மாலை-22
பாடல் வரிகள்
மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க..
கொட்டியது மேளம்....
குவிந்தது கோடி மலர்...
கட்டினான் மாங்கல்யம்...
மனை வாழ்க
துணை வாழ்க...
குலம் வாழ்க...
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ கடமை முடிந்தது கல்யாணம் ஆக அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட...
திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் மீனாட்சி அம்மன் கோவில் குழுமியிருந்தனர். பச்சை நிறப் பட்டுப்புடவை, ரோஜா நிற ஜாக்கெட் அதற்கு தோதான மணப்பெண் அலங்காரங்களுடன் அப்ஸரஸ் என ஜொலித்தால் மங்கையர்க்கரசி. தன் மனம் கவர்ந்தவனே மணளனாகும் மகிழ்ச்சியில் சூரியனைக் கண்ட சூரியகாந்தியாய் முகம் மலர்ந்திருந்தது. போதாதற்கு விக்ரம் ஓரப் பார்வையிலேயே மங்கையவளை சிவக்க வைத்துக் கொண்டு இருந்தான்.பட்டு வேட்டி சட்டையில் ஆண்மையின் இலக்கணமாய் நின்றிருந்தான் .மனதை பறித்தவளே மனைவியாக போகிறாள் என்ற சந்தோஷத்தில் விக்ரமின் முகம் மிளிர்ந்தது. ஒரு நல்ல முகூர்த்த நேரத்தில் மீனாட்சி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்த மங்கள நாணை மங்கையின் கழுத்தில் அணிவித்து மங்கையின் கணவன் ஆகிவிட்டான். (மனைவியாக்கிக் கொண்டான் என்று தான் சொல்லவேண்டுமா? கணவனாகி விட்டான் சொல்லக்கூடாதா? நாம் கொஞ்சம் மாற்றி சொல்லலாம்)
திருமணம் முடிந்து அனைவரும் மங்கையும் இல்லம் திரும்பினர் 6 டூ 7 முகூர்த்தம் என்பதால் வீட்டிலேயே அனைவருக்கும் காலை டிபன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின் விக்ரம் குடும்பத்தினர் ரிசப்ஷன் வேலையை பார்க்க வேண்டும் என உடனடியாக கிளம்பினர் . விக்ரம் தன்னுடைய காரை இங்கு தேவைப்படும் என விட்டு செல்ல சொல்லி இருந்தான். மங்கையின் வீட்டில் வசதி இருந்தும் கார் வாங்கவில்லை . ராமநாதன் தன் சொந்த உபயோகத்திற்காக ஒரு ஸ்கூட்டர் வைத்திருந்தார். அவருக்கு கார் ஓட்ட தெரியாது மங்கையும் பழகவில்லை எனவே எங்காவது செல்ல வேண்டுமென்றால் தெரிந்த டிராவல்ஸ் காரில்தான் சென்று வருவார்கள். ராமநாதன் தன் மகள் மங்கைக்கு சீதனமாக கார் மற்றும் பிற சீர்வரிசைகள் அனைத்தையும் தர எண்ணினார். விக்ரம் தான் தனது மனைவிக்கு தேவையான அனைத்தையும் என்னால் தர இயலும்.நீங்கள் உங்கள் அன்பை மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறி விட்டான். அவர் நகைகளை மட்டுமாவது நான் போட்டு அனுப்புகிறேன் எல்லாம் அவளுக்காக ஆசையாக செய்தது என்று கூறினார் .அதற்கு மட்டும் ஒத்துக் கொண்டான் விக்ரம்.
எல்லோரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தனர். மணமக்கள் ராமநாதன் குல தெய்வமான அழகர் மலைமேல் உள்ள ரங்கநாதர் கோவிலுக்கு கிளம்பினர்.அவர்களுடன் சுந்தர் அவனுடைய தங்கையை ஜானவி விக்ரமின் தோழன் சுரேந்தர் ஆகியோரும் உடன் சென்றனர்.
சுந்தர் காரை ஓட்டினார் அவன் அருகில் அவன் தங்கை ஜானவி அமர்ந்திருந்தாள். விக்ரமும் மங்கையும் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர். அதற்கும் பின்னால் சுரேந்தர் அமர்ந்திருந்தான்.
விக்ரம் மங்கையின் கைகளை எடுத்து தன்னுடைய கைகளுக்குள் வைத்துக் கொள்ள வேறு எதுவும் அவளுடன் பேச முயற்சிக்கவில்லை . தாய் தந்தையரை விட்டு பிரியப் போகிறோம் என்ற கலக்கத்தில் இருந்தவளுக்கு அவனது இந்த செய்கை ஆறுதல் வழங்க மங்கை அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
சுரேந்திரனும் ஜானகியும் நாங்களும் இருக்கிறோம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர்களை கேலி செய்து கொண்டிருந்தனர்.
