று ஜெகனிடம் கேட்க..

ஏன் ??

என்ன ஏன்??

ஏன் நம்ம சென்னைக்கு போகணும்? இங்கேயே இருக்கலாமே...

அவள் மீண்டும் மீண்டும் விடாமல் கேட்டவுடன் ...

ஏன் நிலா உனக்கு சென்னைக்கு போக பிடிக்கலையா??

பிடிக்குது பிடிக்கலன்னு இல்ல ....ஏன் திடீர்னு போகணும்னு முடிவு எடுத்தீங்கன்னு கேட்டேன்...

சென்னைக்கு போலாம்னு சொன்ன உடனே நீ ரொம்ப சந்தோஷப்படுவன்னு நினைச்சேன்... உனக்கு ஹைதராபாத் அவ்ளோ பிடிச்சு இருக்கா என்ன??

ஜெகன் மீண்டும் பதில் அளிக்காமல் இவ்வாறு அவளை கேட்டவுடன் , அவனை சிறிது நேரம் பார்த்தவள் அவனிடம் "சொல்ல இஷ்டம் இல்லைன்னா ... அதையே நேரா சொல்லலாம்... ஜெகன் சார்... நான் எதுவும் நினைக்க மாட்டேன்.. "  என்று கூறிவிட்டு வெளியில் சென்றவள் சமையல் அறைக்குள் நுழைந்து சிறிது தண்ணீர் குடித்து தன்னை சமன் செய்து கொண்டாள்....

நிலா..... நிலா.... ஜெகன் அவளை அழைத்துக்கொண்டே சமையலரை வர... இவளோ "எதுவும் சொல்ல வேணாம்... நான் எதையும் கேட்கறதா இல்லை... "

"அத்தை அவ எதுவும் கேட்கறதா இல்லையாம்.. நீங்க என்கிட்டயே பேசுங்க " என்று ஜெகன் அலைபேசியில் கூற...

அப்பொழுது தான் அவன் மொபைலுடன் இருப்பதை கவனித்தவள், யாரிடம் இவ்வாறு கூறுகிறான் என்று பார்ப்பதற்காக அவன் அருகில் சென்று அவன் காதில் வைத்து இருக்கும் போனை இழுக்க...

"அத்தை என்னையும் உங்கக்கூட பேசக்கூடாதுன்னு சொல்லி போனை பிடுங்கறா. என்னன்னு கேளுங்க அத்தை... " என்று கூறி அவளிடம் போனை தந்தவன் ஒற்றை கண்ணை சிமிட்டி, கீழ் உதட்டை பிதுக்கி சோ சோ என்று அவளை கேலி செய்து சிரித்துக்கொண்டே அங்கே இருந்து அகன்றான்...

அவனை முறைத்துக்கொண்டே போனை வாங்கியவள் , அதில் தெரியும் எண்களை பார்த்து பீதியானால்... தன்னை சற்று நிதானப் படுத்திக்கொண்டு " சொல்லுங்க மா "

என்ன நிலாமா ... இன்னும் கோபமா தான் இருக்கியா நீ ??

மா.. அப்படி எல்லாம் இல்ல..

அப்புறம் ஏன் நீ மாப்பிள்ளை தம்பியை திட்டிட்டே இருக்கியாம்...

யாரு நான் அவரை திட்டறேன்??  நீ பாத்தியாக்கும் ...

இப்போ கூட நீ திட்டிட்டு தான் இருந்த நிலா....
"மா..." நிலா அதற்கு பதில் கூற வர...

நிலா வாழ்க்கையில நம்ம நினைக்கிற மாதிரி நிறைய விஷயம் நடக்காது... அதுக்காக வாழாம இருந்துடுவோமா ?? அந்த தம்பி ரொம்ப நல்ல பையன் நிலா.. போக போக உனக்கே புரியும்... கொஞ்சம் பொறுமையா பேசு நிலா... எப்படியும் அந்த தம்பி அமைதியா தான் போகும்..

அது என்ன எப்படியும் அந்த தம்பி அமைதியா தான் போகும்னு சொல்றீங்க... அப்போ நான் தான் சண்டைக்கு நிக்கறனா ?? என்று இவள் இவளுடைய அம்மாவிடம் எகிற.. சற்றென்று மொபைலில் "பாப்பா..... எப்படி இருக்க ?? "என்று அவள் தந்தையின் குரலை கேட்டவளுக்கு கண்களில் சட்டென்று நீர் கோர்த்து கொண்டது...

