"இல்ல சார்.. நானும் இருக்கேன்.. " என்று அவள் கூற..
மணியை பார்த்தவன் அவளிடம் எதுவும் கூறாமல் வேலையை தொடர்ந்தான்..
அவன் வேலை செய்வதையே பார்த்தவளுக்கு தான் என்ன தவறு செய்தோம் என்று புரிந்தது..
சூப்பர் சார்.. இது எனக்கு ஸ்டரைக் ஆகவே இல்ல..
நீங்க இந்த அளவு பன்னுனதே பெரிய விஷயம்.. எல்லாம் முடிஞ்சுருச்சு.. ஒரு மெயில் மட்டும் பண்ணுங்க டெஸ்டிங் டீம்கு..
"ஓகே சார்.. " என்று கூறிவிட்டு அவன் கூறியதை போல் டெஸ்டிங் டீம்கு மெயில் அனுப்பிவிட்டு அவள் பேக்கை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள்..
ஆங்காங்கே ஒரு சில வாகனங்கள் மட்டுமே செல்ல.. அப்பொழுது தான் மணியை கவனித்தால்.. மணி 10.50 ஆகி இருக்க.. அவ்வளவு தூரம் சென்று சேரும் பொழுது மணி 12 க்கு மேல் ஆகிவிடும்..
பஸ்ஸில் சென்றாலும் அங்கு இருந்து இறங்கி அவளது ஹாஸ்டல் செல்ல 15 நிமிடம் மேல் நடக்க வேண்டும்.. பஸ் சீக்கிரம் வர வேண்டும் என்ற வேண்டுதல் உடன் நின்று இருந்தால்..
அப்பொழுது அவளை உரசி கொண்டு ஒரு பைக் வந்து நின்றது.. அதில் சற்று பயந்தவள் பின்னால் நகர..
"ஏறு.." என்ற குரலில் தலை நிமிர்த்தி பார்த்தவள் பைக்கில் வந்தவன் ஜெகன் என்று அப்பொழுது தான் உணர்ந்தாள்..
இல்ல சார்.. நான் பஸ்ல போய்பேன்..
நாளைக்கு நியூஸ் பேப்பர்ல ஹெட் லைன்ஸ்ல வரணும்னு ஆசையா இருக்கா??
அவள் பயந்து விழிக்க..
ஏறு.. நான் ரொம்ப டயர்டா இருக்கேன்.. சீக்கிரம் போய் படுக்கணும்...
அவன் கூறியதை கேட்டவள்.. இனி தான் தனியாக சென்றாலும் அவன் கூறியதை போல் பாதுகாப்பு இல்லை... ஆகையால் அவனுடனே சென்று விடுவது என்று முடிவு எடுத்து பைக்கில் அமர்ந்தாள்..
அவள் அமர்ந்த வேகத்தில் ஜெகன் பைக்கை ராக்கெட் வேகத்தில் செலுத்த..
"சார்... மெதுவா போங்களேன் ப்ளீஸ்... " என்று வெண்ணிலா கூற..
"இன்னும் மெதுவாவா?? அப்போ நடந்தே போலாம்... நீ இருக்கேன்னு தான் நான் இவ்ளோ மெதுவா ஓட்றேன்.. " என்று கூறியவன் வண்டியை மணிக்கு 80 கி.மி வேகத்தில் செலுத்தினான்..
சார் எங்க அப்பா 40 க்கு மேலே போனாவே நான் திட்டுவேன்.. ஏன்னா எனக்கு ரொம்ப பயம் சார்..
ஒஹ்.. அப்போ என்னையும் திட்டுவேன்னு சொல்ற??
ஹயோ நான் அப்படி சொல்லல.. எனக்கு ரொம்ப பயம் சார்.. அதான் உங்களை மெதுவா போக சொல்றேன்..
அவள் பயத்தை கண்ணாடியில் கண்டவனின் முகத்தில் சிறு புன்னகை.. அவளை சீண்டி பார்க்க அவனது மனம் விளைந்தது..
எனக்கு வேகமா போன பிடிக்கும்.. ஆனா உனக்கு பயம்னு சொல்ற.. சோ நான் மெதுவா போகணும்ன எனக்கு ஏதாவது ஸ்பெஷல்லா வேணுமே..
ஸ்பெஷல்லா வா??
