TTN teaser 39

0
1399

விடிந்ததும் அவளுக்கு முன்னதாகவே அவன் கிளம்பி இருக்க, இப்படி தூங்கி விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் அரக்கபரக்க கிளம்பி வந்தாள் வானதி.

சாப்பாட்டு மேசையில் அவளுக்கு முன்னரே அமர்ந்து இருந்த ஈஸ்வரைப் பார்த்ததும் முதல் நாள் இரவின் தாக்கம் எதுவும் இழையோடுகிறதா என்று கவனித்தபடியே வந்தவள் அவனுக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டாள்.

உள்ளுணர்வு உந்த எதிரே நிமிர்ந்து பார்த்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் அங்கே இருந்த மற்ற இருவரையும்… வைத்தீஸ்வரன் அவளை பார்க்கவே இல்லாதது போல ஒற்றைக் கையால் தடுமாறி உணவை வாயில் நுழைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க, பூபதியின் பார்வையோ அவளைத் துளைத்துக் கொண்டு இருந்தது.

அவர் பார்வையில் ஏதோ ஒரு மாற்றம் இருந்தது… நேற்றைய பார்வைக்கும் இன்றைய பார்வைக்கும் கண்டிப்பாக ஏதோ வித்தியாசம் இருந்ததை உணர முடிந்தவளால் அது என்ன என்பதை அறிய முடியவில்லை.

ஈஸ்வர் கண்ணைக் காட்ட மௌனமாக அமர்ந்து உணவை  உண்ணத் தயாரானாள் வானதி.

“இந்த ஜமீனுக்குன்னு அந்தஸ்து,பாரம்பர்யம் எல்லாம் இருக்கு..இப்படித் தான் ஆடி அசைந்து எழுந்து வர்றதா?”என்று புகைச்சலுடன் பேசியது வேறு யாராக இருக்கக்கூடும் பூபதியைத் தவிர…

‘என்ன பதில் பேசுவது என்று புரியாமல் அவள் திருதிருக்க அவளுக்காக பரிந்து பேசினான் ஈஸ்வர்.ஆனால் அவன் பேசியதை கேட்டு அவளுக்குத் தான் சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

“இது என்ன அவளை கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க? புதுசா கல்யாணம் ஆனவங்களை பார்த்து இப்படி தான் கேட்கிறதா தாத்தா”என்றவன் பேசி முடித்ததும் யாருமறியாமல் அவளைப் பார்த்து கண் சிமிட்ட வானதி தான் அவசரமாக குனிந்து தட்டில் புதையலை தேட வேண்டியதாயிற்று.

“ஹ்ம்… வீட்டுக்கு வந்ததும் முதலில் பூஜை அறையில் விளக்கேத்தணும்… நேரா டைனிங் ஹாலுக்கு வரக்கூடாது” என்றவரின் பேச்சில் கோபம் அடைந்து வானதி பார்வையை உயர்த்த அவளை முந்திக்கொண்டு அவரை கண்டித்தான் ஈஸ்வர்.

Facebook Comments
Previous NovelTTN Tamil Novels 38
Next NovelMannavan Paingili 1
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here