இரவு தூங்க வெகு நேரம் ஆகியதால் காலை கண் விழித்த வெண்ணிலா மணியை பார்க்க அது 8 என காட்டியது... பதட்டமாக எழுந்து புறப்பட ஆரம்பித்தாள்.. எவ்வளவு விரைவாக கிளம்பியும் அவளால் ஆபீஸ்ஸிற்கு நினைத்த நேரத்தில் செல்ல முடியவில்லை...
இங்கே ஜெகனோ ஏதோ சத்தம் அவன் வெகு அருகில் கேட்டுக்கொண்டே இருக்க.. அதில் மெல்ல கண் விழித்தான்.. விடாமல் வந்த சத்தம் அவன் அலைபேசியில் என்பதை அறிந்தவன் அதை எடுத்து பார்க்க அர்ஜுன் என்ற பெயரில் 30 மிஸ்ட் கால் மேல் இருக்க அதை கண்டுகொள்ளாமல் ஆபீஸ் கிளம்பினான்..
ஜெகன் ஆபீசில் நுழையும் பொழுது மணி 11.50 ஆகி இருந்தது.. அவனது கேபின்குள் செல்லும் பொழுது நேஹா ஏதோ கோபமாக வெண்ணிலாவிடம் பேசுவது தெரிய இவன் அதை கவனித்து கொண்டே உள்ளே சென்றான்..
அவன் உள்ளே நுழைந்ததை பார்த்த நேஹா வெண்ணிலாவிடம் சொன்ன வேலையை சீக்கிரம் முடிக்க சொல்லிவிட்டு வெளியேறிவிட்டாள்..
இதையெல்லாம் கவனித்து கொண்டு வந்தவன். அவன் சிஸ்டம்மை ஆன் செய்து வேலையை ஆரம்பித்தவனுக்கு சிறிது நேரத்தில் ஏதோ சற்று வித்தியாசமாக மனதை நெருடியது..
பக்கத்தில் திரும்பி பார்த்தான்.. அங்கே வெண்ணிலா முகத்தை கீபோர்ட்குள் புதைத்து கொண்டு தீவிரமாக ஏதோ தேடிக்கொண்டு இருந்தால்..
அவளது குட் மார்னிங் மிஸ் ஆனதை அப்பொழுது தான் உணர்ந்தவன்.. நேஹா கூறி சென்ற வேலையையும் தன்னிடம் அவள் விவரிக்கவில்லை என்பதையும் உணர்ந்தான்...
அவன் வந்ததில் இருந்து அவள் நிமிராமல் இருப்பதையும் உணர்ந்து அவளை பார்க்க.. எங்கே அவள் நிமிர்ந்தால் தானே... பின்பு என்ன நினைத்தானோ தோளை குளிக்கிவிட்டு அவன் வேலையை தொடர்ந்தான்..
15 நிமிடம் ஆகி இருக்க அவன் இருக்கையில் இருந்து எழுந்தவன் தண்ணீர் குடிக்க சென்றான்... வாட்டர் ப்யுரிபையர்ரில் இருந்து அரை கிளாஸ் தண்ணீர் நிரப்பியவன் அதை 5 நிமிடம் முழுதாக ரசித்து ரசித்து குடித்து முடித்துவிட்டு வந்து அவன் இருக்கையில் அமர்ந்தான்..
மீண்டும் ஒரு 10 நிமிடம் கழித்து அரை கிளாஸ் தண்ணீரை இந்த முறை 10 நிமிடம் குடித்து முடித்தவன் வேகமாக வந்து இருக்கையில் அமர்ந்தான்.. அவன் அமர்ந்த வேகத்தில் சத்தம் எல வெங்கட் திரும்பி ஜெகனை பார்க்க.. ஜெகனோ யாரையும் கண்டுகொள்ளாமல் அவன் வேலையை தொடர்ந்தான்.. (இல்லை இல்லை வேலை செய்வது போல் பாசாங்கு செய்தான்)
வெண்ணிலாவும் மெதுவாக அவள் தேடுதல் வேட்டையை கீபோர்டிடம் முடித்துக்கொண்டு நிமிர்ந்து சிஸ்டம் ஸ்க்ரீன்னை பார்த்து வேலையை தொடர்ந்தாள்... அதை ஓர பார்வையில் பார்த்தவன் கண்டும் காணாமல் தன் வேலையில் கவனத்தை செலுத்தினான்...
என்னதான் வேலையில் கவனம் செலுத்தினாலும் வந்ததில் இருந்து அவள் குட் மார்னிங் சொல்ல்லாதது ,யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் அமைதியாக அமர்ந்து இருந்தது ஜெகனுக்கு ஏதோ நெருடலாகவே இருக்க...
