New novel writer Madhumathi Bharath’s ongoing romantic Tamil new novel Vanavil Sirpame updated frequently in this writer’s Website.This is a page for Tamil Novel quenchers.Feedback’s from my story readers are Welcome.both positive , negative or any other suggestions. please share your esteemed comments below.This helps me to do much better.Enjoy it and leave your comments.
அத்தியாயம் 14
இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு விடியலின் பொழுது அளவுகடந்த உற்சாகத்தோடு எழுந்தாள் சங்கமித்ரா.அவளுக்கு தன் மனம் குறித்து ஓரளவிற்கு தெளிவு ஏற்பட்டு விட்டது.இன்று பிரபஞ்சனை நேரில் பார்க்கும் பொழுது அவனிடம் சொல்லி விட வேண்டும்.நேரில் சொல்லும் பொழுது அவன் முகம் எப்படி மாறும்? நிச்சயம் ஆனந்த அதிர்ச்சி அடைவான் என்று மனதின் ஒரு புறமிருந்து ஒரு குரல் வர,அதெல்லாம் இல்லை இது அவர் ஏற்கனவே எதிர்பார்த்த விஷயம் தானே அதிர்ச்சி எல்லாம் இருக்காது.சொன்னதும் நேராக வீட்டுக்கே வந்து என்னைப் பெண் கேட்பார்.
சங்கமித்ராவுக்கு இப்பொழுது வீட்டில் ஏற்பாடு செய்து இருக்கும் திருமண ஏற்பாட்டை பற்றிய கவலை கொஞ்சமும் இல்லை.அவன் தான் அவ்வளவு உறுதியாக சொல்கிறானே…நிச்சயம் ஏதாவது செய்து அவனே சமாளித்து விடுவான் என்ற நம்பிக்கை தோன்ற துள்ளலுடன் வீட்டில் கிளம்பிக் கொண்டு இருந்தாள்.
“என்னடி இவ்வளவு சீக்கிரம் கிளம்பிக்கிட்டு இருக்க? உனக்கு எப்பவும் எட்டு மணிக்குத் தானே விடியும்?”கேள்வியாக மகளை எதிர்கொண்ட சாவித்ரியை பார்த்து ஒரு மார்க்கமாக சிரித்து வைத்தாள் சங்கமித்ரா.அவள் இயல்பாக இருந்து இருந்தால் கூட சாவித்திரி ஒன்றும் நினைத்து இருக்க மாட்டார்.ஆனால் அவளின் இந்த சிரிப்பை பார்த்ததும் தான் அவர் கொஞ்சம் அரண்டு போனார்.
“என்னடி ஒரு மாதிரி சிரிக்கிற? உடம்பு எதுவும் சரி இல்லையா?”என்று கவலையுடன் அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தார்.
“அட எனக்கு ஒண்ணும் இல்லம்மா…காலேஜ்ல இன்னைக்கு எங்களுக்கு ஜூனியர்ஸ் எல்லாரும் சேர்ந்து பேர்வெல் (Farewell) கொடுக்கறாங்க…அந்த சந்தோசம் தான்.”
“வேற ஒண்ணும் இல்லையே”சந்தேகமாக மகளை மேலும் கீழும் ஆராய்ந்தார்.
“வேற ஒண்ணும் இல்லைம்மா”அம்மாவின் கன்னத்தை தட்டி குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள அவளின் அம்மாவும் அதை உண்மை என்று நம்பி கொஞ்சம் ஆசுவாசமானார்.
குளித்து விட்டு அறைக்குள் நுழைந்து தலையை துவட்டிக் கொண்டு இருந்தவள் மொபைல் ஒலிக்கவும் பாய்ந்து சென்று அதை எடுத்தாள்.பிரபஞ்சன் தான் மெசேஜ் அனுப்பி இருந்தான்.பீச்சிற்கு வந்து விடும் படி அதில் சொல்லி இருக்க உற்சாகத்துடன் நல்ல அடர் சிவப்பில் கருப்பில் பூக்கள் வரைந்த சுடிதாரை அணிந்து கொண்டு கிளம்பினாள்.