நான் நல்லா இருக்கேன் பா... நீங்க ??

இங்க எல்லாரும் நல்லா இருக்காங்க... இப்போ தான் ஆபீஸ்ல இருந்து வந்திங்களா மா ??

ஆமா பா... ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் நான் ஆபிஸ் போனது.. நான் சொல்லவேயில்லையே....

நீ தான் கல்யாணமாகி போனதும் எங்களை எல்லாம் மறந்துடியே.. ஆனா ஜெகன் மாம்ஸ்  தினமும் எங்களுக்கு பேசிடுவாறு... அதே மாதிரி அப்பாவும் அம்மாவும் கேட்கத்துக்காக அவரு சென்னைக்கே வரேன்னு சொல்லிட்டாரு...

அப்பாவும் அம்மாவும் எப்போ சென்னை வர சொன்னாங்க?? நீ அப்பாக்கிட்ட குடு ...

அதெல்லாம் நீ அப்பாக்கு போன் பண்ணி தனியா பேசிக்கோ.... இப்போ மாம்ஸ் கிட்ட மொபைலை குடு நிலா ...

எதுக்கு ??

உனக்கு எதுக்கு ?? எனக்கும் மாம்ஸ்கும் ஆயிரம் இருக்கும்... ஏன் பத்தாயிரம் கூட இருக்கும்... அதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது... நீ மொபைலை குடுக்க முடியுமா முடியாதா ??

"அடியே... அவ ஏற்கனவே எண்ணையில் போட்ட கடுகு மாதிரி பொறிஞ்சுகிட்டு இருக்கா அந்த தம்பி கிட்ட.. நீ வேற.. " என்று நிலாவின் அம்மா வெண்மதியை திட்ட ஆரம்பிக்க...


நிலா ... திடீர்னு நடந்த கல்யாணமா இருந்தாலும் மாப்பிள்ளை மாதிரி ஒரு நல்லவரு கூட தான் உன்னோட வாழ்க்கை அமஞ்சு இருக்கு... உனக்கு நான் எதுவும் சொல்லணும்னு இல்லடா.... நீ என்னோட தங்க பிள்ளை... என் பொண்ணு எனக்கே புத்தி சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டான்னு எனக்கு தெரியும்.. அப்பா சொல்றது ஒண்ணே ஒன்னு தான்... சந்தோஷமா இரு.. மாப்பிள்ளையும் நல்லா பார்த்துக்கோ டா பாப்பா....

சரி பா... நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க... அவரு பிரேஷப் பண்ண போய் இருக்காரு.. வந்த உடனே அவளுக்கு கூப்பிட சொல்றேன்னு சொல்லிடுங்க பா... அம்மாவையும் பார்த்துக்கோங்க....

சரி பாப்பா... நான் வெச்சடறேன்...

ம்ம்ம் சரி பா...

லைன் கட் ஆனதும் அவர்கள் அறைக்கு சென்று பார்க்க... ஜெகன் அப்பொழுது தான் அவன் உடையை மாற்றி வெளியில் வந்தான்...

பேசிட்டியா ???

ம்ம்ம்ம்...

அதுக்குள்ளேயா???

ஏன் ??

" அத்தை அட்லிஸ்ட் ஒரு மணி நேரமாவது திட்டுவாங்கன்னு எதிர்பார்த்தேன்... ச்ச ... இன்னும் அத்தைக்கு நிறைய பயிற்சி கொடுக்கனும்.... " என்று அவன் சலித்து கொள்ள...

ஏன் என்கிட்ட சொல்லல ??

அவன் புரியாமல் அவளை பார்க்க...

என்னோட அப்பா அம்மா தான் சென்னைக்கு வர சொன்னாங்கன்னு... என்கிட்ட சொல்லி இருந்தா நான் அவங்களுக்கு சொல்லி புரிய வெச்சு இருப்பேன்ல... நீங்க இப்போ அவங்களுக்காக இங்கே இருந்து மாறனும்னு இல்ல... நான் அவங்ககிட்ட பேசி புரிய வைச்சுக்கறேன்...

என்ன நிலா உன் பிரச்சனை ???

எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை... உங்களுக்கு தான் வீண் சிரமம்... இங்க வேலையை விட்டு சென்னை போய் அங்க புது வேலை தேடனும்... அட்லீஸ்ட் நோட்டிஸ் பீரியட் போட்டுட்டு ஒரு ஜாப் தேடிட்டு நின்னு இருக்கலாம்ல சார்...

