Theera mayakkam Tharayo 8

0
1122

“போக போக என்ன பத்தி தெரிஞ்சுப்ப…” என்று கூறி கன்னத்தில் குழி விழ சிரித்தவனின் இதழ்களுக்கு மாறாக கண்களில் சிறு கண்டிப்பு இருந்ததோ என எண்ணியவள் அவன் விழிகளை சற்று கூர்ந்து பார்த்து அதில் எதையும் கண்டுபிடிக்க இயலாமல் போக தன் கற்பனையோ என எண்ணி குழம்பியவள், ” சாரி சார் உங்களை குறிப்பிட்டு நான் கூறவில்லை பொதுவாக கூறினேன், நம்ம கான்ட்ராக்ட் பத்தி ஏதோ பேசணும்னு சொன்னிங்க” என அவனுக்கு நினைவுபடுத்தினாள்.

“எஸ் ஸ்ருதி இந்த கான்ட்ராக்ட்க்கு அப்புறம் உங்க பிளான் என்ன?”

இது என்ன கேள்வி என்பது போல் அவனை விழிகளில் குழப்பத்துடன் ஏறிட்டவள் “சார் அது என் பர்சனல் இதுக்கும் கான்ட்ராக்ட்க்கும் என்ன சம்பந்தம்? “என்றாள் சற்று காரமாக.

“வெயிட் ஸ்ருதி ஏன் இவ்வளவு கோபம் மா , நான் ஒன்றும் தவறாக கேட்கவில்லையே நீ வேற எதுவும் கான்ட்ராக்ட் கமிட் பண்ணிருக்கியான்னு தெரிஞ்சுக்க கேட்டேன் பிகாஸ் நான் ஐ மீன் நம்ம கம்பெனி ஒரு நியூ டீல் உன்னோட போட விரும்பறோம்” என கூறி ஒரு நொடி அவளை பார்த்தவன் அவள் கண்களை பார்த்தவாறே நம்ம லான்ச்க்கு பிறகு ஒரு மியூசிக் ஷோவ்விற்கு நீங்க நடுவரா வரணும்னு ஆசைப்படறேன்” என ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக கூறினான்.

சட்டென்று நிமிர்ந்தவள் கண்களில் இருந்தது என்ன என அவன் உணரும் முன்னே வெறுமையான குரலில் “சாரி சார் என்னால் முடியாது” என கூறியவள் அவனது பதிலை கூட எதிர்பாராமல் அறையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

அவள் இவ்வாறு தான் ரியாக்ட் செய்வாள் என எதிர்பார்த்தவன் போன்று இதழ்களில் புன்னகையோடு ஒருவருக்கு கால் செய்தான்.


கம்பெனியை விட்டு வெளியில் வந்தவள் மனம் தன் கடந்த கால நினைவுகளை நோக்கி செல்ல , “ஏய் டார்லிங்” என்ற குரலில் நிகழ்காலத்திற்கு வந்தவள் , தன்னையே கேள்வியாக பார்த்துக்கொண்டிருந்த நந்தினியை கண்டவள் எதுவும் பேசாமல் தன் அறையை நோக்கி சென்றாள்.

“நம்மள மதிக்கிறாளா பாரு இந்த புள்ளைக்கு நம்மள நோஸ் கட் பண்றதே பொழப்பா போச்சு.. நந்து உன் நிலமை ரொம்ப பாவம் , அட ராமா! இப்ப என்ன ஆச்சு இந்த புள்ளைக்கு கம்பெனிக்கு போறப்ப நல்லாதானே போனா, ஒருவேளை எம்டியோட சொட்டைத்தலைய பார்த்து பயந்துட்டாளோ அவ்வளவு கொடூரமாவா இருக்குது தோ வரேன்ன்ன்…” என நந்தினி தனக்குத்தானே புலம்பியவாறே வரவேற்பில் நின்ற வாலிபனை நோக்கி சென்றாள்…


கோவம் வெறுப்பு அழுகை என கலவையான உணர்வுகளுக்குள் சிக்கி தவித்தவள் தன்னை யாரோ பின் தொடர்வது போல் தோன்ற சட்டென திரும்பி பார்த்தவள் முகம் கோவத்தில் சிவந்தது. காரணம் ரகு…

அவள் வெளியே வரும் வரை கம்பெனிக்கு வெளியே காத்திருந்தவன் , அவளை பின் தொடர்ந்து வந்திருந்தான் மனதில் ஒரு முடிவுடன். . .