"ம்ம் ஸ்பெஷல்லா... " என்று கூறியவன் வண்டியை 40 ல் இயக்கினான்..
சற்று யோசித்தவள் "நான் உங்களுக்கு உங்க வர்க்ல ஹெல்ப் பண்ணவா??"
யாரு நீ??
ம்ம்..
எனக்கு ??
ம்ம்..
வர்க்ல ஹெல்ப் பண்ற ??
ம்ம்..
என்னால முடிஞ்ச அளவு ஹெல்ப் பன்றேன்..
வர்க் எல்லாம் ஆபீஸ்ஸோட விட்று.. இது அன் அபிசியல்..
ஒஹ்ஹ்..
ம்ம்ம்.... சீக்கிரம் யோசிச்சு சொல்லு ...
எனக்கு எதுவும் தோணல.. நீங்களே சொல்லுங்க..
என்ன வெண்ணிலா இவ்ளோ அப்ராணியா இருக்க ??
ஏன் சார்??
ஹே.. ஜெகன்னு கூப்பிடு.. ஆபீஸ் டைம்ல நீ சார் சொல்றதே தப்பு.. இதுல இப்போவும் சார் சொல்ற..
ஒழுங்கா பேர் சொல்லு..
ஹயயோ .. எனக்கு அப்படி எல்லாம் வராது..
"அச்சச்சோ அப்போ இதுக்கு மேல வண்டியும் ஓடாது.. " என்று கூறி அவன் வண்டியை நிறுத்த...
அவள் பதறி போனால்.. (பாவம் வெண்ணிலாவிற்கு நமது பழைய ஜெகனை பற்றி தெரியவில்லை.. இப்பொழுது ஜெகன் புல் பார்மில் இருப்பதும் புரியவில்லை.. )
"சார் .. ப்ளீஸ்.. வண்டியை எடுங்க.. " என்று சுற்றியும் பார்க்க.. ஒரு சில வண்டிகள் மட்டுமே இயங்கிக்கொண்டு இருந்தது..
அப்போ இன்ணைக்கு நைட் என்கூட டேட் வரியா??
என்னது டேட்டா ??
"ஆமா.. டின்னர் டேட்.. போலாமா?? " என்று அவன் சிரிப்புடன் வினவ..
அவன் தன்னிடம் விளையாடுகிறான் என்று அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது..
"சார் எனக்கு தினமும் காலண்டர்ல கிளிக்கர டேட் மட்டும் தான் தெரியும்.. நீங்க சொல்ற டின்னர் டேட் தெரியாது.. " என்று வெண்ணிலாவும் அவள் பங்கிற்கு சிரிக்காமல் சொல்ல..
அவள் தன்னை அறிந்துகொண்டால் என்று புரிந்து கொண்டவன்.. " என்ன நிலா இது கூட தெரியல உனக்கு.. சரி விடு நான் உனக்கு இன்னைக்கு டின்னர் டேட்னா என்னன்னு சொல்லி தறேன்.. " என்று கூறிவிட்டு வண்டியை கிளப்பினான்..
வண்டியை ஒரு ஹோட்டல் முன் நிறுத்தியவன் அவளை இறங்க கூறினான்..
உள்ளே சென்று இருவரும் எதிர் எதிரில் அமர்ந்தனர்..
அவளை எதுவும் கேட்காமல் அவன் ஆடர் செய்ய..
சார் நீங்க மட்டும் சாப்பிடுங்க.. நான் ஹாஸ்டெல் போய் சாப்டுகிறேன்...
டின்னர் டேட் ரூல்ஸ் தெரியுமா ??
தெரியாது என்று இவள் தலையாட்ட ...
நான் எனக்கு பிடிச்சது எல்லாம் ஆர்டர் பண்ணிட்டேன்.. இப்போ இது எல்லாம் நீ சாப்பிடணும்..
அதே மாதிரி நீ உனக்கு பிடிச்சது எல்லாம் ஆர்டர் பண்ணுவியாம் நான் சாப்டுவேணாம்..
சார் நிஜமா இது எல்லாம் டேட் ரூல்ஸ்ஸா??
அப்போ நான் சொல்றதுல நம்பிக்கை இல்லை ??
அப்படியில்லை..
அப்புறம் என்ன ஆர்டர் பண்ணு மா.. பசிக்குது மனுஷனுக்கு... மதியம் சாப்பிட்டது..
