Vanavil Sirpame Tamil Novels 34

4
1334
அத்தியாயம் 34

“நீ இன்னும் தூங்கலையா?மெதுவாக அவள் கைகளை விலக்கிய வண்ணம் கேட்டான் பிரபஞ்சன்.


“இல்லை” என்று அவனுக்கு பதில் அளித்தவள் முன்னிலும் அதிக அழுத்தத்துடன் அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

பிரபஞ்சனின் மனநிலையோ மிகவும் அவஸ்தையாக இருந்தது.கைக்கெட்டும் தூரத்தில் காதலித்து மணந்து கொண்ட மனைவி இருக்கையில்,தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க அவன் என்ன முற்றும் துறந்த முனிவனா…

முன்னைப்போல் அவள் வெறுத்து ஒதுங்கி இருந்தால் கூட அவன் சமாளித்து விடுவான்.ஆனால் இப்படி அவள் நெருங்கி வரும் பொழுது அவளை தள்ளி நிறுத்துவது அவனைப் பொறுத்தவரையில் கொடுமையான ஒன்றாக இருந்தது.

நேற்று அவள் பயத்தில் அவனை நாடிய பொழுது கூட அவளுக்கு பொறுமையாக உண்மை நிலையை எடுத்து சொன்னவனால் கண்கள் முழுக்க காதலை நிரப்பிக் கொண்டு அவள் பார்க்கும் பொழுது அவளை தீண்டாமல் இருப்பது நரக வேதனையாக இருந்தது.

அதே சமயம் இத்தனை நாட்கள் அவள் நடந்து கொண்ட முறைகளுக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளாமல் அவளை நெருங்கவும் பிடிக்காமல் மௌனம் காத்தவன் சில நொடிகளில் தன்னை சமாளித்துக் கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்.

“மித்ரா…நான் கேட்கிற கேள்விகளை நல்லா கேட்டுட்டு தெளிவா உள்வாங்கிட்டு பொறுமையா யோசிச்சு எனக்கு பதில் சொல்…”

“கேளுங்க…”என்று சொன்னவள் இன்னும் கொஞ்சம் நெருங்கி வர முயல அவளின் தலையில் சூடி இருந்த மல்லிகை அவன் நாசியை நிறைத்தது.உடலுக்குள் மாற்றங்கள் நிகழுவதை உணர்ந்தாலும் அதை தடுக்கும் நிலையில் அவன் இல்லை.

வெகுவாக முயன்று தன்னை மீட்டவன் தன் மனதில் தோன்றியதை கேட்க ஆரம்பித்தான்.

“என்னோட தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுறதில உனக்கு உடல் ரீதியாகவோ… அல்லது மன ரீதியாகவோ ஏதாவது பிரச்சினை இருக்கா?”

‘இல்லை’ எனும் விதமாக அவளது தலை இருபுறமும் மாறி மாறி அசைந்தது.

ஒரு கணம் நிம்மதியாக பெருமூச்சு விட்டவன் குழப்பத்துடன் தொடர்ந்து பேசினான்.

“அப்புறம் ஏன் மித்ரா…கல்யாணம் ஆகிறதுக்கு முன்னாடியும் சரி அதுக்கு அப்புறமும் சரி என்கிட்ட இருந்து ஒதுங்கி ஒதுங்கி போன…கல்யாணத்தை நிறுத்த வேற சொன்ன…இது எல்லாத்தையும் தாண்டி அன்னிக்கு…அன்னிக்கு உன்னோட கையை அறுத்துக்க முயற்சி செஞ்சியே ஏன்?”விடாமல் அவன் கேள்வி கேட்க உள்ளுக்குள் பொங்கிய உணர்வுகளை அவனுக்கு காட்ட விரும்பாது அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“நான் செஞ்சது எல்லாம் தப்பு தான் மாமா…ஏதோ அப்ப இருந்த குழப்பத்தில அப்படி நடந்துக்கிட்டேன்.”

“அப்படி என்ன குழப்பம் மித்ரா உனக்கு…”

“அது…அது வந்து நீங்க என்னை ஏமாத்திட்டீங்க அப்படிங்கிற கோபம் என் கண்ணை மறைச்சுடுச்சு…எப்படியாவது உங்களை பழி வாங்கணும்னு நினைச்சு தான் கல்யாணத்தை நிறுத்த முயற்சி செஞ்சேன்.ஆனா அது நடக்கலை…அப்புறமும் உங்களை என்கிட்டே நெருங்க விடாமல் பழி வாங்கணும்னு நினைச்சேன்.அதுக்குத்தான் அப்படி எல்லாம் நடந்துகிட்டேன்”கோர்வையாக அவனுக்கு சந்தேகம் வராதபடி பொய்யை கூறினாள்.