ஆணுக்கு காதல் வந்தால் அதை பெண்ணிடம் தெரிவிப்பதற்கு பூக்கள் வாங்கி பரிசளிப்பான்.ஆனால் இங்கே தானும் பிரபஞ்சன் மீது காதல் கொண்டதை எப்படி அவனுக்கு தெரியப்படுத்துவது என்று சிந்தித்துக்கொண்டே வீட்டை விட்டு கிளம்பினாள்.வீட்டை விட்டு கிளம்பிய மகளை கேள்வி கேட்க நினைத்த மனைவியை பார்வையாலேயே அடக்கினார் தர்மராஜ்.
“என்னங்க…நீங்க செய்றது ஒண்ணும் சரியாப் படலை எனக்கு…நானும் பார்க்கிறேன்.இந்த ஒரு வாரமா உங்க பொண்ணு ஆளே சரி இல்லை.நீங்களும் எதுவும் கேட்க மாட்டேங்கறீங்க…என்னையும் எதுவும் கேட்க விட மாட்டேங்கறீங்க…காலம் எவ்வளவு கெட்டுப் போய் இருக்கு…அவளுக்கு கல்யாணம் வேற முடிவு பண்ணி இருக்கோம். எனக்கு என்னவோ பயமா இருக்குங்க ”மூச்சு விடாது பேசிக் கொண்டே போனவரை ஒற்றை கையசைவில் தடுத்து நிறுத்தினார் தர்மராஜ்.
“ரொம்பவும் கவலைப் படாதே சாவித்திரி …அவ இப்போ எங்கே போறா? யாரை பார்க்கப் போறா? எல்லாம் எனக்குத் தெரியும்.”
“என்னங்க நீங்க என்னென்னவோ சொல்றீங்க? இவ யாரை பார்க்கப் போய் இருக்கா? என்கிட்டே காலேஜ்ல ஏதோ பேர்வெல்ன்னு இல்லை சொல்லிட்டு போனா?”பதைபதைத்தது அந்த தாயுள்ளம்.
“நீ பயப்படும்படி ஒண்ணும் இல்லை சாவித்திரி…அப்படி அவளுக்கு ஒரு ஆபத்து வந்தா அதை பார்த்துக்கிட்டு நான் சும்மா இருப்பேனா?நீ கண்டதையும் மனசில போட்டு குழப்பிக்காம வேலையை கவனி…அப்புறம் நாளைக்கு காலையில் பத்து மணிக்கு மாப்பிள்ளை பொண்ணு பார்க்க வர்றதா சொல்லி இருக்கார்.அதுக்கு என்ன ஏற்பாடு செய்யணுமோ அதை எல்லாம் கவனி…இந்த பஜ்ஜி சொஜ்ஜி ஐட்டம் எல்லாம் நீயே செஞ்சிடு” என்று மளமளவென உத்தரவுகளை பிறப்பிக்க சாவித்திரியும் அப்போதைக்கு மகளைப் பற்றிய கவலையில் இருந்து வெளிவந்தார்.
“ஆமாங்க…நாளைக்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து எத்தனை பேர் வர்றாங்க…”
“மாப்பிள்ளை மட்டும் தான்”
“என்னங்க…அவர் மட்டுமா…கூட யாரும் வரலையா?”
“என்ன கேள்வி இது சாவித்திரி…நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல மாப்பிள்ளைக்கு அப்பா, அம்மா யாரும் இல்லைன்னு…”
“சொன்னீங்க தான்…அதுக்காக பழகினவங்க,தெரிஞ்சவங்க,இப்படி ஒருத்தர் கூடவா இல்லை?”
“மாப்பிள்ளை இந்த ஊருக்கு புதுசு சாவித்திரி அதை மறந்துட்டே பார்த்தியா?அவர் இதுக்கு முன்னாடி இருந்தது எல்லாம் கோயம்புத்தூர்ல இன்னும் இங்கே அவருக்கு யாரையும் தெரியாது இல்லையா?”
“எல்லாம் சரிதாங்க…இருந்தாலும்…”
“எதையும் யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காதே சாவித்திரி….இந்த மாதிரி ஒருத்தர் மாப்பிள்ளையா கிடைக்கிறதுக்கு நம்ம பொண்ணு ரொம்பவே கொடுத்து வச்சு இருக்கணும்.எங்க டிபார்ட்மெண்ட்ல சேர்ந்த மூணே வருஷத்தில் எவ்வளவு நல்ல பேர் தெரியுமா அவருக்கு? கொஞ்சம் கூட யாருக்கும் வளைஞ்சு கொடுக்க மாட்டார்.தப்புன்னு தெரிஞ்சா யாரா இருந்தாலும் விட மாட்டார்.தனியா இருந்தாலும் அவர்கிட்டே ஒரு கெட்டபழக்கம் கூட கிடையாது.இந்த காலத்தில் இப்படி ஒருத்தரை பார்க்கவே முடியாது.”
