ஹாய் நட்பூஸ்,
சாரல் 21 பதிவு செய்துட்டேன். வழக்கம் போல லேட் செய்துட்டேன். இந்தமுறை அதுக்கு காரணம் இருக்கு. பொதுவாகவே எனக்கு flashback எழுத பயமும் கூட, எந்த தைரியத்தில் இந்த கதைக்கு பிளாஷ்பாக் வைத்து எழுத ஆரம்பித்தேன்னு எனக்கே புரியாத புதிர் தான். இந்த பகுதில ரொம்ப பெரிய சீன்ஸ் எல்லாம் கிடையாது. கொஞ்சம் எல்லார் பத்தியும் ஒரு அவுட்லைன் தான் கொடுத்திருக்கேன்.
முன்ன பின்ன இருந்தாலும், கோச்சுக்காம படிங்க. பயந்துக்கிட்டே தான் எழுதியிருக்கேன். சரியா தப்பான்னு எனக்கு தெரியலை. எத்தனை பேர் சாரல் கதையை படிக்குறீங்க என எனக்கு இப்ப தான் தெரியவந்தது. நான் எவ்வளவு லேட் செய்தாலும், உங்களோட சப்போர்ட் தான் என்னைய எழுதவே வைக்குது. ஒரு பயம், fb எழுத. வேலைகள் ஒருபுறம் கழுத்தை நெரித்தாலும், என்னால கதை மீது கவனம் செலுத்த முடியலை. எதாவது சொதப்பிவிடுவேனோ என பயம் தான் இந்த பதிவுக்கு தாமதம். இனிமே நான் மௌன விரதம்.
உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மக்களே. A special thanks to veena R sis, sivageetha sis, renugarajan sis, indukarthick sis, sanjusaraka sis, suganya 17 sis, elakkiyaprakash sis, vijaydharuayar sis, umasai sis, ramchandar sis, kalai karthi sis, ums sis, valli mano sis, vijirsn sis, devitamil sis, venmathi m sis,latha veerasamy sis, sujatha sis, revathi D sis, rsakthi sis, lakshmi murugan sis, saranya mohan sis, sumee sis, amutha vinoth sis, shobha kalirajan sis, jayabharathi senthilkumar sis, sowmiya balaji sis, sathya.A sis, remoraj sis, saro jaa sis, padmavathy sis, rohini kanishka sis, latha pugazh sis, shanthy durai ananthan sis, daisy tulip sis, ketheeswary suresh sis, saraswathy gurusamy sis, thavaselvi ganeshan sis, dhaalakshmi saranya sis, sara hp sis, rajammal sis, அஞ்சாயாள் சண்முகம் சிஸ். உங்க எல்லாரோட தொடர் ஆதரவும் அன்பும் தான் என்னைய எழுதவே வைக்குது. தேங்க்ஸ் டு ஆல் dearies. அண்ட் முகம் தெரியாத rating மட்டும் கொடுத்த அந்த நாலு அன்பு உள்ளங்கள், நீங்களும் தான். வேற யாரோட பெயராவது விட்டு இருந்தேனா மன்னிச்சுடுங்க மக்களே.
வெட்டியா இருந்த என்னை பிஸியா எழுத வைக்குறதும் நீங்க தான். ஆமா ஆமா இதை நீங்க நம்பி தான் ஆகணும். அப்புறம் இது என்னோட சரித்திரத்திலேயே பெரிய பதிவு தான் 1700 வார்த்தைகள். இதை டைப் செய்ய நாலு நாளா குட்டி கரணமெல்லாம் அடிச்சு இருக்கேன். சின்னதுன்னு சொல்லி என்னோட பிஞ்சு மனசை உடைச்சுடாதீங்க அன்பூக்களே.
