Potato Cheese Nuggets….
என் நாத்தனார் குட்டீஸ் வீட்டிற்கு வந்த சமயம் செய்தது…குட்டீஸ்கிட்ட பாராட்டு வாங்குனாலே அது பெரிய சந்தோஷம் தானே செஞ்சு பார்த்து அசத்துங்க….

தேவையானவை:
- ரஸ்க் பொடி செய்தது_1 கப்
- வேகவைத்த உருளைக்கிளங்கு_3
- மிளகுதூள்_ ருசிக்கேற்ப
- மொசரில்லா சீஸ் துருவியது _1கப்
- உப்பு_ருசிக்கேற்ப
- கார்ன்ஃப்ளோர்_3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
உருளைக்கிழங்கை கையால் நன்றாக மசித்து அத்துடன் மிளகுத்தூள உப்பு சேர்த்து கொள்ளவும்.கார்ன்ஃப்ளோரில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.மசித்த கலவையை உருண்டையாக எடுத்து அதை குழி போல் செய்து உள்ளே சீஸ் ஸ்டஃப் செய்து உருட்டி கார்ன்ஸ்டார்ச்சில் டிப் செய்து பின்னர் ரஸ்க் தூளில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும் வாணலியில் எண்ணையை சூடாக்கி உருண்டைகளை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுத்தால் சுவையான பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் ரெடி…இத்துடன் சாஸ் வைத்து கொடுங்கள் குழந்தைகளுக்கு பிரியமானவர் ஆகிவிடுவீர்கள்.