“நீ இப்ப எதுக்கு என் பின்னாடியே வர உனக்கு ஒரு தடவ சொன்ன புரியாத நீ என்ன சொன்னாலும் நா உன்னை மன்னிக்க மாட்டேன் உன்னை முழுசா வெறுக்கிறேன் உன்னை பார்க்கவே பிடிக்கல ரகு ப்ளீஸ் இனியும் என்னை தொல்லை பண்ணாத”.

” பேசி முடிச்சிட்டியா ஸ்ருதி, ஏன் இப்படி மாறிட்ட நீ? என் ஸ்ருதிக்கு இப்படி கோவமா கத்தி பேசக்கூட வரும்னு இப்பதான் பாக்கறேன் முகுந்தன் செஞ்சது எல்லாம் உன்மேல உள்ள காதல்னு சொன்னியே அதே காதல்தான் என்னையும் அன்னைக்கு அப்படி கோபப்பட வச்சதுனு உனக்கு ஏன் புரியல சொல்லு ஸ்ருதி” என தன்னை உலுக்கியவனை ஏளனமாய் பார்த்தவள், “காதல் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? உன்னிடம் பேசி பயன் இல்லை எனக்கு வழி விடு ரகு”

ஸ்ருதியின் கரங்களை பற்றி தன் பக்கம் இழுத்தவன் அவள் முகம் அருகே சென்று அவள் செவிகளில் “இங்க பார் ஸ்ருதி நீ எனக்குதான் நீ இல்லாமல் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன், நீ எனக்கு இல்லையெனில் வேறு யாருக்கும் கிடைக்கவும் விடமாட்டேன் என்னோட பிடிவாதம் என்னனு உனக்கே நல்லா தெரியும்னு நினைக்கிறேன் ,ஸ்ருதி” என விரல் நீட்டி எச்சரித்து சென்றவனின் கண்களை பார்த்தவள் ஒரு நொடி அதிர்ந்து போனாள் அதில் தெரிந்த வெறியினை கண்டு…


பால்கனியில் நின்றிருந்த ஸ்ருதிக்கு இன்று வேந்தன் வேண்டுமென்றே ரகுவுடன் தனிமையில் விட்டு சென்றானோ என தோன்றியது. இன்று அவன் நடுவராக வர கூறியது கூட தன்னை சோதித்து பார்க்கத்தானோ? …

இவர் என்னை பார்ப்பது முதல் தடவை இல்லையோ?? என்னை பற்றி இவர்க்கு என்னன்ன தெரியும்னு தெரியவில்லையே?

ஏன் இன்னும் என்னை விடாமல் துரத்தி வருகிறாய் அத்தான் போதும் உன்னால் நான் இழந்த வரை போதும் அத்தான் நீ என் பால்ய நண்பன் ரகு அல்ல , இப்போது இருப்பவன் என் காதலன் அல்ல, என் ஜீவா மாமா மகன் இல்லை , இப்போது நீ ஜர்னலிஸ்ட் ரகு மட்டுமே, நீ முழுசா மாறிட்ட ரகு உன் முன் கோவம், ஈகோ, சந்தேக புத்தி, பிடிவாதம் இவற்றால் நா இழந்தது என் உலகம்… என் அம்மா அப்பா… ஈஸியா சொல்ற என்னை மன்னிச்ருன்னு… உன்னை மன்னிச்சா நா இழந்த எல்லாம் எனக்கு திரும்ப கிடைக்குமா சொல்லு சொல்லு” தன் கையில் இருந்த ரகு பரிசளித்த மோதிரத்தை கண்டு கண்ணீருடன் கதறியவளின் கதறல் அந்த அறை முழுதும் எதிரொலித்தது.

அவளையும் அறியாமல் கடந்த கால நினைவுகள் சூறாவளியாய் சுழன்று ஸ்ருதியை உள்ளிழுத்தது . .

‘ரகு அத்தான் என் பிறந்தநாள் மறக்கற அளவுக்கு என் மேல அப்டி என்ன கோவம் உங்களுக்கு அந்த நியூஸிசிற்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல அது உங்களுக்கும் தெரியும் தானே? தெரிஞ்சும் இப்படி எனக்கு ஒரு விஷ் கூட பண்ணல’ என இரவு முழுவதும் புலம்பி தீர்த்தவளை அதிகாலையில் தான் நித்திரா தேவி தழுவினாள்.