உங்களது ஆதரவை எதிர்ப்பார்த்து,
நான் உங்கள்,
சுதீக்ஷா ஈஸ்வர்
சாரல் 21
எப்போதும் கணவனின் மௌனத்தை கடக்க அபி பழகியிருந்தாலும், அன்று அவனது அமைதி அவளது பொறுமையை வெகுவாய் சோதித்திருக்க, வேகமாய் அவனது தோள் பற்றி தன்புறம் திருப்பியவள், அந்த அரையிருளில், கணவன் கண்களில் ஜொலித்த நீர் மணிகளை கண்டு பேச்சிழந்து போனாள். விஷ்வாவின் மனம் அவன் வசத்திலில்லை. நிலைக்குலைந்து போயிருந்த மனதால், உடலும் அவன் வசம் இழந்து போயிருக்க, தன்னையும் மீறி வெளிப்பட்டு விட்டது அவனது கண்ணீர். எப்போதும் ஒரு கம்பீரத்தோடும், ஒரு மிடுக்கோடும் கவனமாக தனது உள்ளுணர்வுகளை மறைத்தும், புதிராய் இருக்கும் விஷ்வாவின் மென்மையான மறுபக்கம் அவனது தாயிடமும், மகளிடமும் மட்டுமே அவன் மனையாள் கண்டதுண்டு. இருவரும் இயல்பான வாழ்வை வாழவில்லை என்பதுதான் உண்மையும் கூட.
அவள் தோள் தொட்டு திருப்பியதும், உணர்வுகளின் பிடியில் இருந்த விஷ்வா, தனது மனபாரத்தை இறக்கி வைத்திடும் விதமாய், படர கொலுகொம்பை தேடும் கொடியை போல மனையாளை அணைத்துக் கொண்டான். அதில் அபியின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்துக் கொண்டன. அவனது விழிநீர் அவளது தோளை நனைக்க, மனையாளை இறுக அணைத்துக்கொண்டு, மௌனமாய் தனது மனபாரத்தை கண்ணீர் வழி கரைத்துக்கொள்ள முயன்றானோ? அபி ஆரம்பக்கட்ட திகைப்பில் இருந்து வெளிவந்து, கணவனை ஆதரவாய் அணைத்துக்கொள்ள கரம் உயர்த்தி, ஒருகணம் தயங்கினாள். மறுநொடியே தனது தயக்கம் அத்தனையும் விட்டொழித்து தானும் அவனை ஆதரவாய் அணைத்துக் கொண்டாள்.
அவனும் எத்தனை நாள் தான் அனைத்தையும் தனக்குள் மறைத்து வைத்திருப்பான்?
அறையை ஒருமுறை பார்வையிட்ட பிருந்தா, அங்கிருந்த நீள்விரிக்கையில் சோர்வாய் அமர்ந்துக்கொண்டாள். புயலில் சிக்கிய படகு போல இருந்தது அவள் நிலை. மனம் வேதனையில் விம்ம, விதி தனது வாழ்க்கையில் ஆடிய சதியை நினைத்து வெதும்ப தான் முடிந்தது பேதை பெண்ணால். வலிக்க வலிக்க கடந்த காலத்தை புரட்டியது, பிருந்தாவின் உள்ளம். நடந்து முடிந்த களேபரங்களால் தலை விண் விண்ணென வலிக்க, சோபாவில் சாய்ந்துக் கொண்டாள்.
***************************************
காவிரி பாயும் பகுதியது. திரும்பும் திசையெங்கும் வாழையும், நெல்லும், கரும்பும் வீசும் தென்றலுக்கேற்ப தலையசைத்து, காண்போரின் கண்களை கவர்ந்திழுக்கும் ஊரது. அந்த பகுதியின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் முத்துவேலும், சுந்தரும். இருவரும் படித்து முடித்து அரசாங்க வேளைக்கு காத்திருந்த தருணம், சுந்தரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாது போக, தனியாளாய் பரந்து விரிந்த விவசாய பூமியை பார்க்கும் நிலை ஏற்பட்டது, சுந்தருக்கு. நண்பனின் விருப்பம் அறிந்தவராதலால் சுந்தரின் மனதை மாற்ற முயற்சி செய்தார், முத்துவேல். ஆனால் தனக்குப்பின் மகன்தான் அனைத்தையும் வழிநடத்த வேண்டும் என்ற தந்தையின் விருப்பமே சுந்தரின் மனதை வெல்ல, நண்பனை சமாதானம் செய்தார் சுந்தர்.
நண்பனின் முடிவில் மனம் சுணங்கினாலும், அதனை ஏற்றுக்கொண்டார் முத்துவும். வருடங்கள் ஓட, இருவருக்கும் திருமணம் செய்ய ஆசைப்பட்டனர் பெரியவர்கள். சுந்தரின் ஒன்றுவிட்ட தங்கை கீதாவுடன், முத்துவேலுக்கு திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. இரண்டு வருடம் கழித்து சுந்தரும் வித்யாவை திருமணம் செய்துக் கொண்டுவிட, வித்யா கீதா இருவரும் நல்ல தோழிகள் ஆயினர். நான்கு மாதத்தில் வித்யா கருவுற்றுவிட, அவருக்கு உறுதுணையாய் இருந்தார், கீதா.