மெயில்லை ஓபன் செய்து பார்க்க.. அப்பொழுது தான் அவளது அமைதிக்கான காரணம் புரிந்தது..
இவர்கள் நேற்று முடித்து கொடுத்த வேலையில் ஒரு பெரிய பிரச்சனை இருப்பதாகவும் அதை மதியத்திற்குள் முடிக்குமாறும் டெஸ்டிங் டீம்மில் இருந்து மெயில் வந்து இருந்தது..
அதை பார்த்து விட்டு ' இதுக்கு தான் நம்ம பாட்டிமா வயலின் வாசிச்சிட்டு இருக்காங்களா ?? ' என்று மனதில் நினைத்து கொண்டவன்..
வெண்ணிலா ....
அவன் திடீரென சத்தமாக அழைத்ததில் திடுக்கிட்டு திரும்பியவள் .. " சொ.. சொல்.. சொல்லுங்க சார்.. "
என்ன சொல்ல ??
சார்...
நீங்க தானே கூப்டீங்க ??
நானா ??
அவன் நானா என கேட்டதில் இவளுக்கு அவன் தான் தன்னை அழைத்தானா என்ற சந்தேகம் வந்தது.. அதில் திரும்பி வெங்கட்டை பார்க்க.. அவனோ ஜெகனை விசித்திர ஜந்து போல் பார்த்துக்கொண்டு இருந்தான்...
இவரு ஏன் இப்படி பார்க்கறாரு ?? என்று நினைத்தவள்..
"ஓகே சார்.. " என்று ஜெகனிடம் கூறிவிட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்..
நிலா தீவிரமாக எதையோ சிஸ்டம் ஸ்கிரீனில் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது.. நேஹாவும் நேத்ராவும் கேபின்னுக்குள் நுழைய.. அவர்களை பார்த்த ஜெகன் "வெண்ணிலா.." என்று இவளை அழைத்தான்..
"சொல்லுங்க சார்.. "
காலைல சாப்பிடவே இல்ல.. கேன்டீன் போலாமா ?? ரொம்ப பசிக்குது..
போய் சாப்பிட்டுட்டு வாங்க சார்..
அவன் பதில் கூறாமல் அவளை பார்க்க..
"வெண்ணிலா முடிச்சிட்டியா ??" என்று நேத்ரா இவளிடம் கேட்க ..
இன்னும் இல்ல நேத்ரா மேம்.. இன்னும் கொஞ்சம் டைம் வேணும்..
எவ்ளோ டைம் கொடுக்க உனக்கு?? வந்தது லேட்.. இஷு சொல்லி 2 மணி நேரம் ஆச்சு இன்னும் என்ன பண்ற முடிக்காம?? ஒரு மண்ணும் தெரியாம வந்தறாங்க .. இந்த மாதிரி சில யூஸ்லேஸ்னால எங்க உயிரு தான் போகுது..
நேத்ரா இவ்வாறு கூற.. வேகமாக எழுந்த ஜெகன் நேத்ரா அருகில் வர.. அவன் எழுந்த வேகத்தில் பயந்து இவள் ஒரு அடி நகர்ந்தாள்..
ஜெகன் நேத்ராவை நோக்கி அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் நேத்ரா ஜெகனிற்கு நடுவில் வந்த நிலா .. " சார் நான் பண்ணுனது தான் தப்பு.. இப்போ முடிச்சு கொடுத்தறேன்.. "
அவளை நிதானமாக பார்த்தவன்.. பார்த்தப்படி நிற்க..
"சார்... " என்று வெண்ணிலா அழைக்க..
"வா... "
எங்க வான்னு கூப்படறாறு என்று புரியாமல் விழித்தவள்.. மீண்டும் "எங்க சார்??" என்று கேட்க..
அவள் கேட்டு முடிப்பதற்குள் அவளிடம் நெருங்கியவன் அவள் கண்களை ஊடுறுவி பார்க்க ... அங்கே இருந்த அனைவரும் ஜெகனை விசித்தரமாக பார்க்க ஆரம்பித்தனர்..
வெண்ணிலா அருகில் மேலும் நெருங்கியவன் அவள் காதுக்கு மிக அருகில் குனிந்து "பாட்டிமா ஒழுங்கா கூட வர.. இல்ல எல்லார் முன்னாடியும் பாட்டிமா கூப்டுவேன்.. பாத்துக்கோ"
அவன் கூறியதிலும் கூறிய விதத்திலும் அதிர்ந்து விழிக்க ஆரம்பித்த வெண்ணிலா.. அவனை பார்த்துக்கொண்டே நிற்க..
