என்னோட போனை தாங்க சார்... உங்களுக்கு கொஞ்சம் ஆச்சும் மேன்னர்ஸ் இருக்கா ??
ஏன் இல்லைனா நீங்க தர போறீங்களா ??
வெண்ணிலா ஜெகனிடம் இருந்து போனை பிடுங்க முயல.. அதை அசால்ட்டாக சமாலித்தவன்.. " கொஞ்சம் நேரம் அமைதியா இரு நிலா.. ஹரிஷ் கிட்ட முக்கியமா பேசணும்... "
"அதுலாம் உங்க போன்ல பேசுங்க.. இப்போ என்னோட போனை குடுங்க... " என்று கூறி அவள் போனை பிடுங்க.. அதில் கடுப்பாகி ..
"என்னடி பிரச்சனை இப்போ உனக்கு ?? 5 நிமிஷம் விட்டு இருந்தா இந்நேரம் நான் பேசிட்டு உன்கிட்ட உன்னோட டப்பா மொபைலை கொடுத்து இருப்பேன்.."
அதான் என்னோட மொபைல் டப்பா மொபைல்னு தெரியுதுல்ல கொடுங்க..
"முடியாது போடி... " என்று கூறிவிட்டு அவன் வேகமாக நடக்க.. இவளும் அவன் பின்னால் மொபைலை கேட்டுக்கொண்டே சென்றால்..
இவர்கள் சண்டையில் ஹரிஷ் போனை கட் செய்துவிட்டான்...
என்ன ஹரிஷ் அண்ணா?? ஷாக் ஆகி நிக்கரீங்க??
நம்ம ஜெகன் ஜீ யா இப்படி வாடி போடி எல்லாம் சொல்லி பேசறது...
ஹா ஹா.. ஹா.. ஹா... உங்க ஜெகன் ஜீ இது மட்டும் இல்ல இன்னும் நிறைய பேசுவாறு... இது வெறும் சாம்பிள் தான் அண்ணா...
நம்பவே முடில மா..
"இனி இந்த மாதிரி நிறைய ஷாக் ட்ரீட்மெண்ட் கிடைக்கும்.. மனசை திடப் படுத்திக்கோங்க.. " என்று மித்ரா கூற .. ஹரிஷ் சரியென தலையசைதான்.. பாவம் ஹரிஷால் ஜெகனின் இந்த சிறிய மாற்றம் கண்டே குழம்பி போய் இருக்க.. ஜெகனின் முழு அவதாரம் கண்டால் யார் யார் என்ன என்ன செய்வார்களோ...
சார்.. சார்.. இப்போ மட்டும் நீங்க என்னோட போனை கொடுக்கல உங்களை நாய் கடிக்கனும்னு சாபம் விடுவேன் பாத்துக்கோங்க...
நிலா இவ்வாறு கூற ஜெகனோ லூசா மா நீ என்பதை போல் திரும்பி பார்த்தவன்.. அவளிடம் நெருங்கி வந்து அவள் காதில் " என்ன மட்டும் நாய் கடிச்சது நான் உன்னை கடிச்சு வெச்சுடுவேன் பாத்துக்கோ.. " என்று கூறிவிட்டு மீண்டும் அவன் திரும்பி நடக்க... இவள் அவன் பின்னால் திட்டிக்கொண்டே சென்றால்.. அவன் ஆபீஸ் விட்டு வெளியே சென்று ஒரு ஹோட்டலில் நுழைய இவளும் சென்றால்..
சார் கடைசியா கேக்கறேன்... போன் தர முடியுமா ? முடியாதா??
சாப்பிடு தரேன்...
என்னது??
ஆக்ட்சுவலி மனுஷங்க இட்லி , தோசை, சாப்பாடு இப்படி சாப்பிடுவாங்க... நீங்க கொள்ளு... பருத்தி கொட்டை .. புண்ணாக்கு எல்லாம் சாப்பிடுவிங்களோ?? ஆனா பாரு மா நிலா இந்த ஹோட்டல்ல அது எல்லாம் கிடைக்காது..
அவள் கோபமாக முறைத்துக்கொண்டே நிற்க.. "உட்காரு மா.. " என்று கூறி அவளை அமர வைத்தான்..