ஒரு மழை நாளில், வித்யாவுக்கு ஆண்குழந்தை பிறக்க, அதனை கீதாவின் கரத்தில் கொடுத்து மகிழ்ந்தார், சுந்தர்.
விஷ்வா வளர்ந்தது எல்லாம் கீதாவிடம் தான். அவர்களின் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தை தீர்த்தவன் தான் விஷ்வா. விஷ்வாவுக்கு மூன்று வயதாகும் போது கீதா கருவுற்றார். அப்போது சுந்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நண்பனுக்காக அவரும் வருந்தாத நாள் கிடையாது. கீதாவின் வீட்டிலேயே தவமிருக்க ஆரம்பித்தான், குழந்தை விஷ்வா. ஒருநாள் கீதா குழந்தையிடம் பேசுவதை கண்டு, “அத்தை நம்ம பேச்சுது பாப்பாவுக்கு கேட்குமா?” என கேட்க, “ஆமாடா கண்ணா! நம்ம அவங்க கிட்ட பேசுறது எல்லாம் அவங்களுக்கு கேட்கும்!” என கீதா சொல்ல, அவரின் வயிற்றையே ஆர்வமுடன் பார்த்தான் விஷ்வா. அவனின் ஆசை புரிந்து தானே அவனது கரங்களை எடுத்து தனது வயிற்றில் வைக்க, முதலில் பயந்தாலும், தானும் ஆர்வமுடன் பேசினான். அப்போது அவன் குரல் கேட்டு தாயின் வயிற்றில் எட்டியுதைத்தாள் குழந்தை. அவரின் வயிற்றில் கைகளை வைத்துக்கொண்டு, குழந்தையிடம் பேசுகிறேன் பேர்வழி என அத்தையின் முந்தானையையே பிடித்துக்கொண்டு திரிந்தான், விஷ்வா.
அதன் பிறகு கீதா பிருந்தாவை பெற்று எடுக்க, பாப்பா பாப்பா என குழந்தையையே சுற்றி சுற்றி வந்தான் விஷ்வா. “இவன் என்னடா பாப்பா பாப்பான்னு அவளையே சுத்தி வரவன், பேசாம அவ வளர்ந்தோன கல்யாணம் கட்டி உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுயா!” என விஷ்வாவிடம் வம்பிலுப்பார், கல்யாணி. அவளுக்கு அடுத்து நான்கு வயது கழித்து பிறந்தவன் தான் முகுந்தன். முகுந்தன் தாயின் பின்னே சுற்றிக்கொண்டு இருக்க, பிருந்தாவுக்கு விஷ்வா மாமாவே சகலமாகிப் போனான். அவளின் நாட்களே பெரும்பாலும், சுந்தர் வீட்டில் தான் கழியும். வித்யாவும் தனக்கு பெண் குழந்தை இல்லாத குறையை பிருந்தா மூலம் தீர்த்துக்கொண்டார்.
தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, உணவு ஊட்டி, வீட்டுப் பாடம் சொல்லிதரும் விஷ்வா மாமா மீது அவளுக்கு அப்படி ஒரு பிரியம். பட்டம் செய்துக் கொடுத்து, சோளம் சுட்டுக் கொடுத்து, பள்ளியில் அரணாய் தங்களை பாதுகாத்து என தங்களை பாசமாக நடத்தும் விஷ்வா என்ன சொன்னாலும் செய்வார்கள் இருவரும். அதேபோல தன்னைவிட ஐந்து வயது சிறிய பெண்ணான பிருந்தாவிடம் தனி பிரியம் விஷ்வாவுக்கும். வருடங்கள் சென்று மறைந்தது. பத்தாம் வகுப்பு முடிந்து திருச்சியில் இருக்கும் விடுதியில் சேர்ந்தான், விஷ்வா. அன்று அவனைப் போகவிடாது அவனது கைப்பற்றி பிருந்தா அழுத அழுகை இருக்கிறதே அப்பப்பா!
