கார்த்திக் தீவிரமா செயல்பட்டான் .. எக்காரணம் கொண்டும் முகிலன் கிட்ட மறுபடி மயூரி பேசிடக்கூடாது… என்பதில் தீவரமா செயல் பட்டான்.
கார்த்திக் பிரண்ட்ஸ் கெல்லாம் போன் செஞ்சி . … மச்சி எங்க இருக்க நான் சொல்லுற இடத்துக்கு வா ..
ஹ்ம் “
வறோம் மச்சி
சிவாவும் சுந்தரும் என்னடா மச்சி இவளோ அர்ஜென்ட்டா வர சொல்லிருக்க என்ன மேட்டர் . .
மச்சி … என் தேவதை எனக்கு கிடைக்க போறா டா ..சந்தோசமா சிரித்துக் கொண்டே சொன்னான்.
சிவாவும் சுந்தரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு என்னடா உளறான் … டேய் கார்த்திக் என்னடா லூசு போல உளற ….
ஹாஹா ” நானா லூசு போடா முட்டாள்.. நா ஆசைப்பட்ட பொண்ண அடைய போறேன்னு சொல்லிட்டு இருக்கேன் .. என்ன போய் லூசு னு சொல்லுற….சிரித்துக்கொண்டே சொன்னான்.
அது எப்படி நீ ஆசைப்பட்ட பொண்ணு உனக்கு கிடைக்கும் … அந்த பொண்ணு தான் ஆல்ரெடி ஒருத்தன லவ் பண்ணுதுதே… அப்பறம் எப்படி உனக்கு கிடைக்கும் … உனக்கு என்னமோ ஆச்சு அந்த பொண்ண பாத்ததுல இருந்து .. வாடா மச்சி
லூசு போல உளறாம … வா ஒரு பெக் அடிச்சா எல்லாம் சரியாகிடும் … சிவா சொல்லவும்…
கார்த்திக் …. சீரியஸாபேசினான் உண்மையா தான் சொல்லுறேன் டுடே நைட் குள்ள அவளை எனக்கு சொந்த மாக்காம விட மாட்டேன் … சேலன்ஞ் பண்ணான்..
டேய் “என்னடா பண்ணப் போற..அதிர்ந்தனர் சிவாவும் சுந்தரும் ஒரே சேர குரலில் கேக்க …
சொல்லுறேன்” டா அதுக்கு தான உங்கள கூப்பிட்டேன்..
டேய் எசகு பிசகுகா எதுனா பண்ணி மாட்டிக்க போறோம் டா .. சிவா பயத்தோட பேசினான்..
.
அதெல்லாம் ஒன்னும் மாட்ட மாட்டோம் பக்கவா பிளான் போட்டு தான் தூக்க போறோம்..
என்னது ஆளா தூக்கணுமா… சிவாவும் சுந்தரும் அதிர்ந்தார்கள்..
டேய் என்ன டா சொல்லுற கார்த்திக் .
மச்சி .. எனக்கு உங்க ஹெல்ப் வேணும் .. பண்ணுவிங்களா மாட்டிங்களா….. கார்த்திக் விடா பிடியா கேட்டதும் …
சிவாவும் சுந்தரும் ஒகே மச்சி உனக்காக என்ன வேனாலும் செய்வோம் …. சொல்லுடா என்ன பிளான் வச்சிருக்க..
கார்த்திக் இருவரையும் கட்டிக் கொண்டான்…
ஹ்ம் சொல்லுறேன் மச்சி …
தன்னை சுத்தி ஒரு சூழ்ச்சி நடந்து கொண்டிருப்பது தெரியாமல் முகிலன் அப்படி தவறாக பேசி விட்டான்.
அவனுக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
…. முகிலன் பேசியதையே நினைத்து கொண்டு மயூரி மன வேதனையோடு கருகிய முகத்தோடு அனு வீட்டுக்கு சென்றாள்..
