தத்துப்பிள்ளை
Posted: Mon May 25, 2020 3:24 pm
பிச்சை எடுத்து
காமத்தின் பசியிலே
கருவினை கொடுத்தானே
உணர்வின் பிடியில்
மதியினை இழந்து
உடலின் படையலில்
உயிரை ஏற்றாளே...
பசியும் தீர்த்து
பறந்த பின்னும்
பத்து திங்கள்
சுமந்தது ஏனோ???
அவளுக்கும் தெரியவில்லை...
உடலை விட்டு
உடலும் பிரிய
உள்ளம் மறந்து
உயிரை எறிந்தாலே...
குப்பை தொட்டியும்
குடிதர மறுக்க
குரைக்கும் நாயால்
கூட்டமும் சேர்ந்ததே..
அன்பின் வடிவாய்
அவளின் வருகை
பிஞ்சு குழந்தையும்
அனாதை இல்லத்தில்...
வருடங்கள் ஓட
காயம் புரிய
கண்ணீர் மட்டும்
கடலாய் போகிறதே...
விதியின் வலையில்
வயறும் மறுக்க
வாடிய தம்பதி
வந்தனர் தேடியே..
இவனும் துடிக்க
அவளும் விரட்ட
தத்து குழந்தையென
தானமாய் சென்றானே...
பிரிவின் வலிகளை
மீண்டும் உணர
வழிகளும் மறைய
ஒலியற்று போறானே...
நாட்களும் நகர
நாவும் சொன்னது
அள்ளி அணைத்தவளை
அம்மா என்று..
உச்சிதனை முகர்ந்து
உள்ளத்தில் மகிழ்ந்தவள்
கண்ணீரோடு கதறினாள்
கடந்தகால நிகழ்வுகளோடு...
அவனுக்கு தெரியாது!!!!
அனாதைஇல்லத்தில் அரவணைத்தவள்
அப்பாவின் மனைவியென்றும்
அழைத்து வந்தவள்
அவனின் அம்மாயென்றும்...
- சேதுபதி விசுவநாதன்