அவளை பிரிவதை நினைத்து தானும் வெகுவாய் கலங்கிப் போனான், விஷ்வா. “லீவ் விடும் போதெல்லாம் உன்னை வந்து பாக்கிறேன் பிந்துக்குட்டி! நீ என் செல்ல பிந்துக்குட்டில அழக்கூடாது! சமத்து பொண்ணா இருக்கனும் சரியா?” என அவளை வெகுவாய் சமாளித்து கிளம்பினான், விஷ்வா. விடுமுறைக்கு வரும் போது அவனை வால் பிடித்துக் கொண்டே சுற்றினாள், குழந்தை. இருவருடம் கடந்திருக்க, சிறுவனிலிருந்து பருவ வயதில் அடியெடுத்து வைக்கும் வாலிபனாக வளர்ந்திருந்தான் விஷ்வா. அவனது நெடுநெடு உயரமும், அதற்கேற்ற உடல் வளர்ச்சியும் சிறுவர்கள் இருவருக்கும் ஒருவித பயத்தையும் அதையும் தாண்டி பிரமிப்பையும் ஒருங்கே தந்தது.
பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்த விஷ்வாவுக்கு அக்ரி இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. தந்தையும் மகனது விருப்பம் அறிந்து சம்மதித்திருந்திருந்தார். ஏற்கனவே ஒரே மகனை வித்யா இருவருடமாக பிரிந்திருந்தவர், மகன் மதுரைக்கு செல்கிறேன் என்றதும் அழுதே சோர்ந்து போனார். அவன் ஊருக்கு செல்லும் நாளும் அருகில் வர, அந்த நேரத்தில்தான் பிருந்தா பெரியவள் ஆனாள். அவளுக்கான முறைகள் அனைத்தும் செய்தது சுந்தர் தான். புடவைக்கட்டி, பூச்சூடி, அலங்காரங்கள் செய்து சிறு பெண்ணில் இருந்து பதின்பருவத்தில் அடியெடுத்து வைத்திருந்த பிருந்தா, விஷ்வாவின் மனதில் அவனையும் அறியாது பதிந்து போனாள். அவன் ஊருக்கு கிளம்ப, கால் முளைத்த காற்றாய் தன்னையே சுற்றிவரும் பிருந்தாவைக் காணாது விஷ்வாவுக்கு தான் ஒருமாதிரி இருந்தது. “ம்மா இந்த பிந்துகுட்டி எங்கம்மா? ஆளையே காணோம்?” தனது சின்னஞ்சிறு தோழியை தேடியது விஷ்வாவின் மனம்.
“அவ பெரிய மனுஷி ஆகிட்டாளடா…. கல்யாணி பெரியம்மா அவளை மிரட்டி வீட்டுல உட்கார வச்சுட்டாங்க போல!” என்றார் வித்யா. அதனைக் கேட்டு ஒருமாதிரி இருந்தது அவனுக்கு. எப்படியாவது அவளை பார்க்க வேண்டுமென, தாயிடம் சொல்லிக்கொண்டு முத்துவேல் வீட்டுக்கு சென்றான் விஷ்வா. “அத்தை அத்தை!” என கீதாவை அழைத்தபடியே உள்ளே வர, அவனது அரவம் கேட்டு வேகமாய் வீட்டினுள் ஓடினாள், பிருந்தா. கதவின் பின்னே கேட்ட கொலுசு சத்தம் வைத்தே அவளைக் கண்டுக் கொண்டவன், “ஒய் பிந்து குட்டி என்ன புதுசா என்னைய கண்டு ஓடுற! நான் என்ன பார்க்க அவ்வளவு பயங்கரமாவா இருக்கேன்!” மாமன் மகளை சீண்டினான் விஷ்வா. நொடி நேர அமைதிக்குப்பின், “அப்பத்தா தான் என்னைய வெளிய போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க மாமா!” தனது தோழனிடம் குற்றப்பத்திரிக்கை வாசித்தாள், பிருந்தா.
அதனை கேட்டவனிடத்தில் சிறுநகைப்பு. “ஆயா கிட்ட நான் சொல்றேன். இப்ப நீ வெளியவா!” என்றான், விஷ்வா.
