அத்தியாயம் 24
உறவினர்கள் அனைவர் முன்னிலையிலும் அழைத்து வரப்பட்டு அமர வைக்கப்பட்டு இருந்தாள் சங்கமித்ரா.பிரபஞ்சன் தன்னுடைய உறவினர் யாரையும் நிச்சயதார்த்த விழாவிற்கு அழைப்பு விடுக்காததால் வீட்டிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டு வீட்டு மொட்டை மாடியில் பந்தல் போடப்பட்டு எல்லாரும் அமர்ந்து இருந்தனர்.
பிரபஞ்சன் வந்ததும் மளமளவென எல்லா ஏற்பாடுகளும் நடைபெற ஆரம்பித்தது.கூட்டத்தின் நடுவே கம்பீரத்தின் மறு உருவமாக போர் வீரனை போன்ற நிமிர்வுடன் அமர்ந்து இருந்தான் பிரபஞ்சன்.உடல் அங்கே இருந்தாலும் அவனுடைய உள்ளமோ ஒவ்வொரு நொடியும் தன்னுடைய மனதுக்கு இனியவளை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது.
சுற்றிலும் இருந்த தர்மராஜின் உறவினர்கள் தன்னை பார்வையால் எடை போடுவதை உணர்ந்து இருந்ததால் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நல்ல பிள்ளையாக அமர்ந்து இருந்தான்.முதலில் சத்யா அவன் வந்து அமர்ந்ததுமே ஜூஸ் கொண்டு வந்து கொடுத்து விட அதை குடிக்காமல் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தவனின் பார்வை மாடிபடிகளிலேயே நிலைத்து நிற்கவும் கூடி நின்ற உறவினர்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டனர்.
அதை எல்லாம் சிறிது நேரம் கழித்தே உணர்ந்தவன் அசடு வழிந்தவாறு மெல்ல பார்வையை திருப்பிக் கொண்டான்.எவ்வளவு நேரம் தான் அவனும் அவளது வரவை எதிர்பார்க்காத மாதிரியே விறைப்பாக இருப்பது.மற்றவர்களின் கேலிக்கு பயந்து நல்ல பிள்ளையாக அமர்ந்து கொண்டவனின் காதுகள் மட்டும் கூர்மையாக அவளின் கொலுசொலியை எதிர்பார்த்து காத்திருந்தது.
அவனை அதிகம் சோதிக்காமல் மெல்லிய கொலுசொலியுடன் அவனை நோக்கி நடந்து வந்தாள் சங்கமித்ரா.அவன் எடுத்து கொடுத்த பச்சை நிற புடவையில் அப்சரஸ் போல இருந்தவளை விட்டு கண்களை எடுக்க மறந்தான் பிரபஞ்சன். தூரத்தில் வரும் பொழுதே அவனது பார்வையையும் அது உணர்த்திய சேதியிலும் மேனி சிலிர்த்தவள் அவனுடைய பார்வையை எதிர்நோக்க அஞ்சி நிலத்தில் பார்வையை பதித்துக் கொண்டாள்.
அவனுக்கு நேர் எதிரில் தரையில் அமர்ந்த பிறகும் கூட சங்கமித்ரா பார்வையை உயர்த்தவில்லை.உறவினர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தாலும் அவனுடைய பார்வை அவளையே துளைத்துக் கொண்டு இருந்தது.திருமண பத்திரிக்கை எல்லார் முன்னிலையிலும் வாசிக்கப்பட்ட பின்னர் பிரபஞ்சனை அழைத்து மோதிரம் போட சொன்னார்கள்.அதற்காக தானே அவனும் காத்திருக்கிறான்.
உள்ளுக்குள் உள்ளம் குதியாட்டம் போட துள்ளலோடு எழுந்து வந்தவன் அவளுக்காக தான் வாங்கி வைத்து இருந்த வைரக்கல் பதித்த மோதிரத்தை எடுத்து அவளது வெண்பஞ்சு விரல்களில் அணிவித்தான்.அதை அணிவிக்கும் பொழுது அவள் கைகளில் இருந்த குளிர்ச்சியும், நடுக்கமும் அவள் பயந்து போய் இருக்கிறாள் என்பதை உணர்த்த மெதுவாக அவளது உள்ளங்கையை பிறர் அறியாமல் அழுத்தி அவளுக்கு தைரியம் கொடுத்தான். அவனது விரல்கள் அளித்த தைரியமோ என்னவோ அவள் லேசாக நிமிர்ந்து அவனைப் பார்க்க,எப்பொழுதும் போல குறும்பாக ஒற்றை கண்ணை சிமிட்டி வைத்தான்.
