ஹாய் நட்பூஸ்,
சாரல் அடுத்த பதிவு போட்டுட்டேன். லாஸ்ட் பதிவுக்கு நிறைய reponse வரலையே நட்பூஸ். I know அதுல சின்ன outline மாதிரி தான் கொடுத்திருந்தேன். ஆனாலும், அதுக்கு views கூட வரலையே மக்களே. உங்களுக்கு எதாவது குறை இருந்தாகூட என்னுடன் பகிர்ந்துக்கோங்க நட்பூஸ். உங்களோட கருத்துகள் மூலமா தான் என்னோட எழுத்துக்களை நான் மெருகேத்த முடியும்.
சாரலும் ஸ்லொவ் மூவிங் பிளாட் தான். என்னோட பாணி இப்படின்னு எனக்கே இப்பதான் தெரியுது. ஆஹா ஓஹோன்னு பில்ட் அப்லாம் நான் தர விரும்பலை.ஒன்னும் ஒன்னும் ரெண்டு அப்டின்னு நீங்க ஊகிக்கும்படிதான் கதை இருக்கும். ரொம்ப எதிர்பார்ப்பு வைக்காம கொஞ்சம் ஸ்லொவா, மெல்லிய அழுகை கலந்து (கொஞ்சமே கொஞ்சம் ரொமான்ஸ், லவ்) எல்லாம் இருக்கும். லவ் இருக்கும்னு நான் நம்புறேன் நீங்களும் நம்பணும் ஓகே.
சாரலை படிச்சுட்டு உங்களது கருத்துக்களை சொல்லுங்க மக்களே. And a special thanks to kalai karthi sis, vijirsn sis, juhi sis, vanajavanesh sis, kanimozhi ragu sis, indhu karthick sis, r sakthi sis, lakshmi murugan sis, vaishanika sis, sathya. A sis, priyatharshini vamadevan sis, sowmiya balaji sis, saro jaa sis, nalina janakiram sis, indra muthu sis, padmavathy sis, porkodi balaji sis, jahubar sis, moorthy sis, uma sugumar sis, Msmurthy sis, rohini kanishka sis, shanthy durai anathan sis, venmathi. M sis, kavitha subramani sis, elakkiya prakash sis, ums sis, siva geetha sis, devitamil@79 sis, sanju saraka sis, veena R sis, fathi naz sis. உங்க எல்லாருக்கும் என்னோட ஸ்பெஷல் தேங்க்ஸ். நீங்க இல்லனா நான் இல்லை. நீங்க தரும் சின்ன சின்ன பாராட்டுகளும், லைக், ஊக்கமும், உங்களுக்கு பெருசா தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு, நீங்க வைத்திருக்கும் என் மீதான அன்பும் அக்கறையுமாக தான் எனக்கு தெரியுது. ஒரு சிறு nice குட் அப்படி என்கிற வார்த்தைகளுக்கு பின், என்னோட உழைப்புக்கு நீங்க கொடுத்த பாராட்டாகவே நான் அதை பார்க்குறேன். அது கொடுக்கும் சந்தோசமும் அங்கீகாரமும் அளப்பரியாதது.
என்னையும் என் கதையும் நீங்க படிச்சு, என்னை தேடும் போது உள்ளுக்குள் பறக்கிற பீல். என்னோட கதையை படிக்கும் ஒவ்வொருதற்கும் பதில் சொல்ல, விளக்கம் சொல்ல, நான் கடமைப் பட்டிருக்கிறேன். சோ உங்களுக்கு எதாவது நெருடல் இருந்தால், நிச்சயம் என்கிட்ட சொல்லுங்க.
