Vanavil Sirpame – Episode 13 Tamil Novels

2
1225

New novel writer Madhumathi Bharath’s ongoing romantic Tamil new novel Vanavil Sirpame updated frequently in this writer’s Website.This is a page for Tamil Novel quenchers.Feedback’s from my story readers are Welcome.both positive , negative or any other suggestions. please share your esteemed comments below.This helps me to do much better.Enjoy it and leave your comments.

please click the below mentioned link to read the story update.don’t forget to share your views.

அத்தியாயம் 13
அன்றைய இரவு சங்கமித்ரா போனின் அருகிலேயே இருந்தாள். எந்நேரமும்  பிரபஞ்சனின் அழைப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்போடு அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் எட்டு மணி அளவில் அவளுக்கு அழைத்தான் பிரபஞ்சன்.

ஹலோ குஜிலி ஒரே ரிங்ல எடுத்துட்டமாமன் போனுக்காக ரொம்ப நேரம்
காத்துக்கிட்டு இருந்தியோ?”
அது உண்மை தான் என்றாலும் அதை ஒத்துக்கொள்ள அவளுக்கு மனமில்லை.அதே நேரம் அவன் தன்னை புதிதாக ஏதோ ஒரு பெயர் சொல்லி அழைக்கவும் பேச்சை மாற்றுவதற்காக அதை பற்றி பேச ஆரம்பித்தாள். ‘இது என்ன குஜிலின்னு கூப்பிடறார்’

கேள்வியை ஒதுக்கிவிட்டு அவனிடம் சண்டையிட தயாரானாள்.

என் பேர் சங்கமித்ராபற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து  துப்புவது போல் பேசினாள் .

அவள் பதில் சொன்ன விதத்தில் அவளின் கோபம் அவனுக்கு புரிந்தாலும் அதை எல்லாம் சட்டை செய்பவனா அவன்? இல்லையே! மேலும் அவளை சீண்ட தயாரானான்.

“என் காதலியை, என் வருங்கால பொண்டாட்டியை நான் எப்படி வேணா கூப்பிடுவேன்.” என்று சொன்னவன் மேலும் சற்று இடைவெளி விட்டு மீண்டும் அதே வார்த்தையை அழுத்திக் கூறினான்.
“குஜிலி” அதை அவன் சொன்ன போதே அந்த வார்த்தையை அவன் ரசித்து உச்சரித்த விதம் அவளை மேலும் ஈர்ப்பதை உணர்ந்தாலும் அவளுடைய மனம் அதை உடனேயே ஒத்துக்கொள்ள மறுத்து சண்டித்தனம் செய்தது.
“சரி சரி…போனை வைங்க” கோபத்தோடு சொல்வது போல அவள் சொன்னாலும் அதில் துளியும் கோபத்தின் சாயலே இல்லை.

“என்ன பேபி அதுக்குள்ள போனை வைக்க சொல்ற…இப்போ தானே பேசவே ஆரம்பிச்சேன்…இன்னும் கொஞ்ச நேரம் பேசேன்”கெஞ்சல் தொனியில் அவன் குரல்.
“எனக்கு தூக்கம் வருது.ஆவ்வ்வ்”பொய்யாக கொட்டாவி விட்டாள் சங்கமித்ரா.
“உனக்கு இன்னைக்கு தூக்கம் வந்து விடுமா என்ன?”அவன் குரலில் சவால் இருந்தது.தூங்கித்தான் பாரேன்.என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது அவன் குரல்.
“ஏன் வராம தினமும் நான் எட்டு மணிக்கெல்லாம் தூங்கிடுவேனே”
“அப்புறம் ஏன் இன்னமும் தூங்கலை?”
மாட்டிக் கொண்டதை போல முழித்தாலும் தான் போனில் பேசும் போது அவனுக்கு தன்னுடைய முகத்தில் வழியும் அசடு தெரிய வாய்ப்பு இல்லை என்பதால் சட்டென சமாளித்து மறுபடி பேசினாள்.
“இப்படி பேசிக்கிட்டே இருந்தா எப்படி தூங்குறதாம்.போனை வைங்க”

“சரி சரி ரொம்ப சலிச்சுக்காதே.போனை வைப்பதெல்லாம் இருக்கட்டும். இன்னைக்கு ஏன் அழுதுகிட்டே ஓடி வந்த?”
“யார் அழுதா? நானா? எனக்கு காலேஜ்க்கு நேரம் ஆச்சு அதான் கிளம்பி வந்துட்டேன்.”சமாளிக்க முயன்றாள்.
“பொய்”
“மெய்”
“எனக்கு தெரியும்டா பேபி” அவன் குரலில் கனிவு சொட்டியது.குழந்தையை கொஞ்சும் குரல் இப்பொழுது அவனுக்கு.