ஜெகன் மனதிற்குள் என்ன நினைத்தானோ அவள் கையை பிடித்து அழைத்து (இல்ல இல்ல இழுத்து )கொண்டு கேண்டீன் சென்றான்.. அவன் கேண்டீன் சென்று அவள் கையை விடுவிக்கும் வரை வெண்ணிலா வேறு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டு இருந்தவள் .. இப்பொழுது தான் சுயநினைவு அடைந்தாள்..
சார் நான் இன்னும் அவங்க சொன்னது முடிக்கவே இல்ல.. அவங்க 12 மணிக்குள்ள முடிக்க சொன்னங்க.. நான் இன்னும் முடிக்கல .. கிலேயேன்ட்கு அனுப்பனும்னு சொன்னாங்க சார்..
"அப்படியா?? சரி உட்கார்ந்து சாப்பிடு.. சாப்டுட்டு போய் பார்க்கலாம்.." என்று கூறி ஒரு நாற்காலியில் அமர்ந்தவன் அவளையும் அமர சொல்ல.. அவள் அமராமல் முழித்துக்கொண்டு நின்றால்..
ஹேய் பாட்டிமா .. வயசான காலத்துல நேர நேரத்துக்கு சாப்டனும்.. இப்படி சாப்பிடாம இருந்தா உடம்பு கேட்டு போய்டும்.. அட்லீஸ்ட் நேத்ரா, நேஹா கிட்ட திட்டு வாங்கவாது
உடம்பை திடமா வெச்சுக்கோ...
சார்.. விளையாடாதீங்க .. அவங்க கிட்ட எதுவுமே சொல்லாம பாதில வந்துட்டோம்.. நான் போய் முடிச்சு கொடுத்துட்டு வரேன்..
"என்ன பார்த்தா உனக்கு விளையாடற மாதிரி தெரியுதா?? " என்று கடுமையாக வினவ...
அப்படியில்ல சார்.....
அவள் கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே அவள் கையை பிடித்து இருக்கையில் அமர வைத்தவன்.. "மேடம் என்ன செய்ய போறீங்க அங்க போய்??"
ஒரு ஸ்கிரிப்ட் மட்டும் மிஸ்ஸிங் சார்.. அது என்னன்னு கூட கண்டு பிடிச்சுட்டேன்.. அதை எடுத்து போட்டு பார்த்து ஒரு டைம் டெஸ்ட் பண்ணிட்டு அவங்க கிட்ட கொடுத்தா பிரச்சனை முடிஞ்சிடும்...
அப்படியா??
ம்ம் ஆமா சார்..
எப்படி அது மட்டும் மிஸ் ஆச்சு??
தெரியல சார்...
ஹரிஷ் அனுப்பலையோ??
இல்ல சார்.. அவரோடது முழுசும் பாத்துட்டேன்.. அவர் அது செய்யவேயில்ல போல..
ஒஹ்.. எப்படி ஹரிஷ்து செக் பண்ணுன?
ஜெகன் அவ்வாறு கேட்டவுடன் தான் ஹரிஷ் கூறியது நியாபகம் வந்தது 'இங்க பாரு வெண்ணிலா எக்காரணம் கொண்டும் நான் உன்கிட்ட பாஸ்வர்ட் கொடுத்ததை
ஜெகன் கிட்ட மட்டும் சொல்லிடாத மா.. அப்புறம் என்ன வெச்சு செஞ்சுடுவான்'
"அது வந்து சார்.. நீங்க ஹரிஷ் ப்ரோவை திட்டாதீங்க... " என்று அவள் ஆரம்பிக்க...
சரிங்க மேடம்.. இன்னும் வேற ஏதாவது நான் பண்ணனுமா??
இல்ல சார்.. நான் அப்படி சொல்லல...
வேற எப்படி சொல்ல வந்தீங்க??
அவள் திருதிருவென முழிக்க.. மெலிதாக முருவழித்தவன் "பாஸ்வர்ட் கொடுத்தவரு என்கிட்ட சொல்லவேணாம்னு சொல்லலையா? "
அட அவரு சொன்னாரு.. நான் தான் மறந்து போய் உங்ககிட்ட சொல்லிட்டேன்...
அவள் கூறியதை கேட்டவன் அவளை முறைத்துக்கொண்டே அவனது போனை எடுத்து ஹரிஷ்க்கு கால் செய்ய அந்த பக்கம் ஹரிஷ் காலை அட்டென் செய்து
"சொல்லுங்க ஜெகன் அதிசயமா கால் பண்ணி இருக்கீங்க ??"
பிசியா ஹரிஷ்..
இல்ல ஜெகன் ஜி .. சொல்லுங்க..
உங்களோட பாச மலர் உங்ககிட்ட பேசணுமாம்...
பாச மலரா?? யாரு அது??
