சாரல் 8

Post Reply
Sutheeksha eswar
Moderators
Posts: 31
Joined: Fri May 15, 2020 11:21 pm
Has thanked: 29 times
Been thanked: 1 time

சாரல் 8

Post by Sutheeksha eswar »

சாரல்8



“உன்னோட நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி!” என தன் பின்னே கேட்ட குரலில், ஆடு திருடிய கள்ளன் போல் முழித்தாள், அபிரக்ஷிதா.



தன்னை நோக்கி அழுத்தத்துடன் வரும் ஒவ்வொரு காலடி ஓசைக்கும் அவள் இதயம் பலமாக அடித்து கொள்ளத் தான் செய்தது.



இருந்தும் அதனை வெளிக் காட்டிக்கொண்டால் அவள் அபிரக்ஷிதா அல்லவே.



காதை கூர் தீட்டிக்கொண்டு,

அவனது காலடி ஓசையை அவதானித்தபடி நின்றாள்.

அவன் தன்னை நோக்கி தான் வந்து கொண்டு இருக்கிறான் என்பது, தொலைவில் கேட்ட அவனது “தட் தட்” என்ற ஷுக்களின் ஓசையே அவளுக்கு உணர்த்த,



அவனது ஷுக்கள் எழுப்பிய சத்தமே அந்த யாரும் இல்லா வீட்டின் போர்டிகோவில் மிக பெரிய அதிர்வை தான் எழுப்பியது.



அந்த சத்தம் அவளது இதயத்தை பட படவென அடித்துக்கொள்ள செய்தாலும்,

மெதுவாக எச்சில் கூட்டி விழுங்கியவாறு, அவன் தனக்கு அருகில் வரும் பொழுதிற்காக காத்திருந்தாள்.





நொடிகள் நிமிடங்களாக கரைந்து போன பின்னும், அவன் வந்து சேர்ந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படாமல் போகவே,





நெற்றியில் குழப்ப மேகங்கள் சூழ, “என்ன இன்னும் ஆள் வந்த சத்தத்தையே காணோம்! நம்ம தான் கனவு கினவு எதுவும் கண்டுகிட்டு இருக்கோமா!” என யோசித்து விட்டு அவள் திரும்ப அங்கே ஆட்கள் யாரும் வந்தற்கான சுவடே இல்லை.



அதில் குழம்பி போய், “எனக்கு கேட்டுச்சே! ஆனா யாரையும் காணோம்”, என புருவம் சுருக்கி யோசித்து, பின் “எப்பவும் அவன நெனச்சுட்டே இருந்தா இப்டி தான் இருக்கும்!” என அவளது மனசாட்சியே அவளை கொட்டு வைக்க,







“அவளும் ஒரு வேளை நம்ம பிரமையா இருக்கும் போல!”, என்று அவளே தன்னை சமாதானம் செய்து விட்டு நெஞ்சிலே கை வைத்து ஒரு நீண்ட நெடிய பெருமூச்சை வெளியிட்டு, “அப்பாடா நம்ம தப்பிச்சோம் இல்ல! , இன்னைக்கு திரிபுரம் எரித்த சிவன் மாதிரி தன்னோட நெற்றிகண்ணை திறந்து நம்மள எரிச்சு இருப்பான் அந்த விஷ்வா”.



என அவள் முனங்கி கொண்டே மெதுவாக திரும்ப , அங்கே தான் அணிந்து இருந்த கோட்டை கழட்டி தனது கையிலேயே மடித்து வைத்த படி, தனது இரு கைகளையும் கட்டியவாறு

அவளை பார்த்து இரு புருவத்தையும் ஏற்றி இறக்கி,

அவளது எண்ணத்தின் நாயகனே நின்று கொண்டு இருந்தான்.



அதனை பார்த்து அவள் தன்னை மறந்து மயங்கி நின்றாள்! அவனும் அவள் தன்னை கண்டு மயங்கி நிற்கும் மனைவியை கண்டு ஒரு ஆணாக கர்வம் எழ, அவளை நோக்கி மாய கண்ணனை போல மயக்கும் சிரிப்பை உதிர்த்தான்.



பின் தனது உதட்டை குவித்து, மெதுவாக, மெலிதாக ஊதினான். அதில் அவள் கண்ணை மூடி கிறங்கி, தன்னை வருடும் அவனது மூச்சு காற்றில் நெகிழ்ந்து, குழைந்து, அதனை நுரையீரலில் தான் சுவாசிக்க உயிர் காற்றாய் சேமித்து வைத்தாள் என்று எழுத எனக்கும் ஆசை தான்.





