Vanavil Sirpame – Episode 7 Tamil Novels

0
1256

New novel writer Madhumathi Bharath’s ongoing romantic Tamil new novel Vanavil Sirpame updated frequently in this writer’s Website.This is a page for Tamil Novel quenchers.Feedback’s from my story readers are Welcome.both positive , negative or any other suggestions. please share your esteemed comments below.This helps me to do much better.Enjoy it and leave your comments.
please click the below mentioned link to read the story update.don’t forget to share your views.

அத்தியாயம் 7

காபி ஷாப்பில் தனக்கெதிரில் அவளை அமர வைத்து விட்டு பார்வையாலேயே அவளை பருகிக் கொண்டு இருந்தான் பிரபஞ்சன்..மித்ரா அவனின் பார்வையை உணர்ந்து இருந்தாலும் நிமிர்ந்து அவனை நேராக பார்க்க அவளால் முடியாமல் .ஏதோ ஒன்று அவளை தடுத்தது.எதிரில் இருக்கும் அவனை தவிர சுற்றி உள்ள எல்லா பொருட்களையும் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தாள் சங்கமித்ரா.

பிரபஞ்சனோ அவளை தவிர சுற்றி உள்ள எதுவுமே அவனது கண்ணில் பதியவில்லை என்று சொல்லாமல் சொல்வது போல அவளையே உச்சி முதல் பாதம் வரை சோம்பலாக பார்வையாலேயே வருடிக் கொண்டு இருந்தான்.

காதோரம் சுருண்டு இருந்த அவளுடைய தலை முடி காற்றில் அசைந்தாட அதை சரி செய்ய சொல்லி பரபரத்த தன்னுடைய மனதை அடக்கும் வழி தெரியாமல் திணறினான் பிரபஞ்சன்.அது மட்டுமா! இவனை பார்க்காமல் தவிர்ப்பதற்காக அவளுடைய கண்ணின் கருவிழிகள் இங்கும் அங்குமாக  அலைந்து கொண்டு இருந்தது.அடிக்கடி ஓரக்கண்ணால் இவனை பார்ப்பதும்,பின்னர் அவனுடைய விழி வீச்சை தாங்க முடியாமல் உதட்டின் வலது ஓரத்தை பற்களால் அழுத்தி கடிப்பதுமாக இருந்தாள்.

அவளின் ஒவ்வொரு செய்கையும் பிரபஞ்சனை பொறுத்தவரை அவனுக்கான அழைப்பாகவே தோன்றியது. ‘என்னிடம் நெருங்கி வா’ என்று அவள் சொல்வது போல ஒரு பிரமை எழ தலையை குலுக்கி அதில் இருந்து வெளியே வர முயன்றான் பிரபஞ்சன்.என்ன தான் அவளை நேசித்தாலும் அவளின் காதலை அவள் சொல்லாதவரை  அவளை நெருங்கக் கூடாது என்று நினைத்தான்.

முடிவு தான் எடுத்தானே ஒழிய அதை செயல்படுத்தத் தான்  அவனால் முடியவில்லை.அவளை பார்த்ததுமே அவனுடைய உணர்வுகள் தறிகெட்டு பேயாட்டம் போட ஆரம்பித்தது.ஓரளவிற்கு முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் சர்வரை அழைத்து இருவருக்கும் கோல்டு காபி (cold coffee) ஆர்டர் செய்து விட்டு அவளிடம் பேச தொடங்கினான்.



“என்ன விஷயமா என்னை இங்கே வர சொன்ன செல்லம்?”

“என்னது நான் வர சொன்னேனா?…ஹலோ என்ன பிளேட்டை மாத்தி போடறீங்களா? நீங்க தானே பேசணும்னு வர சொன்னீங்க.?” அவளுடைய குரலில் அதிர்ச்சி,ஆச்சரியம்,ஏமாற்றம்,கோபம் எல்லாம் கலந்து ஒலித்தது.

“நானா? வர சொன்னேனா? உன்னையா? நியாபகம் இல்லையே செல்லம்” அந்தர்பல்டி அடித்தான் பிரபஞ்சன்.

‘அடப்பாவி’ வாயை பிளந்து விட்டாள் சங்கமித்ரா. ‘கொஞ்ச நேரம் முன்னாடி தானே சொன்னான்.காபி சாப்பிட வந்தால் நேற்று நடந்ததை பற்றி சொல்வதாக.இப்ப என்ன இப்படி பேச்சை மாற்றி பேசுகிறான்’

“நீங்க தானே சொன்னீங்க காபி சாப்பிட வந்தா நேத்து நடந்ததை சொல்றேன்னு சொன்னீங்க.அதுக்குள்ள இப்படி மாத்தி பேசறீங்க?”கோபம் கொப்பளித்தது மித்ராவுக்கு.

“உனக்கு எப்ப பாரு மாமன் நினைப்பு தான் செல்லம்.அது தான் நான் சொல்லாதது எல்லாம் சொன்ன மாதிரி இருக்கு உனக்கு”

“சே! உங்களை நம்பி வந்தேன் பாருங்க…என்னை சொல்லணும்” என்று கோபமாக கத்திவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றாள்.