பொந்துக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் முயல் குட்டியாய், அவள் தனது தலையை மட்டும் வெளியே நீட்ட, அவளது மருண்ட அழகிய நீள் கூர்விழிகள் அவனை கவர்ந்த அந்நொடி ஆணவனின் மனப்பெட்டகத்தில் அழகாய் பதிந்துபோனது. தயங்கி தயங்கி வெளியே வந்தவளைக் கண்டு புன்னகை புரிந்தவன், அவளையே விழியசையாது பார்த்திருந்தான். அவனது செல்ல பிந்துக்குட்டி இப்போது அவனது கண்களுக்கு புதிதாய் தெரிந்தாள். குரலைக் செருமிக் கொண்டு, “பிந்துகுட்டி மாமா மதுரைக்கு போறேன்!” எனவும், அந்த குட்டி முகத்தில் ஆயிரம் பாவங்கள்.
“என்ன்…னது மதுரைக்கு போறியா? எதுக்கு?” என்றாள். “அது… அது எனக்கு மதுரையில சீட் கிடைச்சு இருக்கு!” வெகுவாய் தயங்கியவன், ஒருவாறு அவளிடம் சொல்லிவிட்டான். “நீ.. நீ… ஸ்கூல் முடிச்சுட்டு இங்கேயே வந்துடுவேன்னு என்கிட்டே சொன்னே?” தனது பிரியத்துக்கு உரிய மாமன் தன்னைவிட்டு தூர செல்வதில் மனம் சுணங்கிப் போனது பெண்ணுக்கு. கண்கள் கலங்க, முகம் சுருங்க, உதடு பிதுங்க அவள் கேட்ட பாவனையில் உள்ளூர உருகிப் போனது விஷ்வாவுக்கு. அவனுக்கும் அதில் வருத்தம் இருந்தாலும், “மாமா உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன் பிந்துக்குட்டி! ஜஸ்ட் நாலே வருஷம் தான். கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள ஓடியே போய்டும்! நீ இப்படி எல்லாம் முகத்தை தூக்கி வச்சுக்கிட்டா அங்க நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும் சொல்லு!” வருத்தம் தோய்ந்த குரலில் ஆணவன் கேட்க, கண்ணீர் கரைக்கட்டி நிற்க, “நாலு வருஷமா???? அப்பா என்கிட்டே மூணு வருஷம் தானே சொன்னாங்க?” உதடு பிதுக்கி அழத் தயாரானாள், பிருந்தா.
தனது செல்ல பிருந்தாவை விட்டு பிரிவது அவனுக்கும வருத்தமாக இருந்தாலும், அவளை கெஞ்சிக் கொஞ்சி சம்மதிக்க வைப்பதற்குள் திணறி திண்டாடித்தான் போனான், விஷ்வாவும்.
அவனிடம் ஆயிரம் வாக்குறுதிகளை பெற்றுக்கொண்டு தான் வழியனுப்பினாள், பிருந்தாவும். அதுதான் அவர்களின் கடைசி சந்திப்பாக இருக்கும் என இருவருமே அறியவில்லை.
அதேநேரம் தான் முத்துவுக்கும் பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் வந்தது. முதலில் தங்களது ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் தான் வேலை செய்தார் முத்துவும். குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு தான் மட்டும் தினமும் போய் வந்தார். ஆனால் பணிசுமையும், பயண அலைச்சலும், அவரை சோர்வடைய செய்ய, அங்கேயே தங்கிக்கொண்டு வாரம் ஒருமுறை மட்டும் ஊருக்கு வந்து சென்றார். பெற்றவர்கள், உறவுகள் சூழ குடும்பத்தை விட்டு சென்றவருக்கு குடும்பத்தை நினைத்து ஏக்கமாக இருந்தது. அதில் மனம் தளர்ந்து போனார், முத்துவேலும். ஒருமுறை உடல்முடியாமல் அலுவலகத்திலேயே மயங்கி விழுந்தவரை, அங்கே உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்க்க, பதறியடித்து வந்தனர் அனைவரும். கீதாவும் பிள்ளைகளும் அழுதே கரைந்தனர். அதன்படி அவரின் உடல்நிலையை முன்னிட்டு அவருடன் செல்வதாக இருந்தனர் குடும்பத்தினர். அனைவருக்கும் அங்கிருந்து செல்ல மனதேயில்லை. பிருந்தா விஷ்வாவை நினைத்து, அழுதுகரைந்தாள். கீதாவுக்கும் அதேயளவு வருத்தமிருந்தாலும், கணவனை முன்னிட்டு மனதை தேற்றிக்கொண்டார்.