அவன் அவசரத்தில் இவள் உடனே ஆடர் செய்ய.. அவர்கள் ஆர்டர் செய்த உணவு வரும் வரை காத்திருக்க ஆரம்பித்தனர்..
"டேட்டோட 2 ரூல்ஸ்... " என்று அவன் கூற ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் ஆர்டர் செய்த உணவுகள் வந்தன..
"சார்.. போதும் சாப்பிடுங்க.. பசிக்குது சொன்னிங்கள்ள.. " என்று கூறிவிட்டு அவள் சாப்பாட்டில் கவனம் செலுத்த அவனும் சாப்பிட ஆரம்பித்தான்..
ஏன் நிலா ஹைத்ராபாத் ??
அவள் புரியாமல் பார்க்க..
தமிழ்நாட்ல இல்லாத ஐ.டி கம்பெனியா ?? சென்னை , கோயமுத்தூர்ன்னு ட்ரை பண்ணி இருந்தா கிடைச்சு இருக்குமே?? ஏன் மொழி கூட தெரியாத ஊர்ல வந்து இப்படி கஷ்டபடற ??
கஷ்டம்னு இல்ல சார்.. போக போக பலகிடும்..
அவளை ஒரு நொடி பார்த்தவன்.. பின்பு தன் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்..
அப்பா அம்மா எல்லாம் என்ன பண்றாங்க ??
அம்மா வீட்ல தான் சார்.. அப்பா பிஸினஸ் பண்றாரு..
உன் கூட பிறந்தவங்க எத்தனை பேரு??
பாப்பா மட்டும் சார்.. இப்போ 3வது வருஷம் என்ஜினீயரிங் படிக்கிறா ..
வாவ் ..
ஏன்மா 3 வது வருஷம் என்ஜினீயரிங் படிக்கிற பொண்ணு உனக்கு பாப்பாவா??
எங்க வீட்ல என்னையே பாப்பா தான் சொல்லுவாங்க சார்.. அது போக அவ எனக்கு பொண்ணு மாதிரி .. அவளுக்கும் எனக்கும் 6 வருஷம் வித்தியாசம்.. சோ குழந்தையாவே பாத்து பழகிட்டேன் சார்..
"ஒஹ்ஹ்.. சரிங்க பாட்டி மா.. " ஜெகன் இவ்வாறு கூறியவுடன் அவள் கண்களை விரித்து அவனை ஆச்சிரியமாக பார்க்க..
என்ன அவ்ளோ பெரிய பொண்ணு உனக்கு குழந்தைன்னா உண்ண அம்மான்னு கூப்படனும்.. ஆனா உன்னை பார்த்தா பாட்டி மாதிரி தெரியுதா .. அதான் பாட்டின்னு கூப்பிட்டேன்..
அப்புறம் உன் பாப்பாவாவது பார்க்க பாப்பா மாதிரி இருக்குமா ??
சார்.. நீங்க என்னை கிண்டல் பண்றீங்க..
இவ்ளோ மக்கா நீ?? உங்களை நான் கிண்டல் பண்ணல.. அசிங்க படுத்தறேன் பாட்டி மா..
இவள் அவனை முறைக்க...
அப்படி பார்த்தா மட்டும் நாங்க பயந்துடுவோமா ? ஆனாப்பட்ட மித்ராவே என்கிட்ட மாட்டிகிட்டு முழிப்பா.. (அடேய் படிச்சவங்களுக்கு தெரியும் .. இந்த பிள்ளைக்கு ஒன்னும் தெரியாதுன்னு கதை கதையா அளந்து விடாத)
கூறிய பின்பு தான் உணர்தான் அவன் மித்ராவை பற்றி பேசியதை.. அதை உணர்ந்து அமைதி ஆகிவிட..
மித்ரா வா ?? யாரு அது ?? உங்க லவ்வர்றா??
"இல்ல துரோகி... " என்று குரல் இருக கூறியவன்.. சாப்பிடாமல் கண் மூடி அமர்ந்து விட்டான்..
வெண்ணிலாவிற்கு தான் பதறி போனது.. இத்தனை நாட்களில் இன்று தான் கலகலப்பாக பேசிக்கொண்டு இருந்தான்.. தான் ஏதோ வேண்டாத நினைவுகளை அவனுள் நியாபகம் படுத்திவிட்டோம் என்று..