“என்ன தான் உனக்கு கோபம் இருந்தாலும் கத்தி எடுத்து கையை வெட்டிக் கொள்ள முயற்சி பண்ணதெல்லாம் ரொம்பவே ஓவர்…உன்னை அந்த அளவுக்கா காயப்படுத்தி விட்டேன் மித்ரா…”லேசான வருத்தத்துடன் கேட்டவன் முகம் நிமிர்த்தி அவளை காண முயல மேலும் வாகாக அவனது நெஞ்சுக்குள் புதைந்த படி தொடர்ந்து பேசினாள்.

“ம்ச்…இந்த நேரத்தில் இந்த பேச்சு அவசியமா மாமா”

“வேற என்ன பேசலாம் குஜிலி”காதோரம் உதட்டால் கோலமிட்டபடி அவன் கேட்க அவளிடம் இருந்து மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.

“ஏய்…என்ன பேச்சைக் காணோம்”வலுக்கட்டாயமாக நிமிர்த்தி அவள் முகம் பார்க்க அவள் முகம் முழுக்க வெட்கத்தில் வர்ணஜாலமாக மின்னியது.

“ஏய்! குஜிலி”நம்ப முடியாத ஆனந்த திகைப்புடன் ஒலித்தது அவன் குரல்.

மீண்டும் முகத்தை அவனது ரோமங்கள் அடைந்த மார்பில் புதைத்தவள் சிணுங்கலாக பேச ஆரம்பித்தாள்.

“சும்மா சும்மா அப்படி பார்க்காதே மாமா..எனக்கு வெட்கமாக இருக்கு…”

“நல்லவேளை உனக்கு வெட்கமெல்லாம் வருது…நான் கூட உனக்கு அதெல்லாம் தெரியாதோ அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்”சீண்டினான் பிரபஞ்சன்.

“மாமா”கிறக்கத்துடன் ஒலித்தது அவள் குரல்.

“குஜிலி”என்று தாபத்துடன் அழைத்தவன் மெல்ல அவள் முகம் நிமிர்த்தி அவளின் பட்டுப் போன்ற அதரங்களை விரல்களால் மெல்ல தடவி ஒருமுறை கிள்ளினான்.

“ஆ…எதுக்கு இப்ப கிள்ளுறீங்க…ம்ச் வலிக்குது”

“காலையில் இருந்து என்னை எவ்வளவு பாடு படுத்துச்சு தெரியுமா இந்த வாய்…அதுக்குத்தான் இந்த தண்டனை…”என்றவன் அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு குரலில் தாபத்துடன் பேச ஆரம்பித்தான்.

“காலையில இருந்து என்னைப் போட்டு பாடாப்படுத்தி வைக்கிற நீ…மனுஷன் எவ்வளவு நேரம் தான் நல்லவனாவே நடிக்கிறது…”அவன் கை விரல்கள் அவள் முதுகில் கோலம் போட லேசாக உடல் சிலிர்த்தவள் அப்பொழுது தான் உணர்ந்தாள்.

பிரபஞ்சன் அவளை லேசாகத் தான் அவளை அணைத்து இருந்தான்.அதை தாண்டி எதையும் செய்ய அவன் முயற்சிக்கவில்லை.பிரபஞ்சனிடம் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது.இதற்கு முன்னால் தான் அவனிடம் விலகி இருந்த காரணத்தால் இப்பொழுது தானாக நெருங்கி வரும் பொழுது கூட தன்னை நெருங்க அவன் தயங்குகிறான் என்பது புரிய கோபமாக அவனை தள்ளி விட்டு கட்டிலின் மறுமூலையில் அவனை விட்டுத் தள்ளி அமர்ந்து கொண்டாள்.

சட்டென்று அவள் அப்படி தள்ளி அமரவும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.ஒருவேளை இப்பொழுதும் விலகி விடுவாளோ என்ற எண்ணத்துடன் அவளையே கேள்வியாக பார்க்க அவளோ வேறு காரணம் சொன்னாள்.

“உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட ஆசையே இல்லை ரஞ்சன்…அப்படி இருந்து இருந்தா…இந்நேரம் இப்படியா தள்ளி இருந்து…”என்று சொல்லி வாய் மூட அவளை அவன் அனுமதிக்கவில்லை.அவளின் அதரங்களை அவன் சுவைத்துக் கொண்டிருந்தால் எப்படி அவள் தொடர்ந்து பேசுவதாம்?

