Vanavil Sirpame – Episode 5 Tamil Novels

0
1374

New novel writer Madhumathi Bharath’s ongoing romantic Tamil new novel Vanavil Sirpame updated frequently in this writer’s Website.This is a page for Tamil Novel quenchers.Feedback’s from my story readers are Welcome.both positive , negative or any other suggestions. please share your esteemed comments below.This helps me to do much better.Enjoy it and leave your comments.

please click the below mentioned link to read the story update.don’t forget to share your views.

அத்தியாயம் 5

பீச்சில் அமர்ந்து கடலையே வெறித்துக் கொண்டு இருந்தாள் சங்கமித்ரா. ‘தான் காலையில் செய்த செயல் சரியா?அவசரப்பட்டு அவனை மாட்டி விட்டோமோ’ என்ற சிந்தனையில் இருந்தவளை கலைத்தாள் தனுஜா.

“ஏன்டி இதெல்லாம் உனக்கு தேவையா?இவ்வளவு தூரம் வருத்தப்படுபவள் அப்புறம் ஏன் அவர் மேல் போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்தாய்.பேசாமல் விட்டு இருக்க வேண்டியது தானே?”

“இல்லை தனு அந்த ஆளுக்கு கொழுப்பு ஜாஸ்தி.போலீஸ் வந்த பிறகு கூட என்னை சீண்டி விட்டுகிட்டே இருந்தான்.அதான் கோபத்தில் மாட்டி விட்டுட்டேன்”

“அதான் மாட்டி விட்டாச்சு இல்ல…அப்புறம் என்ன பீலிங் வேண்டிகிடக்கு?”

“ஏதோ கோபத்தில் அப்படி மாட்டிவிட்டேன் தனு…இப்போ நினைச்சா கொஞ்சம் பாவமா இருக்கு…சாதாரண ஆட்கள் இந்த மாதிரி கேசில் மாட்டினாலே தோலை உரிச்சுடுவாங்க. போலீஸ்காரர் பொண்ணுகிட்டேயே வம்பு இழுத்தா சும்மா விடுவாங்களா?கண்டிப்பா அடி பின்னி எடுத்து இருப்பாங்க.பாவம்ல”

“எது! பாவமா? அதை போலீசில் மாட்டி விடுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்.இப்போ காலேஜ்ஜை கட் அடிச்சுட்டு வந்து இங்கே வந்து புலம்புவதால் என்ன பயன்?பேசாம ஒண்ணு செய்.நீயே உங்க அப்பாவுக்கு போன் பண்ணி அவரை விடுவிக்க சொல்லு”

“நானா?” கேள்வியாக இழுத்தாள் மித்ரா

“பின்னே வேறு யார் செய்றது? நீ தானே மாட்டிவிட்ட?”

“நான் போய் கேட்டா எங்க அப்பா அவரை விடுதலை பண்ணிட்டு என்னை தூக்கி உள்ள வச்சுடுவார்”

“தெரியுது இல்ல…அப்ப வாயை மூடிக்க”

“இல்லடி…”

“ஏய் மறுபடி ஒரு வார்த்தை பேசின உன்னை கொன்னுடுவேன்…இதையே தான் காலேஜில் இருந்தப்பவும் சொன்ன….இங்கே வந்து ஒரு பத்து தடவை சொன்ன…இதுக்கு மேலே சொன்னா என் காதில் இருந்து ரத்தம் வந்துரும்டி.”

இருவர் பேசுவதையும் படகு மறைவில் இருந்து நமுட்டு சிரிப்புடன் ஒரு வார்த்தை கூட விடாமல் கேட்டுக்கொண்டே கையிலும் முகத்திலும் ஆங்காங்கே பிளாஸ்திரி போட்டு முடித்துவிட்டு அவர்களின் முன்னே வந்து முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு பேச தொடங்கினான் பிரபஞ்சன்.

“இப்போ உனக்கு சந்தோசமா?”

அந்த நேரத்தில்,அந்த கோலத்தில் பிரபஞ்சனை சற்றும் எதிர்பாராததால் மித்ரா பயந்து போனாள்.அவள் இப்படி உடம்பெல்லாம் கட்டோடு நிச்சயம் பிரபஞ்சனை எதிர்பார்க்கவில்லை.அவளுடைய தந்தை மிரட்டி விட்டு அனுப்பி வைத்து விடுவார் என்று அவள் நினைத்து இருக்க இங்கே முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு நிற்கும் பிரபஞ்சனை கண்டதும் அவளுக்கு தான் செய்த காரியத்தின் வீரியம் புரிய அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து விட்டாள் மித்ரா.அவளின் அரண்ட கோலத்தை பார்த்ததும் தனுஜா தான் அவளின் உதவிக்கு வந்தாள்.