“எ…எ… என்ன தெரியும் உங்களுக்கு? எப்ப பாரு இப்படி எதையாவது பேசி என் வாயை கிளறுவீங்க?”
“ஆமா உன் வாய் கேசரி பாரு…கிண்டுறதுக்கு!பார்க்க அந்த நிறத்தில் தான் இருக்கு.டேஸ்ட் எப்படி இருக்குனு தான் தெரியல.நீ பர்மிஷன் கொடுத்தா”
“எனக்கு தூக்கம் வருது”
“உடனே தூக்கம் வந்துடுமே.மனுஷன் கொஞ்சம் ரொமாண்டிக்கா பேசினா போதும்.உடனே உனக்கு தூக்கம் வந்துடும்.சரி… சரி… இன்னும் என் கேள்விக்கு பதில் வரலை” அவன் பிடியிலேயே அவன் நின்றான்.
“….”
“நான் சொல்லட்டுமா?”
“எ…எதை”
“நீ அழுததற்கு காரணத்தை”
“சொல்லுங்களேன்.எனக்கென்ன பயமா?”
“நீ என்னை காதலிக்க ஆரம்பிச்சுட்ட மித்ரா”ஆழ்ந்த குரலில் தெளிவாக சொன்னான்.
“இது என்ன புதுக்கதை?”அவள் குரல் வேகமாக வந்தாலும் அவளையும் அறியாமல் ஒரு நடுக்கம் அவள் குரலில்.
“உண்மை மித்ரா.நீ என்னை காதலிக்க ஆரம்பிச்சுட்ட.அப்படி இல்லைன்னு மறுத்தா,இன்னைக்கு நீ அழுததுக்கு வேற என்ன காரணம் நீயே சொல்லு”
“அது…அது…”வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.
“விடுடா…ரொம்ப கஷ்டப்படுத்திக்காதே. நாளைக்கு சனிக்கிழமை நாளையோட நான் உன்கிட்ட போட்ட கண்டிஷன் முடியுது.இனி தினமும் நீ என்னை வந்து பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.நீ சந்தோசமா இருக்கலாம்” இதமாகவே பேசினான்.இதை சொல்லும் போது பிரபஞ்சன் நினைத்தது என்னவோ வேறு ஒன்றை மனதில் வைத்து.
‘ஞாயிற்றுக்கிழமை தான் அவளை பெண் பார்க்க போகும் போது அவளிடம் எல்லா உண்மையையும் தெளிவாக சொல்லி விடலாம்.அதற்குபிறகு இது போல அவள் வீணே வருந்திக் கொண்டு இருக்க வேண்டாமே’
அவன் பேசிக்கொண்டே போக சங்கமித்ரா உதடு கடித்து தன்னுடைய அழுகையை அடக்கப் போராடினாள்.’இவன் இல்லாமல் எனக்கு ஏது சந்தோசம்? நாளை தான் இவனை கடைசியாக பார்க்க போகிறேனா?’நினைவு கூட கசந்தது அவளுக்கு.
அவள் வருத்தத்தில் இருப்பது அவனுக்கு புரியவே அவளை சீண்டி அவளது துடுக்குத்தனத்தை வெளியே கொண்டு வர முயன்றான் பிரபஞ்சன்.
“சரி இன்னைக்கு காலையில பார்க்ல கேட்டேனே? அதுக்கு நீ ஒண்ணுமே பதில் சொல்லலை?”