மயூ வீட்டுக்குள் நுழைந்ததும் .. அனு ஓடி வந்து கட்டிக்கொண்டாள் …
சாரி ” பேபி என்ன மன்னிச்சுடு டா ஏதோ டென்ஷன் ல அப்டிலாம் நடந்துக்கிட்டேன் சாரி பேபி… முகிலன் தப்பா எடுத்துகிட்டாரா பேபி நான் வேணா அவர்கிட்டயும் சாரி கேக்குறேன் டா அனு தாடையை பிடித்து.. கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
காலையில் அப்படி நடந்துக்கிட்டவளா இவ… இது தான் அனு முகமா இல்லை காலையில் நடுந்துகிட்டாலே அதுவா அனுவை ஜட்ஜ் பண்ண முடியாமல்
மயூரி குழம்பினாள் அனு வையே பார்த்துட்டு இருந்தாள் ..
ஹேய் என்ன பேபி நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் … நீ எதுவும் பேசாம அமைதியா இருக்க..
அப்பதான் மயூரி முகத்தை கவனித்தாள்.. என்னாச்சு மயூ முகமே சரியிலேயே…
பேபி என்னடா ஆச்சு உன் முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு …
மார்னிங் இருந்த மயூரி இல்லையே… என்னடி ஆச்சி ….உன் முகத்தை பார்த்தா அழுது இருக்க போல தெரிதே…
ப்ச்.. ஒன்னும் இல்லடி எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு நா தூங்க போறேன் … ஈவினிங் 5 மணிக்கு எழுப்பி விடு ஊருக்கு கிளம்பனும்…
என்னடி சொல்லுற அதுக்குள்ள வா ஊருக்கு கிளம்புற..
ஆமா..
நேத்துதான சொன்ன இங்க ரெண்டு நாள் தங்கிட்டு வரத அம்மாகிட்ட பர்மிசன் கேட்டு வந்தேன்னு.
. இப்போ திடிர்னு கிளம்புற என்னடி ஆச்சு உனக்கும் முகிலனுக்கும் சண்டையா.. சொல்லுடி..
மயூ அமைதியா இருக்கவும் அனு ரெண்டும் பேருக்குள்ளார ஏதோ ஊடல்னு புரிந்து கொண்டாள்.
எப்படி எப்படியோ கேட்டும் பாத்தும் மயூ வாய் தொறந்து எதுவும் சொல்லாததால்.. அனு” முகிலனுக்கு கால் போட்டாள்.
ஹாலோ.. முகிலன்..
எஸ் .. யார் பேசுறது..
நான் அனு பேசுறேன் முகிலன்..
ஓ … சொல்லுங்க அனு மயூ எப்படி இருக்கா.
அத பத்தி கேக்க தான் உங்களுக்கு கால் பண்ணேன்.. என்னாச்சு முகிலன்.. ஏன் மயூ அழுதுட்டே இருக்கா …
அது வந்து ….
சொல்லுங்க முகிலன் நீங்க சொல்லுறத வச்சு தான் நா மயூ கிட்ட பேச முடியும் .. இல்லனா அவ ஈவினிங் ஊருக்கு போய்டுவா…
தப்பு என்மேல தான் அனு நான் தான் மயூவா தப்பு தப்பா பேசிட்டேன்…பீச் ல நடந்துதது எல்லாம் ஒன்னுவிடாம சொன்னான்..
அனு அதெலாம் கேட்டுட்டு கோவபட்டாள் பேசினாள்…
நீங்க எல்லாம் ஆம்பளைங்க திமிருல என்ன வேணா பேசிடுவீங்களா . ச்ச்சே.. உங்க மேல உசுரே வச்சிருக்கிற பொண்ணு கிட்ட எப்படில்லாம் பேசி இருக்கீங்க… என்ன மனுஷன் நீங்க.. மயூ மனச உடைச்சிட்டீங்க முகிலன்…
அனு பேச பேச முகிலனுக்கு அவன் மேலயே வெறுப்பு வந்தது என்ன சொல்லி என் மயூ என்கிட்ட வருவா தெரிலயே பைத்தியம் மாதிரி புலம்பினான் தப்பு தான் தப்புபண்ணிட்டேன் .. அனு … ப்ளீஸ் உங்கள என் சிஸ்டர்ர நினைக்கிறேன் எனக்கு என் மயூ வேணும் எப்படியாவது சேர்த்து வைப்பிங்களா..அனுக்கிட்ட . கெஞ்சி கொண்டிருந்தான்.