இன்றும் காலையில் தாமதமாக எழுந்து வரும் மகளை சற்று யோசனையோடு பார்த்த சுந்தரம் , “அம்மாடி ஸ்ருதி இங்க கொஞ்சம் வாடா… வந்து இப்படி உக்காருமா என்னடா கண்ணா நைட் நன்னா தூங்கலையாடா கண்ணெல்லாம் எப்படி சிவந்திருக்கு பாரு இன்னும் சத்த நாழி தூங்குடா ஸ்ருதி” என மகள் தலையினை வருடியவாறே கனிவுடன் கூறியவரை கண்களில் அன்புடன் நோக்கியவள் ,”இல்ல அப்பா வேண்டாம் ஏற்கனவே நா இன்னைக்கு லேட் இன்னும் தூங்குனா அவ்வளவுதான் அப்பறம் இப்படியே பழகிடும் சரிப்பா நா பூஜை செய்ய போகிறேன்ப்பா” என்று பூஜை அறையினை நோக்கி சென்றாள்…

திருத்தனிகை வாழும் முருகா

உன்னைக்காண கான வருவேன்

என்னைக்காத்து காத்து அருள்வாய்

திருத்தனிகை வாழும் முருகா

உன்னைக்காண கான வருவேன்

என்னைக்காத்து காத்து அருள்வாய்

ஆறுபடை உனது

ஏறுமயில் அழகு

தேடாத மனம் என்ன மனமோ

ஆறுபடை உனது

ஏறுமயில் அழகு

தேடாத மனம் என்ன மனமோ

வேல் கொண்டு விளையாடும் முருகா

வேதாந்த கரைஞான தலைவா

திருநீரில் தவழ்ந்தாடும் பாலா

உன்னைப்பாடி பாடி மகிழ்வேன்

திருத்தனிகை வாழும் முருகா

உன்னைக்காண கான வருவேன்

என்னைக்காத்து காத்து அருள்வாய்

ஆறுமுகம் அழகு அருட்பழம் முருகு

சொல்லாத நாளெல்லாம் நாளோ

தேனூறும் திணைமாவும் தரவா

தமிழாலே கனிப்பாவும் தரவா ஆஆஆ

தேனூறும் திணைமாவும் தரவா

தமிழாலே கனிப்பாவும் தரவா

குமரா உன் அருட்தேடி வரவா

எதிர் பார்த்து பார்த்து இருப்பேன்

திருத்தனிகை வாழும் முருகா

உன்னைக்காண கான வருவேன்

என்னைக்காத்து காத்து அருள்வாய்

என்னைக்காத்து காத்து அருள்வாய்”

கண்களில் அலைப்புறுதலுடன் முருகனை எண்ணி துதித்தவள் மனம் சற்று அமைதி அடைந்தது போல் இருந்தது. வழக்கம் போல் இன்றும் தந்தை உடன் ஆடிசன் நடக்கும் இடத்திற்கு சென்றவள் கண்கள் முகுந்தனை தேடின… அன்றைய பிரச்சனைக்கு பிறகு முகுந்த் தன்னை அவாய்ட் செய்வது போல் தோன்றியது ஸ்ருதிக்கு. இதுவும் நல்லது தான். ஏற்கனவே ரகு அத்தான் வேற முகுந்த் பெயரை கேட்டாலே வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார். இனி முகுந்தை விட்டு கொஞ்சம் விலகியே இருக்கணும் என்று முடிவு எடுத்தவளுக்கு தெரியவில்லை அவள் விலக விலக அவன் இவளை இன்னும் அதிகமாக நெருங்க முயற்சிப்பான் என்று.

அதன் பின்பும் இரண்டு நாட்களாக ஸ்ருதியின் கண்களில் முகுந்தன் படாமல் இருந்தாலும் மறைந்திருந்து அவளை தன் கண்களில் நிறைத்து கொண்டான் என்பதை பேதை அறியவில்லையே.

அன்று திருமணத்தை பற்றி பேசி சென்ற பின் ரகு ஸ்ருதியிடம் பேசவில்லை ஸ்ருதியாக பேச எண்ணி கால் செய்தாலும் கட் செய்து கொண்டே இருந்தான். அன்று காலை வழக்கம் போல் பூஜையை முடித்து சாப்பிட அமர்ந்த ஸ்ருதியை மொபைல் அழைக்க அழைத்தது ரகு…

“ரகு அத்தான்” ஆசையோடு கண்களில் கண்ணீர் வழிய

அழைத்தவளின் குரலில் வெளிப்பட்ட முதல் ஊடலின் வலி ஏக்கம் அனைத்தும் ரகுவிற்கு தன் முட்டாள்தனமான கோபத்தால் தன் ஆசை காதலியை மிகவும் வருத்திவிட்டது புரிந்து அவன் மேலே அவனிற்கு கோபம் பெருகியது.