“ஷ்ஷ்ஷ்….ஏன் இப்படி சத்தம் போடுற? நீ பேசுறது எனக்கு மட்டும் கேட்டா போதும்.இப்படி கோபமா கிளம்பி போய்ட்டா அப்புறம் நீ எப்படி உன்னோட கேள்வி எல்லாம் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக்க முடியும்.சும்மா தையா தக்கான்னு குதிக்காம கொஞ்ச நேரம் இப்படி அடங்கி உட்கார்”

பிரபஞ்சன் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டு இருக்கும் போதே சர்வர் வந்துவிட அவனுடைய பேச்சு தடைப்பட்டது.அவனை எதிர்க்கவும் முடியாமல்,மறுக்கவும் முடியாமல் அவனை முறைத்தவாறே அவனுக்கு எதிரில் பொத்தென்று அமர்ந்தாள்.

அவளுடைய செய்கைகள் அனைத்தையும் இதழ்க்கடையோரம் அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் பார்த்துக் கொண்டு இருக்க அவனை எப்படியாவது கோபப்படுத்த என்ற எண்ணம் தோன்ற அவனை அலட்சியமாக பார்த்தபடி பேச ஆரம்பித்தாள்.

“எனக்கு கல்யாணம் முடிவு ஆகி இருக்கு.”

“வாவ்! கங்கிராட்ஸ்”



அவனுடைய அதிர்ச்சியை எதிர்பார்த்து இருந்தவளுக்கு அவனுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததின் மூலம் அவளுக்கே அதிர்ச்சியை உருவாக்கினான் பிரபஞ்சன்.

‘என்ன இவன் வாழ்த்து சொல்கிறான்?’ என்று அவள் தான் வாயடைத்து போனாள்.

“ம் …அப்புறம்…மாப்பிள்ளை என்ன செய்றார்? அவங்க வீட்டில் எல்லாரும் எப்படி? எப்போ கல்யாணம்?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனதில் அவள் தான் குழம்பிப் போனாள். ‘ இவன் என்னை காதலிப்பதாக சொன்னானே…இப்போ என்ன இப்படி பேசுகிறான்?’

அவளை நன்றாக குழப்பி விட்டு வேடிக்கை பார்த்தான் பிரபஞ்சன்.அப்படி அவளை குழப்பினால் தானே ‘நேற்று எப்படி தப்பித்தாய்’ என்ற கேள்வியை அவள் அவனிடம் கேட்க மாட்டாள்.திட்டம் போட்டு காய்களை நகர்த்தினான்.

அவள் முழித்துக் கொண்டு இருக்கும் போதே மேசையில் இருந்த அவளது கைகளை மெல்ல தட்டி சுய உணர்விற்கு கொண்டு வந்தான்.

“காபி வந்து எவ்ளோ நேரம் ஆச்சு? சில்நெஸ் (chillness) போயிட போகுது. சீக்கிரம் குடி”அவளை ஊக்கினான்.

சங்கமித்ராவிற்கு இப்பொழுது உள்ளுக்குள் இருந்தது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான். ‘இவன் என்னை காதலிக்கவில்லையா’ என்பது மட்டும் தான்.அவளுடைய இந்த குழப்பத்தில் அவள் கேட்க வேண்டிய கேள்வி அவளுக்கு மறந்தே போயிற்று.

அவள் போக்கில் காபியை குடித்து விட்டு பில் வந்ததும் பணத்தையும் கொடுத்து விட்டு இருவரும் ஒன்றாக சேர்ந்தே வெளியே வந்தனர்.அவனுடைய வண்டியை எடுத்துக் கொண்டு அவளோடு நடந்தே மெயின் ரோடு வரை வந்தவன் எதிரே வந்த ஆட்டோவை மறித்து அதில் அவளை  ஏற்றி விட்டான்.

ஆட்டோ கிளம்பும் வரை சங்கமித்ரா ஒன்றுமே பேசவில்லை.அவளுடைய குழப்பத்திலேயே அவள் மூழ்கி இருந்தாள்.ஆட்டோக்காரர் வண்டியை கிளப்பும் முன் அவரை தடுத்து நிறுத்தியவன் சங்கமித்ராவை நோக்கி பேச ஆரம்பித்தான்.

“உன்னோட கல்யாணத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்.நீ உன் வீட்டில் பார்க்கிற மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இரு.ஆனா காதல் மட்டும் என்னை தான் செய்யணும்.புரியுதா?” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அவளுடைய கன்னத்தை ஒரு தட்டு தட்டி விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து நொடியில் அங்கிருந்து பறந்து விட்டான்.

‘என்ன சொல்கிறான் இவன்?’ குழப்பத்தில் சங்கமித்ரா.

அவளை நன்றாக குழப்பிவிட்ட மகிழ்ச்சியில் பிரபஞ்சன்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here