கல்வி கூ(மு)டம்

0
78

சொன்ன சொல்லு மாற மாட்டா இந்த அஞ்சலி… ஹ்ம்ம் யாருகிட்ட…..
@Madhumathibharath க்கா
Note the point ur honor…..
PROJECT COMPLETED……

கல்வி கூ(மு)டம்

அந்த பள்ளி நகரின் மிக பிரசித்தமானது. அங்கே ஒரு நடுத்தர வர்க்கத்தின குழந்தைக்கு இடம் கிடைப்பது குதிரை கொம்பென்ன அதற்கும் மேல், கொசுப்பல்.

எல்லா ஆண்டும் 100% தேர்ச்சி பெரும் பெருமையுடைய பள்ளி.. அதற்காகவென்று விருதுகளும் வாங்கிய பள்ளி. அப்பேற்பட்ட பள்ளியில் போராடி தன் மகனை சேர்த்தாள் சௌந்தர்யா.

கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்கள் தான் எனினும் நடுத்தர குடும்பம் தான்.

விரலுக்கேத்த வீக்கம் வேணும் என்ற தன் அம்மாவின் பொலம்பல்களை புறம்தள்ளினாள்.

ஏனென்றால், இது போன்ற தரமான பள்ளியில் தனக்கு கல்வி கிட்டியிருந்தால் தனக்கு வளமான வாழ்க்கை கிடைத்திருக்குமே என்ற ஆதங்கம்.

அருண் 2 வயது இருக்கும்போதே தொடங்கியது தான் இந்த பள்ளி வேட்டை. அதில் அவள் கடைந்து கண்டெடுத்த பள்ளி இது.

பணம் கட்ட கஷ்டபடும்போதெல்லாம் தன் குழந்தையின் அறிவால் அவனுக்கு கிடைக்கப்போகும் அந்தஸ்தையும், புகழ், பெருமை பணம் என்று என்னெல்லாமோ எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.

அருணும் அவள் ஆசைக்கேற்ப படிப்பில் படு சுட்டியாக இருந்தான். எல்லா தேர்வுகளிலும் முதல் மூன்று இடங்களில் மட்டுமே இருந்தான்.

அம்மாவுக்கு மட்டும் எப்போதுமே இந்த பெரிய பள்ளி என்ற மாயையில் சௌந்தர்யா அலைவது பிடித்தம் இல்லை. கிடைத்த சாக்கில் எல்லாம் சொல்லிப்பார்த்தார். நாங்களாம் கவர்மென்ட் ஸ்கூல்ல தான் படிச்சோம். ஏன் நீ கூட அங்க தான் படிச்ச என்ன கெட்டு போச்சு இப்ப . படிப்புங்கறது நாம படிக்கறது தானே ஒழிய பள்ளிகூடத்துல என்ன இருக்கு என்று.

அம்மா வாயை திறந்தாலே சௌந்தர்யா அக்னி மலையாவாள். ஆமா படிச்சேன். அதனால தான் இப்படி இருக்கேன். என் கூட ஆஃபிஸ் வந்து பார் தெரியும். நாலு வார்த்த சேத்தாப்ல இங்கலீஷ்ல பேசினா எனக்கு கண்ண கட்டுது.

அருணுக்கு பாரு இப்பவே நல்லா படிக்க வருது. ஒன்னும் புரியாம பேசாதம்மா என்று காய்ந்து விட்டு போவாள்.

ஆமா ஆமா அந்த காலத்துல இருந்தவங்கலாம் இப்படி மூட்ட சுமந்துட்டு பெத்த பேரு படச்ச ஸ்கூலுக்கு போய் படிச்சா வாழ்ந்தாங்க. சூரியன பாத்தே மணி சொல்லல..? வந்துடா பெருசா பேசிட்டு என்று தனக்குள் முனகி கொள்வாள் அம்மா.