முகிலன் அழறத பாத்துட்டு….கூல் கூல் அண்ணா என்ன சிஸ்டர் வேற சொல்லிட்டீங்க… நா பேசி பாக்குறேன்… நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க…
இந்த உதவி மட்டும் பண்ணுங்க அனு உங்கள லைப் லாங் மறக்கவே மாட்டேன்…
ஐயோ அண்ணாசொல்லிட்டு … சிஸ்டர் கிட்ட இப்படி தான் பேசுவாங்களா.. விடுங்க அண்ணா நா பாத்துக்குறேன்..
எதுக்கும் நீங்க மயூ கிட்ட பேசுனா அவள் நார்மல் ஆக வாய்ப்பு இருக்கு.
வீட்டுக்கு வாங்க வந்து மயூ கிட்ட பேசுங்க …
வரேன் .. அனு ஆனா அதுக்குள்ள அவ ஊருக்கு கிளம்பிட்டா என்ன பண்ணுறது …
அவளை போக விடாம நா பாத்துக்குறேன் நீங்க கிளம்பி வாங்க.. முதல்ல…
ஹ்ம் ” தோ கிளம்பிட்டேன்…
மயூ எழுந்து அவ டிரஸ் எல்லாம் எடுத்துவச்சிட்டுஇருக்கறதை அனு பார்த்துட்டே இருந்தாள்..
மயூ பேபி என்னென்னு சொல்லவும் மாற்ற..
ஆனா அழுதுட்டே இருக்க என்ன தான் ஆச்சு பேபி உனக்கு.
அனு என்ன எதுவும் கேக்காத ப்ளீஸ் …
ஒகே பேபி எதுவும் கேக்கல..
இந்த பூஸ்டாவது குடி நீ வரும் போது சாப்பிட்டியானு தெரில
வந்ததும் அழுதுட்டே தூங்கிட்ட.. ஊருக்கு போகவாச்சும் தெம்பு வேணும்ல .. குடி அதட்டி குடிக்க வைத்தாள்..
அனு வெளியே வந்து
முகிலனுக்கு கால் பண்ணினாள்
முகிலன் .. இப்போ எங்க இருக்கீங்க…
அடையார் வந்துட்டேன் அனு … இன்னும் 20மின்ட்ஸ் ல அங்க இருப்பேன்…
ஹ்ம் வாங்க …
அனு நான் பக்கத்துல இருக்குற கோவில் போறேன் நீயும் வரியா… மயூ கூப்பிடவும் .. அய்யோ முகிலன்க்கு வீடு தெரியாது நான் இருந்தா தான் சொல்ல முடியும் …
இல்லை மயூ நான் வரல நீ போய்ட்டு வா…
ஹ்ம் .. சரி
மயூ கிளம்பணுதும் …
Omg பவர் கட் ஆகிடுச்சே… இருட்டில் கேண்டில் தேடினாள்.
அங்கே ..
மச்சி நீ சொன்ன மாதிரி பவர் கட் பண்ணிட்டேன் .. அவ பிரண்ட் கூட இப்போ வீட்டுல இல்லை இப்போ தான் வெளியே போறத பாத்தேன்… தூரத்தில இருந்து பாத்ததால.. அனு தான் வெளியே போறானு நினைத்து கொண்டான் .
தேங்ஸ் மச்சி நா சொல்லுற வரை பவர் போடாத சரியா …
ஒகே மச்சி ….
கார்த்திக் உள்ளே நுழைந்தான்…….