உங்கள் ஆதரவை எதிர்பார்த்து,
நான் உங்கள்
சுதீக்ஷா ஈஸ்வர்
சாரல் 22
“அம்மா காப்பி!” என கூவியபடியே வந்த பிருந்தா, அங்கே அமர்ந்திருக்கும் புதியவனைக் கண்டு சங்கடமாக உணர்ந்தாள். விஷ்வாவை பார்த்து நான்கு வருடங்களுக்கும் மேலாகியிருக்க, வயதிற்கேற்ப மெருகேறியிருந்த அவனது தோற்றம், அவளை அடையாளம் காணவிடாது செய்திருந்தது. அவளது சத்தத்தில் ஆர்வமாய் திரும்பியவன், பெண்ணவளைக் கண்டு திகைத்துப் போனான். நான்கு வருடம் முன்பு, முயல் குட்டியாய் மருண்ட விழிகளுடன் அவளைப் பார்த்திருந்தவன், இப்போது பள்ளி முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் பாவையாய் பிருந்தாவை எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது விரிந்த விழிகளே சொன்னது.
திகைப்பில் இருந்து வெளிவந்து விஷ்வா, அவளைக் கண்டு புன்னகைக்க, அவனது மாயக்கண்ணன் சிரிப்பைக் இனம் கண்டுக் கொண்டாள், வஞ்சியும். அவனைக் கண்டு அகமும் புறமும் பூவாய் மலர, மூளையோ சமய சந்தர்ப்பம் பாராது, “ஹே பிருந்தா! நீ அவன் மேல கோபமா இருக்க!” என நூலெடுத்துக் கொடுக்க, வெடுக்கென முகம் திருப்பியவள், துண்டை நாற்காலியில் வீசிவிட்டு விடுவிடுவென வாசல் நோக்கி சென்று படியில் அமர்ந்துக் கொண்டாள்.
நிச்சயம் அவளிடம் இத்தகைய கோபத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை எனலாம். தான் என்ன சொன்னாலும், அவளோடு அவளது இரட்டை குடுமியும் அவனது வார்த்தைகளுக்கு தலையாட்ட, “விஷு மாமா! விஷு மாமா!” என தன் பின்னே வால் பிடித்துக்கொண்டு திரியும் பிந்துக்குட்டியின் புதிய பரிணாமம் அவனை வாயடைத்து போக செய்திருந்தது. மகளின் செய்கையில் சங்கடமடைந்த கீதாவும், அண்ணன் மகனை சங்கடமாய் பார்த்து வைக்க, “நீங்க விடுங்கத்தை நம்ம பிந்துகுட்டி தானே! என் மேல அவ கோவப்படாம வேற யார் கோபப்பட முடியும்!” என அத்தைக்கு சமாதானம் சொன்னவன், வேகமாய் அவளை தேடி வெளியில் விரைந்தான். அத்தையிடம் ஜம்பமாய் சொல்லிவிட்டு வந்தாலும், உள்ளுக்குள் அவளை எப்படி மலையிறக்க போகிறோம் என்பதை நினைத்து விஷ்வாவுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.
ஊரில் உள்ள தெய்வங்களை எல்லாம் துணைக்கு அழைத்தவன், அத்தை மகளை தேடி, தனது தைரியம் அனைத்தையும் ஒன்றுத்திரட்டிச் சென்றான். அவன் சென்ற போது வாய்க்குள் எதையோ முணுமுணுத்தபடி இருந்தாள், பிருந்தா. அவளருகில் அவளை இடிக்காத குறையாய் அமர்ந்துக் கொள்ள, தனதருகில் அவன் அமர்ந்திருப்பது உணர்ந்துக்கொன்டாலும், அவன்புறம் திரும்பியும் பாராது அலுச்சாட்டியம் செய்தாள்.
