TTN Teaser 35

3
1303
Madhumathi Bharath Tamil Novels

“வெளியில் பனியா இருக்கு… உள்ளே போகலாம் சில்லக்கா” என்று இறுகிய குரலில் சொன்னவன் அவள் பின்னோடு வருகிறாளா இல்லையா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவன் பாட்டிற்கு உள்ளே செல்ல ஆத்திரத்தில் அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது.

‘சித்திரை மாசம் வெயில் கொளுத்துது… இந்த நேரத்தில் பனியா இருக்குனு சொல்லிட்டா போற… பொய் புளுகா… ராட்சசா’ என்று அவனுக்கு வசை மாரி பொழிந்தவள் வீட்டுக்குள் செல்ல மனமில்லாமல் தோட்டத்திலேயே தேங்கி நின்றாள்.

மனதின் புழுக்கம் தோட்டத்தில் கொஞ்ச நேரம் இருந்தால் குறையுமோ என்று எண்ணி அப்படியே அவள் அமர்ந்து விட… சில நிமிடங்கள் கழித்து அவளை அழைத்து செல்ல பவுனம்மா வந்தார்.

‘அவன் வேலை தான்…. கொஞ்ச நேரம் கூட தனியா இருக்க விட மாட்டானே’ என்று பற்களை கடித்தவள் பவுனம்மாவிடம் கோபத்தை காட்ட விரும்பாமல் அவருடன் சென்று விட… நேராக அவளை சாப்பிட அழைத்து சென்றார்.

சாப்பிட்டு முடிக்கும் வரை அவனது தலை எங்குமே தென்படாமல் போக…. நிம்மதியாக அறைக்குள் நுழைந்தவள் தூங்க முயன்றாள்.அதற்குள் மனதின் எண்ணங்கள் வரிசையாக ஊர்வலம் போகத் தொடங்கின.

ஈஸ்வர் இன்று சொன்ன அவரது கடந்த காலத்திற்கும் எனக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அவரையும் அறியாமல் ஏதாவது தகவலை என்னிடம் உளறி இருக்கிறாரா என்ற யோசனையில் மூழ்கி இருந்தவள் பால்கனி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவனை கவனிக்காமல் போனாள்.

Facebook Comments
Previous NovelMEV Tamil Novels 8
Next NovelTTN Tamil Novels 35
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here