சார்....
சார்...
மெதுவாக கண் திறந்தவன்.. "சாப்டுட்டா சீக்கிரம் போலாம் ... "
ஆச்சு சார்..
போலாம்..
இப்போ தான் நல்லா பேசினாறு.. அதுக்குள்ள மறுபடியும் ஒத்தை வார்த்தைக்கு மாறிட்டாரு.. என்று தன்னுள் அழுத்துக் கொண்டாள்..
சாப்பிட்டு விட்டு இருவரும் பில் பே பண்ணும் இடத்திற்கு சென்றனர்...
"சார் இந்தாங்க.." என்று வெண்ணிலா தன் பங்கை கொடுக்க..
மிச்சத்தை யாரு தருவா ??
இவள் புரியாமல் விழிக்க..
ஹேய் பாட்டி மா.. உனக்கு டிரைவர் வேலை பாக்கறத்துக்கே நீ எனக்கு காசு தரணும்.. இதுல டின்னர் பில் நான் பே பண்ணுவனா ?? ஒழுங்கா என்னோட காசும் சேர்த்து கட்டு..
ஜெகனின் இந்த அதிரடியில் அவள் வாய் பிளந்து நிற்க..
அவள் பர்ஸை வாங்கி இவனே காசு எடுத்து பில் பே பண்ணி விட்டு அவள் கையில் பர்ஸை திணித்தான்..
இப்படியே கனவு காணாம வா.. மணி 12 ஆச்சு.. இனி நான் போய் சரக்கு அடிச்சுட்டு படுக்க மணி 3 ஆகிடும்..
என்னது நீங்க குடிப்பிங்களா ??
ஏன் ? இவ்ளோ ஷாக் ?? நீ குடிக்க மாட்டியா ??
சீ...
ஹேய் என்ன சீ ன்னு சொல்ற... கண்ணத்துல போட்டுக்கோ.. தெய்வ குத்தம் ஆகிடும்..
சார்.. நீங்க பொய் தானே சொல்றீங்க??
எனக்கு என்ன வேண்டுதலா ?? நடு ராத்திரி 12 மணிக்கு உன்கிட்ட பொய் சொல்லனுமா??
அதெல்லாம் தப்பு சார்..
இங்கே பாரு பாட்டி மா.. நீ கூட தான் வயசு பொண்ணு பாட்டி மாதிரி இருக்க.. ஒழுங்கா உன்னோட வயசுக்கு தகுந்த மாதிரி இருன்னு நான் உனக்கு அட்வைஸ் பண்ணுனா ??
"அதே மாதிரி நீயும் எனக்கு பண்ணாத.. நான் காதுளையே வாங்க மாட்டேன்.. " விளையாட்டாக ஆரம்பித்தவனின் குரல் சீரியஸாக முடிய அந்த குரலின் பேதத்தை உணர்ந்தாள்.. அவளை அந்த குரல் தள்ளி நிறுத்தி இருந்தது..
பின்பு எதுவும் பேசாமல் அவர்கள் பயணம் அவள் ஹாஸ்டெல் வரை சென்றது..
அவள் ஹாஸ்டெல் முன் வண்டியை நிறுத்த அவள் இறங்கி " தேங்க்ஸ் சார் " என்று கூற..
"இனி இந்த மாதிரி லேட் பண்ணுனா இப்படி பொறுமையா பேசிட்டு கூட்டிட்டு வந்து விட மாட்டேன்.. இது தான் உனக்கு 1ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்.. ஒழுங்கா 8 மணிக்குள்ள ஹாஸ்டெல்ல இருக்கிற மாதிரி கிளம்புனும் ஆபிஸ்ஸில் இருந்து.." என்று கூறிவிட்டு பைக்கை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான்..
ரூமில் வந்து படுத்தவளுக்கு ஜெகனின் நியாபகங்களே..
அங்கே ஜெகனோ அவனது வாட்ஸ்சப்பை உயிர்ப்பித்து, ஸ்டேடட்டஸில்
** பீல் பீஸ்புல் ** என்று பதிவேற்றம் செய்ய.. அவன் வைத்த 1 நிமிடத்தில் அர்ஜுனிடம் இருந்து கால் வந்தது...