திடுக்கிட்டுப் போய் அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள்.அத்துடன் நிறுத்தி கொண்டு இருந்தால் கூட பரவாயில்லை. அவனுக்கு மோதிரம் போடுவதற்காக அவள் அவனை நெருங்கி நின்ற நேரம் பார்த்து மற்றவர்கள் காதுகளுக்கு விழாத வண்ணம் மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.
“ரூம் கதவை பூட்டி வைக்காதே…நான் வருவேன்” என்று சொல்ல அதில் அரண்டு போய் பேய் முழி முழித்த அவளின் முகத்தை போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தவர் சரியான நேரத்தில் கிளிக் செய்து விட்டார்.
“தங்கச்சி போட்டோல முகம் சிரிச்ச மாதிரி இல்லை…அவர் கையை பிடிச்சுகிட்டே லைட்டா இந்த பக்கம் திரும்பி போட்டோவுக்கு போஸ் கொடுமா” போட்டோகிராபர் விளக்க,சங்கமித்ரா எவ்வளவு முயன்றும் சட்டென்று அவளால் அதிர்ச்சியில் இருந்து உடனடியாக மீள முடியவில்லை.
கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த பிரபஞ்சன் உள்ளுக்குள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டே வெளியில் அவளை தேற்ற முயன்றான்.
“அவளுக்கு டையர்டா இருக்கும் போல…விட்டுடுங்க”
“இல்ல சார்…இதெல்லாம் இந்த நிமிஷம் சிரமமாக தான் இருக்கும்.ஆனா போட்டோ எடுத்து வச்சிட்டா காலத்துக்கும் நீங ரெண்டு பெரும் பார்த்து ரசிப்பீங்க இல்லையா…” போட்டோகிராபர் மேலும் விளக்க அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்ட மித்ரா சிரித்தபடி எல்லா புகைப்படத்திற்கும் போஸ் கொடுத்தாள்.
அவளுடைய கல்லூரித் தோழிகள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இது செமஸ்டர் லீவாக இருந்ததால் அனைவரும் ஊருக்கு போய் இருக்க,நெருங்கிய தோழியான தனுஜாவையும் அவள் அழைக்கவில்லை.இந்த நேரத்தில் தான் இருக்கும் மனநிலையில் மற்றவர்களின் இயல்பான கேலியை தன்னால் எதிர்கொள்ள முடியுமா என்ற பயமே அதற்கு காரணமாக இருந்தது.
சடங்குகள் முடிந்ததும் அவளையும் பிரபஞ்சனையும் தனியாக நிற்க வைத்து சில போட்டோக்கள் எடுத்தபின் அவளை அறைக்கு அனுப்பி வைத்து விட்டனர். அறைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக அறையை இறுக பூட்டி தாழ் போட்டுக் கொண்டாள் சங்கமித்ரா.இந்த திருமணத்தில் தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தன்னுடைய விருப்பமின்மையை அவனுக்கு உணர்த்த வேண்டும் என்று எண்ணினாள்.
சற்று முன் அவனது பார்வையை கூட நேர்கொண்டு சந்திக்க முடியாமல் வெட்கத்தில் தலை கவிழ்ந்தது ஏனோ அவளுக்கு அப்பொழுது நினைவில் இல்லை. தலைவலிப்பதாக பெற்றவர்களிடம் காரணம் சொல்லிவிட்டு அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டாள்.
எல்லாரும் வீட்டில் இருந்து கிளம்பிய பின்னும் அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை. கிளம்புவதற்கு முன் பிரபஞ்சன் கதவை தட்டியதும்,தன்னை கதவை திறக்கும்படி சொன்னதும் தெளிவாக காதில் விழுந்தாலும் பிடிவாதமாக அறையை விட்டு வெளியே வரவில்லை.
தர்மராஜ் அவளுக்கு உடம்பு சரியில்லை தூங்குகிறாள் என்று சொல்வதும் தெளிவாக அவள் காதில் விழுந்தது.அதன்பிறகு பிரபஞ்சனின் குரல் அங்கே கேட்கவில்லை.தான் வெற்றி அடைந்து விட்டோம் என்று மகிழவும் முடியாமல் அழுகையில் கரைந்தாள் சங்கமித்ரா.
வெகுநேரம் அழுததன் விளைவாக உண்மையிலேயே தலைவலி வந்தது அவளுக்கு. முகமெல்லாம் வீங்கி,கண்கள் தடித்துப் போய் இருந்த மகளை பார்த்த சாவித்திரி பதறிப் போனார்.