நாட்கள் நகர அருண் 7ஆம் வகுப்பு வந்து விட்டான். பள்ளியில் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு விளையாட்டு, கவிதை,கட்டுரை,பொது
அறிவு, பாடல், ஆடல், வினாடிவினா, என பலவகை போட்டிகள் நடத்தப்பட்டன. அருண் அதிக போட்டிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்கள் பிடித்தான். மேடையில் அவன் பெயரே அதிகம் ஏலம் விடப்பட்டது.சௌந்தர்யா பூரிப்பின் விளிம்பில் இருந்தாள். வீட்டிற்கு வந்ததும் தன் ஆசை மகனை கட்டி தழுவி, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

பாத்தியா மா, எப்ப பாரு குறை சொல்வியே அந்த ஸ்கூல பத்தி, இப்ப பாரு என்றாள் பெருமை பொங்க. என்ன இருந்தாலும் தன் பேரன் பரிசுகளை குவித்ததில் பாட்டிக்கும் பெருமை தான். அருணின் முகத்தை வழித்து நெட்டி முறித்து, முகவாயை பிடித்து கொஞ்சியவள். இந்த கோப்பை, சர்டிஃபிகேட் எல்லாம் பத்திரமா அலமாரில வை ராசா என்க, அருணோ அட அங்க இல்ல பாட்டி இங்க வெக்கனும் என்று சொல்லி பரணையில் வைத்தான். ஆச்சர்யமும், குழப்பமுமாய் அத ஏன் டா அங்க வைக்கிற என்று சௌந்தர்யா கேட்க அருண் சொன்ன பதிலில், சௌந்தர்யாவிற்கு சர்வமும் ஆடிப்போனது. பாட்டி மானசீகமாக தலையில் அடித்துக்கொள்ள சௌந்தர்யாவின் கணவர் வெளிப்படையாகவே தலையிலடித்து கொண்டார்…

அப்டி என்ன சொன்னான்???? அதானே கேட்குறீங்க…. சொல்றேன், சொல்றேன்…..

அருண் சொன்னான், அம்மா இந்த பரிச குடுத்த சீஃப் கெஸ்ட் சொன்னாரு.

வெரி குட் அருண் ” கீப் இட் அப்” ( keep it up) னு

நம்ம வீட்ல ஒசரமான எடம் பரணை தான அதான் அங்க வச்சேன்.. ??

கொஞ்ச பேர் சிரிக்கிறிங்க, கொஞ்ச பேர் முறைக்கிறாங்கன்னு தெரியுது…..

பட் இதுல ஒரு ஆழமான கருத்து இருக்கு

Change to SERIOUS MODE??..

அறிவுங்கறது படிக்கற புக்லையோ, ஸ்கூல்லயோ, வாங்குற மார்குலயோ இல்லங்க….

அறிவுங்கறது படிக்கறத அறிந்து, புரிந்து, உணர்ந்து படிக்கனும்..
பசங்கல மார்க் மெஷின்னு நினைச்சு அவங்களோட சின்ன சின்ன தனி அறிவ/திறமைய அழிச்சிட கூடாது.

அவனபாரு எவ்ளோ மார்க் வாங்கிருக்கான், இவள பாரு எவ்வளோ மார்க் வாங்கிருகான்னு கம்பேர் பண்ணி பண்ணி நம்ம குழந்தைகளோட சுய உருவத்த நாமலே சிதைக்க கூடாது.

குழந்தைங்க வீட்டுசெடி போல, அவங்கல இயல்பா அதுபோக்குல வளரவிடனும். பார்குல உள்ள குரோட்டான்ஸ் போல அவங்களுக்கு செயற்கை உருவம் திணிக்க கூடாது..

இதுக்கு திருவள்ளுவர் ஏதோ ஒரு குறல் சொல்லிருக்காரு….. ஆனா எவ்ளோ யோசிச்சும் எனக்கு நியாபகத்துக்கு வரல.

யாருக்கு தெரியுமோ கொஞ்சம் சொல்லுங்க பா ப்ளீஸ்ஸ்ஸ்…….,???

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here