அதில் லேசாய் மனம் சுணங்கினாலும், மனம் தளராது, “ஒய் பிந்துக்குட்டி மாமா உன்னை பார்க்க தானே ஆசை ஆசையா நான் இவ்வளவு தூரம் ஓடி வந்திருக்கேன். நீ என்னடான்னா இப்படி மூஞ்சிய திருப்பிக்கிட்டு போற?” என அவளிடம் வினவ,
“யாரும் என்கிட்ட பேச தேவையில்லை!” வெடுக்கென சொன்னாள், மாது. அவளது வார்த்தைகளில், “ஐயோ இவளை ஈஸியா மலையிறக்க முடியாது போலிருக்கே! என்னடா விஷ்வா பண்றது?” என கண்ணை இருட்டிக் கொண்டு வந்தாலும், “டேய் விஷ்வா! பயப்படாத உன்னால முடியும்! சமாளி சமாளி!” தன்னைத் தானே தேற்றிக் கொண்டவன், “ஒஹ் அப்போ நீ என்கிட்ட பேச மாட்ட! சரி அப்போ நான் இதையும் முகுந்தன் கிட்டயே கொடுத்திடுறேன்!” என கையில் ஐந்து ரூபாய் டைரிமில்க் வைத்தபடி அவன் சொல்ல, எது என ஓரக்கண்ணால் அவனை லேசாக பார்த்தவள், அதனைக் கண்டதும், கண்கள் மின்ன, அவன் கையில் இருக்கும் மிட்டாயை வேகமாய் வெடுக்கென பிடுங்கிக்கொண்டு, படபடவென கிழித்து ஒருகடி கடித்தாள்.
அவள் செய்கையில் இதழ்களில் குறுநகை எட்டிப் பார்க்க, “இப்ப கோபம் போயிடுச்சா?” ஆர்வமாய் வினவ, “கோபம் போச்சுன்னு நான் எப்ப சொன்னேன்?” என்றபடியே மிட்டாயை இன்னொரு கடி கடித்தாள். அவளது பதிலில் ‘ஞே’ என விழித்தான், விஷ்வா.
தொண்டையை செருமிக் கொண்டு, அவள் வைத்திருந்ததில் கை வைக்க வர, வெடுக்கென அவன் கையை தட்டி விட்டவள், அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு மிட்டாயை உண்டு முடித்தாள். அவள் அடித்ததில் வலித்த கையை தடவிக் கொண்டவன், “ஸ்ஸ் அம்மா இப்படியா அடிப்ப? பிந்துக்குட்டி இப்ப பிசாசு குட்டியா போச்சு!” வலியில் விஷ்வா முனங்க, அது தெளிவாய் பிருந்தாவின் காதில் விழுக, கண்ணை உருட்டி விஷ்வாவை முறைத்தாள், பிருந்தா. “ஐயையோ கேட்டுடுச்சு போலயே! இப்படி முறைக்கிறா!” என ஜெர்க்கானான், விஷ்வா. இருந்தும் சமாளிப்பாய், அவளைக் கண்டு தனது உதட்டை சிரிப்பது போல இழுத்துப் பிடித்தான்.
இருவரும் உள்ளே வர, முத்துவேல் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். இவனைக் கண்டதும், வரவேற்பாய் புன்னகைத்தவர், அவனது நலம் விசாரித்தார். சிறிது நேரம் சிலபல சம்பிரதாய பேச்சுக்களுக்கு பின், அவனது வேலை, அது தொடர்பான விவரங்கள் என அனைத்தையும் கேட்டு தெரிந்துக் கொண்டார். நேரம் ஆவது உணர்ந்து “சரிப்பா! நீ ரெஸ்ட் எடு! நம்ம சாயங்காலம் பேசலாம்!” என்று கிளம்ப ஆயத்தம் ஆனார். அதே நேரம் முகுந்தனும் வர, நேரம் கலகலவென சென்றது. அதன் பின்னர் நேரம் ஆவது உணர்ந்து கீதா அவனை பள்ளிக்கு விரட்ட, “போங்கம்மா மாமா வந்து இருக்காங்க! நான் இன்னைக்கு ஸ்கூல் போகலை!” என மட்டம் போட பார்க்க,
“உன் மாமா எங்கேயும் போக போறதில்லை. இங்க தான் இருப்பான். நீ ஈவினிங் வந்து உங்க மாமா கூட ஆற அமர பேசு!” மகனை தெரிந்தவராய் கீதா சொல்ல, “போங்கம்மா!” என சிணுங்கியபடியே சென்றான் முகுந்தன். அதன் பிறகான நேரம் முழுதும் மகன், கணவன் பின்னே சென்றது கீதாவுக்கு. அவர்கள் இருவரும் சென்றதும், அண்ணன் மகனிடம் ஊர் நிலவரங்கள் அனைத்தையும் கேட்டு, அறிந்து, வெட்டிக் கதை பேசி என்று பொழுது ஓடியது, அத்தை மருமகன் இருவருக்கும்.