“ஹலோ மிஸ்டர் மறுபடியும் ஏன் இங்கே வந்தீங்க?இவ்வளவு அடி வாங்கியும் நீங்க கொஞ்சம் கூட மாறலியே?”

“நீங்க குறுக்கே பேசாதீங்க சிஸ்டர்…அவ பதில் சொல்லட்டும்.ஒரு மனுஷன் வந்து பிடிச்சுருக்கு.லவ் யூன்னு சொன்னா இப்படியா போலீசில் மாட்டி அடி வாங்க வைப்ப…உனக்கு பிடிக்கலைனா நேரடியா என்கிட்டயே சொல்லி இருக்கலாம்ல…அம்ம்ம்மா”கையை நீட்டி பேசிக் கொண்டு இருந்தவன் திடிரென்று கையில் வலி அதிகரித்ததை போல கையை உதறிக் கொண்டு வலியால் துடிப்பதை போல நடித்தான்.

“அச்சோ…ரொம்ப அடிச்சாங்களா”பாய்ந்து ஓடி வந்தாள் மித்ரா.

“அதுக்கு தானே மாட்டிவிட்ட…எங்க அம்மா கூட என்னை அடிச்சது இல்லை தெரியுமா?காலையில் எப்படி எல்லாம் அடிச்சாங்க தெரியுமா?ஊர் பேர் தெரியாதவன் எல்லாம் வந்து அடிச்சான்.”வராத கண்ணீரை துடைத்துக் கொண்டே மீண்டும் பேச்சை தொடர்ந்தான்.

“நான் உன்கிட்ட காதல் சொன்னது என்ன அவ்வளவு பெரிய தப்பா?உனக்கு பிடிக்கலேன்னா நீ அதை நேரடியா என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானே உன் வழியில் வராம போய் இருப்பேன்ல…அதை விட்டுட்டு இப்படி போலீசில் மாட்டி விட்டுட்டுடியே”உரிய ஏற்ற இறக்கங்களோடு பேசி நான் சொல்வது அனைத்தும் உண்மை என்று அங்கிருந்த இருவரையும் நம்ப வைத்துக் கொண்டு இருந்தான் பிரபஞ்சன்.

பேசிக் கொண்டு இருந்தவன் மித்ராவின் கண்களில் லேசான கண்ணீரை பார்த்ததும் தனுஜாவின் புறம் திரும்பி பாவமாக பேச ஆரம்பித்தான். “சிஸ்டர் ரொம்ப தாகமா இருக்கு…ஒரு வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வாங்களேன்.ப்ளீஸ்!”

தனுஜா கண்ணிலிருந்து மறையும் வரை அமைதியாக இருந்தவன் சோகமாக அமர்ந்து இருந்த மித்ராவை கொஞ்சம் நெருங்கி அமர்ந்தான்.

“ஏன் அழற மித்ரா?”

“…”

“எனக்காகவா?”

“…”

“பேசுடா…இப்படி ஒண்ணுமே பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்”

“…”

“பேசமாட்டியா…ஆனா நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.எனக்காக என் மித்ரா கண்ணுல இருந்து கண்ணீர்…இப்போ நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா?வார்த்தையால சொல்ல முடியாத அளவுக்கு சந்தோசம் எனக்கு.”



“நான்…நான் எதையும்  வேணும்னு செய்யலை…அப்பா சும்மா மிரட்டி அனுப்பி வச்சுடுவார்னு தான் நினைச்சேன்.இப்படி உடம்பெல்லாம்…”அதற்கு மேல் பேச முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு குலுங்க குலுங்க அழ ஆரம்பித்தாள் மித்ரா.தன்னால் ஒருவனுக்கு இப்படி ஒரு நிலை என்பதை அவளால்  தாங்க முடியவில்லை.

‘எத்தனை இளகிய மனம் உடையவள் இவள்!’ என்று எண்ணியவாறே மித்ராவின் அருகில் நெருங்கி அமர்ந்தான் பிரபஞ்சன்.தன்னுடைய கைகளால் அவளது முகத்தை ஏந்தியவன் அவள் கண்களை மெல்ல துடைத்து விட்டு பேசலானான்.

“நீ இப்படி பயபடுவன்னு நான் எதிர்பார்க்கலை பேபி…என்கிட்ட பேசுன விதத்தை வச்சு ரொம்ப பெரிய தைரியசாலின்னு நினைச்சேன்.நீ என்னடானா….”

அப்பொழுதும் சமாதானம் ஆகாமல் அழுது கொண்டே இருந்தாள் சங்கமித்ரா.