மூச்சு விட அவள் திணறும் வரை அவளை ஒற்றை இதழ் முத்தத்தால் திணறடித்தவன் கைகளால் அவளின் மேனியின் மென்மையை சோதிக்க சங்கமித்ரா உலைக்களமாக மாறி கொதிக்க ஆரம்பித்தாள்.

“யாருக்குடி உன் மேல ஆசை இல்லை…எனக்கா…எனக்கு உன்மேல ஆசை இல்லை…எனக்குஎவ்வளவு ஆசை இருக்குனு உனக்கு தெரியுமா…அதை இப்போ காட்டட்டுமா… நீ தாங்குவியா?” என்றவன் ஒவ்வொரு வார்த்தையின் இடைவெளியையும் முத்தங்களால் நிரப்ப அவள் கிறங்கித் தான் போனாள்.

அதுவரை அடக்கி வைத்திருந்த அவனது மோகம் அவளது கோபத்தில்  கரையுடைத்த வெள்ளமென அவளை ஆக்கிரமிக்க திண்டாடித் தான் போனாள்.பெண்மைக்கே உரிய கூச்சத்துடன் அவள் விலகும் போதெல்லாம் அவளை விலக அனுமதிக்காமல் அவளை ஆக்கிரமித்தான் பிரபஞ்சன்.இலை மறை காயாக இதுநாள் வரை கெட்ட விஷயங்கள் அனைத்தும் இப்பொழுது அவளுக்கு நடக்க அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திண்டாடினாள் பெண்ணவள்.

அவன் கேட்டது அனைத்தையும் கொடுத்தே தீர வேண்டும் என்று சபதம் போட்டவளைப் போல அவன் கேட்டது அனைத்தையும் திகட்டத் திகட்ட அவனுக்கு வாரி வழங்கினாள் சங்கமித்ரா.அவளது தாராள மனம் கண்டு மேலும் கிறங்கியவனின் மோகம் எல்லைகளை கடக்க சொல்லி உத்தரவிட ,இடையிடையே கூச்சத்தோடு அவள் தடுத்த பொழுதும்,பயத்தோடு அவள் விலகிய பொழுதும் அவளை விடாமல் மனம் முழுக்க காதலுடன் அவளை முழுமையாக எடுத்து தன்னுள் நிரப்பிக் கொண்டான் அந்தக் காதல் கணவன்.

விடியலை நெருங்கிய பின்னரும் கூட அவளது உடல் தளர்ந்தாலும் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாது அவனைத் திருப்தி செய்வது ஒன்று மட்டுமே தன்னுடைய வாழ்நாள் லட்சியம் என்பது போல மீண்டும் மீண்டும் அவன் கேட்ட ஒத்துழைப்பை முகம் சுளிக்காமல் கொடுத்து வந்தாள் சங்கமித்ரா.பிரபஞ்சனே அவளது செய்கை கண்டு வியந்து தான் போனான்.

ஓய்ந்து போய்,கலைந்து போன தோற்றத்துடன் தன் அருகே படுத்துக் கிடந்தவளை எடுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டவன் நெற்றியில் மென்மையாக ஒற்றை முத்தத்தை பதித்து விட்டு அவள் தாடையில் கை வைத்து சரசமாக பேசினான்.

“தேங்க்ஸ்டி…குஜிலி…ரொம்ப சந்தோசமா இருக்கேன்…உன்னை ரொம்ப எதுவும் படுத்தி எடுக்கலையே”

‘ஹுஹும்…’லேசாக தலை அசைத்தவள் மீண்டும் அவன் மார்பினில் அடைக்கலம் புகுந்து கொள்ள அவளை சீண்டத் தயாரானான் பிரபஞ்சன்.

“அப்போ…அடுத்த ரவுண்டு போலாமா…”

தூக்கம் கண்களை சுழற்றினாலும் அவனுக்காக சரி என்பதாய் அவள் தலை அசைக்க அவளுக்கு முடியாத நேரத்திலும் கூட இப்படி தனக்காக யோசிக்கிறாளே என்று எண்ணியவன் காதலுடன் அவளது உச்சந்தலையில் முத்தமிட்டு தன்னுடைய நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

“ரொம்ப தேங்க்ஸ்டி பொண்டாட்டி…நான் ஆசைப்பட்ட மாதிரியே எங்க அப்பா,அம்மா வாழ்ந்த வீட்டில் நம்முடைய வாழ்க்கையை தொடங்கியாச்சு…எண்ணி பத்தே மாசத்துல உன்னை மாதிரியே ஒரு பெண் குழந்தையை பெத்து என் கையில கொடுத்துடு…இனி நமக்கு அது ஒண்ணு மட்டும் தான் வேலை புரிஞ்சுதா?”கிறக்கமாக ஆசையுடன் அவளின் மூக்கோடு மூக்கு உரசி அவன் கேட்க குழந்தையைப் பற்றி பேசும் பொழுது அவள் உட ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டதை உணர்ந்து மெல்ல அவளின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தபடி தொடர்ந்து பேசினான்.