பிருந்தா இன்னும் முறுக்கிக் கொண்டே தான் திரிந்தாள். அடுத்த நாள் காலை அவனது வேலையிடம் பற்றி தெரிந்துக் கொள்ள, முத்துவேலுடன் கிளம்பினான் விஷ்வா. அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வேலைக்கு சேர்ந்தான். முதல் நாள் சீக்கிரமே எழுந்து குளித்து முடித்து, தாயின் உத்தரவின் பெயரில் கோவிலுக்கு சென்றவன், பிரசாதத்தை கீதா, முகுந்தன் கொடுத்துவிட்டு, அடுத்து பிருந்தாவிடம் நீட்ட, அவனையே கண்கள் சுருக்கி முறைத்தாள், பாவை.
“முதல் நாள் வேலைக்கு போறேன். ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்ல மாட்டியா பிந்துக்குட்டி?” வருத்தம் கொண்டு ஆடவன் வினவ, முதல் நாள் வேலைக்கு செல்பவனை வருத்த வேண்டாம் எனும் எண்ணத்தில், வாழ்த்த அவள் வாயை திறக்க, அவளுக்கு இன்னும் தன் மீதான கோபம் குறையவில்லை என நினைத்து, முகம் சுருங்க, திரும்ப போன வேளை, “ஒய் மாமா!” என அழைத்த பிருந்தா, அவன் திரும்பவும், அவன் முன் ஒரு டைரிமில்கை நீட்டி, “ஆல் தி பெஸ்ட் மாமா!” என வாழ்த்தவும் செய்ய, தனது தோழி தன்னிடம் பேசிவிட்டதை எண்ணி முகமெல்லாம் பூரிக்க, அதனை வாங்கிக் கொள்ள, அவனது எண்ணம் உணர்ந்தவளாய், “ரொம்ப சந்தோசப்படாத! நான் இன்னும் கோபமா தான் இருக்கேன்!” முகத்தை திருப்பிக் கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டு கூறினாள், பிருந்தா. அதிலேயே அவளது கோபம் குறைந்து விட்டதை உணர்ந்துக் கொண்டவன், அகமெங்கும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க, “சரிடா பிந்து நீ கோவமா தான் இருக்க! நானும் அதை நம்பிட்டேன்!” என குறும்பு சிரிப்புடன் கூறினான் விஷ்வா.
அவனுக்கு பிடித்த வேலை, கூடவே பிருந்தாவும் தனது மௌனபூட்டை திறந்திருக்க, சற்றே துள்ளலாய் வேலைக்கு சென்றான், விஷ்வா. வேலையிடமும் அவனுக்கு மிகவும் பிடித்திருக்க, அனைத்தையும் ஆர்வமாய் கற்றுக் கொண்டான். இதற்கிடையே பிருந்தாவுக்கும் தேர்வு முடிவுகள் வர, நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தாள், பெண். அன்றைய தினம் விஷ்வாவும் பிருந்தாவின் குடும்பமும் வெளியே இரவுணவிற்கு சென்றனர். சிறியவர்கள் மூவரும் தங்களுக்குள் கிசுகிசுத்தபடி மகிழ்வாய் அமர்ந்திருந்தனர். பிருந்தாவின் கவனத்தை கவரா வண்ணம் முகுந்தனை அழைத்த விஷ்வா, “டேய் முகுந்தா! இந்த பொண்ணை எப்படிடா மலையிறக்குறது?” கவலையாய் அவன் கேட்க,
“அட நீங்க வேற மாமா! அவ எப்பவோ சமாதானம் ஆகிட்டா. அதை வெளிய காட்டிக்கிட்டா நீங்க சாக்லேட் வாங்கி தரமாட்டீங்கள. அதுக்கு தான் ஓவரா சீன போடுறா!” தன் தமக்கையின் வண்டவாளத்தை, தண்டவாளத்தில் ஏற்றினான், முகுந்தன்.
