Page 1 of 1

சாரல் 7

Posted: Tue Jul 14, 2020 6:35 pm
by Sutheeksha eswar
வணக்கம் செந்தாமரைக்களே,
என் எழுத்து எப்படி இருக்கு. எனக்கு நான் ஏதோ உரைநடை இல்ல கட்டுரை எழுதுறது மாதிரியே இருக்குது. எப்படி இருக்கு நான் எழுதுறது, நான் சொல்ல வரது உங்களுக்கு புரியுதா என்று சொன்னால் மிக்க மகிழ்ச்சி.

போன எபிக்கு பொம்மை போட்டு கமெண்ட் செய்து என்னை உற்சாக படுத்திய நல் உள்ளங்களுக்கு நன்றி.






சாரல் 7

அனைத்தையும் அசை போட்டுக்கொண்டு இருந்தவனை கலைத்தது, “டேய்! நீ இன்னும் கிளம்பாம என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” எனும் அசோக்கின் குரல். அதில் தன் நினைவு அடைந்தவனாய் அவனை பார்த்து முகம் விகசிக்க புன்னகை புரிந்தவனை கண்டு, தன்னை மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான், அசோக்.

நண்பனின் அசையா பார்வை கண்டு, “என்னடா அப்படி பாக்குற?” என கேட்க,
“இல்லடா! நீ இப்படி சிரிச்சு பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு!” என்றா சொல்வான்? அவன் என்ன பைத்தியமா? இப்படி அவன் சொன்னால் ஒரு வேளை நண்பனின் மனம் மாறி விடுமோ? இப்போது தான் இவன் தனது கூட்டுக்குள் இருந்து வெளியே வருகிறான்.

இன்றைய நாளின் மகழ்ச்சியை இதை அப்படியே சொல்லி அவன் மனநிலையை கெடுக்க வேண்டுமா? என்ற எண்ணம் தோன்ற, அதை நெருப்புக்கோழி எதிரியை கண்டு மண்டையை மண்ணுக்குள் புதைத்து கொள்வது போல, அப்படியே தனக்குள் புதைத்து கொண்டு, “இல்ல மச்சான் நீ பொண்ணா பொறந்து இருக்க கூடாதானு நெனச்சேன்!”

அவன் சொல்ல வருவது புரியாமல், புரியாத பாவனையில் “என்னடா சொல்ற?” என கேட்க, அதில் அவனது விஷம குணம் தலை தூக்க, அவனை விட்டு சிறிது தூரம் தள்ளி நின்றுக்கொண்டு, “இல்ல மச்சான்! நீ மட்டும் பொண்ணா இருந்து இருந்தா, முன்னாடியே உன்ன பார்த்து….. கரெக்ட் பண்ணி கல்யாணம் கட்டி இருப்பேன்!” என சொல்ல. அதில் இவன் கண்கள் அதிர்ச்சியில் எண் பூஜ்ஜியம் போலாக, மேலும் “இப்போ கூட ஒன்னும் கெட்டு போகலடா!” என சொல்லி கூட முடிக்கவில்லை.

“அடேய்!” எனும் அலறலுடன், வேகமாக தனது நாற்காலியை விட்டு எழுந்து வர. அசோக் அதற்குள் அந்த அறை வாசலை அடைந்து இருந்தான்.

“மச்சான்! இப்போ நீ ரொம்ப நல்ல மூட்ல இருக்க! நான் உன்னை வந்து அப்பறமா பார்க்குறேன்!” என இவனை பார்த்து சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, “வாங்க!” என பவ்யமாக அழைக்க, யாராக இருக்கும் என இவன் திரும்பி பார்த்த வேளை, அவன் அசந்த நேரம் பார்த்து, அவனை பிடிக்க வர, அதற்குள் சுதாரித்து அந்த அறைக்குள்ளே ஓட ஆரம்பித்தான் அசோக்.

“டேய்! ஒழுங்கு மரியாதையா நின்னுடு! நான் வந்தேன் மவனே நீ சாஸு தான்!” என விஷ்வா எச்சரிக்க, அதை பொருட்படுத்தாமல் ஓடி கொண்டு இருந்தான் அசோக்.

இவர்கள் இங்கே கண்ணா மூச்சி ஆடிக்கொண்டு இருக்க, வீட்டில் தனது தந்தை தன்னோடு செலவழிக்க போகும் நேரத்திற்காக வீட்டில் உள்ளவர்களையே அமர்களப்படுத்திக்கொண்டு இருந்தாள், அவனின் குட்டி தேவதை.