“என்ன குஜிலி…குழந்தைன்னு சொன்னதும் உடம்பு தூக்கி வாரிப் போடுது…பிரசவத்தை நினைச்சு பயமா இருக்கா?”

முதலில் அவன் கேள்வி கேட்டதும் என்ன பதில் சொல்வதென்று முழித்தவள் அவனாகவே ஒரு காரணத்தை கண்டுபிடித்து சொல்லவும் வேகமாக தலையை ஆட்டி அதை ஒத்துக் கொண்டாள்.

“அதெல்லாம் பயம் வேண்டாம் குஜிலி…நீ குழந்தையை சுமக்கிற நேரம்,உன்னையும் குழந்தையும் சேர்த்து நான் சுமப்பேன்…என் உயிருக்குள்ளே வச்சு பாதுகாப்பேன்”என்று அவன் சொல்லிக் கொண்டே போக அவளுக்கு உள்ளுக்குள் அழுகை பொங்கி வர அதை அவனிடமிருந்து மறைக்க பெரும்பாடுபட்டாள்.

‘நடக்குமா?அப்படி ஒரு பாக்கியம் எனக்கு கிடைக்குமா?’உள்ளுக்குள் சுக்கல் சுக்கலாக உடைந்து போனாள் சங்கமித்ரா.தன்னுடைய பரிதவிப்பை கணவன் உணர்ந்து கொள்ளக் கூடாது என்று எண்ணியவள் வாகாக அவனிடம் மேலும் ஒண்ட,சற்று நேரம்  அணைந்து இருந்த பிரபஞ்சனின் தாபம் காட்டுத்தீயென பற்றிக் கொள்ள மீண்டும் அவளை கொஞ்ச நேரம் சீண்டியவன்,அவளின் உடல்நலனை கருத்தில் கொண்டு விலகிப் படுக்க சங்கமித்ரா அவனை அதற்கு அனுமதிக்கவில்லை.

“ஹே! போதும் குஜிலி…நீ ரொம்ப டையர்டா இருப்ப…கொஞ்ச நேரம் தூங்கு…”

“மாட்டேன்’ என்பதாய் அவள் தலை அசைக்க அவளை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து தூங்க வைக்க முயன்றவன், முகத்தில் உறைந்த புன்னகையுடன் அவளுக்கு முன் உறங்கி விட்டான்.

திருப்தியான முக பாவனையுடன் அயர்ந்து உறங்கும் பிரபஞ்சனையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் சங்கமித்ரா.தூங்க சொல்லி விழிகள் இரண்டும் கெஞ்சினாலும் அதை எல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு உறங்கும் கணவனின் முகத்தையே பருகுவது போல பார்த்துக் கொண்டு இருந்தாள்.

‘இனி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ’ என்று ஏங்கியவள் அவன் நெஞ்சில் முகம் பதித்து,ஒரு கையால் தன்னை அணைத்தபடியே உறங்கும் கணவனின் முகத்தையே காதலோடு பார்த்துக் கொண்டு இருந்தாள்.அவளையும் அறியாமல் அவள் உறங்கிய பொழுது விடியத் தொடங்கி இருந்தது.

மதியம் இரண்டு மணி வாக்கில் லேசாக கண் விழித்துப் பார்த்தவள் நன்கு வெயில் அடிப்பதை பார்த்ததும் வேகமாக எழுந்திரிக்க முயல கணவனின் கரம் அவளை எழ விடாமல் செய்தது.

“எங்கே போற…இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு…”

“அய்யயோ! ஏற்கனவே ரொம்ப லேட் ஆச்சு…பசிக்குது வேற” என்றவள் மீண்டும் எழுவதற்கு முயற்சி செய்ய,ஒரே இழுப்பில் அவளை தன்னுடைய அணைப்புக்குள் கொண்டு வந்தான் பிரபஞ்சன்.

“இப்படி சுயநலமா உன்னோட பசியைப் பத்தி மட்டும் நினைக்கறியே…எனக்கும் தான் பசிக்குது…முதல்ல என்னை கவனி”குழைவாக சொன்னவன் பேசியபடியே அவளின் கழுத்தில் முகம் புதைக்க தன்னுடைய பசியையும் மறந்து விட்டு அவனுக்கு ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.