“அடிப்பாவி! இது தெரியாம நான் என்னோட மண்டைய பிச்சுகிட்டு இருந்தேனேடா!” அதிர்வாய் விஷ்வா தனது நெஞ்சில் கை வைத்தபடி பிருந்தாவை அவன் முறைக்க, எதேச்சையாய் அவர்களது புறம் தனது பார்வையை திருப்பிய பிருந்தா மாமனின் முறைப்பை உணர்ந்து புருவம் சுருக்க, விஷ்வாவின் பின்னே அவளைப்பார்த்து வக்காளம் காட்டினான் முகுந்தன். தம்பியின் கேலிப்பார்வையும், விஷ்வாவின் முறைப்பும் அவளுக்கு மண்டைக்குள் மணியடிக்க, “அய்யய்யோ இந்த எருமமாடு மாமாகிட்ட போட்டுக் கொடுத்துட்டான் போலயே!” என உள்ளுக்குள் கலவரமானாள், மாது.
உணவு முடிந்து அனைவரும் வீட்டுக்கு வர, விஷ்வா தனது முறைப்பை விட்டபாடில்லை. வீட்டுக்குள் நுழைந்தவன் அவளை திரும்பியும் பாராது செல்ல, முதல்முறை மனம் வாடிப் போனாள், பிருந்தா. நேரமாவது உணர்ந்து தனது அறைக்குள் புகுந்துக் கொண்டவளுக்கு தூக்கம் தொலைதூரம் தான் போனது.
****************************************************************************************************************************************************************************
பழைய நினைவுகளுள் உழன்றுக் கொண்டிருந்த பிருந்தாவின் நினைவலைகள் மகனின் “அம்மா!” எனும் அழைப்பில் அறுந்துப் போக, மகனது குரலில் பதறிப் போய், குழந்தை எழுந்துவிடக் கூடாதே எனும் பதட்டத்தில் வேகமாய் எழ முயற்சிக்க, மரத்துப் போயிருந்த கால்கள் அவளுக்கு ஒத்துழைக்க மறுக்க, சுரீரென தோன்றிய வலியில், முகம் சுருக்கி “அம்மா!” என காலைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்துவிட்டாள். முயன்று எழுந்தவள், வேகமாய் மகனின் அறை நோக்கி சென்றாள். அங்கே ராகுல் படுக்கையில் அங்கும் இங்கும் உருண்டுக் கொண்டிருக்க, விரைந்து மகன் அருகே சென்றவள், “ஒண்ணுமில்லைடா கண்ணா! ஒண்ணுமில்லை அம்மா வந்துட்டேன்!” என்றபடி குழந்தையை தட்டிக்கொடுக்க, தாயின் குரல் கேட்கவும், மீண்டும் துயிலில் ஆழ்ந்தான், சிறுவன். குழந்தை உறங்கியது கூட உணராது, தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தாள், பிருந்தா. அவளது நினைவுகளில் பலபல நிகழ்வுகள் அணிவகுக்க, அதன் கணம் தாளமுடியாது கண்களை மூடினாள், பெண். மூடிய விழிகளில் இருந்து கண்ணீர் கோடாய் வடிய, அதனை நினைத்து தவித்தது பெண் உள்ளம். தாயின் மடியில் தனது பாரம் அனைத்தையும் இறக்கி வைத்து, ஆறுதல் அடைய துடித்தது பூவை உள்ளம். “அம்மா எனக்கு மட்டும் ஏன் இப்படி? நான் என்ன பாவம் செஞ்சேன்?” மனம் வெகுவாய் காயப்பட்டிருக்க, தொடர் வேதனைகளாலும், வலியாலும் நைந்து போயிருந்த பூமனம் தாய்மடி தேடி தவித்தது, அந்த அந்தகாரத்தில்.
