யாருமில்லையடி கண்ணம்மா
Posted: Thu Jul 09, 2020 11:57 am
உணர்வுகளின் வழியாக
உயிர் வரை சென்றுவிட்டாய்
உறவுகளின் மொழிகளால்
எனையும் பிரிந்துவிட்டாய்....
இனிமையான நாட்களையெல்லாம்
நினைவுகளாய் மாற்றிவிட்டு
தனிமையிலே விழிநீரில்
நனைய விட்டு போனதேனோ???
காலங்கள் ஓடினாலும்
கனவுகள் மட்டும் மாறவில்லை
வானவில் வண்ணங்களும்
கருப்பு வெள்ளையாய் மாறியதடி...
உன்னோடு நான் வாழ்ந்த
நடக்காத வாழ்க்கையினை
நெஞ்சோடு சேர்த்து வைத்து
நினைவோடு பயணிக்கிறேன்..
என் இதய கூட்டினிலே
சுவாசிக்க மட்டுமல்ல
எனை வாசிக்கவும்
பெண்ணென்று யாருமில்லையடி கண்ணம்மா...
உன்னை தவிர......
- சேதுபதி விசுவநாதன்