“என்ன கேட்டீங்க?”திருதிருவென முழித்தாள்.சங்கமித்ராவுக்கு இவன் செய்த கலாட்டாவில் அத்தனையும் மறந்து விட்டது என்பது தான் நிஜம்.
“அடிப்பாவி…எவ்வ்வ்வ்ளவு முக்கியமான விஷயம் சொன்னேன்.அதை மறந்துட்டியே?”பரிதாபமாக கேட்டான்.
“எனக்கு சுத்தமா நியாபகம் இல்லை”மன்னிப்பும் கோரும் குரலில் அவள் பேசினாள்.
“கொஞ்சம் கூட நினைவு இல்லையா?”
“இல்லை….என்னன்னு தான் சொல்லுங்களேன்”

“எனக்கு பெண் குழந்தை வேணும்னு கேட்டேனே”
“…”
“ஹலோ…”
“…”
“ஹலோ… லைன்ல இருக்கியா?”
“ம்”
“ஷ் அப்பா…நான் கூட பயந்தே போயிட்டேன்..சரி சரி பதிலை சொல்லு”
“…”
“ஏய் குஜிலி…என்ன வெட்கமா?”அவன் குரலில் குழைவு இருந்தது
சங்கமித்ரா அப்பொழுதும் பதில் பேசாமல் மௌனமாகவே இருக்கவே பிரபஞ்சனுக்கு அவளை உடனடியாக பார்க்க வேண்டும் போல இருந்தது.இந்த நிமிடம் கண்டிப்பாக அவள் வெட்கப்படுகிறாள் என்பது அவனுக்கு தெரிந்தாலும் அதை நேரடியாக பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம் மனதில் ஒரு நொடி தோன்றி மறைய அதை வாய் விட்டு கேட்கவும் செய்தான்.

“எனக்கு உன்னை இப்பவே பார்க்கணும் போல இருக்கு.உடனே உங்க வீட்டுக்கு வரட்டுமா?…ப்ளீஸ்”
“என்னது வீட்டுக்கா? அதெல்லாம் வேண்டாம்”பதட்டமாக மறுத்தாள்.
“ப்ளீஸ் குஜிலி”
“நோ”திட்டவட்டமாக மறுத்தாள்.
“சரி போ…மாமன் ஆசையா கேட்கிறேன்.முடியாதுன்னு சொல்லிட்ட இல்ல.எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான்.அதையும் நினைவு வச்சுக்கோ.அதுக்கு அப்புறம் எல்லாம் ஐயா இஷ்டம் தான்”
மனதுக்குள் அப்படி ஒரு நாள் எப்போது வரும் என்று ஏங்கத் தொடங்கினாள் சங்கமித்ரா.பின் மெல்ல தன்னை மீட்டுக் கொண்டவள் , “போதும் போதும்…அதெல்லாம் நடந்தா பார்த்துக்கலாம்.இப்போ எனக்கு தூக்கம் வருது.
“ஆரம்பிச்சுட்டியா…இனி நீ நிறுத்த மாட்ட… சந்தைக்கு போகணும்.ஆத்தா வையும் காசு கொடு அப்படினு சப்பாணி மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்க போற.சரி போய் தூங்கு.நாளைக்கு எங்கே பார்க்கலாம்னு காலையில் உனக்கு மெசேஜ் அனுப்பறேன்.”

“ம்” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள் சங்கமித்ரா.
“குட் நைட் குஜிலி.”
“இதென்ன புதுசா கூப்பிடறீங்க…நல்லாவே இல்லை.இப்படி கூப்பிடாதீங்க”அவன் மறுப்பான் என்று தெரிந்தே சொன்னாள் அவள்.
“எனக்கு இப்படி கூப்பிடும் போது கொஞ்சம் கிக்கா இருக்கு…நான் இப்படி தான் கூப்பிடப் போறேன்.”என்று சொன்னவன் அவள் மறுத்துப் பேசும்முன் போனை வைத்து விட்டான்.
‘நாளை தான் கடைசி நாள். நாளை அவரை பார்க்கும் பொழுது  அவரிடம் என் மனதிலும் அவர் மேல் ஈர்ப்பு வந்து இருப்பதை சொல்லி விடலாமா’ என்ற எண்ணத்தோடு படுக்கையில் விழுந்தவள் அப்படியே தூங்கியும் போனாள்.
அவள் நினைத்தால் அது அப்படியே நடந்து விடுமா என்ன? பின்னே எனக்கு என்ன வேலை என்ற கேள்வியை விதி அவளை பார்த்து கேட்டது.


Facebook Comments Box
What’s your Reaction?
+1
6
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here