காதலை தேடி… – 6

0
289

இதோ… காதலை தேடி ஆறாம் அத்தியாயம் போட்டுட்டேன் மக்களே.. படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்கோ..

காதலை தேடி… – 6

மறுநாள் ருத்ராவின் டீமிற்கு முக்கியமான வேலை கொடுக்கப்பட்டது. அன்றே அந்த வேலையை முடித்து தர வேண்டுமென கிளையண்ட் கேட்க, இவர்களும் ஒத்து கொண்டனர்.

ருத்ராவின் டீமில் மொத்தம் ஐந்து பேர் இருந்தனர். அவரின் டீம் லீடர் அனைவருக்கும் வேலையை பிரித்து கொடுத்துவிட்டு அதை டெலிவெர் செய்யும் பொறுப்பை ருத்ராவிடம் ஒப்படைத்தார்.

அனைவரும் வேலையை முடிக்க இரவு எட்டு மணியாகியது. தீபக் இன்னும் அரை மணி நேரத்தில் கொடுப்பதாக சொல்ல, இவள் மற்ற மூவரின் ரிப்போர்ட்டையும் சரி பார்த்து கொண்டிருந்தாள்.

ச்சே! இந்த வெங்கட் (ருத்ராவின் டீம் லீடர்) போன மாசம் ஒரு ரிப்போர்ட்டை தாமதமா கொடுத்தேன்னு இந்த மாசம் என்னை இப்படி பழிவாங்கிட்டானே. மணி வேற ஒன்பதாக போகுது. அம்மா வேற திட்ட போறாங்க. ஏற்கனவே மூணு முறை போன் பண்ணிட்டாங்க என தன் எண்ணங்களில் இருந்தவளை, “ருத்ரா ரிபோர்ட் முடிச்சு உனக்கு மெயில் பண்ணிட்டேன்
என தன் கணினியை அணைத்தவன், பை ருத்ரா” என சென்றுவிட்டான்.

அடப்பாவி! இவன் இருக்கன்ற தைரியத்துல தான நாம இவ்ளோ நேரம் உட்கார்ந்து இருந்தோம்.

யாருமில்லாத அந்த அறை சற்றே பயமுறுத்தியது. ஏற்கனவே கிருஷ்ணா சொல்லியிருந்த பல்வேறு பேய் கதைகள் வேறு நேரம் காலம் தெரியாமல் நியாபகம் வந்து தொலைத்தது. பேசாம டெலிவெர் பண்ணாம கிளம்பிடலாமா என யோசித்து கொண்டிருந்தவள் சடாரென கதவு திறக்கும் சத்தத்தில் பயந்து கண்களை பொத்திக் கொண்டாள். கிளம்புறேன் என சொல்லி சென்ற தீபக் என்ன நினைத்தானோ திரும்பி வந்தவன் ருத்ரா இருந்த நிலை பார்த்து வாய்விட்டு சிரித்து கொண்டிருந்தான்

ஏற்கனவே பயத்தில் இருந்தவள் திடீரென்று கேட்ட சிரிப்பு சத்தத்தில் அழுக ஆரம்பித்துவிட்டாள்.

அவள் அழுவதை கண்டவன், ருத்ரா நான் தன் தீபக் அழாத என சமாதானப்படுத்தினான். தீபக்கின் குரல் கேட்டு கண் திறந்தவள் தன் பக்கத்திலிருந்த புத்தகத்தால் சரமாரியாக அடிக்க தொடங்கினாள்.

ஐயோ அம்மா வலிக்குதே! ஏதோ தனியா இருப்பியே. கூட துணைக்கு இருக்கலாம்னு வந்தா இப்படி அடிக்கிறியேமா?

உன்ன யாரு வர சொன்னது? என அவள் கோபமாக கேட்க, சரி அப்போ நான் கிளம்புறேன் என கதவை நோக்கி நடந்தான். அவன் செல்வதை கண்டவள் “சரி சரி அதான் வந்துட்டல ஒரு பத்து நிமிஷம் இரு என சமாதான கொடியை பறக்கவிட்டாள்”.

வேலையை முடித்து இருவரும் கிளம்ப பத்து மணியாயிற்று. “ருத்ரா மணி பத்தாச்சே. எப்படி போவ வீட்டுக்கு?”

“என் வண்டில தான்”.

என்னது இந்த இராத்திரி நேரத்துல அதுவும் தனியா வண்டியில போறீயா? பேசாம நானே உன்னை வீட்ல இறக்கிவிடுறேன். உன்னோட வண்டியை இங்கேயே இருக்கட்டும் என தீபக் கூற ருத்ரா தயங்கினாள். என்னதான் தீபக் நல்ல நண்பனாக இருந்தாலும் இரவு நேரத்தில் அவனுடன் செல்வது தேவையில்லாத பிரச்சனை ஏற்படுத்தும்.

அவள் தயங்குவதை புரிந்து கொண்ட தீபக்கும் “சரி, நீ உன்னோட வண்டியில போ. நான் உன் பின்னாடியே வரேன்” என கூற, அதெல்லாம் நான் பத்திரமா போயிடுவேன். நீ கிளம்பு என கூறியும் அவன் மறுத்துவிட வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டாள்.