அவர்கள் இருவருக்கும் சேர்த்து அவனே ஆர்டர் செய்ய.. "ஹயோ எனக்கு எதுவும் வேணாம் சார்.. ப்ளீஸ்.."
ஒழுங்கா சாப்பிடு..
சார் ப்ளீஸ்.. நீங்க சாப்பிடுங்க... நான் வெய்ட் பன்றேன்...
நிலா...
சார் நீங்க மட்டும் சாப்பிடுங்க.. என்கிட்ட காசு இல்ல...
சரி நான் இப்போ குடுக்கறேன்.. நீ ஆபீஸ் போய் திருப்பி கொடுத்துரு..
இல்ல.. என்கிட்ட ஆபீஸ்லயும் காசு இல்ல..
நாளைக்கு கொடு .. இப்போ சாப்பிடு நிலா..
"நாளைக்கும் கொடுக்க முடியாது.. " என்று கூறி அவள் அவன் விழிகளை சந்திக்காமல் கீழே குனிய..
நிலா.. இங்க பாரு...
அவள் நிமிர்ந்து அவன் கண்களை நோக்க... நீ காசு தர வேணாம்.. நான் தரேன்.. நீ இப்போ சாப்பிடு...
இல்ல...
மூச்.. ஒழுங்கா சாப்பிடு.. காலையில இருந்து வெறும் வயித்துல இருந்தா உடம்பு வீணா போய்டும்..
இருவரும் அதன் பிறகு எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்..
இப்படியே இவர்கள் இருவரும் சின்ன சின்ன சண்டைகளுடன் நாட்களை கடத்த ஒருவழியாக ஹரிஷ் ஆபீஸ் வந்து சேர்ந்தான்...
அன்று ஆபீஸ் வந்த நிலா ஹரிஷ் அவளுக்கு முன்னாள் அமர்ந்து இருப்பதை கண்டு மகிழ்ச்சியாக..
"ஹாய் சார்.. " என்று கூற..
ஹரிஷ் அவளை முறைத்து பார்க்க.. உடனே அவள் "லீவ் எல்லாம் எப்படி போனது சார்?? " என்று கேட்டுக்கொண்டு இருக்கையில் ஜெகன் கையில் பிளாஸ்டர் உடன் உள்ளே நுழைந்தான்...
என்ன ஆச்சு ஜீ??
என்ன ஆச்சு சார் ?? என்று ஹரிஷ் வெண்ணிலா இருவரும் சிறு பதட்டத்துடன் கேட்க..
சாபமும் விட்டுட்டு ... என்ன ஆச்சுன்னு கேக்கரியா நீ ??
ஹயோ உங்களை நாய் கடிச்சுருச்சா ?? என் சாபம் எல்லாம் பலிக்கும்னு நான் நினைக்கவே இல்ல..
ஜெகன் அவளை முறைத்துக்கொண்டு நிற்க.. ஹரிஷ் தான் ஜெகனிடம் என்ன ஆனது என்று விசாரிக்க ஆரம்பித்தான்..
நேத்து நைட் வீட்டுக்கு போகும் வண்டி பஞ்சர் ஜீ.. பக்கத்துல கடை எதுவும் இல்லை.. பக்கத்துல தானேன்னு வண்டியை தள்ளிட்டு போனேன்.. அங்க ஒரு 4-5 நாய் இருக்கும்.. செம்ம சண்டை.. அதுங்களுக்குள்ள ..
ஓரமா இன்னொரு நாய் இருந்தது.. அதையே ஏக்கமா பாத்துட்டு இன்னொரு நாய் இருந்தது...
"அப்போ மொத்தம் 7 நாய் யா?? " என்று நிலா கேட்க..
"ரொம்ப முக்கியம்.. " என்று அவளை கடிந்துவிட்டு மீண்டும் சொல்ல தொடங்கினான்..
தீவிரமா சண்டை போட்டுட்டு இருந்த அந்த நாய்ங்க எல்லாம் என் பக்கம் திரும்புச்சு.. என்ன வெச்சு ஏதோ பிளான் பண்ணிடுச்சுங்கன்னு எனக்கு புரிஞ்சு போச்சு.. வேகமா பைக்கை தள்ளிட்டு போனேன்..