இவ்வாறாக ரங்கநாத சுவாமி கோவிலை அடைந்தனர். அங்கு ஏற்கனவே வாங்கி வைத்திருந்த அனுமதி கடிதத்தை காண்பித்து விட்டு கோவில் மலை மேலே ஏறத் தொடங்கினர்.
ஜானவி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோனே தூக்கிக்கொண்டு மலை ஏறுவது போல் நீங்களும் தூக்கிக்கொண்டு ஏறவேண்டும் அண்ணா . அப்போதுதான் உங்கள் இருவரின் வேண்டுதலும் பலிக்குமாம் என்று வம்பிழுத்தாள்.
அதற்கு என்ன தூக்கிக்கொண்டால் ஆகிற்று என்று கூறி சிரித்தான் விக்ரம்.
வேண்டாம். 50 படிகளுக்கு மேல் இருக்கும் உங்களுக்கு ஏன் கஷ்டம் வேண்டாமே என்றவள் விக்ரமின் ரசனைப் பார்வையில் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள் .விக்ரம் மங்கையை தூக்கிக்கொண்டு மலை மேலே ஏறினான்.
கோவிலுக்கு செல்வதற்காக மணியும் கார்த்திக்கும் பரிசளித்திருந்த லாவண்டர் நிற பட்டுப் புடவையையும், வைர நெக்லஸும் அணிந்திருந்தாள். அவள் மனம் மகிழ்ந்திருந்ததலோ என்னவோ அவளின் அழகு பலமடங்கு அதிகரித்து தெரிந்தது. மங்கை விக்ரம் பார்க்காத போது அவணை பார்ப்பாள் அவன் பார்க்கும்போது இமைகளை தாழ்த்திக் கொள்வாள்.இருவரும் பார்வையிலேயே காதல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தனர்.விக்ரம் ஒற்றை புருவத்தை ஏற்றி என்ன என்று கண்களாலேயே கேட்டான்.அவன் பார்வையில் கண்ணம் சிவந்தவள் தன் முகத்தை அவன் மார்பிலே வைத்து மறைத்துக்கொள்ள இந்த பயணம் இப்படியே நீளக் கூடாதா என்று இருந்தது இருவருக்கும்.
கோவில் வந்து விட்டது இப்போதாவது மங்கையை கீழே இறக்கி விடுங்கள் விக்ரம் அண்ணா என்று கூறி கலாய்த்தாள் ஜானவி. பின் அனைவரும் சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பினர்.
மங்கை தன் பெற்றோரின் அறையில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தாள்.
விக்ரம் மங்கையின் அறையில் இருந்தான்.
அங்கே அவளுடைய அப்பா புதிதாக தன் மருமகனுக்காக ஏசி மாட்டி இருந்தார். பொதுவாக மங்கை தன் அம்மாவுடன் தன் பாட்டியின் அறையில் தான் படுப்பாள் . மாதவனும் ராமநாதனும் வெளி வாராண்டாவில் தான் படுப்பார்கள் எனவே அவர்களுக்கு ஏசி தேவைப்படவில்லை ஆனால் விக்ரம் மங்கை திருமணம் முடிந்தவுடன் அவனுடைய வசதிக்காக இதையெல்லாம் செய்திருந்தார்.எனக்கு உங்கள் பெண்ணைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று கூறிய தன் மருமகனுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்து இருந்தார்.
தன்னுடைய அறையில் சரியாக சிக்னல் கிடைக்காமல் போகவே வீட்டின் பின்புறம் வந்து நின்று போன் பேசிக் கொண்டிருந்தான் விக்ரம் .
அப்போது சுந்தரின் அம்மா பத்மாவிடம் மற்றொரு பெண் இந்த கொடுமையை பார்த்தீர்களா நம்முடைய சுந்தருக்குத்தான் மங்கையை கொடுக்கப் போவதாக ஏற்கனவே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் பணக்காரர்களை கண்டவுடன் மனம் மாறிவிட்டது. நம்முடைய பிள்ளை ராஜாவாட்டம் இருக்க அவர்கள் யாரோ ஒருவனுக்கு கட்டிவைத்து விட்டார்கள் . அவளும் சுந்தர் மாமா என்று சுற்றியது என்ன இப்பொழுது கணவனுடன் இழைவது என்ன என்று கூறினார்.