வேறு எந்த கேள்விகளும் கேட்காமல் தன்னுடைய கைகளாலேயே அவளுக்கு உணவை ஊட்டி விட்டவர் தலைவலி மாத்திரையை கொடுத்து போட சொல்லி விட்டு அறையில் சென்று படுக்குமாறு சொல்லி விட்டார்.சோர்ந்த நடையுடன் செல்லும் மகளைப் பார்த்த சாவித்திரிக்கு உள்ளுக்குள் குழப்பம் பிறந்தது.
‘மாப்பிள்ளை நல்லவர் தான்.ஆனால் இவள் தான் ஏனோ கல்யாணத்தில் விருப்பம் இல்லாதவள் போல நடந்து கொள்கிறாள்.ஒருவேளை வேறு யாரையும் காதலிக்கிறாளோ’ என்று எண்ணியவர் அதை அப்படியே தனக்குள் புதைத்துக் கொண்டார்.இந்தக் கேள்வியை அப்படியே தன்னுடைய கணவரிடம் கேட்க அவர் விரும்பவில்லை.தனக்கு தெளிவாக தெரிந்து இருந்தால் அவரிடம் சொல்லலாம். தானே குழப்பத்தில் இருக்கும் பொழுது அவரிடம் சொல்லி அவரையும் ஏன் வீணாக குழப்ப வேண்டும் என்று நினைத்தவர் வீட்டை ஒழுங்கு படுத்தும் வேலையில் ஈடுபட்டார்.
‘நாளை காலையில் சங்கமித்ராவிடம் நேருக்கு நேராக கேட்டு விட வேண்டும்.ஒருவேளை அவள் காதலிக்கும் பையன் நல்ல பையனாக இருந்தால் வசதி குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று அந்த பையனுக்கே திருமணம் செய்து வைத்து விட வேண்டும்.என் பெண் பாவம் எங்களிடம் சொல்ல பயந்து கொண்டு இப்படி அழுகையில் கரைகிறாள் போலவே’என்று எண்ணிக் கொண்டவர் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்கையில் படுத்தவரின் மனம் முழுக்க தன்னுடைய மகளைப் பற்றிய எண்ணங்கள் மட்டுமே நிறைந்து இருந்தது.
அறைக்குள் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த சங்கமித்ரா மாத்திரையின் உபயத்தால் தன்னையும் அறியாமல் உறங்கி விட்டாள்.இரவில் ஏதேதோ கனவுகள் வந்து அவளை பயமுறுத்த உடலை முறுக்கி தூக்கத்தில் புலம்பத் தொடங்கினாள்.ஒரு கட்டத்தில் யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல தோன்ற தூக்கத்தில் இருந்து கண்களை திறந்து பார்த்தவளின் விழிகள் நொடியில் தூக்கத்தை துறந்து விட்டது.
அவளின் படுக்கைக்கு நேர் எதிரில் இருந்த சேரில் கால் மேல் கால் ஊடுருவும் விழிகளுடன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தது சாட்சாத் பிரபஞ்சனே தான். ஒருவேளை கனவு காண்கிறோமோ என்று எண்ணியவள் கண்களை நன்றாக கசக்கி விட்டு மீண்டும் பார்க்க அதே இடத்தில் அப்படியே இருந்தான் பிரபஞ்சன்.அவளின் செய்கைகளை ஒருவித ஆராய்ச்சியோடு பார்த்தாலும் அவனது முகபாவனையில் எந்த மாற்றமும் இல்லை.
“ரொம்ப யோசிக்காதே…இது கனவெல்லாம் இல்லை…நான் வேணும்னா கிட்டே வந்து கிள்ளட்டுமா?”கேள்வி கேட்டவாறே எழுந்தவன் அழுத்தமான காலடியுடன் அவளை நெருங்கினான்.
அரண்டு போனவள் படுக்கையின் அந்தப் பக்கம் அவனுடைய கைகளுக்கு எட்டாதவாறு தள்ளி நின்று கொண்டு மணியை பார்த்தாள்.அது விடியற்காலை நான்கு மணியை காட்டியது.
“நீங்க எப்போ இங்கே வந்தீங்க? எப்படி உள்ளே வந்தீங்க?”
“ஆமா பெரிய அரசாங்க கஜானா பாரு…உள்ளே நுழைய முடியாம இருக்கிறதுக்கு. உங்க வீட்டு சுவரைக் கூட ஏறிக் குதிக்க முடியலேன்னா அப்புறம் நான் ஐபிஎஸ் பாஸ் பண்ணினதே வேஸ்ட்”அசால்டாக சொன்னவன் பேசிக் கொண்டே அவளை நோக்கி முன்னேறினான்.
