TTN Teaser 37

2
1307

“என்னை உனக்கு தெரியலையா வானதி? அதுக்குள்ளே என்னை மறந்துட்டியா? உனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்? உன்னை காதலிச்சு, முறைப்படி உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டு எல்லா ஏற்பாடும் செஞ்சேனே… அந்த பாவி உன்னை கடத்திட்டு போன பிறகும் கூட உன்னை எப்படி எல்லாம் தேடித் திரிஞ்சேன் தெரியுமா? அடிபட்டு,ஜெயிலுக்கு போய், கடைசியில் அந்த ஈஸ்வர் எனக்கு கரண்ட் ஷாக் வச்சு கொல்ல வேற முயற்சி செஞ்சான்… அது அத்தனையும் தாங்கிட்டு மறுபடியும் உன்னோட காலை சுத்தின நாய் மாதிரி வர இந்த மூர்த்தியை உனக்கு தெரியலையா? சொல்லு வானதி? சொல்லு” ஆக்ரோஷம் நிறைந்த அவனது பேச்சிற்கு மறுத்து பேச முடியாமல் மௌனியானாள் வானதி.

‘ஆயிரம் தான் இருந்தாலும் மூர்த்தி இப்பொழுது சொன்ன எதுவுமே பொய் இல்லையே…எல்லாமே நிஜம் தானே? எல்லா தவறையும் செய்த ஈஸ்வரை மன்னிக்க முடிந்த என்னால் மூர்த்தியின் தவறை மன்னிக்க முடியாதா?’

“உனக்கு என் மேல கோபம் இருக்கலாம் வானதி..ஆனா அதுக்காக நான் யார்னே தெரியலைன்னு சொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சு வானதி சொல்லு?”

“…”

“எல்லா அக்கிரமத்தையும் செஞ்சு… உன்னையும் என்னையும் பிரிச்சு உன்னை ஏமாத்தி கல்யாணம் செஞ்சுகிட்டவனை கல்யாணம் செஞ்சு நீ குடும்பம் நடத்துவ? ஆனா… நான் மட்டும் உன்னை மறந்துட்டு இருக்கணுமா? என்ன நியாயம் இது? அவன் படபடவென்று பேச வானதிக்கு அவனை எப்படி சமாளிப்பது என்றே புரியவில்லை.ஈஸ்வர் எந்த நொடி வேண்டுமானாலும் போன் பேசி முடித்து விட்டு அவளிடம் வரும் அபாயம் இருப்பது அவளுக்கு புரிந்தது.

ஈஸ்வருக்கு மட்டும் தான் போனில் பேசிக் கொண்டு இருப்பது  மூர்த்தியிடம் என்பது தெரிந்தால் கண்டிப்பாக விளைவுகள் விபரீதமாகத் தான் இருக்கும் என்பது புரிய அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அவள் மனம் குழம்பத் தொடங்கியது.

போனில் மூர்த்தி…. எதிரில் புன்னகை மாறாமல் ஈஸ்வர்… இரண்டுமே ஆபத்தாயிற்றே…

Facebook Comments

2 COMMENTS

Leave a Reply to kavi mani Cancel reply

Please enter your comment!
Please enter your name here