அதே நேரம், தங்களது வீட்டில் மகளின் நினைவு அதிகம் உந்த, பழைய புகைப்படங்களை பார்வையிட்டு கொண்டிருந்தார் கீதாவும். கண்கள் கண்ணீரில் தத்தளிக்க, அதற்கு நேர்மாறாய் உதடுகளில் புன்னகை நெளிய, சிறுவயது பிருந்தாவின் புகைப்படங்களை ஆசையோடு வருடிக்கொண்டிருந்தது கீதாவின் கரங்கள். வரிசையாய் படங்களை திருப்பியவரின் கண்களில் அதுபட, அதில் கூர்மையாய் நிலைத்தது அவர் விழிகள்.
கரங்கள் நடுங்க அந்த புகைப்படத்தை எடுத்தவரின் கண்கள், அது உணர்த்திய செய்தியில், நெஞ்சம் துடித்தது. நெஞ்சம் நின்றுத் துடிக்க, அதிர்வில் தனது கரங்களில் இருந்த அந்த புகைப்படத்தை நழுவவிட்டார், கீதா. அதேநேரம் மனைவியை தேடிவந்த முத்துவேலின் கண்களில் மனைவியின் அதிர்ந்த முகம் பட, அவரைத் தொடர்ந்து தானும் அதில் பார்வையை செலுத்தினார், முத்துவேல். தனது காலடியில் விழுந்த புகைப்படத்தில் நிழலாட, கண்ணீர் வழியும் கண்களோடு கணவனை ஏறிட்டார் கீதா. அதேநேரம் முத்துவேலின் கண்கள் அதே படத்தை வெறித்தபடி நிலைத்திருந்தது.
மௌனமாய் கண்ணீர் சிந்திய கீதா, உதடு துடிக்க கணவனிடம் “இந்த பொண்ணு மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்கும்னு எனக்கு தெரியாம போச்சேங்க! என்றபடி கேவ, சில நொடிகள் கழித்து தான் கணவனின் அசைவற்ற நிலையை உணர்ந்துக் கொண்டார். அதில் திகில் அடைந்தவர், “என்னங்க! என்னங்க! என்னாச்சுங்க?” என்றபடி அவரை உலுக்கியவர், மெதுவாய் “நீங்க இங்க வாங்க!” என்றவாறு அவரை கைத்தாங்கலாய் பிடித்தபடி அருகிலிருந்த நாற்காலியில் அவரை அமரவைத்து, வேகமாய் சமையலறைக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தவரின் நடை ஸ்தம்பித்து போனது.
அந்த புகைப்படத்தை கையில் வைத்தபடி, “ஐயோ சுந்தர்! டேய் சுந்தர்! நானே உன்னை கொன்னுட்டேனேடா! நானே உன் சாவுக்கு காரணம் ஆகிட்டேனேடா! எனக்கு மன்னிப்பே கிடையாதே! நான் பண்ணின பாவத்துக்கு தான் என் பொண்ணை கண்ணாலக்கூட பார்க்க முடியாதபடி இருக்கேனே!” என அதை கையில் ஏந்தியபடி வெடித்து அழுக, அதனைக் கேட்டு திகைத்துப்போய் தனது கையில் இருந்த தண்ணீர் சொம்பை தவற விட்டார், கீதா.
சாரல் அடித்தது…
ஹாய் நட்பூஸ்,
சாரி முன்னாடியே சொன்னேன் எனக்கு fb எழுத பயம் என்று. அதே மாதிரி எனக்கு ஒரு மாதிரி linear ஆஹ கோர்வையாய் எழுத வரலை. சோ நட்புகள் எல்லாரும் என்னை மன்னிச்சு விட்ருங்க.