காரில் செல்லும்போது விஷ்வாவின் வீட்டை கடக்கும்போது திரும்பி திரும்பி பார்த்து அழுதபடியே சென்றாள், பிருந்தா. தாயின் மூலம் அனைத்தையும் தெரிந்துக் கொண்டவனுக்கு பிருந்தாவை நினைத்து நெஞ்சில் பாரமேறிய உணர்வு. அதன் பிறகு இருவரும் நான்கு வருடங்கள் பார்த்துக் கொள்ளவேயில்லை.
புது இடம், புது பள்ளி அனைத்தையும் கண்டு பிருந்தா மருண்டு போனாள். மனம் வெகுவாக தனது விஷ்வா மாமாவை தான் தேடியது. தன்னை வந்து காணாதவன் மீது தோன்றிய ஏக்கம் நாளாக நாளாக கோபமாக உருமாறியது. விடுமுறைக்கு ஊருக்கு சென்றாலும், அவனால் வரமுடியாது போக, அவன் மீதான கோபம் உரமின்றி வளர்ந்து போனது.
ஒவ்வொரு முறையும் ஊருக்கு வருபவள் தனது அத்தையின் பின்னே குட்டிபோட்ட பூனையாக திரிவாள். எப்படியும் அவன் வந்துவிடுவான் வந்துவிடுவான் என அவனுக்காக காத்திருக்க துவங்குபவள், காத்திருப்பின் முடிவில் அவன் வராது போகவும், கோபம்கொண்டு மடல் ஒன்று அவனுக்காக வரைந்து விட்டு செல்வாள். தாயின் வாய்மொழி வழியே அவளது கோபத்தை அறிந்திருந்தாலும், அவனாலும் ஒன்றும் செய்யமுடியாத நிலை. அடுத்தமுறை வரும்போது அவளுக்கு பதில் மடல் ஒன்று எழுதிவிட்டு செல்வதும் அவர்களுக்குள் வாடிக்கையாக இருந்தது. அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் கடிதம் வழியே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவன் அவளை சமாதானம் செய்ய அவளுக்கு பிடித்ததை வாங்கி வைத்திருப்பதும், அடுத்த முறை வரும்பொழுது அதனை ஆசையாய் எடுத்துக்கொள்ளும் பிருந்தா, அவனை திட்டி கடிதம் எழுதுவதையும் மறக்கவில்லை.
அவர்களின் கண்ணாம்மூச்சி ஆட்டம் நிறைவு பெரும் நாளும் வந்தது. விஷ்வா தனது படிப்பை முடித்திருந்தான். அவன் விண்ணப்பித்திருந்த வேலையும் அவனுக்கு கிடைத்திருக்க, பேரானந்தம் அடைந்தான். மகனின் முடிவறிந்து அனைத்திற்கும் துணை நின்றார், சுந்தர்.
விஷ்வா வேலைக்கு சேரும் நாளும் வர, தனது உடமைகளை அடுக்கிக் கொண்டிருந்தவன் முன் பிருந்தாவுக்கும் முகுந்தனுக்கும் பிடித்த அனைத்தையும் கல்யாணியும், வித்யாவும் அடுக்க இருவரையும் முறைத்துப் பார்த்தான். “என்னடா பார்க்குற?” வித்யா கேட்க, “ஏன்மா எனக்கு எதுக்கும்மா இவ்வளவு? நான் இங்க இருக்கிற கோயம்பத்தூர் தானே போறேன் அமெரிக்காவா போறேன்?” அயர்வாய் கேட்க,
“இதெல்லாம் உனக்குனு யாரு சொன்னா? அது என் பிருந்தா செல்லத்துக்கும் முகுந்தன் குட்டிக்கும்!” என்றார் வித்யா.
அவரின் பதிலில் தாயை முறைத்தாலும், உள்ளுக்குள் மகிழ்வாகவே அதனை எடுத்துக்கொண்டே கிளம்பினான் விஷ்வா. நெடுநாள் கழித்து அவளைக் காணப் போகிறோம் என்ற ஆவலுடனும், ஆசையுடனும் தனது பிந்துவை காண விரைந்தான், விஷ்வா.
வழிநெடுக அவளைப் பற்றிய யோசனையுடனே கழித்தான், விஷ்வா. தன்னை கண்டால் என்ன செய்வாள்? மாமா என அழைப்பாளா? இல்லை முகம் திருப்பி செல்வாளா? என ஆயிரம் எண்ண ஊர்வலம் அவன் மனதில். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் முத்துவேல் வீட்டு வாசலில் இறங்கினான், விஷ்வா. கதவை திறக்க கைவைத்த நேரம், கோலம் போட்டுக்கொண்டிருந்த கீதா அவனைக் கண்டு மகிழ்வாய், “ஹே விஷ்வா! வா! வா! இப்ப தான் இந்த அத்தை வீட்டுக்கு வர உனக்கு வழி தெரிஞ்சுச்சா?”என ஆரவாரமாய் வரவேற்றார்.