நீ போய் ப்ரெஷ் ஆகிட்டு வா... நான் காபி போடறேன்... குடிச்சிட்டே பேசலாம்... அவள் அசையாமல் இருக்க... நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா???

அவள் புரியாமல் விழிக்க.... "இல்ல ப்ரெஷ் ஆக போகாம நிக்கறதை பார்த்தா.... நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனும்னு நினைச்சியோன்னு கேட்டேன்... எனக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்ல .." என்று கூறி அவளை நெருங்க... அவனை முறைத்தவள் பாத்ரூமிற்குள் புகுந்தால்....


ப்ரெஷ் ஆகி வந்த நிலாவை ஜெகன் மணக்கும் காபியுடன் வரவேற்க... அதை இருவரும் அருந்தி முடிக்க... ஜெகன் பேச ஆரம்பித்தான்...

நிலா முதல் விஷயம் உங்க அப்பா அம்மா என்கிட்ட முடிஞ்ச அளவுக்கு ஒரு வருஷத்துக்குள்ள நம்மளை தமிழ்நாடு வர சொன்னாங்க... உங்க அம்மா அப்பா மட்டுமில்ல... என்னோட அப்பா அம்மாவுக்கும் அதே ஆசை தான்...

அடுத்து அவங்களே சொல்லனாலும் நான் சென்னைக்கு போற முடிவுல தான் இருந்தேன்... உன்னை எப்போ கல்யாணம் பண்ண முடிவு எடுத்தனோ அப்போவே சென்னைக்கு போறதா முடிவு பண்ணிட்டேன்...

இனி நான் இங்கே இருக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்ல...

அவள் அவனை புரியாமல் பார்க்க... "கல்யாணம் பண்ண சொல்லி என்ன கம்பேல் பண்ணுனாங்கன்னு தான் நான் வீட்டை விட்டு வந்தேன்... "

இப்போ தான் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சே... அப்புறம் எதுக்கு இந்த வன வாசம்... சோ நம்ம சென்னைக்கு போலாம்ன்னு முடிவு எடுத்துட்டேன்.. உன்கிட்ட எனக்கு கேட்க தோனல... அதுக்கு சாரி நிலா... உனக்கும் அங்கே போறது ரொம்ப பிடிக்கும்னு நினைச்சேன்... இனி எந்த முடிவு எடுக்கறதுக்கு முன்னாடியும் உன்கிட்ட கண்டிப்பா கேட்கறேன்... ஒன்ஸ் அகேயின் சாரி டா...

இல்ல எனக்கும் தமிழ்நாடு போறதுல ஹாப்பி தான்... என்ன இருந்தாலும் நம்ம ஊரு மாதிரி வறாது... நம்ம ரெண்டு பேர் பெரெண்ட்ஸ்க்கும் அவங்க அடிக்கடி வரபோக ஈஸியா இருக்கும்...

ம்ம்ம்... அங்க போயிட்டு 15 நாள் ரெஸ்ட் எடுத்துட்டு ரெண்டு பேர் வீட்டுக்கும் போயிட்டு வந்துட்டு ஜாப்ல ஜாயின் பண்ணிக்கலாம்...

அதுக்குள்ள ஜாப் எப்படி...

அதெல்லாம் உங்க அர்ஜுன் அண்ணா கொடுப்பாரு அவரோட வேலையை கூட.. நீ கவலை படாத...

உங்ககிட்ட கேட்கணும் நினைச்சேன்... நீங்களே நியாபகம் படுத்திட்டீங்க.. உங்களுக்கு அர்ஜுன் அண்ணாவை எப்படி தெரியும்...

சிறிது நேரம் ஜெகன் பதில் அளிக்காமல்... சிந்தனையில் இருக்க...

ஜெகன் சார்....

நீ இன்னும் இந்த ஸாரை விடலையா...

இல்ல அப்படியே கூப்பிட்டு அதுதான் டக்குனு வருது...

"எங்க ஜெகன் மாமா சொல்லு... " என்று அவன் குறும்பாக சொல்ல..

அவன் அவ்வாறு கூறியவுடன் , இவள் திரு திருவென முழித்து... "நான் போங்க வாங்க ன்னு சொல்றேன்... "

நீ சொல்லாட்டி போ... என்னோட அதிரா குட்டி அழகா மாமா கூப்டுவா தெரியுமா ??

அவகிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு... பேசுரியா ??

நானா ??

ம்ம்ம் ... இரு கால் பன்றேன்... என்று கூறி அர்ஜுனுக்கு கால் செய்து ஸ்பீக்கரில் போட்டான்..

டேய்... எப்படி இருக்க ?? நிலா எப்படி இருக்கா ?? ஏன் இன்னைக்கே ஆபிஸ் போன ??

உங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல நான் கூப்பிடில... என்னோட அதிரா கிட்ட பேச தான் கூப்பிட்டேன்...

இவர்கள் பேசுவதை நிலா பாதி புரிந்தும் புரியாமலும் குழப்பமாக கேட்டுக்கொண்டு இருக்க..

சிறிது நேரத்தில் "ஜிகா மாமா.... " என்று இனிமையான மழலையின் குரல் கேட்டது...

ஹோய் பட்டு குட்டி மாமா கிட்ட ஏன் இவ்ளோ நாளா பேசல ??

நா உன்னோட டூ...

ஒஹ்ஹ் அப்போ அதிரா குட்டி என்கிட்ட பேச மாட்டா ??

ஆமா...

அப்போ உனக்கு ஐஸ் கிரீம் வேணாம் உனக்கு ??

வேணாம் போ..

அப்போ உனக்கு டாய்ஸ் வேணாம்??

ம்ம்ம் ஹும்ம்....

அப்போ ஜிகா மாமாவை நேர்ல பாக்க வேணாமா ??

வேணா.... என்று சொல்ல வந்த குழந்தை... நிஜமா ??

ம்ம்ம் நிஜமா...

ஜிகா பிராமிஸ் ??

ம்ம்ம் ஜிகா பிராமிஸ்...

எப்போ வர??

இன்னும் 7 டேஸ் தான்.. ஜிகா மாமா அதிரா குட்டிய பார்க்க பறந்து வந்துருவேன்.... அப்புறம் உன்னை பார்க்க அத்தையும் கூட்டிட்டு வறேன்..

அத்தியா??

ம்ம்ம் அத்தை தான்.. ஜிகா மாமா நிலான்னு ஒரு அத்தையை கல்யாணம் பண்ணிகிட்டானா... அவங்களையும் கூட்டிட்டு உண்ண பார்க்க வறேன்...

ம்ம்ம் .. அப்போ ஐஸ் ... சாக்கி... டாய்ஸ் எல்லாம் வாங்கிட்டு வா...

வாலு.. கொஞ்ச நேரம் முன்னாடி வேணாம்னு சொன்ன...

அது அப்போ ஜிகா குட்டி....

ஹா.. ஹா.. லவ் யூ அதிரா குட்டி..

லப் யு ஜிகா குட்டி... என்று கூறி முத்தம் தர... இவனும் பதிலுக்கு முத்தம் தந்து காலை கட் செய்தான்...

காலை கட் செய்தவுடன் தான் நிலாவை பேச வைக்கவில்லை என்ற நியாபகம் வர.. சாரி நிலா அவகிட்ட பேசுனா நான் என்னையே மறந்துடுவேன்... சொல்ல போனா இங்க வந்ததுல இருந்து இவ மட்டும் தான் எனக்கு ஆறுதல்... என்று கூறிக்கொண்டே சென்றவன் திடீரென அவளிடம் பசிக்குதா ?? என்று கேட்க..

இல்ல.. உங்களுக்கு ??

இல்ல... ஏதாவது ஆர்டர் பண்ணிக்கலாம்...

ம்ம்ம்ம் சரிங்க...

ஒரு வாக் போயிட்டு வரலாம்.. வரியா ??

ம்ம்ம் ...

இருவரும் வீட்டை லாக் செய்து விட்டு நடக்க... சற்று நேரம் இருவருகிடையில் பலத்த அமைதி.. அதை கலைத்து ஜெகன் பேச ஆரம்பித்தான்..

உனக்கு என்கிட்ட ஏதாச்சும் கேக்கணுமா நிலா ??

அவள் இல்லை என தலையாட்ட...

நான் ஏன் கல்யாணம் பண்ணிக்காம இங்கே வந்தேன்னு கேட்க தோணலையா ??

சொல்ற மாதிரி இருந்தா நீங்களே சொல்லி இருப்பீங்களே....

மெலிதாக சிரித்தவன்... சிறு இடைவெளிவிட்டு... " லவ் பெயிலியர் " என்று கூறினான்..