மகிழ்ச்சியான மனநிலையோடு அந்த அழகிய மாலைப் பொழுதை ரசித்துக் கொண்டே நடந்து போனவளின் அருகே வந்து உரசிக்கொண்டு நின்றது அந்தக் கார்.
பதட்டத்துடன் நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் அப்பட்டமான பயத்தின் சாயல்.காரில் இருந்து இறங்கியன் சம்ஹார மூர்த்தியே தான்.அவன் தான் என்று தெரிந்த பின்னும் அவளுக்கு பயம் கூடியதே ஒழிய குறையவில்லை.அதே இமைக்காத பார்வை அவளை நோக்கி வீசியபடி அவளின் அருகே வந்து நின்றான்.
“ஆசிரமத்திற்குத் தானே போற…வா..நானும் அந்தப்பக்கம் தான் போறேன்.உன்னை இறக்கி விட்டுட்டு போறேன்”
“இ…இல்லை நான் நடந்தே போய்டுவேன்.”அவனை நிமிர்ந்தும் பாராமல் பேசினாள் வானதி
“ஏன்”உறுமலாக வெளிவந்தது அவன் குரல்.
அவன் குரலில் அவள் உடல் அதிர்ந்து தூக்கிப் போட தன்னுடைய பையை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு மெல்லிய குரலில் நடுக்கத்தோடு பேசத் தொடங்கினாள்.
“இப்ப மழை பெய்யலையே..நான் மெதுவா நடந்தே போய்டுவேன்”அவன் கோபத்தை தூண்டி விடக்கூடாது என்று எண்ணி தணிவாகவே பேசினாள்.
“உன்னை கூப்பிடறது நான்..அது தெரிஞ்சுமா இப்படி பேசுற”
“எ..எனக்கு உங்களோட வர பயமா இருக்கு”
“ஏய்…என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு…பொறுக்கி மாதிரியா தெரியுது…காலையில என்னோட வண்டில தானே வந்த…இப்போ மட்டும் என்ன வந்துச்சு…”அவளை நெருங்கி நின்று உக்கிரமான பார்வையுடன் கேட்டவனை நிமிர்ந்தும் பாராமல் பதில் சொன்னாள்.
“இப்ப நீங்க பா…பார்க்கிற விதமே சரியில்லை…என்னவோ மாதிரி பார்க்கறீங்க…இப்ப மட்டும் இல்லை…ஸ்டேஜில் நான் பாடி முடிச்சதில் இருந்து நீங்க என்னைப் பார்க்கும் பார்வையே சரியில்லை.”தலையை குனிந்தபடியே சொல்லி முடித்தவளுக்கு,நிமிர்ந்து அவனைப் பார்க்கவும் பயமா இருந்தது.
அவனிடமிருந்து எந்த சத்தமும் இல்லாமல் போகவே மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் உள்ளம் படபடக்க மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1