“ஐயோ அப்படி எல்லாம் இல்லத்தை” என்றவன் கண்கள் தனது தோழியையே தேடியது. அவனைக் கண்டு புன்னகைத்தவர், “வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என சிலபல சம்பிரதாய பேச்சுக்களுக்கு பின், “மாமா இன்னும் எழுந்திரிக்கலையா அத்தை?” என்றவனுக்கு “உங்க மாமா மட்டும் இல்லை இன்னும் யாருமே எழுந்திரிக்கல! நீ போய்ட்டு ரெப்ரெஷ் ஆகிட்டுவா!” என அவனை அனுப்பி வைக்க, பிருந்தாவை காணமுடியாத சோகம் அவனது விழிகளில்.
குளித்து முடித்து தயாராகி அவன் வெளியே வந்து காபி அருந்தி டிபன் சாப்பிடும் நேரம் வந்தும், பிருந்தா எழவில்லை. “அத்தை பிருந்தா என் மேல இன்னும் கோவமாத்தான் இருக்காளா? இவ்வளவு நேரமாகியும் அவளை ஆளைக் காணோமே?” மெதுவாய் அத்தையிடம் வினவ, “ம்ம்ம் கொஞ்ச நஞ்ச கோபமா? எக்கச்சக்க கோவத்துல இருக்கா! நீ வரதை அவக்கிட்ட நான் சொல்லலை நீயே நேர்ல பார்த்து சமாதானம் செஞ்சுக்கோ!” என்றார், கீதா.
அத்தையின் பதிலைக் கேட்டு மானசீகமாக தலையில் கைவைத்துக் கொண்டான். அதே நேரம் “அம்மா காபி!” என கத்தியபடி முகம் துடைத்துக்கொண்டே வந்தாள், பிருந்தா.முகம் துடைத்து டவலை விலக்கியவள், யாரோ புதியவன் அமர்ந்திருக்கவும், சங்கடமாய் உணர்ந்தாள். அவளது சத்தத்தில் விஷ்வா வேகமாய் திரும்பி பார்க்க, முதலில் ஒருவரை ஒருவர் திகைத்துப் போய் பார்த்தனர். பள்ளிப் படிப்பை நிறைவு செய்து கல்லூரியில் அடியெடுத்து வைக்க இருந்தாள், பாவை. அதற்கேற்ப அவளது குழந்தைத்தனமான முகமும் மாறி, பருவ வயதில் இருந்தாள், பாவை.
விஷ்வாவும் இருபதுகளின் ஆரம்பத்தில், முகத்தில் ஒருவித கம்பீரமும், அந்த வயதிற்கே உரிய மிடுக்குமாக இருந்ததால், அவளுக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. இருவரும் ஸ்தம்பித்து நின்றது சில நொடிகளே. முதலில் யாரோ என நினைத்திருந்த பிருந்தா பின்னரே அது விஷ்வா என தெரியவும் வேகமாய் முகத்தை திருப்பிக்கொண்டவள், விடுவிடுவென வாசலில் போய் அமர்ந்துக்கொண்டாள். அவள் முகத்திருப்பலில் இருந்தே அவளின் கோபத்தின் அளவை உணர்ந்துக் கொண்டவன், தானும் வேகமாய் அவள் பின்னே சென்று அவளை இடிக்காத குறையாய் அவளருகில் அமர்ந்துக்கொண்டான்.
அவன் தனது அருகில் அமர்ந்தது உணர்ந்தாலும், பிருந்தா அவன்புறம் திரும்பாது அமர்ந்திருக்க, “ஒய் பிந்துக்குட்டி! உன்னை பார்க்கத்தானே நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன் இப்படி பேசாம போற!” என விஷ்வா வினவ,
“யாரும் என்கிட்டே பேச தேவையில்லை!” என முறுக்கிக் கொண்டாள், பிருந்தா. அவளை எப்படி மலையிறக்குவது என தெரியாது விழி பிதுங்கி நின்றான், விஷ்வா.
