இரவு முழுவதும் அவனும் தூங்கவில்லை. மற்றவர்களையும் அவன் தூங்க விடவில்லை. அவனுக்கும் வானதிக்கும் குறிக்கப்பட்ட முஹூர்த்தம் ஏழு மணிக்கு…இந்நேரம் வானதி அருகில் இருந்து இருந்தால் அவனது மனைவி ஆகி இருப்பாள்.அந்த எண்ணமே அவனது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.
‘எவ்வளவு ஆசையாக இருந்தேன்…எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தேன்…கடைசி நேரத்தில் இப்படி நடந்து விட்டதே…அவனிடம் மாட்டிக் கொண்டு அவள் என்ன பாடுபடுகிறாளோ தெரியவில்லையே’ என்று எண்ணியவனின் நெஞ்சம் முழுக்க ஈஸ்வரின் மீதான வன்மத்தில் நிறைந்து இருந்தது.
‘இத்தனை நாள் பாடுபட்டு என்ன பயன்? கடைசி நேரத்தில் அந்தப் பைத்தியக்காரனிடம் தன்னுடைய வானதியை இழந்து விட்டோமோ’ என்ற குற்ற உணர்வு அவனை ஆட்டி வைத்தது.
‘விடக்கூடாது … அவனிடம் இருந்து அவளை மீட்டே ஆக வேண்டும்’ என்ற எண்ணம் தோன்ற மீண்டும் புது உத்வேகத்துடன் தேடுதல் வேட்டையைத் தொடங்கினான்.
முதல் நாள் இரவு துறைமுகத்தில் இருந்து கிளம்பிய ஈஸ்வரின் கப்பல்கள் அனைத்தைப் பற்றிய தகவல்களும் அவனுக்கு வந்து சேர்ந்து விட்டது. எட்டு சரக்குக் கப்பல்,பதினைந்து பயணிகள் சொகுசுக் கப்பல், இருபது மீன்பிடி படகுகள் அது தவிர அவனது சொந்தப் பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் இரண்டு அதிநவீன சொகுசுக் கப்பல் எல்லாமே நேற்று இரவில் துறை முகத்தை விட்டு கிளம்பி இருந்தன.
‘என்னை குழப்புறதுக்காகவே இப்படி செஞ்சு இருக்கான்’என்று பல்லைக் கடித்தான் சம்ஹார மூர்த்தி.
அவன் இருக்கும் நிலை பார்த்து அவனது அடியாள் சேகருக்கு பரிதாபம் தான் வந்தது. அதே நேரம் அவனது தயக்கத்தின் காரணமும் புரியாமல் அவன் முன்னே சென்று நின்றார்.
“சார் நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க? அந்த ஈஸ்வர் என்ன உங்களை விட பெரிய ஆளா…நீங்க நினைச்சா அவனை என்ன வேணா செய்யலாமே…ஏன் இப்படி தயங்கிக்கிட்டு இருக்கீங்க…”
“சேகர்…நாம எடுத்த விஷயத்தில் ஜெயிக்கணும்னா முதல் பாடம் எதிராளியை குறைச்சு மதிப்பிடக் கூடாது. அவனோட பலத்தை குறைச்சு எடை போட்டாலே நாம தோத்துடுவோம். இப்போ சிக்கல் அவனை தோற்கடிக்கிறது மட்டும் இல்லை…அவனிடமிருந்து என்னோட வானதியை பத்திரமா மீட்கிறது…நாம ஆத்திரத்தோட ஏதாவது செய்யப் போய் அது வானதியை பாதிச்சுடக் கூடாது.புரியுதா?”என்று விளக்கம் கொடுத்தவனின் கண்ணுக்குள் பயந்து கொண்டே புத்தகத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்ட வானதியின் முகம் கண் முன்னே வந்து போனது.
Teaser k. Epa next ud. Waiting……?????????
Thanks for the teaser.