“கிட்டே வராதீங்க..அங்கேயே நில்லுங்க” என்று கத்தியவள் சுற்றிலும் தேடி அவனை தடுப்பதற்காக தலையணையை எடுத்து கைகளில் ஏந்திக் கொண்டாள்.
அவளின் செய்கையில் அவனுக்கு சிரிப்பு வந்து தொலைத்தது.
“அட மண்டு…என்னை தடுக்க இந்த தலையணையால முடியுமா?” என்று கேட்டபடி அவளை நெருங்கியவன் அதை அனாயசமாக தூக்கி எறிந்து விட்டு அவளுக்கு அருகில் வந்து நின்றான்.அவனுக்கும்,அவளுக்கும் இடையில் சில அடிகள் மட்டுமே இடைவெளி இருந்தது.அவளுக்கு அந்தப்பக்கம் சுவர் இருந்தது.
‘நல்லா வகையா சிக்கிட்டேனே’ என்று எண்ணியவள் அவனை மிரட்டி அங்கே இருந்து வெளியேற்ற நினைத்தாள். ‘என்ன தான் திருமண நிச்சயம் முடிந்து இருந்தாலும் இப்படி தனிமையில் இருவரும் ஒரே அறையில் இருந்ததை யாரேனும் பார்க்க நேர்ந்தால் என்ன நினைப்பார்கள் என்பதே அவளது கவலையாக இருந்தது.
“காலையில உன்னை எனக்காக காத்திருக்க சொன்னேனே ஏன் செய்யலை?தலைவலின்னு பொய்யா காரணம் சொல்லாதே.எனக்குத் தெரியும்…அது உண்மையான காரணம் இல்லைன்னு…உண்மையை சொல்லு”
“…”
“ஸோ…நீ சொல்ல மாட்டே…அப்படித்தானே…சரி நீ எப்போ சொல்றியோ சொல்லு.அதுவரை நான் இங்கே தான் இருப்பேன்”
“ஐயோ! ப்ளீஸ்! தயவு செஞ்சு கிளம்புங்க…யாரவது பார்த்துட்டா வம்பு”பதற்றம் தொற்றிக்கொண்டது அவளை.
“ஏன் இப்படி பயப்படுற?யாராவது பார்த்தால் கூட என்ன ஆகும்? நான் உன்னை கட்டிக்க போறவன் தானே?”
“ஹ…ரொம்ப ஈஸியா போச்சு இல்லை உங்களுக்கு.இதனால உங்களுக்கு எதுவும் இல்லை.ஆனா ஒரு பெண்ணோட பேரு எந்த அளவுக்கு கெட்டுப் போகும்னு தெரியுமா?”பொரிந்து தள்ளினாள் சங்கமித்ரா.
“இதுல என் தப்பு எதுவும் இல்லை.நீ காலையில் நான் கேட்டதை கொடுத்து இருந்தா நான் ஏன் உங்க வீட்டுகுள்ள சுவர் ஏறி குதிச்சு வரப் போறேன்.சரி சரி நேரமாச்சு.சீக்கிரம் வா”என்று பேசியபடி அவளின் அருகில் நகர வேகமாக பின்னடைந்தாள் சங்கமித்ரா.
“அதெல்லாம் முடியாது வெளியே போங்க” “ஸோ…தர மாட்ட..அப்படித்தானே?”
“ஆமா…ஆமா”அழுத்தமாக சொன்னாள் சங்கமித்ரா
“அப்போ நானும் போக மாட்டேன்”என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறியவன் அத்தோடு நில்லாமல் அவளது படுக்கையில் சாவகாசமாக படுத்து உறங்க ஆரம்பித்தான். அவனது செயலில் முற்றிலுமாக அதிர்ந்து போனாள் சங்கமித்ரா.
’இவன் என்ன இப்படி அழிச்சாட்டியம் செய்கிறான்’ “ப்ளீஸ்! யாராவது பார்க்கிறதுக்குள்ள வெளியே போங்க…”
“அப்ப நான் கேட்டதை கொடு…”என்று அவன் பிடிவாதமாக நிற்க என்ன செய்வதென்று புரியாமல் கைகளை பிசையத் தொடங்கினாள் சங்கமித்ரா.அவளின் தவிப்பை மேலும் சற்று நேரம் வேடிக்கை பார்த்தவன் அவள் அசந்து இருந்த நேரம் அவளின் கைகளை பற்றி தன்புறம் இழுத்தான்.
