TTN Teaser 29

0
1053
Madhumathi Bharath Tamil Novels

நேராக வாசலுக்கு சென்றால் வாசலில் இருக்கும் காவலர்களிடம் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் பக்கவாட்டுப் பகுதியை நோக்கி செல்லத் தொடங்கினாள். அங்கே இருந்து மூர்த்தியின் முகம் தெளிவாக  தெரியாததால் சற்று தள்ளி கார் பார்க்கிங் ஏரியாவிற்கு முன்னால் இருந்த ஒரு சிறிய மர ஸ்டூலை கொண்டு வந்து அதன் மேல் ஏறி நின்று பேசத் தொடங்கினாள்.

“இங்கே எதுக்கு வந்தீங்க….”

“உன்னைப் பார்க்கத் தான் வானதி”

“என்னை எதுக்கு நீங்க பார்க்கணும்..உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்”

“என்ன வானதி இப்படி எல்லாம் பேசுற….நாம இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம்.அதை மறந்துட்டியா”

“நான் எதையும் மறக்கவில்லை… நீங்க காதல் சொன்னதையும் மறக்கலை…திக்கற்று … போறதுக்கு இடமே இல்லாம உங்ககிட்டே வந்தப்போ எனக்கு ஒழுங்கான பாதுகாப்பு கொடுக்காமல் போனதையும் மறக்கல… இது எல்லாத்தையும் விட நான் இன்னும் கன்னிதானான்னு தெரிஞ்சுக்க எனக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முயற்சி செஞ்சீங்களே…அதையும் நான் மறக்கல” வானதியின் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டைகளாய் மாறி சுழன்று அடிக்க மூர்த்தியின் தலை தானாகவே தொங்கிப் போனது.

“நான் செஞ்சது எல்லாமே தப்பு தான் வானதி…ஆனா அப்போ எனக்கு இருந்த சூழ்நிலை அப்படி.. அதுக்காக நீ அந்த ஈஸ்வரை கல்யாணம் செஞ்சுக்க முடிவெடுக்கலாமா”

“ஏன் எடுத்தால் என்ன தப்பு… அவர் ஒண்ணும் உங்களை மாதிரி என்னை சந்தேகப்படலையே”

தன்னுடைய கற்பை கேள்விக்குறியாக்கிய விஷயத்தை ஏனோ மூர்த்தியிடம் பகிர்ந்து கொள்ள அவளால் முடியவில்லை.அது எதனால் என்பது அவளுக்கு தெரியவில்லை.அது வெளியே யாரிடமும் இலகுவாக சொல்லும் விஷயம் இல்லை என்பதால் அந்த முடிவா அல்லது ஈஸ்வரின் மரியாதையை மூர்த்தியிடம் விட்டுக் கொடுக்க முடியாமல் அந்த முடிவை எடுத்தாளோ தெரியாது.

ஏனோ வானதிக்கு ஈஸ்வரை விட மூர்த்தியின் மீது அதிக கோபம் இருந்தது.ஈஸ்வர் ஆரம்பித்தில் இருந்தே அவளுக்கு வில்லன் தான்.என்றுமே தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முயற்சி செய்தது இல்லை.ஆனால் மூர்த்தி அப்படி இல்லை..

மனதுக்குள் மூர்த்தியை ஹீரோவாக்கி சிம்மாசனம் போட்டு அமர வைத்து இருந்தாள். அப்படிபட்டவனின் செய்கையை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.தன்னை நம்பி வந்த பெண்ணை காப்பாற்றுவது தானே ஆண்மைக்கு அழகு.

அவனால் முடியாத சூழ்நிலை என்பது வேறு…ஆனால் தானாகவே அவனைத் தேடி சென்ற பிறகும் கூட தகுந்த பாதுகாப்பின்றி தன்னை அவன் அனுப்பியதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்பது தான் நிஜம்.

அதன்பிறகு அந்த சோதனைக்கு ஒத்துக்கொள்ளவில்லை எனில் திருமணத்தை நிறுத்தி விடுவது போல பேசிய பேச்சும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.அவளால் இனி மூர்த்தியிடம் தன்னுடைய வாழ்க்கையை ஒப்படைக்க முடியாது தான். இருப்பினும் அவன் பொய்த்துப் போனதை அவளால் ஏற்க முடியவில்லை.எனவே கோபம் கொஞ்சமும் குறையாமல் மூர்த்தியை எதிர்நோக்கினாள்.

“வானதி எனக்கு ஒரேயொரு வாய்ப்பு தர மாட்டியா…என்னோட பக்கத்தை விளக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடு வானதி”என்று அவன் கெஞ்ச…அமைதி காத்தாள் வானதி…அவளுக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here