ஆனால் அப்படி ஒன்று அப்படி அங்கே நடைபெறவில்லை. அப்படி நடந்து கொள்ள அவர்கள் ஒன்றும் காவிய காதலர்களும் இல்லை.



ஆதர்ஷ தம்பதிகளும் இல்லை.



அங்கே என்ன நடந்தது என்றால்??,



அவன் அவளை பார்த்தவாறு, கையை கட்டிக் கொண்டு நிற்க, அவளோ முதலில் அவனை கண்டு திடுக்கிட்டாலும்,



பின் தனது பயத்தையும் பதற்றத்தையும் புறம் தள்ளி,



வழக்கம் போலவே தனது கண்களில் திமிரையும், முகத்தில் அலட்சியத்தையும், உதட்டில் நக்கல் புன்னகையையும் கொண்டு வந்தாள்.



இதை எல்லாம் எதிரே அவளது முகத்தையே பார்த்துக் கொண்டு ருந்த விஷ்வா, முதலில் அதனை சுவாரசியமாக பார்த்துக் கொண்டே இருந்தவன், கடைசியில் அவளது அலட்சியத்திலும், அவளது இதழ்கள் சிந்தும் ஏளன புன்னகையிலும் கோவம் கொண்டான்.



அதில் அவனையும் அவனது முக பாவனைகளையும் கவனித்து கொண்டு இருந்த அபி, அவன் தன்னை கண்டு கோவம் கொள்கிறான் என தெரிந்து கண்டு மேலும் அவனை வெறுப்பேத்தும் விதமாக அதே நக்கல் புன்னகையுடன் இருந்தாள்.



இப்போ என்னவோ சொல்லிட்டு இருந்தியே, எங்க அதை மறுபடியும் சொல்லு என அவன் கண்களில் கூர்மையுடன் கேட்க,



அவளாவது வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்து இருக்கலாம், ஆனால் விதி யாரை விட்டது. “ஏன் நான் சொன்னதுல்ல என்ன தப்பு இருக்கு! என்னகென்ன பயமா? முதுகுக்கு பின்னாடி என்ன முகத்துக்கு முன்னாடியே சொல்லுவேன்! உங்கள நம்பினா நட்டாத்துல்ல தான் நிக்கணும்! ஏன்னா நீங்க யாருக்குமே உண்மையா இருந்தது இல்ல.”



“உங்கள நம்பின

யாருக்குமே நீங்க உண்மையா இல்ல! எல்லாரும் உங்க மேல வச்ச நம்பிக்கைக்கு நீங்க என்னைக்கும் நியாயம் செஞ்சது இல்ல!

யு ஆர் அ சீட்டர்”, இன்னும் என்ன என்னவெல்லாம் சொல்லி இருப்பாளோ!, அவள் பேசிய வார்த்தைகளில் மனதில் குற்றஉணர்வு தாக்க,



கடந்த காலமும், அது பரிசாய் தந்த வலியும் ஒரு நொடியில் கண் முன்னே படமாய் விரிந்து அவனையே நெருப்பென சுட,



அதன் தாக்கமும் அது தந்த வலியும் என ஒரு நொடி தடுமாறியவன், கண்ணில் அது பிரதிபலிக்க,



அதை அவள் கண்டுகொள்ளாமல் மேலும் மேலும் பேசிக்கொண்டே போனவள், அவனை சிறிதும் கவனிக்க வில்லை.



அவளது வார்த்தைகளில் காயம் பட்ட மனது ஏற்கனவே ஆறிவரும் ரணத்திலேயே மறுபடியும் அடிபட்டது போல, அவனை வலிக்க செய்ய, மறுபடியும் அனைத்தும் இப்பொது நடைபெற்றது போலவே அவனுக்கு தோன்றியது.





அன்றைய தனது இயலாம்மையும், தனது கையாலாகாத தனமும், மறுபடி நினைவுக்கு வர அது அப்படியே தன் மேலேயே கோவமாக மாற, என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே, அந்த கோவம் எதிரே இருந்தவளின் மேலே பாய, நொடி பொழுதில் ஆத்திரம் அதிகமாக, அவளது கழுத்தை பிடிக்க கையை எடுத்து சென்றவனது கை அந்தரத்திலேயே நின்றது.



“அப்பா!” எனும் தனது மகளின் அழைப்பில், அப்படியே இருவரும் சிலையாக,



தனது கூடவே இருந்த பேத்தி மறுபடியும் தந்தையை எதிர்நோக்கி வாசலுக்கு ஓடவும், ஏற்கனவே மகனின் செயலில் அதிருப்தி கொண்டு அவனின் மீது கோவமாக இருக்கும் மருமகளிடம் பேத்தி அடி வாங்கி விட கூடாதே என்ற எண்ணத்தில், பிரகதியின் பின்னேயே வந்தவர் கண்டது இவர்கள் இருவரின் நிலையை தான்.