“ஸ்ருதி”

. “அத்தான்”

“அடி அசடே இப்ப எதுக்கு இந்த அழுகை கண்ணை துடை மா”

“அத்தான் நீங்க என்னை நம்புறேள் தானே சத்தியமா அன்னைக்கு நடந்தது…”

“உஸ் ப்ளீஸ் டா அதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு நேக்கு தெரியும்டா உன்னை எங்க இழந்திருவானோனு பயத்துல உன்கிட்ட அப்படி கோவத்துல ஏதேதோ பேசிட்டே என்னை மன்னிச்சுருடா ஸ்ருதி”

“ஐயோ அத்தான் மன்னிப்பு அது இதுனு பெரிய வார்த்தைல பேசாதிங்கோ “

“சரி டி குள்ளச்சி நாளைக்கு மாங்கல்யம் வாங்க நகை கடைக்கு போனும் ஞாபகம் இருக்கா நோக்கு “

“எனக்கு நன்னா ஞாபகம் இருக்குன்னா நீங்கதான் எல்லாத்தையும் மறந்திடறேள் இப்பலாம்”

“ஆஹான் அப்படி எதை மறந்தேனாம் நான்?”

” ம்ம் நீங்க உங்க வருங்கால மனைவியோட பிறந்தநாள் அதையே மறந்துட்டேளே அத்தான்” என்று குரல் கமற கூறியவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து.

“ஸ்ருதி ஸ்ருதி” என்ற நந்தினியின் உலுக்கலில் நிகழ்காலத்திற்கு வந்த ஸ்ருதி நந்தினியை பார்த்து என்ன என்பது போல் புருவத்தை தூக்கினாள் . .

“டார்லிங் என் மேல் என்னமா உனக்கு கோவம் இப்படி பழி வாங்கிட்டியேம்மா வாங்கிட்டியே”

“புரியுற மாரி சொல்லு என்ன நடந்துச்சு “

“என்ன நடந்துச்சா டார்லிங் கொஞ்சம் மேல பாரு”

நேராக எம் டி அறையை நோக்கி சென்றவள் அங்கு கே கே வை கண்டவள் ஒரு நொடி அதிருந்தாலும் உடனே இயல்பாகி “ஹெய் கே கே” என தன்னை அறியாமல் மெலிதாக வாய்க்குள் முணுமுணுத்தாள். நந்தினி அறைக்குள் நுழைந்த நொடியில் இருந்து அவளது செய்கைகளை கவனித்து கொண்டிருந்தவன் அந்த சிறு உதட்டசைவை கண்டவன் “கே கே வா?? வாட் த ஹெல்! ஏய் கேர்ள்! யார் நீ டோர் நாக் பண்ணிட்டு உள்ள வரனுங்கிற சின்ன மேனர்ஸ் கூட தெரியாத உனக்கு ஹான், நீ பாட்டிற்கு உள்ள வந்து உளறிட்டு இருக்க இடியட்ட் கெட் அவுட்” என முகம் சிவக்க கத்தியவனை கண்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடினாள் நந்தினி …

“ஓடினாள் ஓடினாள் ஸ்ருதியின் அறை வரை ஓடினாள்னு ஓடி வந்துருக்கேன் தெரியுமா டார்லிங் மீ பாவம் யூ க்நோவ்”

என பாவனையோடு உதட்டினை பிதுக்கி கைகளை ஆட்டி ஆட்டி கூறியவளை கண்டு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்த ஸ்ருதியின் மேல் தலையணையை தூக்கி அடிக்க நந்தினி துரத்த அவளிடமிருந்து தப்பித்து அறை முழுவதும் ஓட அந்த அறையே சிரிப்பொலியால் அதிர்ந்தது.


மதியம் இரண்டு மணி ஆகியும் உணவினை மறந்து தன் லேப்டாப்பில் மூழ்கி இருந்தவன், “டாடிஈஈ…” என்ற பிஞ்சு குரலில் முகம் கொள்ளா சிரிப்புடன் நிமிர்ந்தான் மகிழ் வேந்தன்.

தன் முன்னே தளிர் கரங்களை இடையில் வைத்து கண்களை உருட்டி மூக்கை சுருக்கி உதட்டை சுளித்து நிற்கும் சின்னஞ்சிறு தேவதையை மென்னகையுடன் நோக்கியவன் தன் கண்களை சிமிட்டி கைகளை விரித்து தன் மேல் மோதிய பூக்குவியலை மென்மையாக தாங்கியவனின் கண்கள் கலங்கியிருந்ததோ ?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here