தவறாக பேசாதே சரோஜா . சுந்தர் தான் என்ற ஆரம்பித்தவர் வேண்டாம் உள்ளதை கூறினால் இவர் அதையும் திருத்து பேசுவார் என்று ஜாதக பொருத்தம் இல்லை அதனால் தான் வேறு மாப்பிள்ளை பார்த்தோம் .மேலும் மங்கை சுந்தர் உடன் சாதாரணமாகத்தான் பழகினாள் வேறு எந்த எண்ணமும் இல்லை என்று கூறினார்.
என்ன சொல்வது அவள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டபின் வேறு எப்படிக் கூற முடியும் என்று அதற்கும் ஒரு பதில் கூறினார் அந்த சரோஜா.
இத்துடன் இந்த பேச்சை விடுங்கள் என்றார் பத்மா.
அந்த சரோஜா தன் மகனுக்கு மங்கையை பெண் கேட்டார். அவன் ஒரு சூதாடி .அவனுக்குப் பெண் தர விருப்பமில்லை எனவே சுந்தருக்குத்தான் கொடுக்கப் போகிறோம் என்று ராமநாதன் கோபமாக கூறிவிட்டார் .அதை மனதில் வைத்து தான் வீட்டில் பிரச்சினையை கிளப்ப முயன்றார் சரோஜா.
இதையெல்லாம் தற்செயலாக கேட்ட விக்ரம் ஒருவேளை மங்கைக்கு சுந்தரை பிடித்திருக்குமோ? என்ற ஒரு நிமிடம் என்ன நினைத்தான். கண்டிப்பாக இருக்காது. மங்கையின் கண்களில் இருக்கும் நேசம் தனக்கானது என்று முழுமையாக நம்பினான் விக்ரம்.
பிறகு இரவு சடங்கிற்காக எளிய விதமாக அலங்கரித்து அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்று விட்டார் பத்மா.
அங்கே விக்ரம் பட்டு வேட்டி சட்டையில் அவளுக்காக காத்துக்கொண்டு இருந்தான்.
மாம்பழம் வண்ணப் புடவையில் என்ன அழகா இருக்கா என இமைக்காமல் ரசித்து கொண்டிருந்தவனை பால் சாப்பிட சொன்னாங்க என்றவாறு அவனுடைய கவனத்தைக் கலைத்தாள்.
அழகோவியமாய் இருந்தவளை அள்ளி அணைக்க நீண்ட கைகளை கட்டுப்படுத்திக்கொண்டு தான் கொஞ்சம் பால் சாப்பிட்டு விட்டு அவளுக்கும் கொடுத்தான் .
இங்கே உட்கார் என்று கூறி மங்கையை அமர வைத்தான் விக்ரம்.நாம் கொஞ்சம் பேசலாமா என்று கேட்டான்.
அதை ஆமோதிப்பது தலையை மட்டும் அசைத்தாள். நீ உன்னுடைய படிப்பை முடிக்கும் முன்னரே நாம் திருமணம் நடந்து விட்டது. நானும் ஒரு சில வேலைகளை முடித்துவிட்டு தான் திருமணம் பற்றி யோசிக்க எண்ணியிருந்தேன் . எதிர்பாராத விதமாக நம் திருமணம் நடந்து விட்டது.பரவாயில்லை நீ உன்னுடைய படிப்பை நல்ல படியாக முடி.நானும் அதற்குள் என்னுடைய வேலைகளை முடித்துவிடுகிறேன். பிறகு நம்முடைய வாழ்க்கை தொடங்கலாம். அதுவரை நண்பராக இருப்போம்.சரிதானே இதில் உனக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே என்றான் விக்ரம்.
மங்கையின் மனதில் உள்ளதை அறியாமல் தன் நேசத்தை அவளிடம் வெளிப்படுத்த தயங்கினான் அந்த ஆறடி ஆண் மகன்.மங்கையின் செயற்பாடுகளில் விக்ரமின் மீதான நேசத்தை அறிந்திருந்தாலும் அவள் வாய்மொழியாக கேட்டு விட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணினான்.காதல் கொண்ட மனது அதற்கு இணையான பிரதிபலிப்பை எதிர்பார்த்தது.ஒருவேளை இல்லாமல் போனால் என்று பயந்தது. இடைப்பட்ட நாட்களில் அவளின் மனதை அறிந்து கொண்டு பின் தன் நேசத்தை அவளிடம் அறிவிக்கலாம் என்று எண்ணினான் விக்ரம்.
விக்ரமின் இந்த தயக்கத்தால் பின்னாளில் ஏற்பட போகும் பிரிவை அறியாமல் போனான் அவன்.
மாலை தொடுக்கப்படும்....
