Page 1 of 1

மறந்துவிட்டேனடி

Posted: Sat May 30, 2020 3:52 pm
by yaazhistories
images(11).jpg
#மறந்துவிட்டேனடி_உன்னை

கண்கள் இரண்டில்
கைது செய்து
நொடிப்பொழுதில் பிரிந்தவளே
மறந்துவிட்டேனடி உன்னோடு நான்வாழ்ந்த நினைவுகளை

கரம் கோர்த்து காதலர்கள்
நடப்பதை பார்க்கும் போதும்

கல்லூரி கட்டிடங்கள்
கண்களில் தெரியும் போதும்

கட்டியணைத்து வண்டியிலே
ஜோடிகள் செல்லும் போதும்

கண்ணீரை மறைத்து
ஜன்னலோர பயணத்தின் போதும்

இரவு நேரத்தில் வண்டியினை ஓட்டும் போதும்

யாருமில்லா இரவின்
நிழலில் நிலவோடு பேசும் போதும்

நிமிடங்கள் ரணங்களாக்கும்
தனிமையோடு இணையும் போதும்

துணையின்றி சாலையோரம் நடக்கும் போதும்

நாம் சேர்ந்து‌ சென்ற
திரையரங்குகளை கடக்கும் போதும்

திரையரங்குகள் திமிருகின்ற
இருக்கைகளை காணும் போதும்

கைகோர்த்து சிரித்துக்கொண்டே நாம் பார்த்த படங்களை பார்க்கும் போதும்

திரைப்படத்தில் காதல் காட்சிகள் ஓடும்போதும்

கோவிலுக்குள் திருமண ஓசைகள் கேட்கும்போதும்

யாரோ ஒருவன் யாரோ ஒருத்திக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் போதும்

பேருந்தில் இரட்டை இருக்கையில் இருவர் கொஞ்சி பேசிய போதும்

படுக்கையறை போர்வைக்குள் உன் புகைப்படத்தை செல்போனில் பார்க்கும் போதும்

யாருக்கும் தெரியாமல் தலையணைக்குள் முகம் புதைத்து அழும்போதும்

உந்தன் பெயரை யாரோ உச்சரிக்க ஒலியின் திசையில் திரும்பும் போதும்

புத்தகங்களில் உன் பெயர் வாசிக்கும் போதும்

முகநூலில் உன் பெயரோடு யாராவது நட்பு அழைப்பு விடும் போதும்

நண்பன் தன் காதல் மகிழ்ச்சிகளை கூறிடும் போதும்

உன் நண்பர்களிடம் குறுஞ்செய்தி வந்தால் உன்னை பற்றி ஏதாவது இருக்குமோ என்று எண்ணும் போதும்

உண்மையான காதல் எப்போதும் பிரியாது என்று சொல்லும் போதும்

நான் அழுவது போல் யாராவது தன் காதல் பிரிவை நினைத்து அழும் போதும்

எந்தன் வீட்டில் திருமணம் பற்றி பேசிடும் போதும்

உறக்கம் தொலைத்து தொலைபேசியில் யாருடனாவது பேசும்போதும

இமைகள் மூடி இயற்கை தூக்கத்தில் கனவிலும் உன் முகத்தை கண்ட போதும்

ஒரு தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டிவிடும் போதும்

தந்தையின் தோளில் சாய்ந்த மகளை காணும் போதும்

நாம் சேர்ந்து‌ சென்ற இடத்தை காணும் போதும்

உன்னை மறக்க வேண்டும் என்று நினைத்த போதும்

நம் வாழ்வோடு தொடர்புடைய எந்த விசயம் பற்றி கண்டு கேட்டு கட்டுண்ட போதும்

இன்னும் சொல்லா முடியாத எத்தனை நினைவுகளோடு அசைப்போட்ட நேரங்களை தவிர

மற்ற நேரங்களில் உன்னை
மறந்துவிட்டேனடி....

உயிரோடு இணைந்தவளே...

யாரிடமும் கேட்டுவிடாதே
அவன் என்னை மறந்துவிட்டானா என்று..

நீயில்லாத வாழ்க்கையில்
எப்படி வாழ்வேன் என
தெரிந்தும் பிரிந்து சென்றவளே‌..

அனைவருக்கும் தெரியும்
நான் உன்னை மறந்துவிட்டேன் என்று...

- சேதுபதி விசுவநாதன்