“கேசரி சாப்பிட அவ்வளவு கஷ்டமாவா இருக்கு உனக்கு?இரு நான் முயற்சி பண்ணி பார்க்கிறேன்” என்றவன் அவள் சுதாரிக்கும் முன்,அவளின் இதழை சிறை பிடித்து விட்டான்.விலகி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தவள் ஒரு சில நொடிகளே அவனை எதிர்க்க முடியாமல் தொய்ந்து போனாள்.
அவளையும் அறியாமல் அவளின் காதல் கொண்ட மனமும்,உடலும் அவனுடைய தாபத்தை மேலும் தூண்டும் வண்ணம் அவனுக்கு போதையேற்ற அவனது கைகள் மெல்ல ஊர்ந்து அவளை இறுக அணைத்துக் கொண்டது.நீண்ட நேரம் தொடர்ந்த இதழ் பரிமாற்றத்தின் முடிவில் இருவருக்கும் லேசாக மூச்சு முட்ட ஒரு சில நொடிகள் அவளை விலக்கி நிறுத்தியவன் அவளது முகத்தை பார்த்தான்.
மயக்கத்தோடு மூடி இருந்த விழிகள் அவனுக்கு மீண்டும் அழைப்பு விடுக்க,மீண்டும் மீண்டும் அவளை முற்றுகையிட்டான்.அவனை தடுக்க வேண்டியவளோ அவனை தடுக்கும் நிலையிலேயே இல்லை.அவளின் நிலை புரிந்து கொண்டதாலோ என்னவோ மேலும் அவளை நெருங்காமல் கண்ணியமாய் விலகினான் பிரபஞ்சன்.
அவளை கை வளைவுக்குள் வைத்துக் கொண்டு மயக்கத்துடன் மூடி இருந்த அவளது விழிகளை ஒற்றை விரலால் தடவியவன் தாபத்துடன் அவளின் காதருகில் குனிந்து பேசினான்.
“குஜிலி…இன்னும் நீ எனக்கு ஐ லவ் யூ சொல்லவே இல்லை…எனக்கு இப்பவே உன் வாயால கேட்கணும் போல இருக்கு.சொல்லேன்”அவனுடைய விரல்கள் மெல்ல கீழிறங்கி பயணித்துக் கொண்டிருந்த சமயம் தீச்சுட்டாற் போல அவனை உதறி தள்ளியவள் எழுந்து அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள்.
“ஹே! என்ன ஆச்சு மித்ரா…”திகைப்புடன் அவளை நோக்கி ஒரு எட்டு வைத்தவன் அப்படியே நின்று விட்டான் அடுத்து அவள் பேசிய பேச்சில்…
“ உங்களோட கேவலமான எண்ணம் தான் நிறைவேறிப் போச்சே…அப்புறமும் எதுக்கு காதல் கத்தரிக்காய்ன்னு உளறிக்கிட்டு இருக்கீங்க.உங்களோட அசிங்கமான எண்ணத்திற்கு எல்லாம் காதல்னு பேர் வைக்காதீங்க”என்று அந்த அறையே அலறும்படி கத்தினாள் சங்கமித்ரா.
சில நிமிடங்கள் அந்த அறையில் எந்த சப்தமும் இல்லை.மெல்ல திரும்பி பார்த்தாள் சங்கமித்ரா.நெஞ்சில் அறை வாங்கியவன் போல நம்பமுடியாமல் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான் பிரபஞ்சன்.
அவன் கண்கள் அவளைப் பார்த்து, ‘நீயா என் காதலை இப்படி அவமதித்தாய்?’ என்று கேட்ட கேள்வியை தாள முடியாமல் வேதனையுடன் விழிகளை இறுக மூடிக் கொண்டாள் சங்கமித்ரா. பிரபஞ்சன் மறுவார்த்தை பேசாமல் அந்த அறையை விட்டு விருட்டென வெளியேறி விட்டான்.வேகமாக செல்லும் அவனது முதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றவள் அவன் கண்ணிலிருந்து மறைந்ததும் தேற்றுவாரின்றி கதறி அழத் தொடங்கினாள்.
சிற்பம் செதுக்கப்படும்…
oh God paavam Prabanjan. yen mithra ipadi lam panra ???
Atcho prapanjan pavam
Enna ipadi achi sis .pavam prabanjan .inta mithu en ipadi iruka
thanks ma
pavam than…enna seirathu vera vali illa
avaluku vera vali illai
Intha ponnu yen eppadi panra pavam ennoda darling don't worry darling nan unnaku love you sollren ������
ha ha…ennapa ellarum ippadi kilambiteenga
Nice epi
thanks