தன் வண்டியை நிறுத்திய ருத்ரா பின்னால் வந்த தீபக்கிடம், நீ கிளம்பு தீபக். அந்த நீல கலர் வீடு தான். ரொம்ப தேங்க்ஸ் தீபக் என கூறிவிட்டு செல்ல, தீபக் அவள் வீட்டுக்குள் நுழையும் வரை நின்றிருந்தான்.

அவளின் வண்டி சத்தத்தை கேட்டு வெளியே வந்த அவளின் அம்மா பார்வதி திட்ட தொடங்க, அம்மா பசுக்குது மா என தன் ஆயுதத்தை எடுக்க, அது வெற்றிகரமாக வேலை செய்தது.

சாப்பிட்டு முடித்தவுடன் தன் தாயிடமும் திட்டு வாங்கியவள் தன் அறைக்கு வந்து தீபக்கிற்கு மெசேஜ் செய்து அவன் வீட்டிற்கு சென்று விட்டதை உறுதி படுத்தி கொண்டாள்.

எப்பொழுதும் தீபக்கின் மேல் நல்ல எண்ணம் இருந்தாலும், இன்று அவன் கூடவே இருந்து பத்திரமாக வீடு வரை வந்தது அவனின் மேலிருந்த மரியாதையை உயர்த்தியது.

வெள்ளிக்கிழமை தோறும் பக்கத்தில் உள்ள முருகன் கோவிலில் சென்று விளக்கேற்றுவது காவ்யாவின் வழக்கம்.

குளித்து முடித்து வெளியே வந்தவளிடம் வசந்தா ஒரு புடவையை நீட்டினார். இன்னைக்கு வரலஷ்மி நோம்பு. இந்த புடவையை கட்டிட்டு அப்படியே பக்கத்துல இருக்குற அம்மன் கோவிலுக்கும் போய்ட்டுவா.

மா புடவைலா கட்டி நடக்க முடியாது. நான் சுடிதாரே போட்டுக்குறேன்.

ஏண்டி ஒரு நாள் தானே கட்ட சொல்றேன். போய் கட்டிட்டு வா என கூற, சரியென்று தன் அறைக்கு சென்றாள்.

சுமார் முக்கால் மணிநேரம் கழித்து வெளியே வந்தவளை பார்த்த வசந்தா அவளுக்கு திருஷ்ட்டி கழித்தார். அவள் கையில் பணத்தை கொடுத்து, அம்மனுக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்னு வேண்டிகோ .

அதை காதில் வாங்காமல் காற்றில் பறக்கவிட்டவள், தன் வண்டியில் ஏறி உட்கார புடவை தடுக்கி விழப்போனவள் ஒருவராக சமாளித்து கோவிலை சென்றடைந்தாள்.

கோவிலில் பிரகாரம் சுற்றும் பொழுதும் புடவை தடுக்க தன் தாயை திட்டியாவாறே சுற்றி முடித்தாள்.

ஒருவழியாக வீட்டிற்கு வந்தவளிடம் ஒரு கவரை கொடுக்க, என்ன மா இது?

சாமி பிரசாதம் டி. சரோஜா ஆன்ட்டிட்ட கொடுத்துட்டு வா.

இரு மா. நா போய் சுடிதார் போட்டுட்டு வந்துடுறேன்.

ஏண்டி பக்கத்து வீட்டுக்கு போகறதுக்கு துணி மாத்தணுமா?

புடவை ரொம்ப கால் தடுக்குதும்மா. பாலா கிட்ட கொடுத்துவிடு மா.

அவன் குளிச்சிட்டு இருக்கான் காவ்யா. எனக்கு நிறைய வேலை இருக்கு. நீயே போய் கொடுத்துட்டு வா.

சரோஜா வீட்டிற்குள் நுழைந்தவளை, “புடவைல ரொம்ப அழகா இருக்க காவ்யா”.

அம்மா கொடுக்க சொன்னாங்க ஆண்ட்டி என சரோஜாவிடம் கொடுத்துவிட்டு கிளம்புகையில், காவ்யா கொஞ்சம் இரு என நெருக்க கட்டிய நித்தியமல்லி சரத்தை தலையில் வைத்துவிட்டார்.

சரி நான் கிளம்புறேன் ஆன்ட்டி.

வெளிய படியில தண்ணியா இருக்கும் பாத்து போமா.

சரி ஆன்டி என கூறி விட்டு இரண்டு படி இறங்கியவள் மூன்றாவது படியில் கால் வைக்க, அந்நேரம் தன் வண்டியை நிறுத்திவிட்டு வந்த வினோத்தும் வர, அவனுக்கு வழிவிட்டு காவ்யா சற்று நகர, கால் வழுக்கி விழ இருந்தவளை தாங்கி பிடித்தான்.

பிடிக்கையில் எக்குத்தப்பாக அவனின் கை காவ்யாவின் வெற்றிடையில் பதிய, அவளின் இந்த நெருக்கமும், மல்லியின் வாசமும் அவனை வசமிழக்க வைக்க, ஒரு வாரமாய் பாராமுகமாய் இருந்தவனை நேரில் கண்டவுடன் தான் நின்ற கோலம் கருத்தில் பதிய சில வினாடிகள் செல்ல, அவனின் பார்வை மாற்றத்தை வைத்து சட்டென விலகி ஓடியவள் மெல்ல வினோத்தின் மனதினுள் நுழைந்தாள் .

தேடல் தொடரும்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here