எல்லாம் கூட்டமா வந்து என்ன அட்டாக் பண்ண பாத்ததுங்க..
உங்களையா???
ஏன் உனக்கு அதுல என்ன சந்தேகம் ??
இல்ல உங்களை கடிச்சா கொஞ்சம் கூட சதையே தேராதே.. அதான் யோசிச்சேன்... என்று நிலா கூற.. ஜெகன் அவளை கோபமாகவும்.. ஹரிஷ் அவளை பாவமாகவும் பார்க்க..
இல்ல நான் இனி டௌப்ட் கேட்கல..
நான் நைட் சாப்பிட பிரியாணி வாங்கி பைக்கில வெச்சு இருந்தேன்..
அதை தான் அந்த நாய்ங்க டார்கெட் பண்ணி இருக்குங்க..
ஹரிஷ் சார் நான் சொன்னேன்ல.. இவரை கடிக்க நாய் துரத்தி இருக்காதுன்னு..
நீ வேற அமைதியா இரு மா.. அவருக்கு கேட்டது உன்னை கடிச்சு வெச்சுருவாறு..
ஹயோ.. ஆமா சார்.. அவரை நாய் கடிச்சா அவரு என்ன கடிக்கறேன்னு சொன்னாரு.. ஒரு வேளை என்ன உண்மையாவே கடிச்சு வெச்சுருவாரா??
செஞ்சாலும் செய்யலாம்.. யாரு கண்டா.. மனுஷன் செம்ம கோபத்துல இருக்காரு..
அப்போ என்ன அவர் கிட்ட இருந்து காப்பாத்துங்க சார்..
நீ இப்படியே பேசிட்டு இருந்தா.. யார்ணாளையும் உண்ண காப்பாத்த முடியாது...
இவர்கள் இருவரும் அவர்களுக்குள் பேசி விட்டு ஜெகனை பார்க்க.. அவன் கதை சொல்லும் சுவாரசியத்தில் இவர்கள் பேச்சை கவனிக்காமல் கதை சொல்லிக்கொண்டு இருந்தான்..
ஒரு நாய் பிரியாணி பையை இழுத்துச்சா .. நான் அதை பிடிச்சனா அப்போ தான் அந்த நாயோட வாய் என் கை மேலே லைட்டா பட்றுச்சு...
லைட்டாவா?? பார்த்தா அப்படி தெரியலையே...
உனக்கு தெரியாது.. இங்க பக்கத்துல வா.. நல்லா காட்டறேன்..
அவன் கூறியதை நம்பி நிலா அவன் அருகில் செல்ல.. அவள் கையை இறுக்கி பிடித்தவன்.. "இப்போ நான் உன்னை கடிக்கறேன் எப்படி இருக்குன்னு சொல்லு... " என்று கூறி அவள் கையை வாய் அருகில் எடுத்து செல்ல..
சார்... சார்ர்ரர்....
கடிக்காதீங்க சார்.... ஹயோ ஹரிஷ் அண்ணா காப்பாத்துங்க... இவருக்கு நாய் கடிச்சதுல வெறி பிடிச்சுருச்சு...
இப்போ மட்டும் ஹரிஷ் அண்ணா வருதா உனக்கு ?? அதுக்கு முன்னாடி சார் சார்ன்னு யாரோ பேசினாங்க??
விளக்கம் கேக்குற நேரமா இது.. காப்பாத்துங்க அண்ணா.. ப்ளீஸ்...
விடுங்க .. விடுங்க.. விடுங்க என்ன....
கையில் சுளீர் என வலி ஏற்பட.. கண்களை திறந்து பார்த்தால்...
அவள் எதிரில் அவள் ரூம்மெட் வாணி நின்று இருக்க.. சிறிது நேரம் எதுவும் புரியாமல் விழித்துக்கொண்டு இருந்தாள்..
ஏன் வெண்ணிலா அப்படி விடுங்க விடுங்கன்னு கத்துன?? ஏதாவது கேட்ட கனவு கண்டையா??
என்னது அத்தனையும் கனவா?? இன்னைக்கு தான் ஹரிஷ் அண்ணா வரேன்னு சொல்லி இருக்காங்களா??
நல்ல வேளை ஜெகன் சார்கு எதுவும் ஆகலை..