அள்ளி அனைத்து முத்தமிடவா?

0
184

உருகி உருகி வேண்டினேன் …. ஏன் எனக்கு இப்படி ஒரு சாபம். உனக்கு நான் என்ன பாவம் செய்தேன். உனக்கு கருணையே இல்லையா? மரண வலி கூட நான் தாங்கி கொள்வேன் … ஆனால் … கண்ணீர் கண்களை தாண்டி கண்ணத்தை அடைந்தது. வெள்ளை பூ வா… சிகப்பு பூ வா … ஆவலோடு எட்டி பார்த்தேன் மனதில் நினைத்தது வரவில்லையே. வீடு வரை செல்ல தைரியம் இல்லை, செல்லும் வழியில் உள்ள கிணற்றை முறைத்த படியே கண்கள் பாதையை கடந்தது.

வீட்டை அடைந்திட ஒரு படி மட்டுமே மீதம். நாள் தவராமல் சாமி கிட்ட முறையிட்டாள் மட்டும் மலடி பட்டம் போயிடுமா என்ன? என்ன மாயம் போட்டு என் மகன மயக்கினாலோ? எனக்குனு வந்து வாய்ச்சிருக்காளே… மருமகளாக வந்தவளை மகளாக பார்க்காத மறு அம்மாவின் வார்த்தைகள் என் செவிகளை ஏதும் செய்துவிடவில்லை. வார்த்தைகள் ஏற்கனவே குத்திக்கிழித்த இதயத்தை மீண்டும் இன்று தன் கடமை தவராது பதம்பார்த்தது.

பாரத்ததும் பிடித்து விட்டது இருவருக்கும். பாரபட்சம் பாராமல் வரதட்சனை வேறு. கொஞ்சம் சிரித்தாலே மகாலட்சுமி என்றாள் அத்தை. கொடுத்த வரதட்சனைக்கு கொஞ்சமும் வஞ்சம் இல்லாமல் பார்த்து கொண்டாள் ஒரு வருடம் மட்டும். இன்றோடு ஐந்தரை வருடம் உருண்டோடிற்று. மருந்து மாத்திரை கொஞ்சமும் குறையில்லை, பார்க்காத வைத்தியம் இல்லை, முறையிடாத சாமி இல்லை.

குத்தி காட்டி பேசும் வார்த்தைகளில் அணு அணுவாக செத்துக்கொண்டிருந்தேன். காணும் இடம் எல்லாம் கண்களுக்கு இருட்டாக உணர ஆரம்பித்தேன். ஆறுதல் கூற அவன் மட்டும் இருந்தான். அவனுக்கு விருப்பம் இல்லை, அவன் அம்மாவின் கட்டாயத்தால் இரண்டாவது திருமண ஏற்பாடுகள் வேறு. கண்களில் இரத்தம் மட்டும் வரவில்லை, அழுது தீர்த்து கண்ணீர் வற்றிற்று. துடைத்தான்… நீ இருக்கையில் நான் எங்கு செல்வேனடி. தாரமாக நீ வந்த போதே நீயே என் தாயுமாக ஆகி போனாய். ஒரு தாய் க்காக இன்னொரு தாயையை விட்டு விட மாட்டேனடி. மார்போடு அனைத்து கொண்டான். இப்பொழுதே மரணம் நேர்ந்தாலும் சுகம் என்று தோன்றியது. இரவோடு இரவாக இழுத்து சென்றான்.

இரவில் எங்கு அழைத்து சென்றான் என்று இடம் ஏதும் தெளிவாக கண்களுக்கு புலப்படவில்லை. உள்ளே நுழைந்ததும், செவிகளை வருடிய மழலையின் குரல் என் இதயத்தை பிளிந்தெடுத்தது. இந்த வரம் கிடைக்க தானே இத்தனை ஆண்டுகால தவம். இங்கு உள்ள குழந்தை எல்லாம் உன்னுடையது… இல்லை இல்லை நம்முடையது. இந்த உலகிலேயே தன் குழந்தையை தேர்ந்தெடுக்கும் வரம் உனக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. எத்தனை குழந்தை வேண்டும் … எடுத்துக்கொள்… எந்த குழந்தை வேண்டும் எடுத்துக்கொள்… கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவன் … கையில் ஒரு குழந்தையை கொடுத்து. இன்றிலிருந்து இது நம் குழந்தை… பெருமை பொங்க என்னை மார்போடு அனைத்துக்கொண்டான். தாய் இன்றி தந்தை இன்றி ஏங்கும் மழலைகள் ஆயிரம்.. மழலை வேண்டி மடி பிச்சை கேட்கும் தாய்மைகள் ஆயிரம்.

ஆசை தீர முத்தமிட்டு அள்ளி அனைத்துக்கொண்டேன். காலில் விழுந்து வணங்கிடவா என்றது அவனை பார்த்து என் கண்கள். எனக்கு மனைவியான போதே தாயானவள் நீ .. இன்று மீண்டும் ஒரு முறை தாயானாயே என் காதலே. காதல் திருமணம்… கலைந்திடாமல் காத்தாயே என் தாயானவனே.

அம்மா … அம்மா… ஆசை குரல் கேட்டு அள்ளி அனைத்தேன். இன்று எனக்கு மூன்று குழந்தைகள். மகனாக அவன் வர வேண்டும் என்பதாலோ என்னவோ? இத்தனை காயங்கள் கடந்து வந்தேனோ? சுகபிரசவத்தில் உணராத சுகம்… முதல் கருவை சுமக்கையில் உணராத சுகம்… கருவில் அவன் உதைத்து விளையாடும் போது உணராத சுகம்… கை வளை அணிவித்து அடையாத இன்பம் … அழாதே அம்மா… நான் இருக்கிறேன் என்று என் கண்ணீர் துடைத்திடும் போது உணர தானோ காத்திருந்தேன்? என் உதிரம் கலவா மகனே, இந்த உயிர் நீ தந்தது தானே. ஐந்து வயது ஆகிறது. வாழ்வின் ஆழம் புரிய வைத்துவிட்டான். அள்ளி அனைத்து முத்தமிட்டேன் என் ஆருயிரை… நிலை படி ஓரம் சுவரோடு சுவராக என் கண்ணீரை ரசித்திருந்தான் ஆருயிர் காதலன்… அவன் கண்களிலும் சிறு துளி கண்ணீர்… கண்ணத்தை அடைவதற்க்குள் மறைத்து வைத்தான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here