எப்படியோ அவனை எட்டி பிடித்து, தனது கை வளைவுகள் கொண்டு வந்து அவனது கழுத்தை நெருக்கி பிடித்த வண்ணம், அவன் மண்டை அதிர அதிர, கொட்டினான் விஷ்வா.

“டேய் மச்சான்! என்ன விட்டுடுடா! நான் உன் பெஸ்ட் பிரெண்டுடா !” என வலி தாங்க முடியாமல் அவன் கதற, “இனிமே இப்படி சொல்லுவியா? சொல்லுவியா?” என மேலும் பல கொட்டுக்களை பரிசளித்து விட்டு தான் ஓய்ந்தான் விஷ்வா.

தனது நண்பனின் முகம் இறுக்கம் இல்லாமல், பல காலம் கழித்து இருப்பதை கண்டு, “நீ எப்போவும் இப்படி சிரிச்சுகிட்டே இருக்கணும் டா மச்சான்!” என அசோக் சொல்ல, முகம் மாற ஆரம்பித்தது, விஷ்வாவிர்க்கு.

“அப்பா சாமி! உடனே நீ மலை ஏறிடாதே! நான் ஒண்ணுமே சொல்லல டா அப்பா!”

நீ முதல கிளம்பு!” என சொல்ல, நண்பன் பேச்சை மாற்றுவது புரிய, “எங்கடா ?” என்றானே பார்க்கலாம். அவனது கேள்வியில் கரண்ட்டு கம்பத்தில் அடிபட்ட காக்கா போல ஆனது அசோக்கின் நிலைமை.

“என்னாது எங்கயா !” அடேய் மறுபடியும் முதல இருந்து ஆரம்பிக்காதடா என்னால முடியல! உன் பொண்ண வெளிய கூட்டிட்டு போறேன்னு சொன்னியே டா அதுக்குத்தான்!” என.

உடனே தனது கை கடிகாரத்தை திருப்பி பார்த்து பதறியவனாய், நேரம் ஆவதை உணர்ந்து, “ அச்சச்சோ! டேய் எரும உன்னால தான் இப்போ லேட் ஆகி போச்சு! நவுறு டா அங்குட்டு!” என அவனை தள்ளாத குறையாக அவனை தொட்டு நகர்த்தி முன்னேற,

“டேய் கிராதகா! எல்லாம் என் நேரம் டா எல்லாம் என் நேரம். நீ இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ! நேரமாச்சே னு உன்னை நான் கிளம்ப சொல்ல வந்தா, நீ என்னையே குறை சொல்லரியா?” என அவனை திட்ட அவனையும், வெட்டுக்கிளி போல படையெடுத்த அவன் வசவுகளையும் கண்டு கொள்ளாமல், “சரி! சரி! வெட்டி பேச்சு பேசாம போய் வேலையை பாருடா!” என அசால்ட்டாக பிரியாணி செய்தது போல துடைத்து விட்டு சென்றான், அவனின் நண்பன்.






மதியம் 3 மணி போல வீட்டுக்கு வரும் பிரகதி, எப்போதும் வீட்டுக்கு வந்து கை கால் கழுவி, உடை மாற்றி, தனது பாடி செய்து தரும் மாலை நேர சிற்றுண்டியை கொறித்து விட்டு சிறிது நேரம் விளையாடிவிட்டு, ஹோம்ஒர்க் செய்து முடித்து சமத்தாக 8 எட்டு மணிக்கு சாப்பிட்டு விட்டு சீக்கிரமாகவே உறங்கி விடுவாள்.

எப்போதும் தாமதமாக வரும் விஷ்வாவும், அவன் மகளும் சந்திக்க முடியாமலே போகும். அவன் வீட்டில் இருக்கும் நேரமும் குறைவு தான். அவன் வரும் நேரம் இவள் உறங்கி விடுவதால், தூங்கும் மகளை ஒரு முறை பார்த்து விட்டு, அவள் முன் உச்சியில் சிறு முத்தம் பதித்து சென்று விடுவான்.

காலை நேரமும் அவன் ஆபீஸ்க்கும், இவள் பள்ளிக்கும் செல்ல நேரம் ஆகிவிடும் என்பதால், இருவருக்குமான நேரம் மிக குறைவு. என்ன தான் தாய் தன்னை பார்த்துக்கொண்டாலும் தனது தகப்பனை மிகவும் தேடினால் பெண்.