முதலில் அதிர்ந்தவர் பின் சட்டென சுதாரித்து, எங்கே பேத்தி இதனை கண்டு விட்டாலோ என பயந்தவராய்,



“பிரகதி” என உரக்க அழைத்து, அவளது கவனம் கலைத்தவர், அவர்கள் இருவரையும் அழுத்தமாக பார்த்தவர், அவர்களின் பக்கம் கூட திரும்ப பிடிக்காதவராய் பேத்தியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றார்.



அதில் அபி மற்றும் விஷ்வா எனும் இரு சிலைகளுக்கு உயிர் வர, பின் தாயின் பாராமுகத்தில் எல்லாம் இவளால தான் என அதற்க்கும் அவளின் மீதே கோவப்பட,



கை முஷ்டியை இறுக்கி, பல்லை கடித்து கொண்டு “இருடி இதுக்கெல்லாம் ஒரு நாள் உன்ன வச்சுக்குறேன்” என கடித்த பற்களுடன் வார்த்தையையும் அவளை நோக்கி கடித்து துப்பி, தனது தாய் மகளின் பின்னே வேகமான நடையுடன் அவர்களை தொடர்ந்து அவர்களின் பின்னே சென்றான்.



அவன் சென்று நொடி முள் நிமிடங்களாக ஓடி முடித்த பின்னும், அவள் இன்னும் அசையாமல் அதே இடத்தில், அங்கேயே இருக்க, உள்ளே மகள் மற்றும் கணவனின் பேச்சு குரல்கள், கேட்டாலும் அப்படியே நிற்க,



அதனை தொடர்ந்த சில நிமிடங்களில், அவன் வெளியே செல்ல ஏற்றவாறு, உடை மாற்றி இருக்க, அவனது கைகளில் மகளை அணைத்து பிடித்தவண்ணம் வர,



அவர்கள் பின்னாடியே பேத்திக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பையுடன் வித்யா வர,



நேராக வந்தவன் இவளை சட்டை செய்யாமலேயே கடந்து செல்ல, அதனை உணர்ந்தாலும் அப்படியே அவள் இருக்க,



மகள் தான் அப்பாவுடன் செல்லும் குஷியில் தாயை மறந்து போனாலும், தாயை கண்டவுடன் அது வரை அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டு கதை பேசி வந்த மகள் அப்பாவின் முகத்தை தன்னை நோக்கி திருப்பி, அம்மாவும் நம்மக் கூட வரலையா பா?” என வினவ,



அதுவரை மகளின் கேள்விகளுக்கு அவளுக்கு ஏற்ற மாதிரி பதில் சொல்லிக் கொண்டே வந்தவன் நடை ஒரு நொடி தடையாக, பேச்சு தடுமாற, பின் சமாளித்து, அது அம்மாக்கு வேலை இருக்காம் அம்மா தான் நம்ம ரெண்டு பேரையும் போக சொன்னாங்க என ஒரு நொடி அவன் முகம் பார்த்தாலும், அவனுடன் செல்லும் குஷியில் அதுவும் சரிப்பா என்று சமர்த்தாக தலையாட்டி கேட்டுக்கொண்டது.



மகள் தான் தந்தையின் கைகளில் இருந்த படியே அம்மா நானும் அப்பாவும் வெளிய போறோம் bye மா!” என அவளை பார்த்து சொல்லிய படியே திரும்பி பார்க்காமல் செல்ல,



அவனும் மகளை காரில் முன் இருக்கையில் உட்கார வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டு, மறுபக்கம் வந்து காரை கிளப்ப, பை மா பை பாட்டி என்னும் உற்சாக குரலோடு இருவருக்கும் கை அசைக்க, அவன் தாயிடம் மட்டும் லேசாக தலை அசைத்து விடைபெற அதனை கண்டும் காணாமலும் பேத்திக்கு மட்டும் கை அசைத்து விடை குடுத்தார், வித்யா.



பின் கார் கிளம்பும் வரை அங்கேயே நின்றவர் ஒரு பெரு மூச்சுடன் திரும்ப அங்கேயே நின்றுக் கொண்டு இருந்த அபியையும் பார்த்தவர், அவளையும் கண்டுக்காமல் உள்ளே சென்று விட்டார்.



நடந்த அனைத்தும் கருத்தில் பதிந்தாலும், செல்லும் காரையே வெறித்துக் கொண்டு இருந்தாள், அபி ரக்ஷிதா.



சாரல் அடிக்கும்...

Show quoted text



Post Reply

Return to “Enai Nanaikum Sarale”