சாரல் அடித்தது….
சாரல் 21
-
- Moderators
- Posts: 31
- Joined: Fri May 15, 2020 11:21 pm
- Has thanked: 29 times
- Been thanked: 1 time
Return to “Enai Nanaikum Sarale”
Jump to
- Tamil Novels
- ↳ Madhumathi Bharath
- ↳ சதிராடும் திமிரே (காதல் கதகளி பார்ட் 2)
- ↳ கந்தகமாய் அவன் காதல்
- ↳ நெருஞ்சியின் நேசம்
- ↳ எனை மீட்பாயோ காதலியே
- ↳ காதலே நீ கானலா
- ↳ Kindle EBook links
- ↳ Story Reviews
- ↳ Books
- ↳ Audio Novels
- ↳ நிலவே உந்தன் நிழல் நானே
- ↳ Kavi Sowmi
- ↳ காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி
- ↳ Sabareeshwari (SSK)
- ↳ நெயிர்ச்சியின் முழுவல் நீ
- ↳ RS Novels
- ↳ எதிர் துருவங்கள்
- ↳ Sutheeksha Eswar
- ↳ Enai Nanaikum Sarale
- ↳ திசை அறியா பயணமிது
- ↳ Iniya
- ↳ மின்னல் விழியே குட்டித் திமிரே
- ↳ இசையின் மலரானவன்
- ↳ Janani Prasanna
- ↳ காதல் கருவறை
- ↳ Malarvizhi
- ↳ விழி மொழியாள்
- ↳ Kirthika Balan
- ↳ போற போக்கில் ஒரு காதல்
- ↳ Laxmi devi
- ↳ மாலை சூடும் வேளை
- குறு நாவல்
- ↳ Abi Nethra
- ↳ என் கோடையில் மழையானவள்
- ↳ Kavi Sowmi
- ↳ Kanchana Malai
- ↳ காதல் மட்டும் புரிவதில்லை
- ↳ Karthika Maran
- ↳ உயிரே என் உலகமே
- ↳ நல்லவனின் கிறுக்கி
- ↳ Gowry Vicky
- ↳ Chandrika Krishnan
- ↳ மந்திரமென்ன மங்கையே
- ↳ Sahana Harish
- ↳ Malarvizhi
- ↳ உயிரானவளே
- ↳ Rajasekaran Bose
- ↳ காமனின் காதல்
- ↳ Raju Gayu
- ↳ தேன்மொழி
- ↳ Manosha
- ↳ கண்ணாளனின் கண்மணியே
- தமிழ் சிறுகதைகள்
- ↳ Archana Nithyanantham
- ↳ Inba Muthuraj
- ↳ Kanchana Malai
- ↳ Gowry Vicky
- ↳ Sethupathi Viswanathan
- ↳ Nan Ungal Kathiravan
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ பாவை கதைகள்
- ↳ Raju Gayu
- ↳ Renuka Mary
- ↳ Kaayaampoo
- ↳ Venba Ilanthalir
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Kavi Sowmi
- ↳ Saha
- ↳ Sahana Harish
- ↳ Sivaranjani Sivalingam
- ↳ Bhagi
- ↳ Muthu Saraswathi
- ↳ Jothi Ramar
- ↳ Sankari Dayalan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ Bhanurathy Thurairajasingam
- Completed Novel Links
- இருமுனைப் பேனா
- ↳ மாங்கல்யம் தந்துனானே
- ↳ தாய்மையிலும் விஷமுண்டு
- கவிதைகள்
- ↳ Bharathi Kannamma
- ↳ Preethi
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ Raji Prema
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Abi Nethra
- ↳ Archana Nithyanantham
- ↳ Kanchana Malai
- ↳ Saha
- ↳ Sethupathi Viswanathan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ காயாம்பூ
- ↳ Bhanurathy Thurairajasingam
- ↳ சித்துவின் வரிகள்
- சமையலறை
- ↳ Anjali Suresh
- பொது அறிவுத் தகவல்கள்
- படித்ததில் பிடித்த கதைகள்
- மருத்துவம்
- மனதோடு
- ↳ மறுபாதி
- ↳ நீயின்றி நானும் இல்லை
- ↳ மாயவனம்
- ↳ அ(இ)வளுக்கென
- ↳ உன்மத்தம் கொண்டேனடி உன்னால்
- ↳ Zaki
- ↳ காதல் போதையடா நீ எனக்கு