சாரல் 22
-
- Moderators
- Posts: 31
- Joined: Fri May 15, 2020 11:21 pm
- Has thanked: 29 times
- Been thanked: 1 time
Return to “Enai Nanaikum Sarale”
Jump to
- Tamil Novels
- ↳ Madhumathi Bharath
- ↳ சதிராடும் திமிரே (காதல் கதகளி பார்ட் 2)
- ↳ கந்தகமாய் அவன் காதல்
- ↳ நெருஞ்சியின் நேசம்
- ↳ எனை மீட்பாயோ காதலியே
- ↳ காதலே நீ கானலா
- ↳ Kindle EBook links
- ↳ Story Reviews
- ↳ Books
- ↳ Audio Novels
- ↳ நிலவே உந்தன் நிழல் நானே
- ↳ Kavi Sowmi
- ↳ காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி
- ↳ Sabareeshwari (SSK)
- ↳ நெயிர்ச்சியின் முழுவல் நீ
- ↳ RS Novels
- ↳ எதிர் துருவங்கள்
- ↳ Sutheeksha Eswar
- ↳ Enai Nanaikum Sarale
- ↳ திசை அறியா பயணமிது
- ↳ Iniya
- ↳ மின்னல் விழியே குட்டித் திமிரே
- ↳ இசையின் மலரானவன்
- ↳ Janani Prasanna
- ↳ காதல் கருவறை
- ↳ Malarvizhi
- ↳ விழி மொழியாள்
- ↳ Kirthika Balan
- ↳ போற போக்கில் ஒரு காதல்
- ↳ Laxmi devi
- ↳ மாலை சூடும் வேளை
- குறு நாவல்
- ↳ Abi Nethra
- ↳ என் கோடையில் மழையானவள்
- ↳ Kavi Sowmi
- ↳ Kanchana Malai
- ↳ காதல் மட்டும் புரிவதில்லை
- ↳ Karthika Maran
- ↳ உயிரே என் உலகமே
- ↳ நல்லவனின் கிறுக்கி
- ↳ Gowry Vicky
- ↳ Chandrika Krishnan
- ↳ மந்திரமென்ன மங்கையே
- ↳ Sahana Harish
- ↳ Malarvizhi
- ↳ உயிரானவளே
- ↳ Rajasekaran Bose
- ↳ காமனின் காதல்
- ↳ Raju Gayu
- ↳ தேன்மொழி
- ↳ Manosha
- ↳ கண்ணாளனின் கண்மணியே
- தமிழ் சிறுகதைகள்
- ↳ Archana Nithyanantham
- ↳ Inba Muthuraj
- ↳ Kanchana Malai
- ↳ Gowry Vicky
- ↳ Sethupathi Viswanathan
- ↳ Nan Ungal Kathiravan
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ பாவை கதைகள்
- ↳ Raju Gayu
- ↳ Renuka Mary
- ↳ Kaayaampoo
- ↳ Venba Ilanthalir
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Kavi Sowmi
- ↳ Saha
- ↳ Sahana Harish
- ↳ Sivaranjani Sivalingam
- ↳ Bhagi
- ↳ Muthu Saraswathi
- ↳ Jothi Ramar
- ↳ Sankari Dayalan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ Bhanurathy Thurairajasingam
- Completed Novel Links
- இருமுனைப் பேனா
- ↳ மாங்கல்யம் தந்துனானே
- ↳ தாய்மையிலும் விஷமுண்டு
- கவிதைகள்
- ↳ Bharathi Kannamma
- ↳ Preethi
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ Raji Prema
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Abi Nethra
- ↳ Archana Nithyanantham
- ↳ Kanchana Malai
- ↳ Saha
- ↳ Sethupathi Viswanathan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ காயாம்பூ
- ↳ Bhanurathy Thurairajasingam
- ↳ சித்துவின் வரிகள்
- சமையலறை
- ↳ Anjali Suresh
- பொது அறிவுத் தகவல்கள்
- படித்ததில் பிடித்த கதைகள்
- மருத்துவம்
- மனதோடு
- ↳ மறுபாதி
- ↳ நீயின்றி நானும் இல்லை
- ↳ மாயவனம்
- ↳ அ(இ)வளுக்கென
- ↳ உன்மத்தம் கொண்டேனடி உன்னால்
- ↳ Zaki
- ↳ காதல் போதையடா நீ எனக்கு