“ஷ்…அப்பா போதும் போதும்…உங்க மாப்பிள்ளை புராணம்…விட்டா பேசிக்கிட்டேஏஏஏஏஏஏ போவிங்க போல…நான் கிளம்பறேன்.எனக்கு வேலை இருக்கு.ஆனா ஒண்ணு மட்டும் ஆச்சரியமான விஷயம்.எப்பவும் போலீஸ் புத்தியோட யார் மேல என்ன தப்பு இருக்கும்னு சந்தேகத்தோட பார்க்கிற உங்ககிட்டேயே ஒருத்தர் நல்ல பேர் வாங்கி இருக்கார்.அப்படிங்கிறதை நினைச்சு பார்க்கும் பொழுது ரொம்ப ஆச்சரியமா தான் இருக்கு” என்று சொன்னவர் கணவரின் முறைப்பை கண்டும் காணாதவர் போல அங்கிருந்து அகன்று விட்டார்.
வீட்டை விட்டு வெளியே வந்த சங்கமித்ரா ஆட்டோவில் ஏறி நேராக பீச்சிற்கு வந்தாள். ‘இவ்வளவு பெரிய பீச்சில் எங்கே போய் அவரைத் தேடுவது?அதுக்கு முன்னாடி அவருக்கு ஏதாவது கிப்ட் வாங்கிட்டா நல்லா இருக்குமே…இப்படி பீச்சில் வந்து எதை வாங்குறது?அதுவும் காலை நேரத்தில இங்கே என்ன கிடைக்கும்?சுண்டலும்,முறுக்கும் வாங்கிக் கொடுத்து காதலை சொன்னா விளங்கிடும்…இந்த உலகத்திலேயே அப்படி காதலை சொன்ன ஜீவன் நான் ஒருத்தியாகத் தான் இருப்பேன்’ என்று தனக்குதானே நினைத்து சிரித்துக் கொண்டவள் சற்று நேரம் பீச்சை சுற்றி வரத் தொடங்கினாள்.
பிரபஞ்சன் வர சொன்ன நேரத்திற்கு சற்று முன்பாகவே வந்து இருந்ததால் அவன் வரும்வரை பீச்சை சுற்றி வேடிக்கை பார்க்கலாம் என்று எண்ணியவள் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.வீட்டில் இருந்து சாப்பிடாமல் வந்ததால் வயிறு வேறு சத்தமிட சற்று தள்ளி இருந்த ஹோட்டலில் சென்று குடிப்பதற்கு ஜூஸ் ஆர்டர் செய்தாள்.பிரபஞ்சன் வந்த பிறகு இருவரும் சேர்ந்து காலை உணவை உண்ணலாம் என்று எண்ணியபடியே ஒரு கையில் மொபைலை வைத்து நொண்டிக் கொண்டு இருந்தாள்.
‘இன்னமும் கால் வரவில்லையே…எப்பொழுதும் எனக்கு முன்னாடி வந்து நிற்பார்…இன்னைக்கு என்ன வந்துச்சாம்’.தன்னுடைய நேசத்தை அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்ற தவிப்புடன் காத்திருந்தவளுக்கு நேரத்தை எப்படி நெட்டித் தள்ளுவது என்று தான் தெரியவில்லை.ஆர்டர் செய்து இருந்த ஜூஸ் வந்துவிட அசுவாரசியமாக அதை உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தாள்.பிரபஞ்சன் வருவதாக சொன்ன நேரத்தையும் தாண்டி மேலும் ஒரு பத்து நிமிடம் கடந்த பிறகும் கூட அவன் வந்த பாடில்லை.ஏனோ சங்கமித்ராவிற்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது.
