உருளைகிழங்கு வத்தல்

0
91

வெயில் காலம் வந்தாச்சு… சம்மர் னா லீவு, பாட்டி தாத்தா, மாமா, அத்தை வீட்டு பயணம், மலைவாச ஸ்தளம் டூர் இப்படி ஒரு பக்கம் நா,

ஸ்கூல் ஃபீஸ், காலேஜ் ஃபீஸ் னு, பெத்தவங்க கவலை, எந்த காலேஜ், எந்த க்ரூப் னு பிள்ளைங்க கவலை..

இத போலவே வீட்டு பெண்களுக்கு வரும் இனனொரு கவலை வடாம், வத்தல் போடுவது….

இந்த வாட்டி கொஞ்சம் டிஃபெரெண்டா ஏதாச்சும் ட்ரை பண்ணா என்ன னு யோசிக்கறிங்க னா இது உங்களுக்கு நல்லா யூஸ் ஆகும்….

maxresdefault

உருளைகிழங்கு வத்தல்…

தேவை:
உருளைகிழங்கு -1கிலோ
ப.மிளகாய்- 100 கிராம்
கா.மிளகாய் – 5-7 என்னம்
க.வேப்பிலை,கொ.மல்லி சிறிது
பெருங்காயம் – 1டீ. ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:
உருளை கிழங்க தோல் சீவி வேகவைத்து மசித்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்..

ப.மிளகாயை மற்றும் காய்ந்த மிளகாய் மைய அரைத்துக்கொள்ளவும்..( 100 கி என்பது சராசரி. காரம் வேவைபடுவோர் கூட சேர்த்து கொள்ளலாம்)

ஒரு அகன்ற பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணிர் கொதிக்க வைத்து அதில் மிளகாய் விழுது, பெருங்காயம், உப்பு மிக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மசித்த உருளைகிழங்கு கலவையை கொட்டி 2 நிமிடம் கிளறவும். கஞ்சி போல சேர்ந்து கொள்ளும்.

தண்ணிர் போறாத போது வெந்நீர் வைத்தது கலந்து கொள்ளலாம்..

கட்டி பட்டு சேரவில்லை தண்ணிர் அதிகம் என்றால் 2ஸ்பூன் அரிசி மாவை கரைத்து விட்டால் நன்கு சேர்ந்து வரும்..

ஜவ்வரிசி வத்தல் ஊற்றும் பதத்திற்கு இருந்தால் போதும்..

ஒரு வெள்ளை வேஷ்டியில் (ப்ளாஸ்டிக் தாள்களை தவிர்க்கவும்) இதை ஒரு ஸ்பூனால் வத்தலாக ஊற்றி காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

1 கிலோ கிழங்கில் போடும் வத்தல் குறைந்தது 6 மாதம் வரை உபயோகத்திற்கு போதுமாக வரும்..

ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here