TTN Teaser 32

1
1272
Madhumathi Bharath Tamil Novels

அவளுக்குத் தெரிந்து ஈஸ்வரை இது தான் முதல் முறையாக இத்தனை நெருக்கத்தில் பார்ப்பது. அவன் பார்வை உரிமையுடன் அவள் மேல் படிந்ததில் அவளது தேகம் நடுங்கியது. அவன் விரல்கள் அவள் மேனியில் விளையாடிக் கொண்டு இருந்ததே தவிர, அதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லவில்லை.

‘இவனை நாமாக விலக்க நினைத்தால் கண்டிப்பா இவன் விலக மாட்டான்… ஏதாவது செய்டி வானதி’ என்று அவளது உள்மனம் அலறத் தொடங்க , அவளின் மூளையில் மின்னல் வெட்டியது போல வந்தது மூர்த்தியின் நினைவு தான்.

“மூர்த்தியை என்ன செஞ்சீங்க… அவர் இப்போ எங்கே இருக்கார்? எப்படி இருக்கார்?” என்று அவள் முயன்று வருவித்த நிதானத்தோடு கேட்க… அவள் மேனியில் நர்த்தனமாடிக் கொண்டு இருந்த அவன் விரல்கள் அப்படியே நின்று போனது.

“இப்போ இந்த கேள்வி முக்கியமா சில்லக்கா” என்று கேட்டவனின் குரலில் இருந்தே அவனுக்கு அந்த கேள்வி கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது புரிய வானதிக்கு உள்ளுக்குள் குதூகலமானது.

‘கடுப்பு வருதா? நல்லா வரட்டும்’ என்று எண்ணி குதூகலித்தவள் தொடர்ந்து பேசினாள்.

“எனக்கு முக்கியம்”

“எனக்கு பிடிக்கலை சில்லக்கா…வேற பேசலாமே” என்று அவன் கொஞ்சம் இறங்கி வர… அவளோ முரண்டு பிடித்தாள்.

“எனக்கு அதை பத்தி மட்டும் தான் பேசணும் ….”

“எனக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய நினைக்காதே சில்லக்கா..விளைவுகள் பயங்கரமா இருக்கும்”என்றான் அவன் இறுகிப் போன குரலில்.

“எனக்கு மூர்த்தியை பத்தி பேசப் பிடிச்சு இருக்” என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே அவளது பேச்சு நிறுத்தப்பட்டது அவளது அருமை கணவன் ஈஸ்வரால்.

அவளது இதழ்களை ஆவேசமாக முற்றுகையிட்டான் ஈஸ்வர்.அவளது பேச்சினால் விளைந்த கோபத்தை எல்லாம் அவளின் இதழின் மீது காட்டி அவளை திணறடித்தான் ஈஸ்வர்.

Facebook Comments
Previous NovelMEV Tamil Novels 4
Next NovelTTN Tamil Novels 32
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here