தானுண்டு,தன் படிப்புண்டு என்று இருந்தவளை விடாமல் பின் தொடர்ந்து வந்து காதலை சொன்னதோடு மட்டும் இல்லாமல் என்னுடைய மனதிலும் தேவை இல்லாமல் நிறைய ஆசைகளை வளர்த்து விட்டு இப்பொழுது இப்படி அலட்சியம் செய்தால் என்ன அர்த்தம்?ஒருவேளை என்னைப் பிடிக்கவில்லையோ’ என்று எண்ணி உதடு பிதுங்கி கண்கள் கலங்க அழுகத் தயாராக இருந்தவள் சுற்றிலும் இருப்பவர்கள் தன்னை பார்ப்பதை உணர்ந்து பில்லுக்கு உரிய பணத்தை செலுத்து விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
வெளியே வந்து நின்றவள் முகத்தில் சில்லென்று கடல் காற்று பட வேதனையில் இருந்தவளை ஆறுதல் படுத்துவது போல சுகமாக தென்றல் வீசியது.அப்படியே நடந்து சென்றவள் நிழலாக இருந்த ஒரு படகு மறைவின் பின் சென்று அமர்ந்தாள்.கடல் காற்றின் குளுமையினாலோ என்னவோ அவளின் மனம் ஓரளவிற்கு சமாதானம் ஆகி இருந்தது.
இதற்கு முன் இப்படி ஆனது இல்லையே? பிரபஞ்சன் தன்னை ஏமாற்றுபவனும் இல்லை.ஒருவேளை… அவனுக்கு வரும் வழியில் ஏதேனும் விபத்து நடந்து இருக்குமோ என்று சிந்திக்கத் தொடங்கியவள் உடனே பதறிப் போய் அவனின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.
ரிங் போய்க் கொண்டு இருந்ததே தவிர அவன் போனை எடுக்கவே இல்லை.அவளின் பதட்டம் மேலும் கூட வேகமாக அங்கிருந்து ஓடியவள் பீச்சை விட்டு வெளியே வந்தவள் எங்கே போவது, யாரைப் பார்ப்பது ,யாரிடம் கேட்பது என்று ஒன்றுமே புரியாமல் தவித்துப் போனாள்.அவனைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்ற உண்மை பொட்டில் அறைய அடுத்து என்ன செய்வது என்று செய்யாமல் உறைந்து போய் நின்றவளை கலைத்தது ஒரு அவலக்குரல்.
“ஐயோ…என்னைக் காப்பாத்துங்களேன்”என்று ஒரு ஆணின் குரல் கேட்க குரல் வந்த திசையில் திரும்பியவள் மின்சாரத்தை தொட்டது போல அதிர்ச்சி அடைந்தாள்.
ஏற்கனவே உடல் முழுவதும் ரத்தம் வழிந்தபடி கீழே விழுந்து கிடந்தவனை கொஞ்சமும் இரக்கம் காட்டாமல், கையில் இருந்த ஹாக்கி ஸ்டிக் மூலம் அவன் காலிலேயே ஒரு அடி போட்டவன் சாட்சாத் பிரபஞ்சனே தான்.கண்கள் முழுக்க அவ்வளவு ரௌத்திரம்.அவன் காலுக்கு கீழே விழுந்து கிடந்தவன் பயத்தில் அவனை நோக்கி கையெடுத்து கும்பிட,அதை கண்ட பிறகும் கூட சிறிதளவு கூட இளக்கமே இல்லாமல் இரும்பென இறுகிப் போய் இருந்தான் பிரபஞ்சன்.
விரட்டி விரட்டி வேட்டையாடுவது என்று கேள்விப்பட்டு இருக்கிறாள்.ஆனால் இப்பொழுது தான் கண்ணெதிரே அதைப் பார்த்தாள் சங்கமித்ரா.அவனைக் காப்பாற்ற முன் வந்த அவனுடைய கூட்டாளிகள் இப்பொழுது தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழலில் இருப்பதை உணர்ந்து ஓடத் துவங்க அவர்களில் ஒருவரையும் விடாமல் துரத்திப் பிடித்து அடித்து வீழ்த்தினான்.
அவனுடைய அடி ஒவ்வொன்றும் இருபதடி தூரத்தில் இருந்த சங்கமித்ராவின் உடலை தூக்கிப் போட செய்தது.அந்த அளவிற்கு ஒரு வெறி இருந்தது.ஒவ்வொருவராக அடித்து வீழ்த்தியவன் கடைசியில் அனைவரையும் ஒரு இடத்தில் மண்டி போட வைத்து அவர்களின் சட்டையின் மூலமாகவே அவர்களின் கையை பின்பக்கமாக கட்டி வைத்தான்.