என்ன ஹரிஷ் உங்களுக்காக இங்க கோவில் கட்டவே காத்து இருக்காங்க .. நீங்க யாருன்னு கேக்கறீங்க?? போ நிலா உன்னோட ப்ரோக்கு உன் நியாபகமே இல்லை..
"யாரை சொல்றீங்க ஜீ? " என்று சிறிது நேரம் யோசித்தவன்.. "வெண்ணிலாவை சொல்றீங்களா??"
ஹப்பா நியாபகம் இருக்கு நிலா.. அழுகாத...
என்னது வெண்ணிலா அழறாங்களா? ஏன் ஜீ?? ஏதாவது பிரச்சனையா??
இருங்க உங்க பாச மலர் கிட்டையே கொடுக்கறேன் பேசுங்க...
ஜெகனிடம் மொபைலை வாங்கியவள் ... "ப்ரோ எப்படி இருக்கீங்க? ஷீலா அக்கா எப்படி இருக்காங்க?? குட்டி பையன் என்ன பண்றான்??"
எல்லாரும் நல்லா இருக்காங்க மா.. அங்கே என்ன பிரச்சனை ??
அது வந்து அண்ணா என்று ஆரம்பித்து நேற்று நடந்ததில் இருந்து இன்று நடந்தது வரை சொன்னவள்.. "என்ன பிரச்சனைன்னு கண்டு பிடிச்சுட்டேன்.. அதுக்குள்ள
ஜெகன் சார் என்ன கேண்டீன் கூட்டிட்டு வந்துட்டாரு... நீங்க சொல்லுங்க ப்ரோ.. அவரு சாப்டுட்டு போலாம்னு சொல்றாரு.. "
"ஜெகன் கிட்ட கொடுமா.. " ஜெகனிடம் நிலா போனை நீட்ட...
மொபலை வாங்கியவன் "சொல்லுங்க ஹரிஷ்..."
நம்ம தான் அதை முடிச்சிட்டோமே.. மறுபடியும் என்ன பிரச்சனை ஜீ??
"நேத்ரா நம்ம கொடுத்த ஸ்கிரிப்ட் ரன் பன்னல.. ஹரிஷ்.. மறந்துட்டாங்க போல.. " என்று ஜெகன் கூற அதை கேட்ட வெண்ணிலா...
"என்ன சார் சொல்றீங்க? நேத்ரா மறந்துட்டாங்களா?? அப்புறம் ஏன் என்கிட்டே நீங்க சொல்லவே இல்ல?? நான் காலைல இருந்து இன்னும் சாப்பிட கூட இல்ல.. இன்னும்
பால் கூட குடிக்கல.. தெரியுமா?? எனக்கு எவ்ளோ பசிக்குது.. பசியில் எவ்ளோ அழுதேன் தெரியுமா??"
"நான் எதுக்கு நீ அழுததை தெரிஞ்சுக்கணும்?? முட்டாளுங்க தான் அழுவாங்க.. " என்று கூறியவன் ஹரிஷிடம் " ஹரிஷ் நீங்க பாஸ்வர்ட் எதுக்கு வெண்ணிலாவுக்கு கொடுத்தீங்க??"
சப்போஸ் அவங்க ஏதாச்சும் டெலீட் பண்ணிட்டு உங்க மேல ப்ளேம் பண்ணிட்டா என்ன பன்னுவீங்க??
வெண்ணிலா அப்படி பண்ண மாட்டாங்க ஜீ....
"ஒஹ்ஹ ஒரு 20 நாள்ல உங்களுக்கு அவங்களை பத்தி தெரிஞ்சுடுச்சா?? என்னால எல்லாம் வருஷ கணக்கா பலகுனவங்க குணத்தை கூட கண்டு பிடிக்க முடியல.." என்று ஜெகன் கூற ...
ஜெகன் கூறியதில் கோபம் அடைந்த வெண்ணிலா .. அவன் மொபைலை பிடுங்கி ஹரிஷிடம் "ப்ரோ இப்போ நான் கேன்டீன்ல இருக்கேன் .. நீங்க வி.பி.என் ல உங்க சிஸ்டம் எடுத்து பாஸ் வார்டு மாத்திடுங்க .. " என்று கூறிவிட்டு ஜெகனின் மொபைலை அவர்கள் அமர்ந்து இருந்த இருக்கையில் வைத்தவள் எழுந்து செல்ல ..
"ஓகே ஹரிஷ் பை .. அவ சாப்பிடாம\ கிளம்பிட்டா .. நானும் உள்ள போறேன் .. நேத்ரா கிட்ட போய் என்ன பேச போற தெரியல .." என்று கூறிவிட்டு காலை கட் செய்துவிட்டு முகத்தில் சிறு புன்னைகையுடன் உள்ளே சென்றான் ..