கொஞ்ச நேரம் அவளை சீண்டி சிவக்க செய்தவன் தானாகவே அவளை விட்டு விலகி எழுந்து டேபிளில் வைத்து இருந்த காபியை எடுத்து ஒரு கப்பில் ஊற்றி அவளிடம் நீட்டினான்.

“முன்னாடியே எழுந்திரிச்சுட்டேன்…நீ ரொம்ப அசதியா தூங்கிட்டு இருந்தியா…அதான் உன்னை எழுப்பாம காபி போட்டு குடிச்சுட்டு உனக்கு பிளாஸ்க் ல எடுத்து வச்சேன்”என்று பேசியபடியே அவளுக்கு அருகில் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

அவன் கொடுத்ததுமே மடமடவென்று வாங்கி குடித்தவளின் வேகமே சொல்லாமல் சொன்னது அவளது பசியின் அளவை.அவளையே காதலோடு பார்த்துக் கொண்டு இருந்தவன் அவள் குடித்து முடித்ததும் காபி கோப்பையை வாங்கி டேபிளில் வைத்து விட்டு போர்வையோடு அவளைத் தூக்கி அப்படியே மடியில் கிடத்திக் கொண்டான்.

“ஏய் குஜிலி…என்னடி இப்படி அசத்துற…உனக்கு அசதியா இருந்தாலும் சரி…ரொம்ப பசிச்சாலும் சரி…அது எல்லாத்தையும் விட என்னோட தேவையை நிறைவேத்துறது தான் முக்கியம்ன்னு எப்படி உன்னால நினைக்க முடியுது…. என்னை அவ்வளவு பிடிக்குமா உனக்கு?இவ்வளவு காதலை இத்தனை நாளா எங்கே ஒளிச்சு வச்சு இருந்த?”

“எனக்கு உங்களை ரொம்பவே பிடிக்கும்…உங்களை மட்டும் தான் ரொம்ப பிடிக்கும்…”என்று அந்த வீடே அதிரும்படி கத்தியவள்  அவனது முரட்டுக் கன்னத்தை கடித்து வைக்க,அவளை பிடிப்பதற்காக பிரபஞ்சன் நெருங்கும் முன் போர்வையை சுற்றிக் கொண்டு அறைக்குள்ளேயே ஓடத் தொடங்கினாள் சங்கமித்ரா.

“கேள்வி கேட்டா கடிச்சா வைக்கிற..ஒழுங்கா நின்னுடு…நானா பிடிச்சேன்…தண்டனை வேற மாதிரி இருக்கும்…”மிரட்டலாக பேசினான் பிரபஞ்சன்.

“பதில் தானே வேணும் சொல்றேன் கேட்டுக்கோங்க…இத்தனை நாளா இவ்வளவு ஆசையும் இந்த நெஞ்சுக்குள்ளே தான் பொத்தி வச்சு இருந்தேன்…போதுமா”என்று வேண்டுமென்றே அவனை சீண்டும் விதத்தில் பேச ஒரே பாய்ச்சலில் பாய்ந்து அவளைப் பிடித்தவன் தன்னுடைய சேட்டைகளை மீண்டும் தொடங்க அங்கே மீண்டும் ஒரு காதல் அரங்கேற்றம் ஆரம்பமானது.

முழுதாக இரண்டு நாட்கள் பசி, தூக்கம் எதைப் பற்றியும் கவலைப் படாமல் அவனை திருப்தி படுத்துவது ஒன்றே நோக்கம் என்பது போல கடுகளவு கூட அவனை விலகாமல் அவனை ஒட்டிக் கொண்டே திரிந்தாள் சங்கமித்ரா.ஏனெனில் அவளுக்குத் தெரியும் இந்த மகிழ்ச்சியான நாட்களுக்கு ஆயுள் குறைவு என்பது…எனவே தன்னால் முடிந்தவரை இன்பத்தை அவனுக்கு வாரி வழங்கினாள்.

அவளது எண்ணத்தை உறுதிபடுத்துவது போல மூன்றாம் நாள் காலையில் வீடு தேடி வந்து அவளை போலீஸ் கைது செய்தது.

சிற்பம் செதுக்கப்படும்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
3
+1
0

4 COMMENTS

  1. Darling evalo santhosama kondu poitu kadaisila oru twist vachutinga very bad enna oru santhosamna adutha ud la suspense open panniduvinga seekiram adutha ud oda vanga pa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here