இது அத்தனையும் கூட்டத்தில் ஒருத்தியாக நின்று பார்த்துக் கொண்டு இருந்த சங்கமித்ரா உறைந்து போய் நின்றாள்.நின்ற இடத்தை விட்டு ஒரு அடி கூட அவளால் எடுத்து வைக்க முடியவில்லை.உள்ளுணர்வு உந்த சட்டென சங்கமித்ரா இருந்த பக்கம் பார்வையை திருப்பிய பிரபஞ்சனின் கண்களில் ஒரே ஒரு நிமிடம் லேசான அதிர்ச்சி…அடுத்த நொடியே அவனுடைய அக்மார்க் சிரிப்பை சிரித்தபடி சங்கமித்ரா இருக்கும் திசையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.
அவளை அவன் கண்டுகொண்டதும் ,தன்னை நோக்கி வருவதும் புரிந்ததும் வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த இடத்தை விட்டு ஒரே ஓட்டமாக ஓடினாள் சங்கமித்ரா.கண்மண் தெரியாத ஓட்டம்.நல்லவேளையாக அவள் அப்படி ஓடும்போது எதிரில் எந்த வாகனமும் வரவில்லை.பிரபஞ்சனிடம் இருந்து தப்பி வருவது ஒன்று மட்டுமே அப்போதைய எண்ணமாக இருக்க ,அங்கே பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பஸ் எந்த இடத்திற்கு செல்கிறது என்பதைக் கூட விசாரிக்காமல் வேகமாக ஓடிப் போய் ஏறிக் கொண்டாள்.
படபடவென முரசு போல அடித்துக் கொண்ட அவளின் இதயம் அவளின் படபடப்பை மேலும் கூட்டியது.பின் தொடர்ந்து எதுவும் வருகிறானா என்று அவள் திரும்பிப் பார்க்க அவனோ அதே இடத்தில் நின்று கொண்டு பார்வையால் அவளைத் தொடர்ந்து கொண்டு இருந்தான்.இப்பொழுது ஜன்னல் சீட்டில் இருந்து அவள் திரும்பிப் பார்க்கவும் வழக்கம் போல எந்த வித பதட்டமும் இல்லாமல் குறும்பாக ஒற்றை கண்ணை சிமிட்டியவன் ஸ்டைலாக தன்னுடைய கூலிங்கிளாசை அணிந்து கொண்டு அவளுக்கு டாட்டா காண்பிக்க சங்கமித்ரா மிரண்டு போய் தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள்.
பிரபஞ்சன் அவள் அப்படி ஓடுவதைப் பார்த்ததும் நடந்த அடிதடியைப் பார்த்து பயந்து விட்டாள் போல…மறுபடி பார்த்து பேசும் பொழுது சொன்னால் புரிந்து கொள்வாள் என்று எண்ணிக் கொண்டான்.ஆனால் அது அத்தனை சுலபமானது இல்லை என்பது அவனுக்கு அப்பொழுது தெரிந்து இருக்கவில்லை.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
9
+1
+1
1
+1
+1
+1
+1
Nice mitra… mama va vendanu solliduvalo…
pls wait da…adutha epi potathum ungaluku pathil kidaichudum
Super. next Seekiram Perusa podunga update
ithukum mela perusa venumna weekly 2 ud than poda mudiyum…ok va
Nice update mam
Madhu fulla startingilirunth padichttenpa naduvil missanathu el lam clear pa supera irrukku mithra bayanthu odinallum yaar vitta ? praba vita mattarunnuthaan ninaikkiren adutha udkku waiting
thanks ma
kandippa vida mattan…ava pidikkalainu sonnappave avan vidalai…ippo mattum vittuduvana enna?
Nice ud madhu welcome back policekar lover boy ah partha prabanjan ah cation herova parthu mithra bayanthuta pola edhuku ellam policekar asaruvara enna waiting eagerly for next ud pa seekiram vanga
well said Niran…
Waiting for the next epi
ennoda area la heavy rain & POWER CUT MA…trying to give update soon.