வணக்கம் நண்பர்களே
தாமதமாக பதிவிற்கு மன்னிக்கவும். என் தம்பி தங்கையின் பொறியியல் கல்லூரி கலந்தாய்வு வேலை என்னை இழுத்துக் கொண்டது . இனிமேல் தவறாமல் பதிவிட்டு விடுகிறேன். படித்துவிட்டு தங்களுடைய மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
உங்கள் தோழி
லக்ஷ்மி தேவி.
மாலை சூடும் வேளை-22
Jump to
- Tamil Novels
- ↳ Madhumathi Bharath
- ↳ சதிராடும் திமிரே (காதல் கதகளி பார்ட் 2)
- ↳ கந்தகமாய் அவன் காதல்
- ↳ நெருஞ்சியின் நேசம்
- ↳ எனை மீட்பாயோ காதலியே
- ↳ காதலே நீ கானலா
- ↳ Kindle EBook links
- ↳ Story Reviews
- ↳ Books
- ↳ Audio Novels
- ↳ நிலவே உந்தன் நிழல் நானே
- ↳ Kavi Sowmi
- ↳ காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி
- ↳ Sabareeshwari (SSK)
- ↳ நெயிர்ச்சியின் முழுவல் நீ
- ↳ RS Novels
- ↳ எதிர் துருவங்கள்
- ↳ Sutheeksha Eswar
- ↳ Enai Nanaikum Sarale
- ↳ திசை அறியா பயணமிது
- ↳ Iniya
- ↳ மின்னல் விழியே குட்டித் திமிரே
- ↳ இசையின் மலரானவன்
- ↳ Janani Prasanna
- ↳ காதல் கருவறை
- ↳ Malarvizhi
- ↳ விழி மொழியாள்
- ↳ Kirthika Balan
- ↳ போற போக்கில் ஒரு காதல்
- ↳ Laxmi devi
- ↳ மாலை சூடும் வேளை
- குறு நாவல்
- ↳ Abi Nethra
- ↳ என் கோடையில் மழையானவள்
- ↳ Kavi Sowmi
- ↳ Kanchana Malai
- ↳ காதல் மட்டும் புரிவதில்லை
- ↳ Karthika Maran
- ↳ உயிரே என் உலகமே
- ↳ நல்லவனின் கிறுக்கி
- ↳ Gowry Vicky
- ↳ Chandrika Krishnan
- ↳ மந்திரமென்ன மங்கையே
- ↳ Sahana Harish
- ↳ Malarvizhi
- ↳ உயிரானவளே
- ↳ Rajasekaran Bose
- ↳ காமனின் காதல்
- ↳ Raju Gayu
- ↳ தேன்மொழி
- ↳ Manosha
- ↳ கண்ணாளனின் கண்மணியே
- தமிழ் சிறுகதைகள்
- ↳ Archana Nithyanantham
- ↳ Inba Muthuraj
- ↳ Kanchana Malai
- ↳ Gowry Vicky
- ↳ Sethupathi Viswanathan
- ↳ Nan Ungal Kathiravan
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ பாவை கதைகள்
- ↳ Raju Gayu
- ↳ Renuka Mary
- ↳ Kaayaampoo
- ↳ Venba Ilanthalir
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Kavi Sowmi
- ↳ Saha
- ↳ Sahana Harish
- ↳ Sivaranjani Sivalingam
- ↳ Bhagi
- ↳ Muthu Saraswathi
- ↳ Jothi Ramar
- ↳ Sankari Dayalan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ Bhanurathy Thurairajasingam
- Completed Novel Links
- இருமுனைப் பேனா
- ↳ மாங்கல்யம் தந்துனானே
- ↳ தாய்மையிலும் விஷமுண்டு
- கவிதைகள்
- ↳ Bharathi Kannamma
- ↳ Preethi
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ Raji Prema
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Abi Nethra
- ↳ Archana Nithyanantham
- ↳ Kanchana Malai
- ↳ Saha
- ↳ Sethupathi Viswanathan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ காயாம்பூ
- ↳ Bhanurathy Thurairajasingam
- ↳ சித்துவின் வரிகள்
- சமையலறை
- ↳ Anjali Suresh
- பொது அறிவுத் தகவல்கள்
- படித்ததில் பிடித்த கதைகள்
- மருத்துவம்
- மனதோடு
- ↳ மறுபாதி
- ↳ நீயின்றி நானும் இல்லை
- ↳ மாயவனம்
- ↳ அ(இ)வளுக்கென
- ↳ உன்மத்தம் கொண்டேனடி உன்னால்
- ↳ Zaki
- ↳ காதல் போதையடா நீ எனக்கு