நிறத்தில் பேதமில்லை
Posted: Fri Nov 20, 2020 7:43 am
நிஜத்தில் பேதமுண்டு...
உலகம் நினைத்திருக்கலாம்
உன்னை கொன்று
உணவை எடுப்பேன் என்று..
உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்
பற்கள் பதிய
முட்கள் காட்டில்
அன்பின் சாட்சிகளாய்
நீயும் நானும்
வலம் வரும் உறவுகள் என்று...
- சேதுபதி விசுவநாதன்