அதுவும் தனது பள்ளியில் உடன் படிக்கும்.பிள்ளைகளை அவர்கள் தந்தை கொண்டு வந்து பள்ளியில் விடுவதும், கூட்டி செல்வதும் என பார்த்து தனது தந்தை அது போல் செய்ய வேண்டும் என மிகவும் ஆசை பட்டது குழந்தை.

தாயிடம் சொன்னால், “உன் கூடவே இருக்கேன்! உனக்காகவே பார்த்து பார்த்து செய்றேன் ஆனா நீ உன்னை கண்டுக்காத உங்க அப்பாவை தான் தேடுற!” என கூறி அடிப்பாள் என்பதால், தனது மனத்திருக்குள்ளே போட்டு மறுகியது குழந்தை.

இங்கே அசோக்கிடம் சொல்லி கொண்டு கிளம்பிய விஷ்வப்ரகாஷ், லிப்டை நோக்கி சென்று பட்டனை அழுத்தி விட்டு காத்திருக்க, அவனது பொறுமையை சோதிக்க, காத்திருக்கும்அந்த நொடி கூட அவனுக்கு யுகமாக தெரிந்தது.

அவசர அவசரமாக பார்க்கிங் வந்தவன், தனக்குரிய பார்க்கிங் ஏரியா சென்று வேகமாக தனது காரை அடைந்து அதை உயிர்ப்பித்து அதனை இயக்கினான்.

மறுபடியும் ஒரு முறை தனது கை கடிகாரத்தை திருப்பி பார்த்தவன், நேரம் ஆவது அறிந்து லேசாக பதற்றம் அடைய, அதன் விளைவாக அவன் நெற்றியில் வியர்வை அரும்புகள் அந்த ஏ.சி காரிலும் அவனுக்கு அரும்பியது.

இங்கு வீட்டிலோ, தனது தந்தையுடன் வெளியே செல்ல ஆயத்தம் ஆகி கொண்டு இருந்த பிரகதி, வீட்டையே ரெண்டாக்க, அபியும் அவளது அழிச்சாட்டியங்களை இழுத்து பிடித்து வைத்த பொறுமையுடன் பொறுத்துக் கொண்டு இருந்தாள்.

அவன் வருகிறேன் என சொன்ன நேரம் நெருங்கிக்கொண்டு இருக்க மகளின் பதட்டம் கூடியது. மணி ஐந்தை தொட இன்னும் 5 நிமிடங்களே இருக்க தந்தையை காண ஆவலோடு காத்திருந்தாள், பிரகதி.

அவன் சொன்ன நேரம் தாண்டி நேரம் சென்று கொண்டே இருக்க, முதலில் அலட்சியமாக நின்று கொண்டு இருந்த அபியும் ஓரக்கண்ணால் மகளை கவனித்து கொண்டு தான் இருக்க, நேரம் செல்ல செல்ல அனிச்சம் மலர் போல வாட துவங்கியது, மகளின் முகம்.

மகளின் வாட்டம் பொறுக்காமல் மகளுக்காக அவன் சீக்கிரம் வர வேண்டுமே என்கிற தவிப்பில் இவளும் இருக்க, அவன் தான் வந்த பாட்டை காணோம்.

மகளின் முகத்தை பார்த்தாள். அதில் கண்ணில் நீர் 100 நாள் வேலையில் வெட்டி வைத்த குளம் போல தேங்க, அதை காண சகியாமல்,

“பிரகதி மா! நீங்க போய் உள்ள விளையாடுங்க!” என்ற விஷ்வாவின் தாய் வித்யா அவளை அழைத்து செல்ல, உள்ளுக்குள் பொறுமிக்கொண்டே, செல்லும் தன் அவர்களையே வெறித்தவாறு,

“க்கும்! அவன் வர மாட்டான்! அவனை நம்பினா இப்படி தான் நட்டாத்துல நிக்கனும்!” என அவள் முணுமுணுக்க,

“ரொம்ப நன்றி!” என தன் முதுகு பின்னே கேட்ட விஷ்வாவின் குரலில், பதறி பயந்து போய் திருத்திருத்து,
அவள் திரும்ப,
“என் மேல உன் நம்பிக்கையை வச்சத்துக்கு!” என அவளை பார்த்தவாறு அவன் அழுத்தமாக அவள் மட்டும் கேட்கும் குரலில் கூற, அவள் கண்கள் மிட்டாய் திருடி மாட்டி கொண்ட குழந்தையை போல, மாட்டிக்கொண்டவளாய் அதிர்ச்சியில் விரிந்தது.

சாரல் அடிக்கும்…