“பேபி” என்ற ஒற்றை வார்த்தையில் அவளை மேலும்  நெருங்கி அவளது கன்னத்தை இரண்டு கைகளாலும் தாங்கி அவள் கண்ணோடு கண் கலக்க அவன் துடிக்க ,  ஒரு நிமிடத்திற்கு மேல் அவனுடைய பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள் மித்ரா.

மூடிய அவளின் இமைகளின் மேல் மெல்ல முத்தமிட்டு அவளை தன்னுடைய நெஞ்சோடு சேர்த்து லேசாக அணைத்துக் கொண்டான்.ஒரு சில நிமிடங்கள் அவனுடைய அணைப்பில் கண் மூடி லயித்து இருந்தவள் சட்டென அவனை தள்ளி விட்டு கொஞ்சம் நகர்ந்து அமர்ந்து அவனை கோபமாக பார்த்தாள்.

“அப்பாடி…எவ்வளவு கோபம்!இப்படி பார்க்காதே பேபி…உன்னுடைய கண்ணால் அப்படி பார்த்தால் நான் பொசுங்கி போய் விடுவேன்.”

அவனுடைய கேலியால் எல்லாம் துளியும் பாதிக்கப்படாமல் சற்று முன் தான் இருந்த நிலையை எண்ணி மீண்டும் அழத் தொடங்கினாள் மித்ரா.

“பார்த்தியா…மறுபடி அழற…என்னை விட்டு தள்ளிப் போனாலே இப்படித்தான்.அதுக்குத்தான் நான் உன் பக்கத்திலேயே இருக்கேன்னு சொல்றேன்.நீ கேட்க மாட்டேன்கிற”

உதடு துடிக்க கோபமாக அவனை முறைக்க தொடங்கினாள் மித்ரா.இதற்கெல்லாம் அசருவேனா என்று மேலும் அவளை சீண்டத் தொடங்கினான்.

“ம் இப்படித்தான்…இதே மாதிரி தான் கொஞ்ச நேரம் முன்னே உதடு துடிக்க அழுதுகிட்டு இருந்த…எனக்கு கூட அப்போ துடிக்கிற அந்த உதடை….” என்று சொன்னவன் அவளது அதிர்ந்த பாவனையில் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“நான் அப்படி எல்லாமா செய்தேன்…எவ்வ்வ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கேன் …நீ என்னடானா இப்படி மொறைச்சு பாக்குறியே மாமனை…ஒருவேளை அப்படி ரொம்பவும் நல்ல பிள்ளையாக இருப்பது தான் கோபமா?”என்று கூறி ஒற்றை புருவத்தை வசீகரமாய் ஏற்றி இறக்கி அவளது கொதிப்பை மேலும் அதிகமாக்கினான்.

“சே…அடிபட்டு இருக்கே அப்படின்னு ஒரு நிமிஷம் அமைதியா இருந்தது தப்பா போச்சு…உடனே அட்வான்டேஜ் எடுத்துக்க பார்க்கறீங்களா…இதெல்லாம் கொஞ்சமும் நல்லா இல்லை சொல்லிட்டேன்.”

“நீயே நல்லா இல்லைன்னு சொன்ன பிறகு இதெல்லாம் எனக்கு எதுக்கு” என்று சொன்னவன் படபடவென போட்டு இருந்த கட்டுக்களை எல்லாம் நொடியில் கழட்டி எறிந்தவன் அவளின் அதிர்ந்த தோற்றத்தை கண்டும் காணாதவன் போல மெல்ல அவளருகில் நெருங்கி நின்று பேச ஆரம்பித்தான்.

“உன் மாமன் மேல கை வைக்கிற அளவுக்கு இன்னும் எவனுக்கும் தைரியம் இல்லை செல்லம்…அதனால கண்டபடி யோசிச்சு மனசை போட்டு வருத்திக்காதே…புரியுதா?” என்றவன் ஒற்றை விரலால் அவளது கன்னம் தட்டி சொன்னவன்  விசில் அடித்துக் கொண்டே அங்கிருந்து நிதானமான நடையுடன் தூரத்தில் நிறுத்தி இருந்த அவனது பைக்கை நோக்கி சென்றான்.

பைக்கில் ஏற செல்லும் முன் வழக்கம் போல அவளை பார்த்து குறும்பாக ஒற்றை கண்ணை சிமிட்டி விட்டு ஸ்டைலாக ஒற்றை கையால் கூலிங்கிளாசை அணிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டான்.

மித்ரா தான் அந்த இடத்தை விட்டு நகராமல் ஆணி அடித்தது போல அப்படியே நின்று கொண்டு இருந்தாள்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
10
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here